search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கோடை காலத்தில் குழந்தைகளை கஷ்டப்படுத்தும் வைரஸ் தொற்றுகள்...
    X

    கோடை காலத்தில் குழந்தைகளை கஷ்டப்படுத்தும் வைரஸ் தொற்றுகள்...

    • மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
    • குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கோடை காலம் குழந்தைக்கு புது பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதாவது அடினோ வைரஸ், இன்புளூயன்சா, பாவி இன்புளூயன்சா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பெரியவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இது குழந்தைகளை கஷ்டப்படுத்துகிறது.

    பெரும்பாலும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுதல், தொண்டை வலி, கண்களில் கண்ணீர் பொங்கி வடிதல் போன்ற அறிகுறிகளாலேயே ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 2 மற்றும் 3-வது அலைகளில் ஏற்பட்டதைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுதல், மிக குறைந்த அளவில் சாப்பிடுவது, ஆக்சிஜன் அளவு குறைவு ஆகிய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள பிரபலமான குழந்தைகள் நல மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான குழந்தைகளை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோடை விருந்தாக இந்த சாதாரண வைரஸ்கள் தான் குழந்தைகளை கஷ்டப்படுத்துவதாக கூறினார்கள்.

    அரசு பொது சுகாதாரத் துறை ஆய்வகத் தரவுகள் படி கடந்த 2 மற்றும் 3-வது அலையை ஒப்பிடும் போது மிக குறைவான அளவே தொற்றுகள் பதிவாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்கள் வீரியத்துடன் இருந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது ஒமைக்ரான் வைரஸ் குடும்பத்தின் உட்பிரிவுகள்தான் பரவி வருகிறது. இவை குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான விசயம். மேலும் இது வீரியம் குறைந்த வைரஸ் என்ற முடிவுக்கும் வரமுடிவதாக துணை இயக்குனர் ராஜூ கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணை நோய் பாதிப்பு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

    Next Story
    ×