search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
    X

    கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

    • செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும்.
    • தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கடலூர் முதுநகர் எஸ்.டி. மருத்துவமனை டாக்டர் முகுந்தன் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு முதல் வழி தண்ணீர். 10 கிலோ எடையுள்ள குழந்தை தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்ற கணக்கில், குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அடிக்கடி பருக கொடுக்கவேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கழுவி கொடுங்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையான பழங்களும் கொடுக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு முதலியவற்றில், ஏதாவது ஒன்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் (சிக்கன், மட்டன்) வாரம் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதுமானது. அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஓட்டல், துரித உணவகங்களில் இருந்து உணவு வகைகளை வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தைகளின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.

    செயற்கை பொருட்களை (ஸ்மார்ட்போன், டி.வி.) முற்றிலும் தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×