என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
நாண், தோசை, சாப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
முட்டை - 3 (வெள்ளைக்கரு மட்டும்)
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கிய பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
முட்டை - 3 (வெள்ளைக்கரு மட்டும்)
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கிய பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை புர்ஜி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
இப்போது திருமணத்திற்கு பின்பு வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதோடு, மனைவியை பிரிந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வேலைபார்ப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு கணவனும்-மனைவியும் வேலைக்காக ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முன்பும் கணவர், மனைவியை பிரிந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அப்படி பிரிந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. இப்போது திருமணத்திற்கு பின்பு வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதோடு, மனைவியை பிரிந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வேலைபார்ப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
கணவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இப்போது நினைத்த நேரத்தில் அவரது முகத்தை பார்த்து பேசிவிட முடியும். அவசரம் என்றால் அன்றே விமானத்தை பிடித்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்து விடவும் முடியும் என்பது போன்ற சவுகரியங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அப்படிப்பட்ட கணவன்-மனைவிக்குள் புதிதுபுதிதாக பிரச்சினைகளும் முளைக்கத்தான் செய்கின்றன.
‘தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்’ என்று சொல்வது, திருமணமான தொடக்க காலத்தில் ஒருவித அந்தஸ்துக்குரிய விஷயமாக மனைவிக்கு தோன்றினாலும், விரைவிலே அது பல்வேறு விதங்களில் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களை எல்லா பெண்களுமே புரிந்துகொள்ளவேண்டும். கணவர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்போது கணவன்- மனைவி இருவருமே அதைபற்றி தெள்ளத் தெளிவாக உண்மையுடன் பேசுங்கள். ஆசைகாட்டும் விதத்தில் அவர்களின் பேச்சு அமைந்துவிடக்கூடாது.
எவ்வளவு காலம் கணவர் வெளிநாட்டில் இருக்கப்போகிறார்? அப்போது சொந்த ஊரில் மனைவியின் சூழ்நிலை எப்படி இருக்கும்? எத்தகைய பிரச்சினைகள் உருவாகும்? அவைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி மனந்திறந்து பேசி தெளிவான முடிவை எடுக்கவேண்டும். அப்படி பிரியும்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பவேண்டும். இருவருக்குமே ஒருவர் மீது இன்னொருவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே, வெளிநாட்டு கணவர்கள் வாழ்க்கை இனிக்கும்.
இப்போது பெரும்பாலான ஆண்களுக்கு கல்யாண வாழ்க்கையில் இருக்கும் ஈர்ப்பு சீக்கிரமே குறைந்துபோய்விடுகிறது. ஒன்றிரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டால் தங்கள் சவுகரியங்களும், சொகுசும் குறைந்துவிட்டதுபோல் அவர்கள் கருதுகிறார்கள். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் சவுகரியங்களும், சொகுசும் கிடைக்கும். தொந்தரவின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவ்வளவு விரைவாக சொந்த நாட்டிற்கு திரும்பமாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் குடும்பத்தை தன்னோடு வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உடன் வைத்துக்கொள்ளவும் விரும்பமாட்டார்கள்.
வெளிநாட்டில் கணவர் வசிக்கும் சூழலில், எவ்வளவு பரபரப்பாக கணவனும்-மனைவியும் இருந்தாலும் இரு வரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளை வீடியோ கிளிப்பிங்ஸ் மூலம் பகிர்ந்துகொள்வது, குழந்தைகளை பேச வைத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போன்று இயல்பான தகவல் தொடர்புகளில் தொய்வில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கணவனும், மனைவியும் கண்டதை எல்லாம் பேசுவதையும், எரிச்சலூட்டும் விஷயங்களை சொல்வதையும் தவிர்க்கவேண்டும். தினமும் பேசினாலும் முகத்தை பார்த்து பேசும் வாய்ப்பை வாரத்தில் ஒருநாள் பயன்படுத்திக்கொண்டால் போதுமானது. எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தால் போரடித்துவிடும்.
வேலைக்காக பிரிந்திருக்கும் கணவனும்-மனைவியும் பேசும்போது ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக கவனமாக பார்த்து பயன்படுத்தவேண்டும். கருத்துவேறுபாட்டிற்குரிய பிரச்சினை என்றாலும், குரலை உயர்த்தாமல் மென்மையாக வெளிப்படுத்துங்கள். இருவரில் யார் பேசினாலும், ஒருவர் பேசி முடித்த பின்பு அடுத்தவர் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
கணவர் வெளிநாட்டில் இருக்கும்போது, மனைவி இதர ஆணுடன் தனியாக போட்டோ எடுப்பதையும், அதை பேஸ்புக் போன்றவைகளில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்கு சரியான காரணங்கள் இருந்தாலும் கணவருக்கு சந்தேகம் எழுந்துவிடலாம். ‘என்னை முதன் முதலில் பெண்கேட்டு வந்தவர் போனவாரம் என் அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்துப் பேசினார்.’ ‘கல்லூரியில் என்னோடு படித்த மாணவன் விருந்துக்கு அழைத்தான்’ என்பது போன்றவைகளை கணவரின் காதுகளுக்கு கொண்டு போக வேண்டியதில்லை. இப்படிப்பட்ட இதர நபர்களை சந்திப்பதையும் முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.
கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும்போது பெரும்பாலான பெண்கள் மாமியார் வீட்டில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் மாமியார் குடும்பத்தோடு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மாமியார் மற்றும் நாத்தனார்களை பற்றி தவறான வார்த்தைகளை கணவரிடம் பிரயோகிக்க கூடாது. பின்பு பதிலுக்கு அவர்களும் உங்களை பற்றி கடுமையான வார்த்தைகளை பேசுவார்கள். இதன் மூலம் உள்ளூரில் இருக்கும் மனைவி மட்டுமல்ல, வெளிநாட்டில் வசிக்கும் கணவரும் நிம்மதியாக வாழ முடியாது!
வெளிநாட்டில் கணவர் மட்டும் வெகுகாலம் தங்கி இருந்து வேலை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. கணவன், மனைவி, குடும்பத்தார் அனைவரும் ஒருங்கிணைந்து பக்குவமாக நடந்துகொண்டால் மட்டுமே அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்!
- விஜயலட்சுமி பந்தையன்.

உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள். நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது.
கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது. இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செலரியில் கலோரிகள் அறவே கிடையாது. அதிக அளவு தண்ணீர் கொண்டது. இதனால் கலோரிகள் உடலில் சேராது. அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
உடலை டீடாக்ஸ் செய்வதால் டாக்ஸின்கள் வெளியேறுகிறது. சருமத்துக்கும், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம். நீங்களே மிக எளிதாக இந்த செலரி ஹெல்த் ட்ரிங்கைத் தயாரிக்கலாம்.
தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். உடற்பயிற்சி செய்வதை ஒரு போதும் கைவிடாதீர்கள்.

சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா. இன்று இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கவும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பட்டாணி - 1 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு - தேவைக்கு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா ரெடி.

இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதுகுவலி
மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது உங்கள் எடை அதிகரித்து இருப்பதாலும் வயிறு முன்நோக்கி தள்ளி இருப்பதாலும் முதுகுவலி ஏற்படும். மேலும், இடுப்பில் உள்ள தசைநார்கள் பிரசவத்துக்குத் தயாராவதற்காக சற்றே தளர்வாக இருப்பதால் இடுப்புப் பகுதியில் அசெளகர்யமான உணர்வும் ஏற்படும்.
உங்கள் உடலின் போஸ்சரை சரியாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அமரும்போது நேராக அமர்வது, நேரான சாய்மானம் உள்ள நாற்காலியைப் பயன்படுத்துவது, உறங்கும்போது கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணை வைத்துக்கொள்வது ஹீல்ஸ் இல்லாத காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை நல்ல பலன் தரும். அளவுக்கு அதிகமான முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெறத் தயங்க வேண்டாம்.
ரத்தக் கசிவு
சிலருக்கு மெல்லிய ரத்தக் கசிவு இருக்கும். துளித் துளியாய் ரத்தக் கசிவு இருந்தாலும் அது ஒரு சீரியஸான பிரச்சனைதான். ப்ளெசண்டா ப்ரீவியா, நஞ்சுக்கொடி விலகுதல், குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களுக்கான அறிகுறியாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
பொய் வலி
இடுப்பு வலிதான் பிரசவத்திற்கான முதல் சமிக்ஞை. கர்ப்பப்பையில் உள்ள தசைகள் இறுகி வலி எடுக்கும். இதனை ஆங்கிலத்தில் Labor pain என்பார்கள். ஆனால், மூன்றாவது ட்ரைமஸ்டரில் லேபர் பெய்ன் போலவே பொய்வலி ஏற்படும். இதனை உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது தயாரிப்பு நிலை எனலாம். ஆனால், பொய்வலிக்கும் நிஜமான பிரசவகால இடுப்புவலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பொய்வலி சில சமயங்களில் வலியாக இல்லாமல் அசெளகர்யமான உணர்வாக இருக்கும்.
குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு வராது. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது பொய்வலி ஏற்பட்டால் போஸ்சரை மாற்றியதும் வலி விலகும். நெடுநேரமாக வலி தொடராது. இது எல்லாம் பொய் வலியின் அறிகுறிகள். பொதுவாக, பொய் வலிக்காக அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், எப்போதும் வலி இருந்துகொண்டிருந்தாலோ, வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
மார்பகம் பெருத்தல்
தாய்மைக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் கர்ப்பிணிகளின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் தாய்ப் பால் சுரப்பதற்குத் தயாராகி, மார்பகங்கள் விரிவடையும். சிலருக்கு மார் காம்புகளில் இருந்து மஞ்சள் நிற திரவம் கசியத் தொடங்கும். இதனை சீம்பால் என்பார்கள். குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு மிகவும் அத்தியாவசியமானது சீம்பால். எனவே, அச்சம் வேண்டாம். தரமான, அளவு சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். அசெளகரியமான உள்ளாடைகளை தவிர்த்திடுங்கள்.
திரவக் கசிவு
இந்தப் பருவத்தில் கர்ப்பிணிகளுக்கு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான திரவக் கசிவு ஏற்படுவது இயல்புதான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அடர்த்தியான, தெளிவான, கொஞ்சம் உதிரம் கலந்த திரவக் கசிவு ஏற்படும். இது, செர்விக்ஸ் பகுதி பிரசவத்துக்கு நெகிழ்வாவதன் அறிகுறி.
இந்த திரவக் கசிவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல, திடீரென அளவுக்கு அதிமாக திரவம் பெருக்கெடுத்தால் அது பனிக்குடம் உடைந்ததன் அறிகுறியாக இருக்கலாம். எட்டு சதவிகிதம் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் முன்பே பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.

பப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.
தற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது. சருமம் அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உங்கள் சருமம் வறட்சியாகவோ அல்லது அதிகபடியான எண்ணெய் தன்மையுடனோ இருக்கலாம். கவலை வேண்டாம்.
உங்களுக்காகவே இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.
பப்பாளி மற்றும் தேன்:
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.
பப்பாளியின் விழுது - ¼ கப்
தேன் - ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ½ தேக்கரண்டி
இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி மற்றும் ஆரஞ்சு:
பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.
பப்பாளி விழுது - தேவையான அளவு
ஆரஞ்சு சாறு - 3 தேக்கரண்டி
ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.
பப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி:
உங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.

இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
செலரி தண்டுகள் - 2
பசலைக் கீரைகள் - 5
சாத்துக்குடி - 1

செய்முறை :
செலரி, பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
சாத்துக்குடியைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
மிக்சியில் சாத்துக்குடி சாறை ஊற்றி அதனுடன் நறுக்கிய பசலை கீரை மற்றும் செலரியை போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு அதில் லெமன் ஜூஸ் கலந்து குடிக்கவும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு புத்துணர்வையும் தரும்.
செலரி தண்டுகள் - 2
பசலைக் கீரைகள் - 5
சாத்துக்குடி - 1
லெமன் ஜூஸ் - சுவைக்கு

செய்முறை :
செலரி, பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
சாத்துக்குடியைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
மிக்சியில் சாத்துக்குடி சாறை ஊற்றி அதனுடன் நறுக்கிய பசலை கீரை மற்றும் செலரியை போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு அதில் லெமன் ஜூஸ் கலந்து குடிக்கவும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு புத்துணர்வையும் தரும்.
சூப்பரான செலரி ஜூஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.

சராசரியாக மற்ற குழந்தைகள் போல் உடல் வளர்ச்சியிலும், புழக்கத்திலும் எந்த தடுமாற்றமும் இல்லாத இந்த குழந்தைகளில், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதில் தடங்கலும், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்யும் “வார்ப்பு ஓழுக்க நிலையும்’, மிக நுண்ணிய கவனச்சார்பும் பிரதான மாற்றங்களாக காணப்படுகிறது. இவ்வகை நிகழ்வுகளால் வயதொத்த குழுமத்துடன் பழகும் முறையின்மை, மேலும் சமூக ஆற்றல் குறைப்பாடும் ஏற்படுகிறது. நோய் என்ற விளக்கத்தினுள் இவர்கள் அமைந்தாலும், இவர்களில் காணப்படும் சில அதீத திறன், இவர்களை வளர்திறன் மாற்றுத்திறனாளிகளாகவே வகைபடுத்த முடிகிறது.
ஆட்டிசம் வரக் காரணம் என்ன?
குறிப்பான காரணிகளை இதுவரை ஆதாரத்துடன் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆட்டிசம், மரபணு சார்ந்த நேர்ச்சியுள்ள குழந்தைகள் அதற்கு ஏதுவான சூழ்நிலையில் வளரும் பொழுது வெளிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணுக்காரணிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் “மேல்மரபியல்” இதற்கான பதிலை கூற வாய்புள்ளதாக அறியப்படுகிறது. மேல் மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின்- டி.என்.ஏ. வரிசையில் -எந்தவித மாற்றமும் இல்லாமலேயே ஒருசில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின் போது வெளிப்படுவதைக் குறிக்கிறது.
எப்பொழுது கண்டுபிடிக்க வேண்டும்?
எந்த ஒரு பிரச்சனையும் போல் ஆரம்பத்திலேயே கண்டறிய முற்படுவதே ஆட்டிஸம் பிரச்சனைக்கும் நல்லது. ஆனால், குறிப்பிட்ட வயது வரும் வரை அதன் அறிகுறிகள் தெளிவாக பிரித்து காணப்படுவது இல்லை. பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு, 12 முதல் 24 மாதங்களுக்குள், சூழ்நிலை கவனச்சிதறலும், சமூகத்தொடர்புக்கு குழந்தை எடுக்கும் முயற்சிகளில் சோர்வும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்த வயதினினும் குறைவாக கண்டுபிடிக்க, வளர்திறன் மருத்துவரின் வாயிலாக பார்த்தால் மட்டுமே முடியும்.
அதாவது, 2 வயது முடிந்த ஒரு குழந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர், சுமார் ஒரு மாதமாக மட்டுமே இது போன்ற மாற்றத்தை காண்பதாக கூறினாலும், குழந்தையை அடிக்கடி வீடியோ பதிவு செய்யும் இந்த காலத்தில், அந்த பதிவுகளை வளர்திறன் மருத்துவர் பார்க்கும் பொழுது கணிசமான மாற்றங்கள் 1 வயது முடிந்தவுடனேயே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
1 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஆட்டிஸம் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க ஆதாரபூர்வமான முறைமைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. ஆனால் அக்குடும்பத்தில் உள்ள வேறு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், வளர்திறன் குழந்தைகள் மருத்துவரின் கண்காணிப்பு மிக அவசியம்.
ஏன் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்?
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆட்டிஸம் பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு விரைவாக கண்டுபிடித்து பயிற்சிகளை துவக்குகிறோமோ அவ்வளவு துல்லியமாக முன்னேற்றங்களை காணமுடிகிறது. சமீப கால மருத்துவ அறிவியல் பதிவுகளில், சமூக தொடர்பு குறைபாடு மட்டும் கொண்ட குழந்தைகளுக்கு, ஆட்டிஸம் என்று முழுமையாக அறியப்படும் முன்னமே, பயிற்சியை துவங்கினாலும் நன்மையே பயத்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்பு கண்டறிய, அனைத்து குழந்தைகளுக்கும், 15 மாதம் முதல் 30 மாதம் முடிய வி-சிபிகிஜி எனப்படும் வினாநிரலை பயன்படுத்துவது சிறந்த முறையாகும். இதனை செயல்படுத்த எந்த ஒரு குழந்தைகள் மருத்துவரின் வெளிநோயாளிகள் காத்திருக்கும் நேரத்திலும் மேற்சொன்ன வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் பதிலுரைத்து விடலாம். குறிப்பாக ஆட்டிஸம் பாதிப்பு உறுதி செய்வதற்கான சிறப்பு கருவிகளில் (Diagnostic tools) பயிற்சி பெற்ற குழந்தைகள் வளர்திறன் மருத்துவரிடமே உங்களுக்கான சரியான பதில் கிடைக்கும்.
இதை சரி செய்ய உள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் யாவன?
ஆட்டிசம் ஒரு பேச்சு மற்றும் பேசும் தொடர்பு சார்ந்த மனத் தகைமை சீர்குலைவு பிரச்சனை. ஆகையால், முதல் நிலை சிகிச்சை முறை, தகைமை மற்றும் வாய்மொழி / வாய்மொழி அல்லாத சமூகத் தொடர்பு நிலையை உயர்த்தும் நோக்கத்தில் இருக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் கூட இந்த வகை பயிற்சியை அளிக்க முடியும். இருப்பினும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஏதுவான சூழலும் கற்றலுக்கு அவசியம் என்பதால், அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் கொண்டு செய்வதே நல்லது.
குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுக்கான தேவைகளை கேட்பதற்கும், தானே செய்து கொள்வதற்குமான பயிற்சியை தொழில் வழி சிகிச்சை முறைகள் மூலம் தர முடியும். தவிர இந்த குழந்தைகளில் சிலருக்கு சராசரியாக வெளியுலகம் தரும் வெளிச்சம், ஓலி, மற்றும் தொடுபுலன்சார் வேண்டாநிலை இருப்பின் அதனை களையும் தனித்துவ சிகிச்சை முறையையும் பயன்படுத்த வேண்டும்.
மருந்து மூலமாக ஆட்டிசம் நோயை குணபடுத்த முடியாது என்றாலும், ஐந்து வயதிற்கு மேல் சில மருந்துகள் சக நோயுற்ற நிலைகளில், இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் ஆதாரபூர்வமான சிறந்த சிகிச்சை முறைகள் என்ன?
ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த, அதிக முன்னேற்றத்தை கொடுத்துள்ள சிகிச்சை முறை “அப்ளைட் பிஹேவியர் அனாலிசிஸ்” (Applied Behavioural Analysis-ABA).. இந்த வகை சிகிச்சை அளிப்பவர்கள் உண்மையில் பயிற்சி பெற்றவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ள, உலக நாடுகள் வாரியாக அங்கீகாரம் பெற்றவர்களின் நிரலை இணையதளத்தில் காணலாம்
(<https://www.bacb.com/services/o.php?page=100155>)
எதை வைத்து சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பது?
ஆட்டிஸம் ஒரு அலைநிரல் தொகுப்பான சுகவீனம். அதாவது spectrum disorder என ஆங்கிலத்தில் கூறுவர். இதன் காரணம், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளின் முதல் நிலை அறிகுறிகளும், பின்னர் அவர்களின் இயற்கையான வளர்ச்சிப் போக்கும்- ஒரே குழந்தைக்குள்ளான தனிதிறன்களிலும், ஒரு வயதை உடைய பல்வேறு குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுதும், கணிசமான அளவில் மாறுபட்டு இருக்கும். இதனால் எல்லா ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. இவ்வகை சிகிச்சைகளின்அளவும், நோக்கமும் ஓவ்வொரும் குழந்தைக்கும் வேறுபடுமாதலால், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. அதனை கண்டறிந்து சரியான “தனித்துவ பயிற்சித் திட்டம்” குழந்தைகள் வளர்திறன் சிறப்பு மருத்துவர் மட்டுமே அளிக்க முடியும்.
இந்த சிகிச்சை முறையின் திருத்தியமைக்கப்பட்ட பரிமாணங்களும் உள்ளன. அவையாவன...
· எளிய பாடங்களும், நேரிடை வலுவூட்டலும் கலந்த பயிற்சி.
· கற்றலுக்கு, வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத தொடர்பை மேம்படுத்தும் பயிற்சி.
· ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான தகைமை பயிற்சி.
· வாய்மொழித் திறன் மேம்படுத்தும் பயிற்சி.
· விளையாட்டு வழிப் பயிற்சிகள்.
ஆட்டிசம் குழந்தைகளின் அதீத சக்தி
பல நேரங்களில், ஏன்!... அனேகமாக நாம் அனைவருமே பேசத் தெரிந்திருப்பதனால் இவ்வுலகை ஆள தகுதி பெற்றோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். பேசும் சக்தி மற்ற உயிரினங்களிடமிருந்து மனித குலத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது. ஆனால், சற்றே கூர்ந்து நோக்கினால் இந்த பேசும் சக்தி இல்லாத உயிரினங்கள் இயற்கையோடு இசைந்து தன் இன வளர்ச்சிக்கும், இயற்கையின் சமநிலைக்கும் சிறந்த வகையில் பங்காற்றியுள்ளன.....ஆனால் நம்மால், அதனை சிதைக்கவே முடிந்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்புள்ளானவர்களின் ஆக்க சக்தி அவர்களின் பார்வை வழி கற்றலில் உள்ளது. உலகின் பல திறன் சோதனை முறைகளில், வாய்மொழி சோதனைகளே பிரதானம். சைகை முறை / வாய்மொழி அல்லாத சோதனை வழி கண்டறியப்பட்ட திறன் அளவில் சராசரி மனிதர்களை விட ஆட்டிசம் பாதிப்பு உள்ள பெரியவர்கள் ஓங்கியிருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது. ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கு அகன்ற பகுப்பாய்வு சார் மூளைத்திறன் அதிகம். அறிவியல் ஆராய்ச்சி உலகில் ஆட்டிசம் உள்ளோர் சிறந்து விளங்கும் வாய்ப்பு உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டிசம் ஒரு குறைதானா? என்ற சந்தேகமே மேலோங்கியிருக்கறது. செவிக்குறை, பார்வைக்குறை மற்றும் பிற உடற்குறையுள்ளோரை அணைத்து தன்னுள் எடுத்துக் கொண்ட சமூகமே முற்போக்கு சிந்தனை உள்ள சமூகம். அவ்வகையில், ஆட்டிசம் உள்ளோரை உயரிய இடத்தில் இவ்வுலகம் போற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை....!

இந்த 2 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைக்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
தினமும் உடற்பயிற்சி செய்தாலே எடையைக் குறைத்து, தேவையற்ற கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். கீழே கொடுத்துள்ள 2 பயிற்சியையும் முதலில் 15 முறை செய்து, பிறகு தொடர்ந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி, எளிதில் எடையைக் குறைக்கலாம்.
புஷ் அப் வித் ரொட்டேஷன் (Push up with rotation)
ஒருக்களித்துப் படுத்து, இடது கையை தரையில் ஊன்றி, உடல் தரையில் படாதவாறு ஒரு பக்கமாக, பாதம் மற்றும் கையால் பேலன்ஸ் செய்ய வேண்டும். வலது கையை பின்புறமாகத் திரும்பி உயர்த்த வேண்டும். இதே நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். அடுத்து, இன்னொரு கைக்கும் இதே போல் செய்ய வேண்டும்.
பலன்கள்: இதயத் துடிப்பு சீராக உதவும். தோள், கை சதைகள் வலுவடையும். இடுப்புப் பகுதியில் கொழுப்பைக் குறைக்கும்.
ரஷ்யன் ட்விஸ்ட் (Russian twist)
தரையில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும். கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.
பலன்கள்: தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.

உணவில் கருமஞ்சளை பயன்படுத்தினால் நல்ல உடல் பலம் கிடைக்கும். அதிக உடல் எடையை குறைக்கும். நோய்கிருமி நம்மை தாக்காமலும் தடுக்கவல்லது.
உணவில் கருமஞ்சளை பயன்படுத்தினால் நல்ல உடல் பலம் கிடைக்கும்.
செல்கள் சீக்கிரம் முதிற்சியடைவதை தடுக்கிறது. அழற்சியை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நோய்கிருமியை அழிக்கிறது. நோய்கிருமி நம்மை தாக்காமலும் தடுக்கவல்லது.
கருமஞ்சளை அரைத்து, வாழை இலையில் வைத்து சூடுபடுத்தி, வலி வீக்கமுள்ள மூட்டுகளில் தடவ மூட்டுவலி வீக்கம் விரைவாக குறைகிறது.
கருமஞ்சள் கிழங்கு மற்றும் சில பப்பாளி இலைகளை எடுத்துக்கொண்டு, நன்கு சுத்தம் செய்தபின், அவற்றை நன்கு அரைத்து, விழுதாக எடுத்துக்கொண்டு. பின்னர் ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த விழுதை இட்டு, நன்கு கலக்கி, அந்த குடிநீரை தினமும் தொடர்ந்து குடித்து வர ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் விலகி, இரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
அதிக உடல் எடையை குறைக்கும், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும் சிறந்தது.

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்,
குடைமிளகாய் - 100 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
பாதாம் - 100 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை :
பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பன்னீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தனியாத்தூள் சேர்க்கவும்.
பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பன்னீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும்.
இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பெண்ணின் அந்தரங்க ஒளிப்படமோ மார்ஃபிங் படமோ வெளியே வந்தால் அச்சத்தால் முடங்கிவிடாமல் அந்த சம்பவத்தைக் கடந்துசெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பாலியல் தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து பெண்களே குற்றவாளிகளாக்கப் படுவதற்கும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஆண்கள் பெருமிதத்துடன் வலம்வருவதற்கும் கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் சமூகம் முழுவதும் புரையோடியிருப்பதே முக்கியக் காரணம். பெண்ணின் அந்தரங்கம் பொதுவெளியில் பகிரப்படும்போது அதை வெளிப்படுத்தியவனை விட்டுவிட்டு அந்தப் பெண்ணையே கேலிப் பொருளாக்குகிறோம்.
பாலியல் ரீதியான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் சமூகத்தின் விரல்கள் முதலில் பெண்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. பொள்ளாச்சி சம்பவத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கியே வைக்கப்பட்ட பெண்மை இப்போதுதான் சுதந்திரக் காற்றைச் சற்றே சுவாசிக்கிறது.
இதுபோன்ற பாலியல் வன்முறைகளால் பொதுவெளியில் பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பாலியல் சம்பவத்தால் பெண்கள் மட்டுமே ‘பாதிப்புக்கு’ உள்ளாகிறார்களா? ஆண்களின் கற்புக்குப் ‘பாதிப்பு’ இல்லையா? அல்லது ஆண்களுக்குக் கற்பே இல்லையா? கற்பு என்பதற்கான வரையறை எது?
அந்தரங்கத்தை வெளிப்படுத்தியவனைப் போலவே, அதைப் பார்த்து ஏளனம் செய்பவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பெண்கள் இதை அவமானமாகக் கருதாமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் வெகுண்டு எழுந்தால்தான் இதுபோன்ற அவலங்கள் தீரும்.

எந்தக் குற்றத்துக்கும் பெண்ணையே பொறுப்பாளியாக்கும் இந்தச் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்பதை முதலில் களைய வேண்டும். பெண் குழந்தைக்குத் தேவை தன்னம்பிக்கையும் விழிப்புணர்வுமேயன்றி நகையோ சொத்தோ இல்லை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். பெண்கள் பேசினாலே காதல், தொட்டாலே காமம் என்ற நினைப்பில் இருக்கும் ஆண்களின் சிந்தனை மாற வேண்டும்.
ஆணைப் பெற்ற பெற்றோருக்குத்தான் பொறுப்பும் கடமை உணர்வும் அதிகம் இருக்க வேண்டும். தடைகளைத் தாண்டி, பெண் சமூகம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தக் காலப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் விதத்தை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளைச் சமூகத்தைப் புரிந்து கொண்டவர்களாக சுய மரியாதை உணர்வோடு வாழப் பழக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில் பெண்ணின் அந்தரங்க ஒளிப்படமோ மார்ஃபிங் படமோ வெளியே வந்தால் அச்சத்தால் முடங்கிவிடவோ தவறான முடிவை எடுக்கவோ கூடாது. அந்தச் சம்பவத்தைக் கடந்துசெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குடும்பமும் அந்தப் பெண்களுக்குத் துணைநிற்க வேண்டும்.
அவர்கள் அந்நிகழ்விலிருந்து மீண்டுவரத் துணைபுரிய வேண்டும். சமுதாயமும் இதுபோன்ற நிகழ்வுகளில் பெண்களின் தவறு ஏதுமில்லை என்பதை உணர வேண்டும். ஆறுதலாக இல்லாவிட்டாலும் வார்த்தைகளால் அவர்களைக் கூறுபோடாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.