என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

    முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.

    2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.

    3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

    4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.

    5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.

    6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;

    7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
    ஷாம்புவை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பது அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது தொடர்பான சந்தேகங்களுக்கான விடை இதோ...
    பாட்டில் பாட்டிலாக நிறைய பேர் ஷாம்பு வகைகளை வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பது அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது தொடர்பான சந்தேகங்களுக்கான விடை!

    உணவு: கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் போதாது. சமச்சீரான சத்துணவுகளையும் சாப்பிடவேண்டும். முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்க்கவேண்டும். நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனஅமைதியோடு தினமும் 8 மணிநேரம் தூங்குவதும் அவசியம்.

    தினமும்: எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். ஹேர் ஸ்பிரே, ஹேர் ஜெல் பயன்படுத்துகிறவர்களும் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம்.

    பாதிப்பு எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடையும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர்களும், முடியை சுருட்டி விட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.

    சரியான தேர்வு: ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்ச ரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.

    எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் அவர்களுக்கு சிறந்தது. வறண்ட ஆரோக்கியமான கூந்தலை கொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தினால் கூந்தல் ஜொலிக்கும்.

    பயன்படுத்தும் முறை : முடியை தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும். தலையின் குறிப்பிட்ட பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிகமாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.

    நேரம்: பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் ஜொலிஜொலிப்பை கண்டிஷனர் தருகிறது. பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.
    குழந்தைகள் பழம் சாப்பிட மறுத்தால் இப்படி ஃப்ரூட் பாப்சிக்கில் வடிவில் செய்து கொடுக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்  :

    மாம்பழம் - 1
    கிவி - 1
    செர்ரி - 6
    ஆப்பிள் - பாதி
    பப்பாளி - 6 துண்டு
    எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப்
    தேன் - 2 டீஸ்பூன்.
    பாப்சிக்கில் மோல்ட் - இரண்டு அல்லது இரண்டு டம்ளர்கள்
    நடுவில் சொருக - இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள்.

    ஃப்ரூட் பாப்சிக்கில்

    செய்முறை:

    எலுமிச்சை ஜூஸில் தேனைக் கலந்து வைக்கவும்.

    பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாப்சிக்கில் மோல்டில் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவி மாம்பழம் ஆப்பிள் பப்பாளி செர்ரி இந்த வரிசையில் போட்டு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும்.

    இதை ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் குளிரவைக்கவும்.

    மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால் ஃப்ரூட் பாப்சிக்கில் பிரிந்து வரும்.

    சூப்பரான ஃப்ரூட் பாப்சிக்கில் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.
    பிறவியிலேயே உருவாகும் ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டெம் செல் சிகிச்சையால் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.

    ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு கடத்த தேவையான நரம்புகள் சில இடங்களில் இல்லாமல் போவதே இந்நோய்க்கு காரணம். இந்தநோயை குணப்படுத்த இன்று வரை அறுவை சிகிச்சைதான் உதவி வருகிறது. ஆனால், அறுவை சிகிச்சையின்றி இதை குணப்படுத்த ஸ்டெம் செல் வழிமுறையால் முடியும் என்று தங்களின் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

    மனித உடலில் பாதிக்கப்படாத பகுதியில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து பிறகு அவற்றை மீண்டும் குடல் திசுக்களில் செலுத்தி இந்த நோயை குணப்படுத்த முடியும். மேலை நாடுகளில் இந்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்ட போது ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

    ஸ்டெம் செல்களை பாலிமர் எனும் வேதிப்பொருளுடன் இணைத்து ‘சிந்தெடிக்ஸ்கபோல்ட்‘ எனும் ஆதரவு இணைப்புகளை குடல் திசுக்களில் செலுத்துவார்கள். இந்த உத்தி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் இதை விலங்குகளில் செலுத்தி ஆய்வு செய்ய மருத்துவ நெறிகள் குழுவிடம் அனுமதி வேண்டி ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வரும்போது பிறவிக் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
    குடும்பத்தின் வருமானம் ஈட்டுவோர் திடீரென இறந்துவிட்டால், அவரைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காப்பீட்டு தொகை உதவும்.
    இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு இன்று அனைத்து பொருட்களையும் காப்பீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வெளிநாடு செல்ல வேண்டியிருந்தாலும் மருத்துவ காப்பீடு கட்டாயமாகி விட்டது. விலை உயர்ந்த மொபைல் போன் உபயோகிக்கும் நாம் அதையும் காப்பீடு செய்கிறோம். தனி நபர் காப்பீடு மற்றும் உபயோகிக்கும் இரு சக்கர வாகனம், கார், வசிக்கும் வீடு உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்யலாம். குடும்பத்தின் வருமானம் ஈட்டுவோர் திடீரென இறந்துவிட்டால், அவரைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காப்பீட்டு தொகை உதவும்.

    பொருட்களின் மீதான காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது. இதற்கு செலுத்தும் பிரீமியம் திரும்ப தரப்பட மாட்டாது. ஆனால் எந்த பொருள் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த தொகையை இழப்பீடாக பெறலாம். பொருளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, தொலைந்து போனாலோ, தீ விபத்தில் சேதமடைந்தாலோ இழப்பீட்டை பெறலாம்.

    இதேபோல மருத்துவக் காப்பீடும் உள்ளது. ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். நோய் வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை செய்ய நேரிட்டால் அப்போது மருத்துவ காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு பெறலாம். பொதுவாக அனைத்து காப்பீட்டு பிரீமியங்களுக்கும் வருமான வரி விலக்கு உண்டு. வாழ்வில் சேமிப்பு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு காப்பீடும் அவசியமாகி விட்டது.
    காலை நேரத்தில் புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிடலாம். புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை நன்கு உணர்ந்திருந்தாலும் அதனை கைவிடமுடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பதற்குத்தான் அவர்களின் மனம் அலைபாயும். புகைப்பிடித்தால்தான் அன்றைய நாளை உற்சாகமாக தொடங்கமுடியும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். காலை நேரத்தில் புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிடலாம். புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * மனித உடலில் 60 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. உடலுக்கு எப்போதும் போதுமான அளவு திரவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் தூங்கிவிட்டு எழும்போது காலையில் திரவத்தின் அளவு குறைவாக இருக்கும். அது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி கவனம் செலுத்தும் திறனை குறைக்கும். காலையில் எழுந்ததுமே சிகரெட் குடிக்கும் எண்ணம் மேலோங்கும். அதனை கட்டுப்படுத்தி, மிதமான சுடுநீர் பருகலாம். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். அதனை அன்றாட வழக்கமாக மாற்றவேண்டும். அது புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்க உதவும்.

    * காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சியோ, நீச்சல் பயிற்சியோ மேற்கொள்ளலாம். அப்போது உடல் இயக்க திறன் அதிகரிக்கும். உடலையும் இலகுவாக்கும். உடற்பயிற்சியை தினசரி தொடரும்போது உடல் கட்டுக்கோப்பாக மாறத்தொடங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிக்கோட்டின் வீரியத்தை குறைக்க உதவும்.

    * புகைப்பிடிக்கும் நபரை பார்க்கும்போதோ, வழக்கமாக புகைப்பிடிக்கும் நேரத்தை நெருங்கும்போதோ புகைப்பிடிக்கும் ஆவல் மேலோங்கும். அப்போது கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மூச்சு விடுங்கள். சிறிது நேரம் மூச்சு பயிற்சியை தொடரலாம். ‘இனி ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டேன்’ என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதியச் செய்யலாம்.

    * ஒவ்வொரு முறையும் புகைப்பிடிக்கும் ஆசை வெளிப்படும்போதெல்லாம் புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதற்கான அனைத்து காரணங் களையும் நினைவூட்டுங்கள். காலை யில் எழுந்ததும் கண்ணில் படும் இடமெல்லாம் ‘நான் வலிமையானவன்’, ‘புகைப்பழக்கத்தை மீண்டும் தொடரமாட்டேன்’ என்பது போன்ற வாசகங் களை பதியவையுங்கள். சாப்பிடும் அறை, குளியல் அறை, குளிர்சாதனப்பெட்டி, அதிகமாக பயன்படுத்தும் அறைகளில் புகைப்பிடிக்க தடை போடும் லோகோ பதித்த ஸ்டிக்கரை ஒட்டிவைக்கலாம்.

    * காலையில் எழுந்ததும் செய்யும் வழக்கமான நடைமுறையை மாற்றி பாருங்கள். வழக்கத்தை மாற்றுவது புகைப்பழக்கத்தை தவிர மற்ற விஷயங்களை பற்றி சிந்திக்க உதவும். மேலும் புகைப்பிடிக்க தூண்டும் ஆவலை குறைக்கும். வழக்கமாக காலையில் காபி பருகுவது, சிற்றுண்டி ருசிப்பது, சிகரெட் புகைப்பது என்று பழகி இருந்தால் அதற்கு பதிலாக ஆரஞ்சு சாறு பருகலாம், முட்டையுடன் சிற்றுண்டி சாப்பிட பழகலாம். சாப்பிடும் இடத்தையும் மாற்றிவிடலாம்.

    * வாகனம் ஓட்டும்போது புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றினால் இசை மீது கவனம் செலுத்தலாம். அது மனதை நிதானப்படுத்த உதவும்.

    * ஒவ்வொரு முறையும் சிகரெட்டை புறக்கணிக்கும்போதெல்லாம் உங்களை பற்றி நீங்களே பெருமிதமாக பேசுங்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்காக ஒவ்வொரு முறையும் இலக்கை நிர்ணயுங்கள். அந்த இலக்கை எட்டும்போதெல்லாம் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து சில நாட்களாக புகைப்பழக்கம் பற்றிய சிந்தனை எழாமல் இருந்தால் நண்பர்களை அழைத்து விருந்து கொடுங்கள். புகைப்பிடிக்க நினைத்தாலும் நண்பர்கள் நினைவுக்கு வந்து போவார்கள். அவர்களும் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு பக்கப்பலமாக இருப்பார்கள். 
    அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.
    இந்தியாவில் முன்பெல்லாம் பெருமளவு குழந்தை திருமணங்கள் நடந்துகொண்டிருந்தன. அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சுட்டிக்காட்டி, ‘பொறுத்திருந்து, குறிப்பிட்ட பருவம் வந்த பின்பே திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காலம் மாறியது. பெண்கள் படித்து முன்னேறினார்கள். சரியான பருவத்திலே திருமணத்திற்கு தயாரானார்கள். இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.

    இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூகம் தவிக்கிறது. அதிகாலையில் எழுந்து, குளித்து, பளிச்சென்று உடை உடுத்தி, காபி போட்டு எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு போய், ‘என்னங்க எழுந்திருங்க.. காபி சாப்பிடுங்க..’ என்று கணவரிடம் சொன்ன காட்சியை பழைய சினிமாக்களில் மட்டுமே காணமுடிகிறது. ஏன்என்றால் அப்படிப்பட்ட பெண்கள் யாரும் இன்று இல்லை. கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, நகத்தை கடித்தபடி ஒன்றும் அறியாத அப்பாவிபோல் நடிக்கவும் இன்று எந்த பெண்ணும் தயார் இல்லை. தங்கள் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்ளவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள். அதுதான் அவர்களது திருமணக்கொள்கையிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

    ‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வி இளம் பெண்களிடம் ஒரு கருத்துக்கணிப்பிற்காக கேட்கப்பட்டது. சமூக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த சர்வேயை நடத்தியது.

    அதில் அவர்கள் அளித்த பதில் பலரையும் திகைக்கவைத்திருக்கிறது. ‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சரி’ என்று 18 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். முன்பு 2 முதல் 6 சதவீதம் பெண்களே இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    65 சதவீதம் பெண்கள், ‘அப்படிப்பட்ட வாழ்க்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல..’ என்று கூறி ஆறுதல் அளித்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ‘எதிர்காலத்தில் அந்த மாதிரியான வாழ்க்கை முறை பெருகிவிடும்’ என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆடம்பர திருமணங்கள் தேவையில்லை என்பதும் பெண்களின் கருத்தாக இருக்கிறது. ‘இரண்டு இதயங்கள் இணையத்தானே திருமணம். அதற்காக அவசியமில்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கவேண்டியதில்லை’ என்றும் கூறுகிறார்கள். இந்த கருத்து, ஆர்ப்பாட்டமான திருமணங்களில் பெண்களுக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

    ‘ஆடம்பர திருமணங்களில் உங்களுக்கு ஏன் விருப்பமில்லை?’ என்ற கேள்வியை சர்வேயில் அவர்களிடம் கேட்டபோது...

    ‘ஆடம்பர விழாக்கள் மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்த பெண்கள் பலர், கூண்டுக்குள் சிக்கிய கிளிகள் போன்று திணறிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். பந்தத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். சிலரோ ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றபடி விவாகரத்து வாங்கிவிட்டு ஓடிவந்து விட்ட கதையும் எங்களுக்கு தெரியும். இப்படி பலவீனமாக இருக்கும் திருமண பந்தத்திற்கு, லட்சங்களில் செலவு தேவையில்லை. திருமண பந்தத்தையே காப்பாற்ற முடியாத நிலை இருக்கும்போது அதற்கு அள்ளிக்கொட்டி செலவு செய்வது அவசியமற்றது’ என்று கூறும் பெண்கள், திருமணத்தில் மத நம்பிக்கைகளையும், சடங்குகளையும் கைவிட தயாரில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

    சம்பிரதாயங்களை பேணிபாதுகாக்க தயாராக இருக்கும் இன்றைய இளம்பெண்கள், போகிற போக்கை பார்த்தால் காதலை கண்டுகொள்ளாமலே கழற்றிவிட்டுவிடுவார்கள் போல் தெரிகிறது. சர்வேயில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்கள் காதலை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘காதல் முறிந்து போனால் வாழ்க்கையே முடிந்துபோனது என்று பெண்கள் தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் பழங்கதை. இப்போது அதை ஒரு தோல்வியாகவே எடுத்துக்கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவோம்’ என்று சர்வேயில் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ‘காதல் ஒரு நல்ல பொழுதுபோக்கு. அதை அந்த பருவத்தில் அனுபவித்துப்பார்த்துவிடுவது நல்லது’ என்ற கருத்தை 30 சதவீத கல்லூரி மாணவிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதில் இன்னொரு அதிரடியான கருத்தும் உள்ளது. அந்த 30 சதவீத பெண்களிடம் ‘காதலித்தவர்களை திருமணம் செய்ய நீங்கள் ஆர்வமாவது காட்டுவீர்களா?’ என்று கேட்டபோது, ‘பெற்றோர் சொல்வதைத்தான் கேட்பேன். இறுதி வரை காதலுக்கு போராடும் குணமெல்லாம் எங்களிடம் கிடையாது. வாழ்க்கையில் காதலைத் தவிர வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை’ என்று கூறி, தங்களது புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
    பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள்தான், மனித உற்பத்திக் கேந்திரம். பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை.
    நமது ஆயுட்காலத்தில் சராசரியாக 30 ஆயிரம் கிலோ எடைகொண்ட உணவினை உட்கொள்கிறோம். இதயம் ஒரு வருடத்துக்கு 43 லட்சம் தடவை துடிக்கிறது. உடலுக்குள் ரத்தம் தினமும் பலகோடி மைல் தூர அளவுக்கு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது.

    இந்த ரத்தம்- உடலின் ‘போக்குவரத்து சிஸ்டமாகவும்’, நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜன், தண்ணீர், உணவு போன்றவைகளை ரத்தம்தான் கொண்டு போய் சேர்க்கிறது. அது மட்டுமின்றி செல்களின் பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் கழிவுகள், அதற்குரிய இடங்களில் போய் சேரவும் ரத்தம்தான் துணைபுரிகிறது. அதற்காக ரத்தம் தினமும் உடலுக்குள் பல கோடி மைல் தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது.

    ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபினின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதுதான், ஆக்சிஜனை சுவாச கட்டமைப்புகளில் இருந்து பெற்று, செல்களில் கொண்டுபோய் சேர்க்கிறது. அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் சுவாச கட்டமைப்புகளுக்கு கொண்டு சேர்த்து, உடல் இயக்க நிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வெள்ளை ரத்த அணுக்கள், ரத்தம் கெட்டியாக துணைபுரியும் பிளாஸ்மா போன்றவைகளும் ரத்தத்தில்தான் இருக்கின்றன.

    இதயம் ஒரு பம்ப். இது கிட்டத்தட்ட நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது. ஒரு நிமிடம் அது துடிக்காமல் இருந்தாலே ஆயுள் முடிந்துவிடும். இதயம் துடிக்கும்போது பிராணவாயுவும், சத்தும் அடங்கிய சுத்த ரத்தத்தை செல்களுக்கு கொண்டு சேர்ப்பதும், அங்கிருந்து கழிவுகள் அடங்கிய அசுத்த ரத்தத்தை சுவாச கட்டமைப்புக்கு கொண்டு வருவதும் நடக்கிறது.

    இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிலும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக மனித இனம் உருவாகிக்கொண்டே இருக்க இனப்பெருக்க உறுப்புகள்தான் காரணம். ஆண் இனப்பெருக்க உறுப்பிற்கும், பெண் இனப்பெருக்க உறுப்பிற்கும் வித்தியா சங்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்து உருவாக்கம் நிகழ்த்தும் விதத்தில் அவை அற்புதமாக படைக்கப்பட்டிருக் கின்றன. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், ஆணின் விரைகளில் செயல்பட்டு உயிரணுவை உற்பத்தி செய்கிறது. ஒரு மில்லி விந்துவில் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருக்கும். பெண்ணை கருத்தரிக்க வைக்க அதில் ஒன்றே ஒன்று போதுமானது.

    பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள்தான், மனித உற்பத்திக் கேந்திரம். பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. பெண்ணுறுப்பு கிட்டத்தட்ட பத்து செ.மீ. நீளம் கொண்ட ஒரு குழல்போன்ற அமைப்பு. அதன் முகப்பு பகுதி கன்னிச்சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும். அதன் நடுவில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாகத்தான் மாதவிலக்கு உதிரம் வெளியேறுகிறது. உறவின்போது ஆணின் உயிரணுவை, யோனி நாளம் வரவேற்கிறது. பெண்ணுறுப்புக்கு பார்தோலின் என்ற சுரப்பி சுரக்கும் திரவம் வழுவழுப்புத்தன்மையை உருவாக்குகிறது. இவை அனைத்தும் உடலியல் விஞ்ஞான தகவல்கள் ஆகும்.

    எட்டு செ.மீ. நீளமும், ஐந்து செ.மீ. அகலமும் கொண்ட தசையாலான பை தான் கருப்பை. இனப்பெருக்கத்தில் இது செய்யும் பணி அதிசயமானது. 50 கிராம் எடைகொண்ட கருப்பை, கருவை உள்வாங்கி, அதைவிட பலமடங்கு கொண்ட குழந்தையாக வளர்த்தெடுக்கிறது.

    ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் சந்தித்து, கருக்குழாயில் கருவாகிறது. அந்த கரு, கருப்பைக்குள் சென்று பதியமாகி சிசுவாகி, குழந்தையாக வளருகிறது. கருப்பையின் மேல் பகுதியில், இருபுறமும் இரு சினைப்பைகள் உள்ளன. இதில் இருந்துதான் மாதந்தோறும் சினைமுட்டை வெளிவருகிறது. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் பெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. முடியைவிட மெலிதாக இருக்கும் இந்த குழாய்கள்தான் சினை முட்டையையும், உயிரணுவையும் சந்திக்க வைக்கவும்- கருவாக்கி- அதனை கருப்பைக்குள் அனுப்பும் பணியையும் செய்கின்றன. இதன் பணிகள் அனைத்தும் பிரமிக்கவைக்கின்றன.

    பெண் பூப்படைவது மூலம் அவள் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டாள் என்பது உணர்த்தப்படுகிறது. பெண்ணின் ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சி காலத்திலும் சினை முட்டை முதிர்ந்து வெடித்து வெளியே வருகிறது. அது ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகும் சூழல் உருவாகிறது. சினைமுட்டை வெளியேறும் ஒவ்வொரு மாதமும் ஈஸ்்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் கருப்பைக்குள் என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற மென்பொருளை உருவாக்குகிறது. கருப்பைக்குள் வரும் கரு வளர படுக்கை அமைத்துக்கொடுப்பது போன்ற பணியை என்டோமெட்ரியம் செய்யும். ஆனால் ஆணும், பெண்ணும் இணையாவிட் டால் கருத்தரிப்பு அங்கே நிகழாது. அதனால் என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலையில்லை. அதனால் அது ரத்தத்தோடு மாதந்தோறும் வெளியேறும். அப்படி வெளியேற்றப்படுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு தோன்றாது.

    அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன. இந்த அதிசயங்களை பார்த்து மலைத்து, சிலிர்த்துப்போவதைவிட இந்த அற்புத உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் எந்த கோளாறும் (நோயும்) வராமல் பார்த்துக்கொள்வதுதான் நாம் நமது உடலுக்கு செய்யும் மரியாதையாகும்.
    கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வீடுகளில் குடிநீரை காய்ச்சிய பின்பே மக்கள் குடிக்கிறார்கள். ‘கேன்’ தண்ணீரையும் சூடாக்கியே பருகுகிறார்கள்.
    சென்னை:

    கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தான் இன்றைக்கு உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். காற்றில் பரவ சாத்தியமுள்ள கொரோனா, நீரிலும் பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அதன் பின்னரே குடிக்கிறார்கள்.

    அதேபோல வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் (ஆர்.ஓ.) இருந்தாலும், அந்த நீரையும் காய்ச்சிய பின்னரே குடிக்கிறார்கள். சென்னையில் பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் கொண்ட குடிநீர் ‘கேன்’கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா பீதி காரணமாக ‘கேன்’களில் உள்ள குடிநீரையும், சுடவைத்து அதன் பின்னரே மக்கள் பருகுகிறார்கள். அதேபோல காலையில் எழுந்ததும் மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி கலந்த சுடு தண்ணீர் குடிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். குடிக்கும் தண்ணீர் மூலம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். குழந்தைகளும் தப்பித்தவறி குளிர்ந்த நீர் குடிக்காதவாறு பெற்றோர் கண்காணிக்கிறார்கள்.

    கொரோனா அறிகுறிகளில் முக்கியமானது தொண்டை வலி. தொற்று உள்ளிட்ட தொண்டை சார்ந்த பிரச்சனைகளை வெந்நீர் போக்கிவிடும் என்பதால், அனைத்து வீடுகளிலும் தற்போது வெந்நீர் குடிக்கும் பழக்கம் திரும்பியிருக்கிறது. குளிர்பானங்கள், ஜூஸ்கள் போன்றவற்றுக்குப் பதிலாக சூப், மூலிகை சாறு, கசாயம் போன்றவற்றை மக்கள் குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் வெந்நீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன், பாதுகாப்பு நடைமுறையாகவும் பார்க்கப்படுகிறது.
    கீரை, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்மூத்தி ரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மூத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 1 கப்
    வாழைப்பழம் - 1
    பாதாம் பால் - அரை கப்
    தேன் - தேவையான அளவு.

    கீரை வாழைப்பழ ஸ்மூத்தி

    செய்முறை:

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். எந்த கீரையாகவும் இருக்கலாம்.

    வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

    இனிப்பு தேவை எனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

    இப்போது சுவையான கீரை, வாழைப்பழ ஸ்மூத்தி பருக தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். முகத்தை கழுவும் போது இந்த விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது.
    முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள்.

    அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

    கிளின்சர் :

    முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும்.  ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.  உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும்.

    அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.

    தண்ணீர் :.

    எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.

    ஃபேஸ் வாஷ் :

    இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன் படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.

    ஃபேசியல் ஸ்கரப் :

    முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற் காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மை யாக 3-4 நிமிடங் களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
    டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.
    அ டேய்.... ரூம் போட்டு யோசிப்பீங்களா? என கேட்கத் தோன்றுகிறது. அடிக்கடி முளைத்தெழும்புகின்ற இணையச் சவால்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு சவாலுக்குப் பின்பும் பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் சவால்களில் குதிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் ஒன்று வந்தது. நடுங்கிக் குளிரும் அதிகாலையில், ஒரு பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை தலையில் கவிழ்க்க வேண்டும் என்பது தான் சவால். உலகெங்கும் மக்கள் சவாலை ஏற்று பக்கெட் பக்கெட்டாக தண்ணீரைத் தலையில் கவிழ்த்து புகைப்படம் எடுத்து இணைய வெளியைத் தெறிக்க விட்டார்கள். பலர் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கையில் கிடந்தார்கள். எவ்வளவு நாள் தான் ஐஸ்வாட்டர் கொட்டறது என அடுத்து நெருப்பு விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். ஆல்கஹால் போன்ற சட்டென தீப்பிடித்து, சட்டென அணைந்து விடுகின்ற திரவங்களை உடலில் கொட்டி தீ வைத்து பிறரை வெல வெலக்க வைப்பது இந்தப் போட்டி. பலர் இதை வெற்றிகரமாகச் செய்தார்கள். மக்கள் கூடும் இடங்களில் உடலில் நெருப்பு வைத்து, நெருப்பையும் மக்களின் அதிர்ச்சியையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்கள். பலரை உற்சாகப்படுத்திய இந்த விளையாட்டு, பலருடைய அழகிய மேனியை கருக்கிப் பொசுக்கவும் செய்தது.

    அடுத்ததாக ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும் ஒரு சவால் வந்தது. சீறிவரும் ரெயிலுக்கிடையே, பாய்ந்து வரும் வாகனங்களுக்கிடையே, உச்சாணிக் கொம்பில், கட்டிடங்களின் அபாய விளிம்புகளில் என சாவுக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று மக்கள் செல்பி எடுத்துத் தள்ளினார்கள். ஏகப்பட்ட உயிர்களைப் பலிகொண்ட விளையாட்டாய் இது மாறிப் போனது.

    48 மணி நேர சவால் என்று ஒன்று, இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்தது. பதினெட்டு மணி நேரம் காணாமல் போய்விடவேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டும். அது தான் சவால். பல பெற்றோரை அதிர்ச்சிக்குள் அழைத்துச் சென்ற சவாலாக இது மாறிப் போனது.

    இந்த சவால்களில், சர்வதேசத்தையே நடுநடுங்க வைத்த சவால்களாக புளூவேல், மோமோ போன்ற சைக்கோ விளையாட்டுகள் ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் உயிர்களைப் பலிகொண்டன. பல அரசுகள் இந்த விளையாட்டுகளைத் தடை செய்தும், எச்சரிக்கை விடுத்தும் மக்களைக் காப்பாற்றின என்று சொல்லலாம்.இப்போது கடந்த சில மாதங்களாக ‘நம்பர் நெய்பர்’ (அடுத்த எண் ) எனும் புதிய சவால் ஒன்று மெல்ல மெல்லப் பரவி வியாபிக்கத் துவங்கியிருக்கிறது. இது என்ன சவால்? சிம்பிள். நமது மொபைல் பத்து இலக்க எண்ணாக இருக்கிறது அல்லவா? அந்த பத்தாவது இலக்க எண்ணை மட்டும் மாற்றி வேறு எண் போட்டால் அவர் நமது அடுத்த எண் நபர். அவருக்கு வாட்ஸப் பண்ணுவது, மெசேஜ் பண்ணுவது நண்பராக முயற்சிப்பது தான் இந்த விளையாட்டு. அதாவது உங்கள் எண் 5-ல் முடிகிறதெனில், அந்த இடத்தில் 5-க்குப் பதில் வேறு எண்ணைப் போடவேண்டும்.

    அந்த நபரிடம் தொடர்பு கொண்டு, உரையாடி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன் ஷாட் (திரைப்பதிவு) செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். இந்த விளையாட்டும் பல விபரீதங்களை மெல்ல மெல்ல கொண்டு வந்து கொண்டிருக்கிறது. யாரென்றே தெரியாத நபரிடம் பேசுவதும், அவரிடம் நமது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் நாம் விரும்பியே ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போல என்பதில் சந்தேகமில்லை. இப்படி நடந்த முயற்சிகளில் சில அநாகரிக உரையாடல்களாகவும், கொலை மிரட்டல்களாகவும், எச்சரிக்கைகளாகவும் மாறிப் போனது.

    யாரென்றே தெரியாத நபருக்கு செய்தி அனுப்புவது அவரது தனிநபர் உரிமையில் தலையிடுவதாகவும் மாறிவிடுகிறது. சில நாடுகளில் இது சட்ட விரோதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக இந்த சவால் விளையாட்டுப் போர்வையில் புல்லுருவிகள் உங்களை அணுகலாம் என்பதால் இரட்டைக் கவனம் அவசியமாகிறது.

    டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. அவர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்கான விஷயத்தையும் செய்து இந்த சவாலில் வெற்றி பெற நினைக்கிறார்கள். அது அவர்களுடைய உடல்நலனுக்கோ, ஏன் உயிருக்கோ கூட ஆபத்தாய் முடிவதை அவர்கள் உணர்வதில்லை.

    இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து கட்டளைகள் இவை.

    1. நேரடியான விளையாட்டுகளே எப்போதும் பாதுகாப்பானவை, உறவையும் உடல் நலத்தையும் வளர்ப்பவை. டிஜிட்டல் விளை யாட்டுகள் உடல்நலத்துக்கு எப்போதுமே கேடு விளைவிப்பவை தான். டிஜிட்டல் தவிர்.

    2. எந்த ஒரு சவாலான விளையாட்டையும் செய்ய முயலாதீர்கள். பிறர் நம்மைத் தூண்டி விடுகின்ற வார்த்தைகளுக்கு பலியாகாமல் சுயமாய் சிந்தித்து அதைத் தவிர்ப்பது மிக முக்கியம். கூட இருப்பவர்கள் ஏத்தி விடுவதற்காக நாம் வீழ்ந்து விடக் கூடாது. ஈகோ தவிர்.

    3. நமக்குப் பரிச்சயமில்லாத நபரோடு எந்த விதமான விளையாட்டையோ, சவாலையோ செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நீண்ட நெடுங்காலமாய் சோசியல் மீடியா தோழராய் இருந்தாலும் நேரடியாய்த் தெரியாவிடில் ஒதுங்கி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். நெருக்கம் தவிர்.

    4. பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவர்களும், பதின்வயதினரும் எந்த சவால்களையும் செய்யக் கூடாது. ரகசியம் தவிர்.

    5. உளவியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், சவால்கள், பிரச்சினைகள் எழுந்தால் உடனே பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடமோ சொல்லி அவர்களுடைய உதவியை நாட வேண்டும். தனிமை தவிர்.

    6. சோசியல் மீடியாவிலோ, டிஜிட்டல் வெளியிலோ உங்களுக்குக் கிடைக்கும் லைக்ஸ், ஷேரிங், கமெண்ட் போன்றவை உங்களுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் அர்த்தமுள்ளதாக்கப் போவதில்லை. மாயை தவிர்.

    7. சோசியல் மீடியாவில் பிரகாசிக்க விரும்பினால் உங்களுடைய திறமைகளைப் படைப்புகளாக, இசையாக, ஓவியமாக, குறும்படமாக அல்லது அது போன்ற ஏதோ ஒரு விஷயமாக இணையத்தில் பதிவேற்றி பிரபலமாகுங்கள். அது தருகின்ற மகிழ்ச்சி அலாதியானது. திறமை பயில்.

    8. உங்கள் நண்பர் வட்டாரத்தில் யாரேனும் இத்தகைய சவால்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களின் உதவிகளை நீங்கள் நாடலாம். நட்பு பயில்.

    9. பெற்றோரும் பெரியோரும் இத்தகைய புதிய புதிய சவால்களைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை பிள்ளைகளுக்கு விலக்கி எச்சரிக்கை செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை பயில்.

    10. பெற்றோர் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகள் டிஜிட்டலைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கும் அதே நேரத்தில், பெற்றோரும் டிஜிட்டலை ஒதுக்கியே வைக்க வேண்டும். நேசம் பயில்.

    சேவியர்
    ×