என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை பயன்படுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதோடு, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
    செய்முறை

    விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 15 நிமிடங்கள் ஆரம்பத்தில் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகரித்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை இந்த முத்திரை சமநிலைப்படுத்துகிறது. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை பயன்படுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதோடு, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.

    நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



    அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.

    தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.

    அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும். 
    ஹோட்டலில் சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.

    பூரணத்துக்கு:

    காய்கறி கலவை - கால் கப்,
    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 4,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்த மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள்.

    பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை முகத்திற்கும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகளை விரிவாக பார்க்கலாம்.
    மாம்பழம் சுவையானது மட்டுமில்லை அதில் சருமத்திற்கு தேவையான சத்துகளும் இருக்கிறது. இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகளை விரிவாக பார்க்கலாம்.

    மாம்பழப் ஃபேஸ் பேக் (Mango pulp face pack)

    மாம்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து முகத்தில் போட்டு 5 நிமிடம் முகத்தில் கையால் தடவிக் கொண்டேயிருங்கள். பின்பு 5 நிமிடம் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இது உதவும். சிறந்த பலனை பெற வாரத்திற்கு மூன்று முறைகள் செய்யுங்கள்.

    மாம்பழம் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் (Mango and Besan face pack)

    இந்த குறிப்பிட்ட ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தின் கருமையை போக்க சிறப்பாக உதவும். இந்த ஃபேஸ் பேக் செய்யும் முறை, நன்கு பழுத்த மாம்பழத்தின் சதை,  2 டீஸ்பூன் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்கள். முதலில் மாம்பழத்தின் சதையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்களை போட்டு  இவை பேஸ்ட் போன்ற திக்காக வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். பின்பு மெதுவாக முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இரண்டு முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு முடிவுகளை பாருங்கள்.

    மாம்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்(Mango and curd face pack)

    எண்ணெய் சருமத்தை உடையவரா நீங்கள் இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு ஏற்றது. மாம்பழத்தின் நன்மைகளுடன் இதில் தயிர் மற்றும் தேனின் நன்மையும் இருக்கிறது. மாம்பழத்தின் சதை 1 டீஸ்பூன் தயிர், தேன் மற்றும் 1 டீஸ்பூன் முதலியவற்றை திக்காக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.  

    இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
    இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கிறார்கள்.

    மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் ‘சோடியம் குளோரைடு’ அதிக அளவில் உள்ளது.

    குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

    இந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    தைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.
    பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.
    பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒரு வேளை பெண் வாரிசுகள் அவர்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலையில், மற்ற வாரிசுகள் அதை பகிர்ந்து கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.

    2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் அவர்களது தந்தையின் காலத்திற்குப் பிறகு, அவருடைய பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க முடியும். ஆனால், 25.3.1989-க்கு முன்னதாக திருமணம் செய்து கொண்ட ஓரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க இயலாது. அந்த காலகட்டத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் அவர்களது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாடலாம். ஆனால், அந்த சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை அல்லது விற்பனை செய்யப்பட்டிருந்தால், அதன் மீது உரிமை கொண்டாட முடியாது.

    பொதுவாக, ஒரு குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்படும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளும் சம்மதம் தெரிவிப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு செய்யப்படும் பாகப்பிரிவினை சட்டப்படி செல்லாது.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பீன்ஸ் - 6
    பச்சை பட்டாணி - 1/4 கப்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.
    கல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.

    உணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.

    சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

    உண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.

    இன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.

    இதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள்? பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.

    மிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.

    குறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி நில் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே!!

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்
    வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.
    விரல் ரேகை விஞ்ஞானம் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும் மட்டுமே சொந்தமானது கிடையாது. ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் குறிப்பாக மனித இனத்திற்கு தனித்த அடையாளமாக அமைந்துள்ள ஒரு அதிசயம். விரல்களின் நுனியில் நான்கு வடிவங்களுடன் கூடிய மேடுபள்ளம் நிறைந்த ரேகைகள் உள்ளன. தனித்தனியாக உள்ள பத்து விரல்களையும் முறைப்படி தொடுவது முத்திரை ஆகும்.

    இந்த முத்திரைகளை சரிவர ஒன்று சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் உடல் வியாதிகள் அனைத்தையும் குணமாக்கலாம். நீடூழி வாழலாம். விரல் ரேகைகள் தெய்வத்தன்மை கொண்டது. இந்த முத்திரை மனிதகுலம் தோன்றிய நாள் முதல் செயல்பாட்டில் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளில் ‘அபயஹஸ்தம்’ ரகசியம் உள்ளது. அவ்வாறே விரல்களை நம் உடலின் முன் பக்கம் ஏந்தி இறைவன் அருளை வேண்டும் போது உடலில் மின்சாரம் மற்றும் காந்த சக்தி பாயும். இவ்வாறாக மனஅமைதி, சமாதானம் ஏற்படும்.

    இந்த விரல்ரேகை முத்திரை பயிற்சியையும், பயன்பாட்டையும் சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மூலமாக மனிதகுலம் இறக்குமதி செய்து கொண்டது. தியானம், பிராணாயாமம் அதிகரிக்க முத்திரைகள் அவசியம். மேலும், சிறந்த ஆசனங்களை அமைத்துக் கொண்டு செய்யும் போது மன அமைதி ஏற்படுகிறது. மனம் தீயவழியில் செல்லாமல் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.

    அசம்யுக்தா, சம்யுக்தா என்னும் நாட்டிய முத்திரையில் முறையே 24 மற்றும் 13 முத்திரைகள் உள்ளன. இந்த முறையில் விரல் ரேகைகளை ஒவ்வொரு விதத்திலும் கைவிரல்களின் அழியாத் தன்மைகொண்ட ‘ரிட்ஜஸ்’ என்னும் மேட்டுப்பகுதி ஒன்றை ஒன்று தொடும்போது உடலில் மின்சாரம் பாய்ந்து காந்த சக்தி ஏற்படுகிறது. இதன் காரணமாக வெகுநேரம் நாட்டியமாடினாலும், தியானம் செய்தாலும் உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

    மின் இணைப்பில், பாசிடிவ், நெகடிவ் இரண்டும் தொட்டாலே மின்சாரம் ஏற்படுவது போல் மேட்டுப் பகுதியான ரிட்ஜஸை மெதுவாக தொட்டால் போதும் அழுத்தம் தர வேண்டியதில்லை. இந்த முத்திரைகளை முறையாக பயன்படுத்தினால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும். சக்தி அதிகரிக்கும். மருந்துகள் உபயோகிக்கவேண்டிய அவசியம் இல்லை. நாமே எளிதாக கற்றுக்கொண்டு செயல்படுத்தி பூரணகுணமடையலாம். தற்காலத்தில் குழந்தைகள் பெரிய அளவில் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றிற்கு இந்த விரல்ரேகைகளை தொட்டு முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பூரண குணம் கிடைக்கும்.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் செய்யலாம். நீண்ட கால நோயுள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரையை நிரந்தரமாக செய்யும் போது, மூளையின் சம்பந்தப்பட்ட பகுதியில் தூண்டுதல் ஏற்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான உண்மை. இத்துடன் மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு மூச்சுப்பயிற்சியும் மேற்கொண்டால் பூரண குணம் உண்டாகும். பிராணாயாமம் செய்யும்போது கைவிரல் ரேகைகள் காந்த சக்தி பெறுகிறது. அத்துடன் முத்திரை பயிற்சி செய்தால் பூரண பலன் கிடைக்கும்.



    இந்தவிரல் நுனியில் நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன. இவைதான் மகா விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கர, லாட, வில், மற்ற வடிவங்கள். விரல்ரேகை மேல் உள்ள ரிட்ஜஸ் எனப்படும் மேடு போன்ற பகுதிக்கும் பிராணிக்ஹீலிங்ஸ் மற்றும் ’ரெய்கி’ என்ற சிகிச்சை முறைக்கும் தொடர்பு உள்ளது. கைவிரல் ரேகைகளை கண் முன்னால், முகத்தின் முன்னே வைத்துக்கொண்டு பிராணாயாமம் செய்யும்போது விரல்களில் இருந்து ஒருவித காந்தசக்தி உண்டாகும். இந்த காந்த சக்தி மற்றும் மெல்லிய மின்சார அதிர்வுகள் நம் உடலில் உணரப்படும்போது நாம் பிறருக்கு நன்மைக்காகவும், குணமடையவும் பிரார்த்தனை செய்யும் போது அது பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மூளையில் இருந்து புறப்படும் இந்த தூய எண்ணங்கள் தண்டுவடம் வழியே நரம்புகளில் பரவி விரல் நுனிகளில் முடிவடைகிறது. அப்பொழுது ஏற்படும் நம் தூய்மையான எண்ணங்களுக்கு பலன் கிடைக்கிறது. நமது கட்டைவிரல் தெய்வ சக்தியையும், ஆள்காட்டி விரல் மனித சக்தியையும் குறிக்கிறது. இதைத்தான் கண்ணதாசன் பாடலில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடினார் சின் முத்திரையில் இவை ஒன்று சேர்த்து காண்பிக்கப்படுகின்றன. ஐந்து விரல்களும் பஞ்சபூதத்தின் அடையாளங்கள். கட்டைவிரல் நெருப்பு சக்தி கொண்டது. மற்ற விரல்களை பாதுகாக்கிறது. உடலில் குறிப்பிட்ட வெப்பத்தை தக்கவைக்க இந்த விரல் பயன்படுகிறது.

    அதேபோன்று நமது ஆள்காட்டி விரல் பஞ்சபூதத்தில் காற்று தன்மைகொண்டது. காற்றுபோன்று எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஆள்காட்டி விரலில் நுனி அசைவுக்கேற்ப சில விபரீதங்களுக்கும் காரணமாகிறது. மன அமைதிக்கும் அதே சமயம் பிறர் மன அமைதியின்மைக்கும் காரணமாகிறது. ஆகவேதான் ஆள்காட்டி விரலை காட்டி பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். நடுவிரல் ஆகாயதத்துவம் கொண்டது. அளவில் பெரிய நீளமான வடிவம் கொண்டது. மோதிர விரல் பஞ்சபூதத்தில் மண் சக்தி கொண்டது. இது புனிதமான விரலாகவும் இரு மனங்களை ஒன்று சேர்க்கும் திருமணத்திற்கு மோதிரம் அணிய இந்த விரல் காரணமாகிறது. சுண்டுவிரல் நீர் தத்துவம் கொண்டது. உடலில் இருக்கும் நீர் சக்தியை பாதுகாக்க பயன்படுகிறது.

    பிறருக்கு வணக்கம் சொல்லும்போது இந்த விரல்தான் முன்னால் நின்று நீர் போன்று இதயத்தில் குளிர்ச்சியை இரு மனங்களிலும் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. விரல் நுனிகளில் உள்ள வடிவங்களை தாங்கிய ரேகைகள் புனிதத்தன்மை கொண்டது. மேலும் சரியான முத்திரைகளை விரல்களில் பயன்படுத்தினால் சைனஸ் குறைபாடுகள் முகத்திலுள்ள குறைபாடுகள் நீங்கும். இதன் அடிப்படையில் தான் ஒருவர் கைவிரல்களை நம் கைவிரல்களுடன் சேர்த்து கெஞ்சுவது, கைகுலுக்குவது போன்றவை இருவருக்கும் மனரீதியான அமைதியை தருகிறது. இந்த தொடு உணர்ச்சி, அழுத்தம் போன்றவை பெரிய நபர்களுக்கிடையே நன்மையை செய்கிறது.

    மேற்கண்ட விரல் மேல் தோலில் உள்ள மேடான ரிட்ஜஸ் என்னும் கோடுகளை முறைப்படி தொட்டு பயிற்சி செய்வது முத்திரை ஆகும். சின் முத்திரை, தியானமுத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, ஆகாய முத்திரை, நில முத்திரை, சூர்யமுத்திரை, வருண் முத்திரை, நீர் முத்திரை, அபான முத்திரை, பிராண முத்திரை, லிங்க முத்திரை, சங்கு முத்திரை, குபேர முத்திரை, கருட முத்திரை முஷ்டிமுத்திரை, மீன் முத்திரை, புத்த முத்திரை, யோனி முத்திரை போன்ற குறிப்பான சிலமுத்திரைகள் மூலமாக முறைப்படி தொட்டு பிராணாயாமம் செய்து கொண்டு தியானம் செய்யும் போது உடலின் சகல வியாதிகளுக்கும் நிவாரணம் பெற்று நீடூழிவாழலாம். மன அமைதி, உடல் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. மரணமிலா வாழலாம் பெருவாழ்வை அடையலாம்.

    சா.கிருஷ்ணமூர்த்தி,

    காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) விரல் ரேகை நிபுணர் சென்னை.
    பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் இதய ஆரோக்கியத்தைக் காக்கும். மக்னீசியம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.


    பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் அறிந்து கொள்ளலாம்.

    இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

    இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.



    இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

    தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

    ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

    பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

    ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.
    உருண்டை காரக்குழப்பு சாப்பீட்டு இருப்பீங்க ஆனால் பருப்பு உருண்டை மோர் குழம்பு அதை விட அருமையாக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மோர் - 2 கப்

    உருண்டை செய்ய...

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 10,
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்.

    அரைக்க...

    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 6,
    இஞ்சி - 1 துண்டு,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    அரிசி - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, மோரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு உருண்டை மோர் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×