search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragi kichadi"

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பீன்ஸ் - 6
    பச்சை பட்டாணி - 1/4 கப்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×