என் மலர்
பெண்கள் உலகம்
- மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும்.
விநாயகர் சதுர்த்திக்கு பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 கப்
பால் - 2 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டுங்கள். அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்துகொள்ளவும்.
மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பால் நன்றாக கொதித்து வந்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை அதில் போடவும்.
பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்துக்கு வரத் தொடங்கிவிடும்.
சுவைக்காக தேங்காய்ப் பால் சேர்க்கலாம். கொழுக்கட்டைகள் வெந்ததும் ஏலக்காய்த்தூளை சேர்த்து கலக்கவும். பால் கொழுக்கட்டை தயார்.
பால் கொழுக்கட்டையை சூடாகவே பரிமாறலாம் அல்லது குளிரவைத்து பரிமாறலாம்.
- ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது சிலருக்கு காய்ச்சலும், ஜலதோஷமும் ஏற்படுவதுண்டு. ஒரு டம்ளர் தண்ணீரை சிறு தீயில் கொதிக்கவைத்து அதில் கற்பூரவல்லி இலை ஐந்து, அரச இலை (கொழுந்து) மூன்று, துளசி இலைகள் ஆறு சேர்க்க வேண்டும்.
ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து அதையும் அவற்றுடன் கலந்து அரை டம்ளர் வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். ஆறிய பின்னர் இதை குழந்தை முதல் முதியவர் வரை குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே அருந்தலாம்.
இக்கசாயத்தை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளலாம். குணமாகாத பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமானது.
- வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
* மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.
* பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.
- இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும்.
- கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும்.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை தெரிந்து கொள்வது, நொடிக்கு நொடி தகவல்களை வழங்குவது, வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்வது என அனைத்துக்கும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், அத்தகைய செல்போனுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையென்றால், நம் உடல் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.
* மன அழுத்தம்
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன்படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.
* உறக்கமின்மை
இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.
* பார்வை குறைபாடுகள்
செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
* கூன் விழும் அபாயம்
நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும்போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகுவலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.
* காது கேட்கும் திறன் இழப்பு
சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன்படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது.
சில டிப்ஸ்...
* ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை குறைக்க இரவில் தூங்கும் போது அதனை உங்களிடமிருந்து விலக்கி வைக்க பழகுங்கள்.
* ஸ்மார்ட்போன் பழக்கத்தை குறைக்க இணையத்தை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
* காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் முகத்தில் தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.
* குடும்பம், புத்தகம், வாசிப்பு, சினிமா, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மாற்றம் செய்து கொள்வது சிறந்தது.
- உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும்.
- தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடுபடுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க வேதியியல் சங்கம் ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்.
மேலும், இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடுபடுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், அதே வேளையில் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க வேதியியல் சங்கம் இந்த ஆய்வு அறிக்கையை பொதுவெளியில் சமர்ப்பிக்கவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், வேறு சில ஆய்வாளர்கள், இந்த முறையில் அரிசி கலோரியை கொண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
- கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும்.
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.
அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சனை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.
இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சனை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சனை வரும். மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும்.
ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.
சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.
- பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை.
- கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும்.
கீரைகள் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை மிகவும் முக்கியமானது.
உணவில் தாளித்து சாப்பிடும் போது தூக்கி எறிந்திடுவோம். அப்படி புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் சத்துகள் குறித்து நம் மனதில் பதிய வைத்துவிட்டால் தூக்கி எறிய மனம் வராது. பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. அதாவது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.
மேலும் கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவையும் அடங்கி உள்ளது.
கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும். பசியின்மை, செரிமான பிரச்சினை, வயிற்று இரைச்சல், தொண்டைக் கமறல் சரியாகும். நீரிழிவு நோயாளிகள் தலா 10 கறிவேப்பிலையை காலை, மாலை நேரத்தில் மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். உடல் பருமன் குறைந்து உடல் வலிமை அதிகரிக்கும்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து அரைத்து ஒரு எலுமிச்சம்பழம் அளவுக்கு எடுத்துக்கொண்டு தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி நின்றுவிடும்.
- துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது.
- நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மனிதர்களாகிய அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைபாடுடையவர்கள்தான். ஆனால் துணையின் குறைபாடு பற்றியோ, அவரின் எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் பற்றியோ மற்றவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. அதுபற்றி அவருக்கு தெரியவரும்போது அவமானமாக உணரலாம்.
தன்னுடைய குறையை மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்தி தன்னை அவமதிப்பதாக கருதலாம். எந்த சந்தர்ப்பத்திலும் துணையின் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகச்செய்யக்கூடாது. மற்றவர் முன்னிலையில் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற உணர்வை அவரிடத்தில் ஏற்படுத்திவிடும். அவரிடம் தென்படும் குறைகளை நிதானமாக புரியவைத்து திருத்துவதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். மனைவியிடம் குறையே இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் பாராட்டி பாருங்கள். அவர் தன் தவறை சரி செய்து, எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்பதை அடுத்த முறை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த காலம்
துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. அதை உங்களை நம்பி பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பற்றி மற்றவர்களுடன், குடும்பத்துடன் கூட விவாதிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணையை சங்கடப்படுத்தலாம். துணையின் தனிப்பட்ட தகவல்களை, அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனஸ்தாபத்தை உண்டாக்கி விடும்.
ஆளுமை
துணையின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கேலி செய்வது அவமரியாதைக்குரிய செயலாகும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் திரும்ப திரும்ப விமர்சனம் செய்வது அவர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கிவிடும். அதனை சரி செய்வது கடினம். உளவியல் ரீதியாக நீண்ட கால உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். துணையின் ஆளுமை திறனை அவமதிப்பதாகிவிடும். விமர்சனத்தை விட பாராட்டு மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணை மனம் நெகிழ்ந்து போய்விடுவார்.
நிதிநிலை
துணையின் நிதி நிலைமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவருடைய தனியுரிமையை மீறுவதாக அமைந்துவிடும். கடன், வருமானம் அல்லது செலவு செய்யும் பழக்கம் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கூற வேண்டியதில்லை. துணை வீண் செலவு செய்வதாக கருதினால் அதுபற்றி அவரிடம் பேசி நிதி நிலையை சீராக கையாள ஊக்குவிக்க வேண்டும்.
அச்சம்
மனைவியின் ஆள் மனதில் அச்சத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விஷயங்கள் புதைந்திருக்கும். அது ஒருவித பயத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை ஆட்கொண்டிருந்த அந்த விஷயங்களை தன் கணவரிடம் தெரிவித்து மன ஆறுதல் தேடி இருக்கலாம். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அந்த விஷயங்களை கூறி இருக்கலாம்.
அவை மற்றவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் கூறுவது கணவன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். ஒரு துணை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணவரிடம் வெளிப்படுத்தும்போது உணர்ச்சி ரீதியான பாதுகாப்பையும் எதிர்நோக்குகிறார். கணவர் தனக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறார். அந்த நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
தகவல் தொடர்பு
எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு முதுகெலும்பாகும். நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தகவல் தொடர்பு திறன் அவசியமானது. அது புரிதலை வளர்த்தெடுக்கும், தேவையற்ற மோதலை தடுக்கும். துணையிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும்போது தவறான புரிதல்கள் மற்றும் அனுமானங்களை தடுக்கும்.
- கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
- உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும். இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஈஸ்ட்ராடியோல், கொழுப்பில் இருந்து வருகிற மற்றொரு ஹார்மோன் ஆன்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்துமே கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றங்கள் காரணமாக பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படும். அதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வரலாம். மேலும் பி.சி.ஓ.டி. எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை பாதிப்பும் வரலாம். இதனால் கருமுட்டைகளின் தரம் குறைவாகலாம்.
எனவே உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக தைராய்டு பாதிப்பு இருக்கலாம். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாயும் ஏற்படலாம். இதனால் தான் அந்த பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது அவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வரும். உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும்போது மாதவிலக்கு சீராகும்.
எனவே பெண்களின் உடல் எடை கூடுவது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும்.
- நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.
தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தும் வழக்கத்தை தொடருவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலை தடுப்பதற்கும் உதவும்.
சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். இருப்பினும் நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.
மலச்சிக்கலுடன் வயிற்றுவலி இருந்தால், கடுக்காய்த் தூளுடன் சிறிது இஞ்சியை கலந்து உட்கொள்ள வயிற்று வலி குணமடையும். மாமரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்துத் தேன் கலந்து குடித்து வர ரத்த பேதி நிற்கும்.
- திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது.
- தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம்.
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். ஆனால் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட சில மணித்துளிகளே போதுமானதாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உறவை வலுப்படுத்த மனைவி பற்றி மற்றவர்களிடமோ, குடும்ப உறவினர்களிடமோ ஒருபோதும் பகிரக்கூடாத உளவியல் ரீதியான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
அன்பு
திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது. வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை கடந்து உறவு நிலைத்திருக்க துணையின் மீது மரியாதை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவரிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சண்டை
தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். அது கருத்து மோதலாகவோ, வாக்குவாதமாகவோ மாறி இருவரும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருக்கலாம். அதுபற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கூறி ஆலோசனை கேட்பது நல்லதல்ல. ஆரம்பத்தில் அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாகவோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவோ தோன்றினாலும் அது நிரந்தர தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது.
தம்பதியர் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது துணையை பற்றிய அவர்களின் பார்வையை மாற்றிவிடும். துணை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். உளவியலாளர்களின் கருத்துபடி, தம்பதியருக்கிடையே மோதல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரிடம் பகிரும்போது துணை பற்றி பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே அவர்களின் மனதில் பதியும். அல்லது ஒருதலைபட்சமாக இருவரில் யாராவது ஒருவருக்கு அவர்கள் ஆதரவு கரம் நீட்டலாம். அது தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும்.
- திரை பிரகாசம் மற்றும் தீவிர மாற்றங்கள் காரணமாக கண் சிமிட்டும் வீதத்தைக் குறைக்கிறது.
- கண் சோர்வு, கழுத்து வலி மற்றும் கை சோர்வு போன்ற அறிகுறிகள் அடங்கும்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மொபைலில் நேரத்தை செலவிழக்கும் பலர் உடன் இருப்பவர்களிடம் பேச கூட மறுக்கிறார்கள். எந்நேரமும் ஸ்மார்ட்போனில் மூழ்கி கிடப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்தாலும் அதை பற்றி கண்டுகொள்வதில்லை.
எந்நேரமும் ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி இருக்கிறாயே? என்று கேட்டால் வீடியோ, ரீல்ஸ் தான் பார்க்கிறேன். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேட்பார்கள். அப்படி பட்டவர்களுக்கு தான் புதிய ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
ஜர்னல் ஆஃப் ஐ மூவ்மென்ட் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், டிஜிட்டல் சாதனங்களில் செலவிடும் நேரம் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் உள்ளடக்க வகையும் கண் சோர்வை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, ஒரே நேரத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துவது ஆகியவை மனநல கோளாறுகள் உட்பட உடல் மற்றும் மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அவற்றின் நீல ஒளியை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது டிஜிட்டல் கண் சோர்வு, தூக்கக் கோளாறுகள் மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஆய்வில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 1 மணிநேரம் மின் புத்தக வாசிப்பு, வீடியோ பார்த்தல் மற்றும் சமூக ஊடக ரீல்கள் (குறுகிய வீடியோக்கள்) ஆகியவற்றின் போது கண் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது.

"சமூக ஊடக ரீல்கள் அதிகரித்த திரை மாறுபாடுகளைக் காட்டுகின்றன, இது தொடர்ச்சியான திரை பிரகாசம் மற்றும் தீவிர மாற்றங்கள் காரணமாக கண் சிமிட்டும் வீதத்தைக் குறைக்கிறது. இந்த கண் சிமிட்டும் வீதக் குறைப்பு மற்றும் இடை-சிமிட்டும் இடைவெளி அல்லது கண் சிமிட்டும் விரிவின் அதிகரிப்பு பார்வை சோர்வுக்கு வழிவகுக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
அசௌகரியத்தைப் பொறுத்தவரை, ஆய்வுக்குட்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய பிறகு லேசானது முதல் கடுமையானது வரையிலான அசௌகரியத்தை அனுபவித்தனர். இதில் கண் சோர்வு, கழுத்து வலி மற்றும் கை சோர்வு போன்ற அறிகுறிகள் அடங்கும்.

மேலும், பதிலளித்தவர்களில் 83 சதவீதம் பேர் பதட்டம், தூக்கக் கலக்கம் அல்லது மன சோர்வு போன்ற சில வகையான மனநல கோளாறுகளை அனுபவிப்பதாகக் குறிப்பிட்டனர். அசௌகரியத்தைக் குறைக்க, ஆய்வுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் நீல ஒளி வடிகட்டிகளைப் பயன்படுத்துதல் அல்லது திரை வெளிப்பாட்டின் தாக்கத்தைக் குறைக்க டார்க் பயன்முறை அமைப்புகளை இயக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எது, எப்படியோ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் தான் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயன்படுத்தினால் நன்மை...






