என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
    முறையாக 7-8 மணி நேர தூக்கம் அன்றாடம் இல்லையா? இரவில் அதிக நேரம் தனியே விழித்து தவிக்கின்றீர்களா? இதனால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம்.

    * தூக்கம் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். தூங்கும் பொழுதுதான் நம் உடலில் ரிப்பேர்கள் நடக்கின்றன. வளர்ச்சி ஏற்படுகின்றது. சக்தி சேமிக்கப்படு கின்றது. ஊட்டச் சத்து உடலுக்கு அளிக்கப்படு கின்றது.

    * தூக்கத்தில் தான் ஹார்மோன்கள் சீர் செய்யப்படுகின்றன.

    * நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகின்றது

    * ஞாபக சக்தி கூடுகின்றது. தூக்கமின்மை ஒருவரை பித்து பிடித்தவர் போல் ஆக்கி விடும்.

    தூக்கமின்மை

    * மறதி நோயினை ஏற்படுத்தும். கவனிக்கும் திறன் வெகுவாய் குறையும்.
    * தூக்கமின்மை அதிக எடையினைக் கூட்டும்.
    * சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.
    * இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
    * மனநிலை பாதிக்கப்படுவர்.
    * ப்ராஸ்சேர் புற்று நோய் பாதிப்பு ஆண்களுக்கு கூடும்.

    ஆக தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
    ரெட் ஒயின் பேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். ஆனால் இந்த பேஷியலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
    சிவப்பு ஒயினை வைத்து பேஷியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு பேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்க்கலாம்.

    கிளென்சிங்: ஈரமான துணியால் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி ரெட் ஒயினுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளுங்கள். அதை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். நன்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

    ஷகரப்: ரெட் ஒயினை, காபி, அரிசி போன்ற இயற்கையான ஷகரப்புடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் உலர்ந்த சருமத்தையும், டெட் செல்களையும் நீக்கி விடும்.

    மசாஜ்: கற்றாழை அல்லது பன்னீர், இவற்றுடன் ஒரு தேக்கரண்டி ரெட் ஒயின் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்ய உங்கள் முகம் அட்டகாசமாக ஜொலிக்கும்.

    * இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    * 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். குழந்தை நடக்க தொடங்கும் போது இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும்.

    1. முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

    2. உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக் கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

    3. உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப்பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

    4. உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது, அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும். கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.



    5. முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

    6. உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது. கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம். பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

    7. பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான். குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள். நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி, பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

    8. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான். ஒரு சில குழந்தைகள் நடைபழக தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...


    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்



    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
    ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

    தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)

    மாதவிலக்கு காலத்தில்...

    மாதவிலக்கின் போது,

    கருப்பு உளுந்து
    கருங்குருவை அரிசி
    நல்லெண்ணெய்
    முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.

    மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

    பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.

    கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.

    ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.

    மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.



    சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.

    வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.

    உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

    ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்...

    பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.
    முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    புரோக்கோலியும் நல்ல உணவு.
    உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
    மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.
    மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்.
    வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.
    அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
    பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.
    ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.
    பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.

    கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
    பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

    * அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது.

    * நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம்.

    * சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம்.

    * நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.

    * சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.

    * சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.

    * சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
    உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது.
    உள்ளங்கையில் தான் எல்லா உறுப்புகளுக்கும் ஆதாரப் புள்ளி உள்ளது. வண்டிக்கு அச்சாணி மாதிரி, அதிகாலையில் 10 தடவை கை தட்டினால் அனைத்து நரம்புகளும் நல்ல முறையில் செயல்படும். ஒரு நாள் முழுவதும் உற்சாகம் இருக்கும். பொதுவாக ஒருநகைச் சுவைப்படம் பார்க்கும் பொழுது கைதட்டிச் சிரித்துப் பார்க்கிறோம் அல்லவா? அப்பொழுது நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்குவதாகவும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கை தட்டுவது ஒரு உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது. நீரழிவு நோயில் இருந்து நிம்மதி கிடைக்க உதவுகிறது.

    சிறுநீரகத்தை வலுப்படுத்துவதற்கு கூட முத்திரை உள்ளது. நடுவிரலும், மோதிர விரலும் சேர்ந்து பெருவிரலைத் தொட வேண்டும். ஆட்காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி வைக்கவேண்டும். இந்த முத்திரை காதைத் தூக்கி இருக்கும் நாயைப் போல இருக்கவேண்டும். இதன் பலன் சிறுநீரகத்தை வலுப்படுத்தும். நீரழிவு நோயினால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கும்.
    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம்.
    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். சிலருக்கு சில மணி நேரம் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு சில நாள்களுக்கு மட்டும் பார்வை இழப்பு ஏற்படலாம். சிலருக்குப் பார்வைக் குறைபாடு சில ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம். ஒரு கண் பார்வை இழப்பை, சிகிச்சையளிக்கக்கூடிய பாதிப்பு, சிகிச்சையளிக்க முடியாத பாதிப்பு என இரண்டாகப் பிரிக்கலாம்.

    ஒரு கண் பார்வை நேராகவும், அடுத்த கண்ணின் பார்வை விலகிய நிலையிலும் காணப்படுவதை மாறுகண் என்கிறோம். மாறுகண் இருப்பவர் அதிர்‌‌ஷ்டசாலி என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மருத்துவ ரீதியாக, மாறுகண்ணை குணப்படுத்தவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும். எந்தக் கண்ணின் பார்வை விலகிய நிலையில் இருக்கிறதோ, அந்தக் கண்ணின் நரம்பு வழியாகச் செல்லும் தகவல்கள் மூளையில் சரியாகப் பதிவாகாது.

    மற்றொரு கண்ணிலிருந்து செல்லும் தகவல்கள் தெளிவாகப் பதிவாகும். இந்த நிலை தொடரும்போது, ஒரு கட்டத்தில் எந்தக் கண்ணிலிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லையோ, அந்தத் தகவல்களை மூளை புறக்கணிக்கத் தொடங்கும். அப்போது மூளை புறக்கணித்த கண்ணின் செயல்பாடு குறையத் தொடங்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையளித்தாலும் பயனளிக்காது. அழகியல் சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, விலகியிருக்கும் கண்ணை நேராக்க முடியும். ஆனால், பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

    கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினைகள் இரு கண்களிலும் ஏற்பட வேண்டும் என்பது இல்லை. ஒரு கண்ணில் மட்டும் சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். அப்போது, நன்றாகத் தெரியும் கண்ணை வைத்து சமாளித்துக்கொண்டே இருப்பார்கள். நன்றாக இருக்கும் கண்ணில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி ஏற்படும். அதன் பிறகுதான் மருத்துவரை நாடுவார்கள். சிலர், ஒரு கண்ணில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணராமலேயே இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதற்குத் தீர்வு காணாவிட்டால், குறைபாடுள்ள கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். உலக அளவில் கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் பார்வை இழப்பது அதிகரித்து வருகிறது. கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் மாறு கண் பிரச்சினையும் ஏற்படலாம்.

    குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு கண் பார்வை இழப்புக்குப் பிரதான காரணம், பள்ளியில் சக வயதினரோடு பழகும்போது பென்சில், பேனாக்களால் கண்ணில் ஏற்படும் விபத்துகள். இவை தவிர, பட்டாசு விபத்துகள், கழிவறையில் பயன்படுத்தும் ஆசிட் போன்ற ரசாயனங்கள், சுண்ணாம்பு போன்றவை கண்ணில்படுதல் காரணமாகவும் ஒரு கண்ணில் பார்வையை இழப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அரிதாக, ரத்தச்சோகை, கண்களில் புற்றுநோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த குறைபாடுகள், சாலை விபத்துகள் ஆகியவையும் குழந்தைகளின் ஒரு கண் இழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

    அதேபோல தாயின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வரும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க முயல்வார்கள். அப்போது அந்த உபகரணங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஒரு கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். அதனால் தான் ஐந்து வயதுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும்… அந்த குழந்தையை பராமரிக்கும் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி?

    காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.

    ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும். பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும். அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும். இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும்.

    நம் கவனத்தை ஈர்க்கும். தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.

    பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும். மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

    தொப்புள் கொடியை அறுத்த பின்பு, குழந்தையின் தொப்புள் அருகே கிளிப் மாட்டுவது உண்டு. 2-3 வாரங்களிலே தொப்புள் பகுதி உலர்ந்து, கிளிப் தானாகவே உலர்ந்து விடும். மிகவும் முக்கியமாக, தொப்புள் பகுதியை கிருமித் தொற்று தாக்காதபடி சுத்தமாக பராமரிக்க வேண்டும். உப்புத்தண்ணீர், சோப், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் மருத்துவர் சொன்னதையே பின்பற்றுங்கள். குழந்தையின் தொப்புளில் ஈரகசிவு தென்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம்.

    குழந்தையின் தலைப் பகுதி சீராக இல்லாமல், பிடறி, நெற்றி, உச்சி போன்ற பகுதிகளில் லேசாக புடைப்பு காணப்படுவதால், கபால ஓட்டு எலும்புகளின் இணைப்பு பலப்பட்டு, தானாகவே சரியாகிவிடும். குழந்தை பால் குடித்த ஒரு மணி நேரம் கழித்து, சமதளம் உள்ள தரையில். கனமான விரிப்பின் மேல், தலையணை இல்லாமல் குழந்தையை படுக்க வைப்பதால் கபால எலும்புகள் இயல்பான நிலைக்கு விரைவில் வர உதவும்.

    பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும். கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும். குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.

    கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும். கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.

    குழந்தையின் மார்பகம், பிறப்புறுப்பு பகுதிகளில் லேசான மாற்றம் தெரியும் சில வாரங்களில் இவை சரியாகிவிடும். ஆண் குழந்தைக்கு இரண்டு விதைகள் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இரண்டு விதை இல்லையென்றாலோ ஒரு விதை இல்லையென்றாலோ ‘விதை இறங்கவில்லை’ என மருத்துவரிடம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும். பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும். இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.

    குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். 
    பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
    பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அரிதான பிரச்சனை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம்.

    கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

    முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

    பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக மனஅழுத்தம் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாய்க்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்சனை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்சனை இருக்கும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வப்போது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். 
    உறுதியான, நீளமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உங்களின் கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். உறுதியான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.  

    சின்ன வெங்காயம்

    சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம். இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து கழுவவும்.

    உருளைக் கிழங்கு

    இரண்டு மூன்று உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

    பூண்டு

    முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    கொத்தமல்லி

    புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

    கேரட்


    கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும். 
    ×