என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.
    கடுகு சிறுசுதான், ஆனால் அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்து பெருசு. மஞ்சள் வண்ணத்தை வாரி இறைத்ததுபோல, கடுகு வயல் பூத்திருக்கும் அற்புத காட்சியை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த வண்ண வரவேற்பு, வட இந்திய பண்பாட்டில் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்று. அழகாக விரிக்கப்பட்ட மஞ்சள் கம்பளம் போன்ற தோற்றத்தை தரும் மஞ்சள் கடுகு தாவரம், நமது இமயமலை அடிவாரத்தில் பிறந்தது.

    தாவரவியல் ரீதியாக பார்த்தால் புரோகோலியும், முட்டைக்கோசும் கடுகுக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால் நம்ப முடியாதுதான். இந்த தாவரம் பராசிகா காய்கறி குடும்பத்தை சேர்ந்தது. இந்த காய்கறிகள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. கடுகில் 40 வகைக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகை மட்டுமே பரவலாக பயிரிடப்படுகின்றன. கருப்பு கடுகு மத்திய கிழக்கு பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலை பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

    கடுகை பற்றி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தாளிப்பதற்கு கடுகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாளிப்பு முறை வட இந்தியாவில் இருந்தே தென்னகம் வந்திருக்க வேண்டும். இன்றைக்கு வட இந்தியாவில் கடுகு பரவலாக பயிரிடப்படுவது மட்டுமில்லாமல், கேழ்வரகுடனும் பயிரிடப்படுகிறது.

    கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை கடுகு மூலம் கிடைக்கின்றன. கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை. 
    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம் இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.

    வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில் அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

    கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.

    நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

    நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.

    பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
    இந்த பொருட்களை போட்டு சருத்திற்கு ஆவி பிடித்தால் அவை சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து முகத்தை ஜொலிக்க வைக்கும்.
    குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

    மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

    இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.

    ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகி விடும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    நீங்கள் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து விட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.

    பொதுவா ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பி விடுகிறோம். ஆனால் அப்படி செய்ய கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.

    ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.
    குழந்தைகளுக்கு தினமும் சூப் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகள், சிக்கன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
    கோஸ் - சிறிய துண்டு
    கேரட் - 1
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    சோம்பு - அரை தேக்கரண்டி
    சீரகம் - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லித் தழை - சிறிது
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    சோளமாவு - 2 தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    சிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.

     5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.

    5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.

    சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம்.
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

    அகநக நட்பது நட்பு

    என்பது வள்ளுவரின் நட்பு இலக்கணம் ஆகும். நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நாம் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

    நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. கஷ்டம் வந்தபோது கைகொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றி தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதை விட, கையிலிருக்கும் மொபைல்போன் அல்லது கணினி முன்னோடியே தங்கள் காலத்தை கழித்துவிடுகிறார்கள்.

    நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சலுகைகள் எப்படி இருக்கிறது? என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும். ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும். இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்து பாருங்கள்.

    தாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

    நட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்து கொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

    ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப்போல நண்பர்களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குவான். புகை பிடித்தல், போதை பொருள், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட தீய நடத்தைகளைக் கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க, பொற்றோரும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

    நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டுக் கொடுக்கும் போதும், மனதை திறந்து உள்ளத்தை சொல்ல முற்படும்போதும், மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.

    பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். எல்லோரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா? என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புறவுடன் வளர்வோம்.. உயர்வோம்.
    கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா. சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்.

    பள்ளிகள் மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பள்ளி உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து கவலைப்படுவார்கள். மிகக்குறைவான பள்ளிகளில்தான் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற முடியும். மொத்தத்தில், மாணவர்களின் படிப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.

    ஆன்லைன் வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது, சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நீங்கள் முட்டைகளை சமைக்கும் முறை அவற்றின் ஊட்டச்சத்துக்களை பாதிக்கும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான வழிகளில் முட்டையை எவ்வாறு சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
    குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை ஒரு சத்தான உணவு.  குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. நீங்கள் முட்டைகளை சமைக்கும் முறை அவற்றின் ஊட்டச்சத்துக்களை பாதிக்கும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான வழிகளில் முட்டையை எவ்வாறு சமைக்கலாம் என்று காணலாம்.

    பொதுவாக வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. அந்த வகையில் வேகவைத்த முட்டையும் உடலுக்கு ஆரோக்கியமானது. 4 அல்லது 5 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் 10-15 நிமிடங்கள் வேக வைக்கப்படுகிறது. வேகவைத்த முட்டைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். முதலில் 4 முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு சூடான பாத்திரத்தில் முட்டை கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் சமைக்க வேண்டும். பின்னர், அடுப்பில் இருந்து இறக்கியவுடன் சிறிது மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறலாம். இந்த வகையான சமையலில் குறைந்தபட்ச எண்ணெய் பயன்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.

    தண்ணீர் அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி 2-4 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர், அதை வெளியில் எடுத்து தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.  முட்டைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அவற்றை சமைப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் ஜீரணமாகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மூல முட்டைகளில் உள்ளதை ஒப்பிடுகையில், சமைக்கும் செயல்முறை வைட்டமின் பயோட்டின் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த தீயில் முட்டைகளை சமைக்கும் போது, வெப்பம் அவற்றை வடிவமைக்கும் புரதச் சத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற ஊட்டச் சத்துக்களை உடைக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து உடலை ஜீரணிக்க எளிதாக்குகிறது.

    நீண்ட காலத்திற்கு முட்டைகளை அதிக வெப்பத்தில் சமைத்தால், அது ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும். அதிக வெப்பத்தில் முட்டைகளை சமைக்கும் போது, வைட்டமின் ஏ உள்ளடக்கம் 20 சதவிகிதம் குறைகிறது. மேலும் இது முட்டைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கையையும் குறைக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

    நிபுணர்களின் கூற்றுப்படி, பேக்கிங் என்பது முட்டைகளுக்கு ஆரோக்கியமான தேர்வாகாது. ஏனெனில் அதிக வெப்ப செயல்முறை வைட்டமின் டியின் 60 சதவீதத்தை குறைக்கக்கூடும், மற்ற முறைகளுடன் ஒப்பிடுகையில், இழப்பு 18-20 சதவீதம் மட்டுமே இதில் இருக்கும். உங்கள் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை சமப்படுத்த பச்சை காய்கறிகளுடன் முட்டையை இணைக்கவும்.

    மேலும், அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைக்கும் போது எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை உருவாக்குவதற்கு எளிதில் ஆக்ஸிஜனேற்றாது.  மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
    பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.
    பிறந்த 10 நிமிடத்தில் ஒரு குழந்தை அழத்தொடங்கினால், அக்குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அந்த குழந்தைகளின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று விட்டது என்றே அர்த்தம். அதேவேளையில், பச்சிளம் குழந்தையின் மூளைக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அக்குழந்தை அழாது. மூளைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் செல்லாத காரணத்தால். அதன் உடம்பின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறிவிடும். இதனை, பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் Cyanosis என்று குறிப்பிடுவார்கள்.

    குழந்தையின் உடம்பு நீலநிறமாக மாறுவதைத் தொடர்ந்து, அதன் கை மற்றும் கால்கள் அசைவது(Grimace Refleexs) நின்று விடும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகள் மூக்கில் சக்‌ஷன்(Suction) பொருத்தினால், அதை தள்ளிவிடும். மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்கிற குழந்தைகள் அதனைத் தள்ளாது.

    இதுமாதிரியான குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை மருத்துவரின்(Neonatologist) தொடர் கண்காணிப்பு அவசியம் தேவை. பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆக்சிஜன் போகாத காரணத்தால், மூளை செல் பாதிப்பு அடையும். இதுபோன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகளை, மருத்துவ உலகில் Cereberal Palsy என்று குறிப்பிடுவோம்.

    எந்தவித பாதிப்பும் இல்லாமல், இயல்பாக பிறக்கும் குழந்தையின் APGAR ஆனது ஒரு நிமிடத்துக்கு 8/10-வும், 5 நிமிடத்திற்கு 9/10-வும் காணப்படும். உடலில் ஏதேனும் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இந்த ஸ்கோர் அளவு குறையும். அந்த சமயத்தில், நாங்கள் அந்தக் குழந்தைக்கு செயற்கை சுவாசம் தரப்படும். இந்த செயற்கை சுவாசத்தில், Bag And Mask Ventilation, PPV, Intubation என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றின்மூலம், மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதை சரிசெய்யலாம். இதன் பின்னர், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    இந்த சிகிச்சை முறை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை, செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தை, தாயிடம் உள்ள சில பிரச்னைகளால் பாதித்த குழந்தைகள் ஆகியோருக்குத் தேவைப்படும். இந்த சிகிச்சை முறைக்கு Hypoxia எனப் பெயர். செயற்கை சுவாசம் தரப்படுகிற குழந்தைகளைNICU-வில்(Neonatal Intensive Care Unit) வைத்து முழுமையாக குணமாகும் வரை கண்காணிக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வென்டிலேட்டரைப் பொருத்த வேண்டும். பிறந்து 34 வாரம் முடிவடையாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சை தொடர்ந்து தர வேண்டியிருக்கும். அதற்கான காலத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.

    பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் நன்றாக குடித்து, சிறுநீர், மலம் ஆகியவற்றை சரியான நேரத்தில் நன்றாக கழித்தால் உடனே டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். Neonatology Intensive Care Wing அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக, New Born Care Week கடைப்பிடிக்கப்படுவது வெளியே நன்றாக தெரிகிறது.

    பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள். அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.
    கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.
    கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. கர்ப்ப காலத்தில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.

    இந்த நேரத்தில் கண்ட மாத்திரைகளைப் போட்டு, தலை வலிகளை போக்க நினைக்கக்கூடாது. ஏனெனில் சில மாத்திரைகளால், கருவிற்கு கேடு உண்டாகவும் நேரிடலாம். ஆகவே அப்போது இயற்கை முறையில் சரிசெய்ய முயல்வதே புத்திசாலித்தனம். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.

    அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது தான்.

    கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இத்தகைய தலைவலிக்கு சிறந்த நிவாரணம் என்றால், நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிடுவது தான்.

    கர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் மதிய வேளையில் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் தலைவலி வரும். அதற்கு மாலை நேரத்தில் 1 மணி நேரம் யோகா அல்லது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    கர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான இரைச்சலின் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கு ஒரே வலி சப்தமில்லாத இடத்தில் இருப்பது தான். மேலும் இத்தகையவற்றால் தலைவலிக்கு ஆளாகுபவர்கள், டிவியை பார்க்காமல், லைட்டுகளை அணைத்துவிட்டு, நிம்மதியான ஒரு குட்டித் தூக்கம் போடுவது தான்.
    பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கோதுமை பிரெட் - 4
    முட்டை - 2
    மயோனஸ் - தேவையான அளவு
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    வெள்ளரிக்காய் - 1
    புதினா சட்னி - தேவையான அளவு
    டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவு

    அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்

    செய்முறை :

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு மெல்லிய துண்டுகளாக வட்டமாக வெட்டிகொள்ளவும்.

    வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.

    டோஸ்ட் செய்த கோதுமை பிரெட்டின் ஒரு புறத்தில் புதினா சட்னி தடவி பின்னர் அதன் நடுவில் வேகவைத்து வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயத்தை வைத்து மேலே டொமேட்டோ கெட்சப், மயோனஸ் ஊற்றி மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

    சூப்பரான அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
    சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.  இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துங்கள்.

    • சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.  இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

    • மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

    • ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

    • தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.
    காலத்துக்கு ஏற்ப திருமண ஏற்பாட்டாளர்கள் மாறி வருகிறார்கள். பன்னீரை பின்னுக்கு தள்ளி திருமண தொகுப்பில் கிருமிநாசினி, முககவசம் இடம் பிடித்துள்ளது.
    பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். இவ்வாறு சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படும் திருமணங்களை கூட பூமியில் நாம் இப்போது நிம்மதியாக நடத்தமுடிவதில்லை. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் பல திருமணங்கள் உற்றார், உறவினர்கள் இன்றி வெறும் சம்பிரதாயங்கள் போலவே நடக்கிறது. மனம் அறிந்து நடத்துவதற்காக நிச்சயம் செய்த திருமணம், இப்போது மவுனம் காத்து நிற்கிறது.

    உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்து மழையில் நனைப்பது தற்பேதைய சூழலில் அரிதாகிவிட்டது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை சார்ந்து இருக்கும் பந்தல், மணமக்கள் அலங்காரம், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு கொடுப்பவர்கள், சமையல்கலை நிபுணர்கள், புகைப்பட கலைஞர்கள், வரவேற்பாளர்கள், மந்திரம் ஓதுபவர்கள், நாதசுர கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு சவாலான சூழலிலும் வாழ்க்கையை ஓட்டுவதற்காக மாற்று வழியை தேடவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதுபோலத்தான் திருமண ஏற்பாட்டாளர்களும் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக 50 பேர்களை மட்டுமே அழைத்து திருமணம் நடத்தவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அதற்கேற்ப, திருமண ஏற்பாட்டாளர்கள் திருமணத்துக்கான தொகுப்பினை வடிவமைத்து வருகிறார்கள். இந்த தொகுப்புக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருமண தொகுப்பில் இணையதள அழைப்பு அட்டை, மணமகள் அலங்காரம், மெஹந்தி (மருதாணி) அலங்காரம், கார்களில் அலங்காரம், திருமண மண்டபம் மற்றும் அதன் முகப்பு அலங்காரம், செண்டை மேளம், 50 நபர்களுக்கு அசைவ மற்றும் சைவ உணவு, 2 மைக்குகள் உடன் ஒலி பெருக்கி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், 50 அட்டைகளை கொண்ட புகைப்பட ஆல்பம், விருந்தினர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தல், கைகளில் எடுத்துச்செல்லும் கிருமிநாசினி பாட்டில் (50 மி.லி.), என்.95 ரக முககவசங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    திருமணங்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு வரவேற்பு பரிசாக இப்போது கையடக்க கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. தாங்கள் விரும்பும்போது எல்லாம் ககைளை சுத்தம் செய்துக்கொள்ளலாம். அழையா விருந்தாளியான கொரோனா வைரஸ் வருகைக்கு முன்பாக நடைபெற்ற திருமணங்களில் பன்னீர் தெளித்து விருந்தினர்களை மனம் குளிர வரவேற்பார்கள். அழைக்காத விருந்தினர்களும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள்.

    திருமண வீடுகளில் சந்தனமும், பன்னீரும் மனம் பரப்புவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக தற்போது நடைபெறும் உறவுகள் சுருங்கிய சிக்கன திருமணங்களில் பன்னீர் கானல் நீராகிவிட்டது. பன்னீரின் இடத்தை கிருமிநாசினி தட்டிப்பறித்துவிட்டது. திருமண வைபவங்களுக்கு ஒவ்வொருவராக சென்று பார்த்து ஏற்பாடு செய்வதை காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய திருமண தொகுப்பிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கொரோனா என்ற கொடிய அரக்கன் நம்மை விட்டு ஒழிந்தால் தான், திருமண வீடுகளில் மீண்டும் பன்னீர் தன்னுடைய வாசத்தை பரப்பும்.
    ×