என் மலர்
ஆரோக்கியம்
கைப்பையை தனித்தனியே வைப்பதற்கு ஏற்ப அலமாரிகள் கிடைக்கின்றன. எனவே அதில் முறையாக அடுக்கி மூடி வைப்பதால் நீண்ட நாள் புதிது போல் பயன்படுத்தலாம்.
சிலர் ஹேண்ட் பேக் வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஷாப்பிங் என்றாலே அதில் முதல் தேர்வு ஹேண்ட் பேகாகத்தான் இருக்கும். அப்படி ஆடைக்கு ஏற்ப , ஸ்டைலுக்கு ஏற்ப என ஹேண்ட் பேகுகளை அதிக விலைக் கொடுத்து டசன் கணக்கில் வாங்கி வைத்திருந்தால் அதை எப்படி முறையாகப் பராமரிப்பது என்று பார்க்கலாம்.
ஹேண்ட் பேகுகளை வைப்பதற்கென்றே ஆர்கனைசர் விற்கப்படுகின்றன. இவை ஆன்லைனிலேயே சிறந்த விலைகளில் பட்ஜெட்டிற்கு ஏற்ப கிடைக்கின்றன. அவற்றில் நீங்கள் வைத்திருக்கும் பேக்குகளுக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தலாம். அதில் அடுக்கி வைப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கும்.
பேகுகளை தனித்தனியே வைப்பதற்கு ஏற்ப அலமாரிகள் கிடைக்கின்றன. எனவே அதில் முறையாக அடுக்கி மூடி வைப்பதால் நீண்ட நாள் புதிது போல் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் தேவைக்கு ஏற்ப நீங்களே அலமாரியை செய்து கொள்ளலாம்.
ஸ்கிரீன் துணியை தொங்க விடுவதற்கென பயன்படுத்தப்படும் வளையங்களில் பேக்குகளை மாட்டி தொங்க விடலாம். இது செலவே இல்லாத சிறந்த யோசனையாக இருக்கும்.
நீளமான சங்கிலி வாங்கி அதில் S வளைவு ஹூக்குகளை மாட்டி அதில் ஹேண்ட் பேகுகளை மாட்டலாம். பேகின் அளவுக்கு ஏற்ப இடைவெளி விட்டு மாட்ட வேண்டும்.
ஹேண்ட்பேக் ஹேங்கர் அல்லது சட்டைகளை தொங்கவிடும் ஹேங்கரை அடுக்கடுக்காக சுவற்றில் அடித்து அதில் ஒவ்வொரு பேக்குகளாக தொங்க விடலாம்.
தேவையில்லாமல் புத்தக அலமாரி இருந்தாலும் அதை தூசி தட்டி ஹேண்ட் பேக் அலமாரியாகப் பயன்படுத்தலாம். அதை எடுக்கவும் வசதியாக இருக்கும். லெதர் பேகுகள் நீண்ட நாள் உழைக்கும்.
வீட்டில் சிறிய ஷெல்ஃப் பேக்குகளை வைப்பதற்கு ஏற்ப இருந்தால் அதை அழகாக இப்படி பேக்குகளை அடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பார்க்க ஷோகேஸ் ஷெல்ஃப் போல் வீட்டின் தோற்றத்தையும் அழகாக்கும்.

இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். நோய்களை வரவிடாமல் தடுக்கும் தடுப்புமருந்துகளின் வரலாற்றை அறிவோமா....
இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த நோயை வரவிடாமல் தடுத்துவிடும் தடுப்புமருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும், உலகம் முடக்கத்தில் இருந்து மீண்டு, எப்போது புத்துணர்ச்சியுடன் இயங்க ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் உள்ளது. அதுசரி, நோய்களை வரவிடாமல் தடுக்கும் தடுப்புமருந்துகளின் வரலாற்றை அறிவோமா....
தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து என்பது மனிதன் அல்லது ஒரு விலங்கிற்கு குறிப்பிட்ட நோய்க்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்காக செலுத்தப்படும் மருந்தாகும்.
தடுப்பு மருந்தானது உடலினுள் சென்று, நமது உடலின் நோய்த்தடுப்பு மண்டலத்திற்கு புதிய நோயை உருவாக்கும் கிருமிகளை அறிமுகம் செய்து அவை எதிர்காலத்தில் உடம்பை தாக்காதவண்ணம் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது.
தடுப்புமருந்துகள் ஊசி மூமாகவோ, வாய் வழி உட்கொள்ளும் மருந்தாகவோ, மூக்கின் வழியே சுவாசிக்கும் வகையில் செலுத்தப்படுவதாகவோ உள்ளது.
உலகின் முதல் தடுப்புமருந்து பெரியம்மை நோய்க்காக உருவாக்கப்பட்டது. எட்வர்டு ஜென்னர் என்னும் ஆங்கிலேய மருத்துவர் 1796-ல் இந்த தடுப்புமருந்தை உருவாக்கினார். அது பெரியம்மை நோயை உலகைவிட்டே இன்று விரட்டிவிட்டது. 1980-ல் உலகம் முழுவதும் பெரியம்மை வைரஸ் நோய் ஒடுக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
தடுப்பு மருந்தால் உலகில் ஆண்டுதோறும் 25 லட்சம் இறப்புகள் தடுக்கப்படுவதாக மதிப்பீடு செய்து அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
19-ம் நூற்றாண்டில் பிளேக், காலரா, ரேபிஸ், டெட்டனஸ் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. இந்த நோய்களின் தாக்கமும் தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது.
20-ம் நூற்றாண்டு வரை 27 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய தடுப்பூசிகளின் வகை பின்வருமாறு: காசநோய், தட்டம்மை, புளூ காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் மற்றும் ஈரல் அழற்சிகள்.
2019-ல் மேலும் 6 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. அவை மனித பாப்பிலோமா வைரஸ், ஈரல் அழற்சி-இ வகை, என்டோ வைரஸ் 71, மலேரியா, டெங்கு மற்றும் எபோலா.
ஒவ்வொரு நாட்டின் நோய்த்தடுப்புத் துறையானது குறிப்பிட்ட தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தை பேணி வருகிறது. சில தடுப்பூசிகள் வாழ்நாளில் ஒரு முறையும், சில தடுப்பூசிகள் குறிப்பிட்ட இடைவெளியிலும் போடப்பட வேண்டும். இன்னும் சில தடுப்பூசிகள் ஆண்டுதோறும் போட வேண்டிய அவசியம் உள்ளது. புளூ காய்ச்சல் தடுப்பூசி ஆண்டுதோறும் போட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் புளூகாய்ச்சல் நவம்பர் முதல் சில மாதங்களில் பரவும். அந்தக் காலத்திற்கு முன்பு சிறு குழந்தைகள் முதல் இந்த தடுப்பூசியை ஆண்டுதோறும் போடுகிறார்கள்.
போலியோ தடுப்பூசி மூலம் போலியோ பாதிப்பையும் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டோம். சுகாதாரத் துறை மோசமாக உள்ள சில நாடுகளில் மட்டும் அரிதாக போலியோ பாதிப்பு தென்படுகிறது.
தடுப்பூசிகளை பரவலாக்குவதன் மூலம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதாவது பெரும் பாலானவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், தடுப்பூசி போடாத சிலருக்கும் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. ஏனெனில் நோய் பரவ சிறுபான்மை அளவிலேயே வாய்ப்புள்ளதால் அந்த நோய் பரவாமல் அடங்கிவிடுகிறது.
தற்போது கொரோனா பாதிப்பிலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியே மற்றவர்களை காக்க பயன்படும் என்று பல மருத்துவர்கள் கூறி உள்ளனர். நோய் பாதிப்பு வேகமாக பெருகி அடங்கிவிட்டால் அந்த நோய் மற்றவர்களிடம் பரவாமல் ஒடுங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.

கணவரோடு மனைவி சண்டையிட்டுக்கொண்டு மனப்போராட்டத்தில் இருக்கும் காலகட்டங்களில், எங்கேயாவது இருந்து நீளும் புதிய நட்பு அவளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் தெரியும். பிற்காலத்தில் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும்.
தம்பதிகளுக்குள் மோதல் ஏற்படுவது புதிய விஷயம் இல்லை. ஆதிகாலத்தில் தொடங்கி, இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழும் காலம் வரை அது மறையாது என்றாலும், அவர்கள் மோதிக்கொள்ளும் முறைதான் அது சாதாரணமானதா? விவாகரத்து வரை செல்லக் கூடியதா? என்பதை தீர்மானிக்கிறது.
கணவரோடு சண்டை ஏற்படும்போது பெண்கள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவதுண்டு. பலரது பார்வைக்கு அது தவறானதாக இருந்தாலும், அது தான் சரியானது என்று மனோதத்துவ நிபுணர்கள் புதிய தீர்வு சொல்கிறார்கள். இரண்டு பேரும் கோபமாக இருக்கும்போது அருகருகே நின்று கோபத்தை வளர்த்துக் கொள்ளாமல், அந்த நேரத்தில் சிறிது இடைவெளிவிட்டு பிரிவது கோபத்தை தணிக்கவே செய்யும் என்பது அவர்கள் கருத்து.
இருவரும் பிரிந்து தனிமைப்படும்போது தனித்திருந்து ஓரளவு தெளிவாக சிந்திப்பார்கள். அப்போதுதான் நல்லது கெட்டது தெரியவரும்.
மனைவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கேயாவது சென்றால் அது பாதுகாப்பில் பிரச்சினையை ஏற்படுத்தும். கூடுதலாக வேறு விதமான பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும். அதனால் அம்மா வீட்டிற்கு செல்வது நல்லதே! அம்மா வீட்டில் ஆறுதலும், அன்பும் மட்டுமில்லை, சரியான வழிகாட்டுதலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்கு பயணமாவது நல்லதல்ல!
பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு பொதுவாக அம்மா வீடு ஆறுதல் தருவதில்லை. ‘எங்கள் சொல் கேட்காமல் நீயாகத்தானே திருமணம் செய்துகொண்டாய். நீயே அனுபவி’ என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. மகளுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதில் இருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. குறிப்பாக அம்மாக்கள் திருமணமான மகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.
கணவரோடு மனைவி சண்டையிட்டுக்கொண்டு மனப்போராட்டத்தில் இருக்கும் காலகட்டங்களில், எங்கேயாவது இருந்து நீளும் புதிய நட்பு அவளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் தெரியும். உடனே அதை பற்றிப் பிடித்துக்கொள்ளத் தோன்றும். ஆனால் அது எந்த அளவு பாதுகாப்பானது என்று சொல்வதற்கில்லை. கயிறா? பாம்பா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
இந்த மாதிரியான புதிய நட்பு, அந்த நேரத்தில் மட்டுமே ஆறுதலாக இருக்கும். பிற்காலத்தில் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும். அதனால் கூடுமானவரை கணவன்- மனைவி உறவு சிக்கல்களை உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப ரகசியங்களை சொல்வது வாழ்க்கையை சிதைத்துவிடும்.
கணவனும், மனைவியும் ஒருவர் மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது இருவருக்குமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதுபோல் தோன்றும். உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் கோபம் குறையும். பின்பு மனைவி, கணவர் நிலையில் இருந்தும்- கணவர், மனைவி நிலையில் இருந்தும் அந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, சுயபரிசோதனை செய்தால் உண்மை புரியவரும். கோபம் குறைந்து, சுபம் ஆகிவிடும்.
கோபமான நேரத்தில் நடக்கும் விவாதத்தின் தொடக்கம் சரியாக இருக்காது. சரியான வழியில் அந்த விவாதம் செல்லவும் செய்யாது. பிரச்சினைகளோடுதான் முடியவும் செய்யும். அதனால்தான் கோபத்தில் செய்யும் விவாதங் களை வீண் விவாதம் என்று சொல்கிறோம். வீண்விவாதங்கள் பகையை வளர்க்கத்தான் உதவும். அதனால் கணவன், மனைவி இருவருமே விவாதங்களில் ஈடுபடும்போது, ‘விவாதத்தில் ஜெயிப்பதல்ல, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்’ என்பதை உணர வேண்டும்.
செக்குமாடு போன்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது. அவ்வப்போது வாழ்க்கையில் மாற்றம் இருக்கவேண்டும். மாற்றங்களை மனம், உடல், அலங்காரம் போன்று பலவிதங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பை போக்கி, தம்பதிகளை உற்சாகமாக்கும். அந்த உற்சாகம் கணவன்- மனைவி உறவில் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
தம்பதிகளுக்குள் ஏற்படும் 95 சதவீத பிரச்சினைகள் மிக சாதாரணமானதுதான் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருவரும் பிரியக் கூடிய அளவுக்கு அதில் தீவிரம் இருப்பதில்லை. ஆனால் ஒன்றும் இல்லாத அந்த விஷயத்தை பேசிப்பேசி தீவிர பிரச்சினையாக்கி விடுகிறார்கள். சிலர் உடனே அவசரப்பட்டு, ‘நாம் இனி ஒருபோதும் பேசிக்கொள்ளவேண்டாம். ஆனால் குழந்தையின் நலன்கருதி ஒரே வீட்டில் குடியிருப்போம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த முடிவு மிக மோசமானது. ஏன்என்றால் எந்த விஷயமானாலும் பேசித்தான் தீர்க்கமுடியும். பேசாமல் எதையும் தீர்க்க முடியாது.

சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.
பெண்களில் சிலருடைய முகத்தில் சரும துளைகள் வழக்கத்தை விட பெரிதாக காணப்படும். ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும். அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சருமத்தை பாதுகாப்பதில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும். சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். ஆனால் சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் சரும எண்ணெய்யின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.
தயிர்: இது சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. கொரிய நாட்டு சரும அறிவியல் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தயிரை கொண்டு ‘பேஸ் மாஸ்க்’ தயாரித்து முகத்தில் பூசிவருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் சரும துளை களை இறுக்கமடைய செய்யவும் துணைபுரியும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் நிவாரணம் பெற்றுத்தரும்.
தக்காளி: இது உடலில் ரத்தத்தை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. தக்காளியை சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுவதன் மூலம் முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவும். தக்காளியை நன்றாக மிக்சியில் அடித்து அதன் சாறை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகர்: இது முகப்பருக்களை போக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் கந்தகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமடைய செய்து சுருக்கங்களை குறைக்க உதவும். மேலும் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் துணைபுரியும். சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை சுத்தம் செய்து அடைப்பட்ட துளைகளை திறக்கவும் வைத்துவிடும். அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.

புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த புட்டு ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து சாப்பிடலாம்.

சூப்பரான புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்போது அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.
குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்படி முளைக்கும் நேரத்தில் அவர்கள் கண்டதையும் வாயில் வைத்துக் கடிப்பார்கள். சில நேரங்களில் நம்மையே கடிக்கச் செய்வார்கள். அதற்குக் அவர்களின் பல் ஊறும் என்பார்கள். ஈறுகள் ஊறுவதாலும், ஒருவித வலி உண்டாவதாலும் எதையாவது கடித்து பற்களுக்கு அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சில நேரங்களில் அந்த வலியால் ஓயாமல் அழுது கொண்டும் இருப்பார்கள். சிலர் இதற்காக ரப்பர் போன்ற பொருட்களை கடிக்க வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.
கேரட்டை மென்று சாப்பிட அவர்களின் பல் ஊறுவதற்கு இதமாக இருக்கும். அதோடு கேரட்டின் இனிப்பு சுவையும் ஆரோக்கியமும் குழந்தைகளுக்கு கூடுதல் நன்மை.
பீட்ரூட்டையும் மெல்லிய துண்டாக நறுக்கிக் கொடுங்கள். அதை மென்று சாப்பிடுவதாலும் அவர்களின் ஈறுகளின் உறுதிக்கு நல்லது.
துண்டு சீஸைக் கொடுங்கள். அது அவர்களின் ஈறுகளில் உள்ள வலியைக் குறைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். மென்று சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
பயறு வகைகளை வேக வைத்துக் கொடுங்கள். இது அவர்களின் பற்கள் சீக்கிரம் முளைக்க உதவுமாம். ஈறுகளில் உண்டாகும் ஊறும் உணர்வு , வீக்கம் இருந்தாலும் சரியாகிவிடும்.
வாழைப்பழம் கால்சியம் சத்து கொண்டது. அதன் இனிப்பு சுவையில் ஒளிந்திருக்கும் சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்டோஸ் போன்றவை பல் வளர்ச்சியை உறுதியாக்குகின்றன.
அவகேடோவும் கால்சியம் சத்து நிறைந்தது. மேலும் அதில் உள்ள வைட்டமின் ஏ பற்களுக்கு நல்லது. அதுமட்டுமன்றி அதைக் மென்று சாப்பிடுவதால் பற்களின் ஈறுகளுக்கு நல்லது.
ஆப்பிள் பல வகையான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக பற்களின் ஈறுகளுக்கு நல்லது. இதனால் பல் வலி, ஊறுதல் போன்றவை இருக்காது.
மாதுளை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதோடு உங்கள் குழந்தையின் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நல்லது.
பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைந்த பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை போன்ற உணவுகளைக் கொடுங்கள்.

மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் வயிற்று வலியை போல் அதுவும் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் இந்த பிரச்னையை தவிர்க்க இயலாது என்கின்றனர்.
இதற்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர்.
இதற்கு ஒரே வழி மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிட வேண்டும்.அதாவது நார்ச்சத்து கொண்ட ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
உணவு மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். அதேபோல் எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலுக்கு நல்லது.
குறிப்பு : ஒருவேளை இந்த மலச்சிக்கல் தீவிரமாகவோ , பொருத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.

கொரோனா காலத்தில் பயன்படுத்துகிற முக கவசங்கள், கையுறைகள், சுய பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றை எப்படி அகற்றி ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
புதுடெல்லி :
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற காலகட்டத்தில் பொது மக்களும் சரி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களும் சரி, அவர்கள் பயன்படுத்திய முக கவசங்கள், கையுறைகள், சுய பாதுகாப்பு உடைகளை பத்திரமாக அகற்றுவது மிகவும் முக்கியமானது.
கண்ட கண்ட இடத்தில் அவற்றை அகற்றி வீசுவது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விட வாய்ப்பு ஆகி விடும். இவற்றை பயன்படுத்தியபின்னர் எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது குறித்த வழிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
வீடுகளில் பயன்படுத்தும் முக கவசங்கள்...
* பொதுவாக மக்கள் வீடுகளில் பயன்படுத்துகிற முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றின் (தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும்) மறுபயன்பாட்டை தடுக்க அவற்றை வெட்டி, ஒரு காகிதப்பையில் 72 மணி நேரம் வைத்து, பின்னர் உலர்ந்த திடக்கழிவுகளை ஒழித்துக்கட்டுவதுபோல அகற்ற வேண்டும்.
* வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் பொதுமக்களிடம் இருந்து நிராகரிக்கப்பட்ட பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு உடைகளை தனியாக ஒரு குப்பைத்தொட்டியில் 3 நாட்கள் போட்டு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை வெட்டி துண்டுகளாக்கி உலர்ந்த பொது திடக்கழிவுகள் போன்று அகற்றி விட வேண்டும்.
தொற்றுக்கு ஆளானவர்களின் பொருட்கள்...
* கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மிச்சம் வைக்கிற உணவு மற்றும் வெற்று தண்ணீர் பாட்டில்களை உயிரிகழிவு பொருட்களுடன் சேகரிக்கக்கூடாது அவற்றை அவர்கள் பயன்படுத்துகிற பிற பொருட்களுடன் பாதுகாப்பாக பைகளில் கட்டித்தான், கழிவு பொருட்கள் சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுவான திடக்கழிவு பொருட்களுக்கு மஞ்சள் நிற பையை பயன்படுத்த கூடாது. அது கொரோனா வைரஸ் உயிர் மருத்துவ கழிவுகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.
* கழிவுகள் உருவாவதை தவிர்க்க முடிந்தவரை உணவுகளை வழங்குவதற்கு அகற்ற தேவையற்ற (நான்-டிஸ்பொஸபுள்) பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பொருத்தமான முன்எச்சரிக்கையுடன் அவற்றை பயன்படுத்த வேண்டும், சுத்தம் செய்யப்பட வேண்டும், ஆஸ்பத்திரி வழிமுறைகள்படி கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
* ரெயில் பெட்டிகள் போன்ற தற்காலிக சுகாதார மையம் உள்ளிட்ட தனிமை வார்டுகளில், கழிவுகளை பிரித்து பராமரிக்க ஏதுவாக வெவ்வேறு வர்ண குப்பைத்தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று கழிவு பொருட்களை அதற்கான பிரத்யேக குப்பைத்தொட்டியில் போட வேண்டும். கழிவுகளை அகற்றுவதற்கு இரட்டை மடிப்புள்ள பையை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குப்பைத்தொட்டியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
* கொரோனா தனிமை வார்டுகளில் பயன்படுத்திய முகத்தை முழுமையாக மறைக்கிற பேஸ் ஷீல்டு, சுய பாதுகாப்பு உடைகள், கருவிகள் ஆகியவற்றை சிவப்பு நிற பையில் போட்டு வைக்க வேண்டும். அங்கு பயன்படுத்திய 3 மடிப்பு முக கவசங்கள், தலை மூடிகள், காலணி மூடிகள், லினன் கவுன் போன்றவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு வைக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் பயன்படுத்திய முக கவசங்கள், திசு பேப்பர்கள், கழிப்பறை பொருட்கள் போன்றவை உயிரி மருத்துவ கழிவுகள் ஆகும். அவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.
பாலியல் மூலம் பரவும் நோய்களைத் தவிர்ப்பதற்கும் கருத்தடை செய்வதற்கும் ஆணுறைகள் நிறையப் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறை உதவியுடன், நீங்கள் கவலைப்படாமல் உடலுறவை அனுபவிக்க முடியும். சிறந்த விஷயம் என்னவென்றால், ஆணுறைகள் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஆணுறைகள் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆணுறைகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானவை. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வீட்டில் நிறைய ஆணுறைகளை வாங்குவதற்கான காரணம் இது தான். ஆனால், ஆணுறைகளும் காலாவதியாகும் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
காண்டம்' என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியான ஒரு பயன்பாட்டு பொருளாகும். வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதுடன், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் தொற்றிவிடாமல் காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.. ஆணின் விந்து பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடாமல் ஆணுறையின் நுனியிலேயே தங்கி விடும். இவை பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை. சில ஆணுறைகள் விந்து வெளியாகும் நேரத்தை நீட்டித்து அதிக தாம்பத்ய இன்பம் பெறவும் உதவக்கூடியவை என்றும் கூறப்படுகிறது. பயமில்லாமல் முழு இன்பத்தை சுகிப்பதற்கு ஆணுறை உதவுகிறது. ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.
ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:.
ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்..
தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக ஆணுறையை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பது முக்கியம். சரியான இடத்தில் வைக்காவிட்டால் ஆணுறையில் கீறல் விழலாம் அல்லது வறண்டு போகலாம். குளிரான ஆனால் ஈரமில்லாத இடங்களில் ஆணுறையை பாதுகாப்பாக வைக்க வேண்டும்..
ஆணுறை, உயவு பொருள் மிகுந்ததாக, வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தால்தான் உறவு இன்பமாக அமையும். பாக்கெட்டை பிரிப்பதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தவேண்டாம். தவறிப்போய் அது ஆணுறையை கிழித்து விடக்கூடும். பிரிக்கும்போது விரல் நகங்கள் அல்லது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இவற்றின் சாவி ஆணுறையை சேதப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்..
ஆணுறையை பயன்படுத்தும் முன்னர் காலாவதி தேதியை (எக்ஸ்பயரேஷன் டேட்) கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாவதி தேதி நெருங்கும்போது தங்கள் மீட்சித்தன்மையை அவை இழந்து விடும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றினாலும், பயன்படுத்தும்போது கிழிந்துபோய் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, வைத்திருக்கும் ஆணுறையின் காலாவதி தேதி நெருங்கினால் அதை தவிர்த்துவிடுவது நல்லது. ஆணுறையை கவனிப்பதுபோன்று, தாம்பத்ய உறவின்போது என்ன உயவுப் பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். எண்ணெய் பசை மிக்க உயவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம். அது ஆணுறையை சேதப்படுத்திவிட வாய்ப்புண்டு. ஆணுறை போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது பிற்கால கவலைகளை தடுக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்னைகளை உடனே கண்டறிந்து உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்னைகளை உடனே கண்டறிந்து உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.
முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது வெஜினாவிலிருந்து இரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம். அதற்கு மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான் அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து நாப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில் அது இரத்தம் கசிவதாக இருக்கலாம்.
இந்த வெஜினாவில் இரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல் காரணமாகவோ, கருக்கலைந்தாலோ அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.
உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். அதாவது உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரத்தாலோ அல்லது குறைவாக சுரத்தாலோ இந்தப் பிரச்னை வரலாம்.
ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்தப் பிரச்னை வரலாம்.
நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.
திடீரென அதிக உடல் குறைத்தல் அல்லது அதிகரித்தல் என இருந்தாலும் இந்த பிரச்னை இருக்கலாம்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால் இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

இன்றைய சூழ்நிலையில் தெரியாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமைதான் உள்ளது. காரணம் யாரை நம்புவது என்பதே தெரிவதில்லை.
தெரியாத நபர்களிடம் எப்போதுமே முதல் முறை பேசும்போது ஒரு தயக்கம் இருக்கும். அந்த உரையாடலை எப்படி துங்குவது என்ற குழப்பம் இருக்கும். இந்த சூழ்நிலை பெரும்பாலும் தினசரி பயணிக்கும் பேருந்து, ரயில் , கால்டாக்ஸி, அலுவலகம் என தினமும் நம்முடன் பயணிக்கும் நபர்களிடமே தோன்றுகிறது. எனவே அவர்களுடன் எப்படி உங்களுடைய முதல் உரையாடலையே சிறப்பனதாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் தெரியாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமைதான் உள்ளது. காரணம் யாரை நம்புவது என்பதே தெரிவதில்லை. அதற்கு தினசரி நாம் பார்க்கும், படிக்கும் செய்திகளே சான்று.
அப்படியிருக்கும்போது, முதன் முதலில் ஒருவரிடம் உரையாடலை துவங்க வேண்டுமெனில் பாசிடிவான வார்த்தைகளோடு துங்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் அலுவலகம் சார்ந்த மீட்டிங் அல்லது கலந்துரையாடலுக்கு சென்றுள்ளீர்கள் எனில் அவர் பேசுவது சரியான கருத்து, உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்படி சில பாசிடிவான விஷயங்களை கூறலாம்.
யாரேனும் உதவிக்காக காத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் நாம் பேச தயக்கம் காட்டுவது தவறு. இருப்பினும் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கையை அளிக்க ஃபார்மலாக பேசி அவர்களுக்கு உதவ வேண்டும். உதாரணத்திற்கு இந்த பாக்ஸை தூக்க முடியாமல் சிரமப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்... நான் உதவட்டுமா என்று கேளுங்கள். இப்படியான தொடக்கம் நன்மதிப்பை தரும்.
அடுத்ததாக இது எவ்வளவு தூரம் உதவும் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த அணுகுமுறையும் ஒருவருடனான நட்பை பாராட்ட உதவும். அதாவது , உங்களைப் பற்றிய சுய விவரங்களை அவர்களிடம் கூறி உரையாடலை துவங்க வேண்டும். என் பெயர் .... நான் இப்படி... இந்த வேலை செய்கிறேன் என கூறி பேசலாம். இதனால் அவர்களுக்கும் உங்களுடன் பேசுவதற்கான தயக்கம் களையலாம்.

பாசிப்பருப்பு, பாலக்கீரை சேர்த்து சேர்த்து செய்யும் இந்த ரெசிபியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் சப்பாத்திக்கும் சிறந்த சைடிஷ் இது.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒரு கப்
தயிர் - 2 டீஸ்பூன்
பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை:
பாசிப்பருப்பை மலர வேக வைத்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
பின்பு தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பாசிப்பருப்பு - ஒரு கப்
தயிர் - 2 டீஸ்பூன்
பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை மலர வேக வைத்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
பின்பு தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
இது சப்பாத்திக்கு சிறந்த சைட்டிஷ்.