என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு சத்தான சுவையான மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா பால் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும்.
இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும்.
பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும்.

ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்று விளையாடுவதில் ஆர்வம் கொள்ளாமல், கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், I-Pad -லும் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் ஜீரணம் மந்தமாகவே உள்ளது.
காலங்கள் நிறைய மாறிவிட்டன. இந்த பத்து வருடங்களில் நம் சுற்றுச்சூழலில், பழக்கவழக்கத்தில் மற்றும் குடும்பசூழ்நிலைகள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
குடும்பங்கள் எல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு வீட்டில் ஒன்றாக ஏழு எட்டு குழந்தைகள் வளர்ந்த சூழ்நிலையில் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி நினைக்க அவ்வளவாக யாருக்கும் நேரமில்லை. பெரிய குழந்தைகள், சிறு குழந்தைகளை பார்த்துக்கொண்டுவிடுவார்கள். நம்மில் கூட பலர் வீட்டில் அப்பா, அம்மாவை விட சகோதர சகோதரிகளையே பெற்றோர்களாக பாவிக்கும் பழக்கமும் இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொரு குடும்பங்களிலும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மற்றும் இன்று வசதி வாய்ப்பு அதிகரித்து நம் அனைத்து வேலைகளுக்கும், இயந்திரங்கள் வந்துவிட்டதால் குழந்தைகளை பார்த்துக்கொள்வதே மிகப்பெரிய வேலையாக அமைந்துவிட்டது. இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றம் இன்று குழந்தைகளைச் சுற்றியே உலகம் என்று அமைந்துவிட்டது.
குழந்தைகளுக்காகவே வீடுகள், பள்ளிகள், கடைகள், விளம்பரங்கள் என்று வந்துவிட்டன. இதனால் அவர்கள் சொல்வது மட்டுமே இங்கு நடக்கின்றது.
இந்த சூழ்நிலையில் மருத்துவர்களாகிய நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்வி என் குழந்தை சாப்பிடுவதே இல்லையே- இது எதுவும் நோயின் அறிகுறியா? இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்படும்போது நாங்கள் முதலில் செய்வது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது. பெரும்பாலும் அப்படிப்பட்ட குழந்தைகள் சீரான வளர்ச்சி பாதையில் இருப்பார்கள். பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருந்தாலும் இவர்களின் வளர்ச்சி, அவர்கள் வயதிற்கு சரியான அளவிலோ அல்லது அவர்களின் பெற்றோர்களின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப சரியான அளவிலோ தான் இருக்கும்.
மேலும், நாங்கள் குழந்தைகள் சாப்பிடவில்லை என்று பெற்றோர் ரத்த பரிசோதனை செய்ய சொல்வதால் பண்ணும்போது ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ரத்தசோகை அல்லது கால்சியம் (Calcium) சத்து குறைபாடு இருக்கும். மற்றவர்களுக்கு அனைத்து பரிசோதனையும் சாதாரணமாகவே எந்த குறைபாடும் இன்றி இருக்கும்.
சரி இப்படி எல்லாமே நன்றாக இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை என்ற காரணத்தை பார்த்தால், மேற்கூறிய மாற்றங்களே காரணம்.
1. குழந்தைகள் முதல் வயது முதல் 8 வயது வரை எடை குறைவாகவே இருப்பார்கள். வளர்ச்சி அதிகம் இருக்கும். மூன்று பருவங்கள் நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் முதல் வருடம் மற்றும் 9 வயதிற்கு மேல் உள்ள வளர் இளம்பருவம். இந்த மூன்று பருவங்களில் தேவைப்படும் உணவு அளவு வேறு எப்போதும் தேவைப்படுவதில்லை. வயிற்றில் உணவு முழுவதுமாக இருக்கும்போது தூக்கம் வரும். முதல் வயதிற்குப் பிறகு குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். செயல்பாடுகள் அதிகமாகிறது. ஆகவே உணவை குறைத்தால் தான் மூளை சுறுசுறுப்பு அடையும். இது இயற்கை செய்யும் அற்புதம்.
2. இந்த அற்புதத்தை புரிந்துகொள்ளாமல் மேற்கூறிய குடும்பச் சூழ்நிலையில் அனைவரின் கவனமும் ஒரு குழந்தையிடமிருந்து இருக்கும்போது இந்த பிரச்சினை பெரிதாக ஆகிவிடுகிறது. பெற்றோர் மாற்றி தாத்தா, பாட்டி அனைவரும் கவலைப்பட்டு நோயே இல்லாத சூழ்நிலையிலும் நாம் நோய் இருப்பதாக நினைத்து கொள்கிறோம். சாப்பிடும் வேளைகள், சண்டை வேளைகள் ஆகிவிடுகிறது.
3. குழந்தைகள் இந்த சூழ்நிலையில் இரண்டு பிற மனநிலைக்கு உள்ளாகிறார்கள்.
* ஒன்று அனைவரின் பார்வையும் அவரிடத்தே இருப்பது அவர்களுக்கு தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ள மற்றும் செய்துகொள்ள உதவுகிறது.
* இரண்டு தங்களின் ஆழ்மனதில் உணவு மீது ஒருவித அதிருப்தியை உண்டாக்கி கொள்கிறார்கள்.
4. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்று விளையாடுவதில் ஆர்வம் கொள்ளாமல், கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், I-Pad -லும் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் ஜீரணம் மந்தமாகவே உள்ளது.
மாலை முழுவதும் விளையாட்டு என்று சொன்ன வாக்கு மாறி, மாலை முழுவதும் Cellphone என்றாகிவிட்டது. விளையாட வெளியில் செல்ல முடியவில்லை, நிறைய பயம், வாகனங்கள் என்று மாறிமாறி சூழ்நிலையின் காரணமாகவோ, அல்லது படிப்பின் சுமையாகவோ விளையாட்டு பின்னடைவு அடைந்துள்ளது. ஆக, குழந்தைகளின் இயல்பான உடல் மாற்றம் மற்றும் இன்றைய குடும்ப சூழலே குழந்தை சாப்பிடுவதே இல்லை என்கின்ற இந்த நிலைக்கு காரணம். இதற்கான தீர்வு அனைவரிடத்திலும் உள்ளது.
* மருத்துவர்கள் இதற்கு வெறும் மருந்துகள் எழுதாமல், குழந்தைகளிடத்து வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
* பள்ளிகள் மற்றும் சமுதாயம் குழந்தைகள் விளையாட சூழ்நிலை ஏற்படுத்தி தரவேண்டும்.
* பெற்றோர்கள் இயல்பான வளர்ச்சியையும் புரிந்துகொண்டு, வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தி, அலைபேசி மற்றும் தொலைக்காட்சியின் பயன்பாட்டை குறைந்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.
என் குழந்தை சாப்பிடுவதே இல்லை என்பது நோயின் அறிகுறி அல்ல...
இது நம் சமுதாயத்தின் தேவையில்லா மாற்றத்தின் அறிகுறி.
பெற்றோர்கள் தங்கள் வளர்ப்பினை மாற்ற வேண்டிய தருணத்திற்கான அறிகுறி எது இயல்பு என்று தெரிந்துகொண்டு அனைத்துக்கும் பதட்டப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டிய சூழலுக்கான அறிகுறி...
குழந்தைகள் நாட்டின் கண்கள் நாளைய இந்தியா வளமாக இருக்க சிந்திப்போம்...செயல்படுவோம்.
நோயை தீர்ப்பது மட்டுமே எங்களின் நோக்கம் அல்ல..
அனைவரையும் நலமோடு வாழவைப்பதே நலம் மருத்துவமனையின் முயற்சி.
- Dr.நர்மதா அசோக், இயக்குநர், குழந்தை நல மருத்துவர்

பொதுவாக 40 வயதைத் தாண்டியவர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்சனையாக இருப்பவை ‘பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக 40 வயதைத் தாண்டியவர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்சனையாக இருப்பவை ‘பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள். சிலருக்கு வெள்ளைப் புள்ளிகளும் தோன்றும். தோலில் உள்ள துவாரங்கள் அடைபடும் போது இந்தப் புள்ளிகள் வருகின்றன. கரும்புள்ளி / வெள்ளைப் புள்ளி வாரம் ஒரு முறை மிதமான வெந்நீரில் சுத்தமான துணியை நனைத்து, புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அந்தப் பகுதி மிருதுவாகும். நாள்பட்ட கரும்புள்ளிகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்.
கடைகளில் விறகும் ‘பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்’ பயன்படுத்தினாலும் முழுவதுமாக நீங்காது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டையும் தலா 2 எண்ணிக்கை எடுத்து, ரவை போல் அரைத்து, சிறிது சந்தனம், சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை பளிங்கு சாம்பிராணியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை வெந்நீரால் நன்றாகச் சுத்தம் செய்து, இந்த பவுடரை மூக்கின் மேல் வைத்துப் புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும் அல்லது துளசி, புதினா, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு இவற்றை மாற்றி மாற்றி வெந்நீரில் போட்டு ஆவியும் பிடிக்கலாம்.
பிறகு ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. மசாஜ் ஈரப்பசை உள்ள க்ரீமைக் கொண்டு மூக்கில் புள்ளிகள் உள்ள இடத்தில் விரல்களால் பக்கவாட்டிலும் நுனியிலும் மசாஜ் செய்ய வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை அரைவைக் கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும். தொடர்ந்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் புள்ளிகள் வராது.

மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையை பொறுத்தமட்டில் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.
அந்தவகையில் மஞ்சள் மற்றும் ‘குர்குமின்‘ கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதை சென்னை ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. அதிக அளவு சுயிங்கம் மெல்லுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
சுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் அமைதியாக அசைபோடுகிறார்கள். சிறுவர்கள் என்றால் அவ்வப்போது ஊதி பலூன் போன்று காட்டிவிட்டு பொழுதைபோக்கும் விதத்தில் மெல்லுகிறார்கள். சிறுவர்-சிறுமியர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில், வடிவங்களில் சுயிங்கம் தயாராகிறது.
சுயிங்கம் அனைத்துமே சர்க்கரையை பயன்படுத்திதான் தயார் செய்யப்படுகிறது. ஆனால் அதனை சர்க்கரை நோயாளிகள் மெல்லக்கூடாது என்பதால் ‘சுகர் ப்ரி’ சுயிங்கமும் தயாராகிறது.
சுயிங்கம் உடலுக்கு சில நல்ல விஷயங்களை செய்கிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு இதனை மெல்லும்போது உமிழ்நீர் பெருமளவு சுரக்கும். அது உணவை செரிமானம் செய்ய துணைபுரியும். உமிழ் நீர் அதிக அளவில் இரைப்பைக்குள் செல்லும்போது, அங்கே சுரக்கும் தேவையற்ற அமிலங்களின் அளவு கட்டுப்படுத்தப்படும். இது இரைப்பைக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற செயலாகும்.
நமது மூளையில் நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கு தேவையான பகுதி எப்போதும் தூண்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். சுயிங்கத்தை அசைபோடுவது அவைகளின் தூண்டுதலுக்கு ஓரளவு காரணமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், விளையாட்டு வீரர்கள் களத்தில் நிற்கும்போதும் பதற்றத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் உள்ளாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் சுயிங்கத்தை அசைபோட்டால் மனம் அமைதியாகும். சுயிங்கம் மென்றால் பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேற்றப்படும். தாடை மற்றும் ஈறுகளுக்கு இது ரத்த ஓட்டம் தரும் பயிற்சியாகவும் அமையும்.
அதே நேரத்தில் அதிக அளவு சுயிங்கம் மெல்லுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். சுயிங்கத்தில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி பல் இடுக்குகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ந்து, அதிகமாக செயல்பட்டு பற்சிதைவை உருவாக்கும். சுயிங்கத்தை குழந்தைகளோ, சிறுவர்களோ அஜாக்கிரதையாக விழுங்கிவிட்டால் சில நேரங்களில் அது உணவுக் குழாயில் ஒட்டிக்கொள்ளும். மூச்சுவிட சிரமமாகிவிடும். உலக அளவில் சில குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இது காரணமாக இருந்திருக்கிறது.

கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான முதல் 5 விஷயங்களை பாலியல் நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:

1. உடற்பயிற்சி
தம்பதிகள் இருவருமே திருமணமான தொடக்க காலத்தில் இருந்தே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. உடற்பயிற்சியால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு எப்போதும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த புத்துணர்ச்சிதான் சிறந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அடிப்படை. உடற்பயிற்சியே செய்யாதவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை பெற முடியாது. சைக்கிளிங், நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுவது தாம்பத்ய செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
2. படுக்கை அறை
மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு படுக்கை அறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. படுக்கை அறை காற்றோட்டமாகவும், மனதுக்கு ரம்மியமளிப்பதாகவும் இருப்பது அவசியம். படுக்கை, அதன் விரிப்புகள் சுத்தமாக இருக்கவேண்டும். அறை சுவர்களில் இளம்நிறத்தி லான பெயிண்ட் ஏற்றது. படுக்கை அறைக்குள் டி.வி.யை பொருத்தாமல் இருப்பது நல்லது. தாம்பத்ய உறவுக்கு முன்பு ஒரு தடவை டி.வி.யில் செய்திகளை பார்க்கலாம் என்று நினைத்து டி.வி.யை ஓடவிட்டால் அதில் வரும் சோக, ஆக்ரோஷ செய்திகள் உங்கள் மனநிலையை கெடுத்துவிடும். அதனால் வீட்டு படுக்கை அறைக்குள் டி.வி. இருந்தால் அதனை அப்புறப்படுத்திவிட பரிந்துரைக்கிறார்கள்.
3. செல்போன் பயன்பாடு
படுக்கை அறைக்குள் செல்போன்களை பயன்படுத்துவது ஆபத்தாக கருதப்படுகிறது. அந்த ஜோடிகளுக்கு இடையில் இன்னொரு அன்னியனை உள்ளே அனுமதிப்பது போன்று, செல்போன் அவர்கள் உறவுக்கு உலைவைத்துவிடும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் தற்போது பாலியல் நிபுணர்கள் செல்போனையும் தாம்பத்ய ஊக்குவிப்பு கருவியாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
நடுத்தர வயது தம்பதிகள் பல்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் அடிக்கடி விரக்தியான நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு தாம்பத்யத்தில் உள்ள ஆர்வம் வெகுவாக குறைந்துவிடுகிறது. அத்தகைய தருணங்களில் தம்பதிகள் படுக்கைஅறைக்கு செல்போனை எடுத்துச்செல்லலாம். கணவர் மனம்விட்டு சிரிக்கக்கூடிய வீடியோக்களை மனைவி தேர்ந்தெடுத்து, அவருக்கு காட்டலாம். கணவரும் அதுபோல் செய்யலாம். இருவரும் மனம் மகிழத்தக்க காட்சிகளை அதில் பார்த்து தங்களிடையே பாலியல் ஆர்வத்தை பெருக்கிக்கொள்ளலாம்.
காதல் திருமணம் செய்துகொண்டவர்களாக இருந்தால், காதலித்த நாட்களில் எடுத்திருந்த போட்டோக்களை செல்போனில் பாதுகாத்து வைத்திருப்பீர்கள். அதை பார்த்து ரசிக்கலாம். திருமணமான தொடக்க கால மகிழ்ச்சியான நினைவுகளையும் அதன் மூலம் அசைபோடலாம். நீங்கள் ஜோடியாக இயற்கை எழில் சூழ்ந்த பகுதி எங்காவது பயணித்திருந்தால், அந்த காட்சிகளை பார்த்து மலரும் நினைவுகளுக்குள் பிரவேசிக்கலாம்.
கணவன்- மனைவி இடையேயான பாலியல் உறவை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருவருக்குமே இருக்கிறது. வேலை, பணம், பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் பலரும், அத்தியாவசியமான பாலியல் உறவை மேம்படுத்த தவறிவிடுகிறார்கள். அதை மேம்படுத்த செல்போனையும் அளவோடு பயன்படுத்தலாம் என்றே பாலியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
4. வாசனை வீசட்டும்
லாவெண்டர், வெனிலா, ஜாஸ்மின் போன்றவை ‘ரிலாக்ஸிங் சென்ட்’களாகும். ஆரஞ்ச், லெமன், சிட்ரஸ் போன்றவை எனர்சைசிங் சென்ட்களாகும். இவைகளை படுக்கை அறைக்கு செல்லும்போது பயன்படுத்துவது நல்ல பலனைத்தரும்.
5. உற்சாகமான பேச்சு
உடல் சுத்தமும், உற்சாகமான பேச்சும் தாம்பத்ய ஆர்வத்தை அதிகரிக்கும். அதில் கணவன் - மனைவி இருவருமே அதிக அக்கறை காட்டவேண்டும். வீட்டுவேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு வியர்வை பூத்த உடலுடனும், சமையல் வாடை வீசும் உடையுடனும் பெண்கள் படுக்கை அறைக்கு வருவதை தவிர்க்கவேண்டும். இன்னொரு முக்கிய விஷயம், ‘ஆண்கள் மது அருந்திவிட்டும், புகைபிடித்த வாயோடும் படுக்கை அறைக்கு வருவதால்தான் தங்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக’ நடுத்தர வயது பெண்கள் குறைபட்டிருக்கிறார்கள், இந்த குறையினை ஆண்கள் நிவர்த்திசெய்வது அவசியமானது.

இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டில் 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களின் சராசரி கல்வியறிவு 84.8 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 2018-ம் ஆண்டில் 12.5 சதவீதம் பெண்கள் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் 12 சதவீத பெண்கள்தான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருந்தார்கள்.
ஒட்டுமொத்தமாக பெண் கல்வியறிவு அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவீதம் 99.5 சதவீதமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் பெண்களின் கல்வியறிவு 99.3 சதவீதமாக இருந்தது. தனது சொந்த சாதனையை தானே முறியடித்து கேரளா முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.
பெண் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்துவதில் கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 98.8 சதவீதமாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வியறிவு விகிதம் 2017-ம் ஆண்டு 96.2 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டில் 0.6 சதவீதம் உயர்ந்து 96.8 சதவீதமாக இருக்கிறது.
பெண் கல்வியறிவு விகிதத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் பெண் கல்வியறிவு விகிதம் 2016-ம் ஆண்டு 28.3 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 23.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 22.6 சதவீதமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 20 சதவீதமாகவும் குறைந்திருக்கின்றன.

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கற்பூரவள்ளி இலைகள் - 5,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.

செய்முறை :
கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது. விளையாட்டுடன் தொடர்புபடுத்தியே வாழ்வியலை கற்றுக்கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் தண்ணீரை அதிகம் வீணாக்குவார்கள். தண்ணீரில் விளையாடுவது அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை வீணாக செலவிடக்கூடாது என்பதை விளையாட்டு மனநிலையில் இருந்தே அவர்களுக்கு புரியவைக்கலாம்.
தினமும் வீட்டில் எவ்வளவு தண்ணீர் செலவிடப்படுகிறது. தேவையில்லாத விஷயங்களுக்கு எவ்வளவு வீணாகிறது என்பதை அவர்களை கொண்டே கணக்கிட வைக்கலாம். உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் குளிக்கிறார்கள். எத்தனை முறை கழிவறையை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள் என்பதை குழந்தைகளை கொண்டு குறிப்பெடுக்க சொல்லலாம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள்? முந்தைய நாளை விட அதிகமாக செலவிடுகிறார்களா? குறைத்துக்கொள்கிறார்களா? என்பதை குறிப்பெடுக்க சொல்லலாம். அதன் மூலம் குடும்பத்தினர் வீணாக தண்ணீர் செலவிடுவதை தவிர்க்க முடியும்.
வீட்டு தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், காரை கழுவுதல் போன்ற வேலைகளில் குழந்தைகளை ஈடுபட வைக்கலாம். தண்ணீர் பயன்பாடு கொண்ட வேலை என்பதால் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அதன் மூலம் வீணாக அதிக தண்ணீர் செலவிடும் பழக்கத்தையும் கைவிட வைத்துவிடலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துவது போலவே, மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மழை நீரை சேமிப்பதால் என்னென்ன நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
வீட்டு தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அது அவர்களுக்கு படிப்புடன் கூடிய அனுபவக்கல்வியாகவும் அமையும். விதையை மண்ணில் ஊன்றுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அது செடியாக வளர்வது போன்ற நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமையும். செடி வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் மாறும்.
பொதுவாக குழந்தைகள் சாப்பிடும்போது காய்கறிகளை ஒதுக்கி வைப்பார்கள். சமையலுக்கு காய்கறிகள் நறுக்கும்போது குழந்தைகளை அருகில் அமர்த்தி ஒவ்வொரு காய்கறிகள் பற்றியும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள், அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் விளக்கி புரியவைக்கலாம். அதன்மூலம் படிப்படியாக காய்கறிகளை ஒதுக்கி வைக்கும் சுபாவத்தை குறைத்துவிடலாம். சின்ன சின்ன சமையல் வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சாப்பிட்ட தட்டு, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை கழுவுவதற்கும் பழக்கப்படுத்தலாம்.
துரித உணவுகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ருசிப்பார்கள். ஒருவாரம் முழுவதும் அப்படிப்பட்ட உணவுகளை எவ்வளவு உட்கொள்கிறார்கள் என்பதை அவர்களையே குறிப்பெடுக்க சொல்லலாம். அவற்றின் தீமைகளை விளக்கி புரியவைத்து மறுவாரம் அவற்றை சாப்பிடும் அளவை குறைக்க வைக்கலாம். நாளடைவில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை படிப்படியாக புறக்கணிக்க பழகிவிடுவார்கள்.
பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய காலணிகள், அட்டை பெட்டிகள் உள்பட வீட்டில் வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கலாம். இணையதளங்களில் மறுசுழற்சி பொருட்களைக்கொண்டு எப்படியெல்லாம் அழகழகான பொருட்களை தயார் செய்யலாம் என்பது பற்றிய வீடியோக்கள் ஏராளம் இருக்கின் றன. அவற்றை பார்வையிட வைத்து அதனுடன் அவர்களின் கற்பனை திறனையும் புகுத்தி மாறுபட்ட கலை பொருட்களை தயார் செய்வதற்கு பழக்கலாம். இந்த வழக்கம் அவர்களை சிறந்த கைவினை கலைஞர்களாக மாற்றும். வளரும்போது தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்க உதவும்.

மாதுளம் பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளம் பழத்தை சரும அழகிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படி அளவிடமுடியாத நன்மைகள் அளிக்கும் பழங்களில் மாதுளம் பழத்திற்கு தனி இடம் உண்டு. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பெண்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் பழமாகவும் மாதுளை விளங்குகிறது.
முக அழகிற்கான பேஷியல் செய்வதில், முதல்படி கிளென்சிங். இதற்கு மாதுளையின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொண்டு முகத்தை கிளென்சிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்கள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்படுகின்றன.
மாதுளை விதைகளை பன்னீர் அல்லது சர்க்கரையுடன் கலந்து அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிதுநேரம் கைகளால், மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அப்போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாகக் கழுவினால், முகம் ஒளிர்வதைக் காணமுடியும்.
மாதுளை சாற்றை முகத்திற்கு இயற்கையான ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம். இதனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து கலவையாக்கி முகத்திறகு பூசலாம். இவ்வாறு செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
மாதுளையில் உள்ள ஃபூனிசிக் அமிலம் பாக்டீரியாவை தொடர்ந்து நீக்குகிறது. இதனால் நாள் முழுவதும் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான சருமம் தக்கவைக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பாக்டீரியா தொற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
மாதுளை தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இதன்மூலம் வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, எதிர்த்து, இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் பொருள்களில் ஒன்று.
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மனச்சோர்வை ஆரம்ப நிலையிலேயே கவனத்தில் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றிவந்தால் உற்சாக மனநிலைக்கு திரும்பிவிடலாம்.

* “நீங்கள் மனச்சோர்வைத் தவிர்க்க விரும்பினால் உங்களை பிஸியாக வைத்திருங்கள். என்னைப் பொறுத்தவரை, செயலற்ற நிலையில் சோம்பேறியாக இருப்பதுதான் மனச்சோர்வுக்கு முதல் எதிரி” என்கிறார் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் மாட் லூகாஸ்.
* பெர்ரி பழங்கள் ஆன்டி ஆக்சிடென்டுகளாக செயல்பட்டு மன நிலையை மேம்படுத்த உதவும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, கிரான்பெர்ரி, ப்ளாக்பெர்ரி அனைத்தும் வைட்டமின் சி நிறைந்தவை. அவை மன அழுத்த அளவை குறைப்பதோடு மற்ற நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மனச்சோர்வை விலக்கி வைத்துவிடலாம்.
* ஊட்டச்சத்துக்களை முறையாக உள்ளடக்கி இருக்கும் பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவை வைட்டமின் பி, பி 6 போன்ற பல வைட்டமின்கள் நிறைந் தவை. கீரை, பிராக்கோலி, காலே, முட்டைக்கோஸ் போன்றவற்றை சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். போலேட், பைபர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை கொண்ட கீரைவகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
* மனச்சோர்வுடன் போராடிக்கொண்டிருந்தால் ஆளிவிதை, சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. மீன்களிலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சால்மன், மத்தி, டுனா, பாய்மர மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள் மன அழுத்த அளவை குறைக்க உதவும். இதய நோய்களின் அபாயத்தில் இருந்தும் விடுபட செய்துவிடும்.
* முட்டையில் புரதங்கள், துத்தநாகம், வைட்டமின்கள் பி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை உடல் ஆற்றலை அதிகரிக்க துணைபுரியும். தினமும் காலை உணவுடன் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. பாலுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
* காளான்களும் மனச்சோர்வுக்கு இடமில்லாமல் செய்துவிடும். அதில் இருக்கும் ரசாயன பண்புகள் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.
* ‘வால்நெட்’ ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஆரோக்கியமான சமநிலையில் வைத்திருக்க உதவும் புரதத்தையும் அதிகம் கொண்டது. கால் கப் வால்நட் சாப்பிட்டால் மன அழுத்தம் 26 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுள் ஒன்றாக மனச்சோர்வு அமைந்திருக்கிறது. அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே கவனத்தில் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மனச்சோர்வுக்கு இலக்காகிறார்கள். இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றிவந்தால் உற்சாக மனநிலைக்கு திரும்பிவிடலாம்.