என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுப்பதற்கு என்ன வழி பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

    உலக அளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

    குழந்தைகளை பெற்றோர்கள் புகையிலைப் பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர்.

    தமிழகத்தில் பொறுத்தவரை புகை பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது, உண்மையிலே குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் பெற்றோர்கள் புகையிலை பழக்கத்தை அறவே விடவேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அறிவுறுத்துகிறார்.

    உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழந்து வருகின்றனர், இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.

    ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

    தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

    உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும் பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகவும் புகையிலைப் பொருட்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    புகை பழக்கம் நமக்கு மட்டுமன்றி நமது சந்ததியின் உயிருக்கும் பகை என்பதை அறிய வேண்டிய தருணம் இது….
    கொரோனாவால் பாதித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ஜெட்வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்தை கடந்து விட்டது. அதுபோல் பலியும் 1,500-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலம், வெளிமாவட்டத்தினர் பெங்களூருவை காலி செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவரு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    * வீடுகளில் 14 நாட்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகியே தனிமையில் இருக்க வேண்டும்.

    * டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதுடன், அவர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

    * குடும்பத்தினர் உடன் கூட தொடர்பில் இருக்கக் கூடாது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து மற்ற அறைகளுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

    * கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், தங்கியுள்ள அறையை அடிக்கடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    * மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க பாடல் கேட்பது, நடனமாடுவது, செல்போனில் உறவினர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

    * முக்கியமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டு தனிமையில் இருப்பவர் மதுபானங்கள் குடிக்க கூடாது. புகையிலை மற்றும் பிற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பெண்களுக்கு இடுப்பில் சதை போட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். இது தான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறியாகும்.
    இடுப்பில் டயர் போட்டு விட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதை போட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். இது தான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள். பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது. தொப்பை போடப் போகிறது.

    இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப் போய் வர வழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப் போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

    சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும். இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல், வளைந்து குனிந்து பெருக்காமல், ஓடியாடி வேலை செய்யாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்த படி, பல மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்கள், கொஞ்சம் கூட உடற்பயிற்சியே செய்யாதவர்களுக்குக் கண்டிப்பாக இடுப்பு மடிப்பு விழும்.

    அதை அப்படியே விட்டால், முதலில் உடல் பருமன் அடையும், பிறகு தொப்பை விழும். எடை அதிகரிக்கும். மூச்சு வாங்கும். பி.பி. மெல்ல எட்டிப் பார்க்கும். சுகர் வந்து வந்து போகும். கடைசியில் ஹார்ட் அட்டாக்குக்கும் கிட்னி ஃபெயிலியருக்கும் வழிவகுத்தாலும் வகுக்கலாம் இந்த இம்சைகள் வேண்டுமா? கொஞ்சமே கொஞ்சமாக அக்கறை எடுத்துக் கொண்டாலே, போதும் இந்தப் பிரச்னைகள் வராமலே தடுத்து விடலாம்.

    உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக் றார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சியான தகவல், உலகில் மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத் தான். இதயநோய் சம்பந்த ன இறப்புகள் ஏற்படுகி னறனவாம். இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப்பழக்கம் தான் என்கிறார்கள்.

    நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித் திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால், அதுதான் படிப்படியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமாகிறது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச் சதை கூட மேலும் ஒரு காரணமாகும். அதாவது நாம் ருசிக்காக உண்பது தான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.

    வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறையினரிடடையே ஃபேஷனாகி விட்டது. நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்த வகை, உணவுகள் தான் அவர்களின் மெனுவில் இருக்கும்.
    அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே தெரியாமல் உண்கிறார்கள். கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தான் அவர்கள் விரும்பி ஈடுபடுகிறார்கள். கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

    யாருக்கும் ஒரே நாளில் திடீரென்று இடுப்பில் சதைப் போட்டு விடாது. கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்துத் தான் இந்த இடுப்பு மடிப்பு வரும். கொஞ்சம் கொஞ்சமாக சதை கூடும் போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளாதவர்கள், உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே வருத்தப்படுகிறார்கள்.

    இடுப்பில் அளவுக்கு மீறிய சதை போட்டு டயர்போல் பெருத்த பின்னர் தான் அதைக் குறைக்க பலர் படாதபாடுபடுகிறார்கள். அதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, பல நாள் பட்டினி, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்து உடனே இடுப்புச் சதையைக் குறைக்க பரபர என்று ஓடுவார்கள். அப்படியெல்லாம் நினைத்த உடன் இடுப்பு மடிப்பை நீக்கி விட முடியாது.

    அதற்கு ஒரே வழி, நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித் திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் இடுப்பு மடிப்பு குறையும். அதாவது, நாம் உட்கொள்ளும் உணவின் அளவு நமது உடல் செய்யும் வேலையின் அளவு இந்த இரண்டிற்கும் இடையே நடைபெறும் வரவு-செலவு கணக்கைப் பொறுத்துத் தான் உடல் எடை கூடும்-குறையும்.

    இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:

    1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.

    2. மட்டம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு களைத் தவிர்த்து விடுங்கள்.

    3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.

    4. மது, புகை கூடவே கூடாது.

    5. குளிர் பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.

    6. நார்ச் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.

    7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.

    8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற் பயிற்சி, 45 நிமிட நடைப் பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.

    9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.

    திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. பெண்கள் திருமணத் துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள். பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது. இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களை விட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.
    வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள்.
    வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள்.

    அப்படி நீண்ட நேரம் அமர்ந்தபடி டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது என்று விவரிக்கிறார் ஆய்வின் மருத்துவர் ஜார்விஸ்.

    மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூலத்தை உண்டாக்கும் என்கிறது ஆய்வு. இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இன்று செல்போன்களால் மட்டுமல்ல. இதற்கு முன் பிடித்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது. மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை பட்டியலிட்டுள்ளனர்.

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆய்வு நிச்சயம் பலரையும் விழிப்படையச் செய்யும் என நம்புகிறோம். 
    காதலிக்கும் போது சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அவர்களுடன் இணக்கமான முறையில் காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.
    என்னதான் நன்கு அறிந்து, புரிந்து காதலித்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்லதான் அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டக் கூடும். அப்படி சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அப்படி உங்களுக்கும் இந்த அனுபவம் எனில் அவர்களுடன் இணக்கமான முறையில்  காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.

    உங்களுக்கு அவர்கள் மீது சில பிடிக்காத விஷயங்கள் இருக்கிறதெனில் இதற்கு நீ தான் காரணம் என மொத்த பழிகளையும் அவர்கள் மேல் திணித்து குற்ற உணச்சிக்கு உள்ளாக்காதீர்கள். நீங்களும் அந்த உறவில் சில தவறுகளை செய்திருக்கலாம். எனவே அவர்கள் மேல் குறைகளை அடுக்காமல் மன்னிப்பு கேட்டு நட்புடன் விலகுவதே நல்லது.

    இதுவரை பார்த்து, சுற்றித்திரிந்த, பேசத் துடித்த நபரை காதல் வேண்டாம் என்று நினைக்கும்போது அந்த துணையிடம் பிரேக்அப் என ஃபோன் கால், மெசேஜ் அல்லது நண்பர்கள் மூலம் சொல்வது என தவறான விஷயங்களை செய்யாதீர்கள். நேரில் சந்தித்து அமைதியான சூழலில் பக்குவமாக பேசி விலகுவதே நல்ல செயல்.

    நீங்கள் கூறும் காரணம் அவருக்கும் ஏற்புடையதாக இருக்கனும். அதேபோல் உங்கள் காரணம் உறுதியானதாக இருக்க வேண்டும். அதேபோல் ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசிவிட்டு விலகுங்கள். அப்போதுதான் உங்கள் துணைக்கும் அதை புரிந்துகொள்ள முடியும். ஒருவேளை அவருக்கும் அது சரியான முடிவு எனத் தோன்றினால் நல்ல விஷயம்தானே..!

    அவர் என்ன பேசினாலும் அதை பொறுமையாக கேளுங்கள். அவர் சொல்ல வரும் விஷயத்தை புரிந்துகொள்ள முயலுங்கள். கோபப்படாமல் உரையாடலின் பாதியிலேயே எழுந்து செல்வதை தவிருங்கள். ஏனெனில் அவர் பக்கம் இருக்கும் நியாயம், கருத்துக்களை கேட்பதும் அவசியம்.

    பிரேக் அப் என்பது யார் முடிவு செய்தாலும் அது இருவருக்குமே கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். மீள முடியாத துயரம்தான். எனினும் அதுதான் சரி என நினைத்துவிட்டால் மனதை மாற்றுவதும் கடினம்தான். எனவே பிரிவை வலி நிறைந்ததாக அல்லாமல் நட்புடன் பிரிந்து செல்வதே சிறந்த செயல்.
    தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுக்கும். அவர்களுக்கு கீரையை இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்  
    பருப்புக்கீரை - 1 கட்டு
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - ஒன்று
    பூண்டுப் பல் - 4
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பருப்பு கீரை

    செய்முறை:

    பருப்பு கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் தனியா பட்டை கிராம்பு பூண்டு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கீரை சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் உப்பு, அரைத்த பொடி சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ் ரெடி.

     எந்த கீரையிலும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். திரெட்டிங் செய்வதால் பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
    இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.  புருவ முடிகளைத் திருத்துகிறோம் (திரெட்டிங்) (THREADING) என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும்.

    உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்ற போது ( த்ரெட்டிங்) (THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்) சுடரொளியின் காலம்),

    மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம்,  கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.

    இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின் றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது.

    அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள். வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

    இறைவன் உறையும் இடம் இதுவே, இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்தி ற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
    குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    தற்போது நிறைய மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாகத் தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    குளிப்பதில் அக்கறை செலுத்தும் பலரும் தொப்புளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    பலரும் குளிப்பதில் அக்கறை செலுத்துவோர் அந்நேரத்தில் தொப்புளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு சிலர்தான் அதற்கென நேரம் ஒதுக்கி அதை சுத்தம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தேங்குமாம். எனவே இனிமேலாவது தொப்புளுக்கும் அக்கறை செலுத்துங்கள். எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

    தொப்புளில் நேரடியாக விரல்களை வைத்து சுத்தம் செய்ய முடியாது. இயர் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். இயர் பட்ஸை தேங்காய் எண்ணெயில் தொட்டு பின் தொப்புளுக்குள் விட்டு தேய்த்து எடுத்தால் அழுக்கு வந்துவிடும்.

    தேய்க்கும்போது வேகமாகவும், முறையற்றும் செய்யாமல் பொறுமையாக மென்மையாக தேய்த்து எடுங்கள். அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் என ஏதாவதொன்றை ஒரு துளி தொப்புளில் விட்டு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

    தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கும் முன் தொப்புளில் லாவண்டர் எண்ணெய், சந்தன எண்ணெய் என ஏதாவதொரு வாசனை எண்ணெயை ஒரு துளி ஊற்றி மசாஜ் செய்தால் நன்கு தூக்கம் வரும்.

    எக்காரணம் கொண்டும் பூ குத்தும் பின், சேப்டி பின்னால் தொப்புளை சுத்தம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஆபத்தில் முடியலாம். மேலும் தொப்புளில் தண்ணீர் அல்லது சீல் வந்தால் கை வைத்தியம் பார்க்காமல் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது. 
    உங்கள் கணவனை எந்த விதத்தில் மகிழ்ச்சியடைய மற்றும் திருப்திப்படுத்த என்ன விஷயங்களை செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இக்கட்டுரையை முழுவதுமாக படிக்கவும்.
    உங்கள் உறவைப் பலப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் கணவனை மகிழ்ச்சியடைய செய்து திருப்திபடுத்துவது.  நீங்கள் எப்போதும் அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்ச்சி படுத்தலாம். இது உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் உறவில் தீப்பொறியை உயிரோடு வைத்திருக்க இது உதவும்.  ஆனால் உங்கள் கணவனை எந்த விதத்தில் மகிழ்ச்சியடைய மற்றும் திருப்திப்படுத்த என்ன விஷயங்களை செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், சில சுவாரஸ்யமான உதவிக் குறிப்புகளைக் கண்டுபிடிக்க இக்கட்டுரையை முழுவதுமாக படிக்கவும்.

    அவருக்கு மென்மையான முத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அவரைப் பற்றிக் கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கணவர் படுக்கையில் இருந்தால், நீங்கள் எழுந்ததும் அதிகாலையில் இதைச் செய்யலாம். நீங்கள் இருவரும் வேலைக்குச் செல்லும்போது அவரின் கன்னங்களில் முத்தங்கள் கொடுக்கலாம்.  இது மட்டுமல்லாமல், நீங்கள் படுக்கையில் முத்தம் கொடுக்கும் போது அவரது நெற்றியில் மற்றும் கன்னங்களில் மென்மையான முத்தங்களை நடலாம். இருப்பினும், அவரை தேவையில்லாமல் முத்தமிடுவதன் மூலம் நீங்கள் அவரை எப்போதும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் கணவருக்கு பிடித்த உணவைத் தயாரிப்பதன் மூலம் நீங்கள் எப்போதும் அவரின் அன்பை பெற்று கொள்ளலாம். இது காலை உணவு அல்லது இரவு உணவாக இருந்தாலும், உங்கள் கூட்டாளருக்கு பிடித்த உணவு அல்லது வேறு ஏதாவது மூலம் ஆச்சரியப்படுத்துங்கள். நீங்கள் முழு உணவையும் தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் நீங்கள் அவருக்காக ஒன்று அல்லது இரண்டு உணவுகளை தயாரிக்க முயற்சி செய்யலாம். உதாரணமாக, நீங்கள் காலை உணவுக்கு சாண்ட்விச்கள் மற்றும் துருவல் முட்டைகள் மற்றும் இரவு உணவிற்கு ஒரு நல்ல கறி செய்யலாம்.

    உங்கள் கூட்டாளருக்கு குறுகிய மற்றும் இனிமையான குறிப்புகளை எழுதி கொடுப்பதை, உங்கள் உறவில் மந்திரம் போல வேலை செய்யும். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் கூட்டாளரை எதையாவது எதிர் நோக்குவீர்கள். அந்த சிறு குறிப்புகள் மூலம் உங்கள் பங்குதாரர் மீதான உங்கள் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் அவரைப் பெறுவது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நீங்கள் எழுதலாம். நீங்கள் எந்த குறிப்புகளையும் எழுத முடியா விட்டால், நீங்கள் அவருக்கு சில செய்திகளை அனுப்பலாம்.

    உங்கள் கவனவரை அவரது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அல்லது வெளிப்பயணத்திற்கு செல்ல அனுமதிப்பது அவரைப் பற்றிக் கொள்ள ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் அவருக்காக ஒரு இரவையும் திட்டமிடலாம். அவர் இதைச் சொல்லா விட்டாலும், அவர் உங்களுடன் எவ்வளவு செய்கிறாரோ அதே போல் தனது நண்பர்களுடன் ஹேங்கவுட் செய்ய அவர் விரும்புகிறார். எனவே, ஒரு பிக்னிக் அல்லது ஒரு இரவு நேரத்தைத் திட்டமிடுவதன் மூலம் அவரை ஏன் ஆச்சரியப் படுத்தக் கூடாது, அவர் தனது நண்பர்களுடன் ரசிக்க முடியும்.  

    சில இரவு உணவுகளில் வெளியே செல்வது உங்கள் மனிதனைப் பற்றிக் கொள்ளும் மற்றொரு வழியாகும். நீங்கள் ஒரு ஆடம்பரமான உணவகத்தில் ஒரு நல்ல தேதியைத் திட்டமிட்டு அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் தேதியைத் திட்டமிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வது மற்றும் அடுத்தது என்ன என்ற எண்ணத்திலிருந்து அவரை ஒதுக்கி வைப்பது நிச்சயமாக அவரது முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகையைத் தரும். உங்களுக்கு பிடித்த உணவகத்திற்குச் சென்று உங்கள் தேதியை ஒன்றாக அனுபவிக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

    உங்கள் கணவனின் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுவது, நீங்கள் அவரைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள், அவரை நேசிக்கிறீர்கள் என்பதை உணர முடியும். நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரு பொழுது போக்கில் பங்கேற்கும் போது, அதை சிறந்த முறையில் அனுபவிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.  உதாரணமாக, உங்கள் பங்குதாரர் வாசிப்பதில் விருப்பம் இருந்தால், நீங்கள் அவருடன் ஒரு புத்தகத்தையும் படிக்கலாம். இதே போல், அவர் ஒரு விளையாட்டு ஆர்வலராக இருந்தால், நீங்கள் அதில் ஆர்வம் காட்டலாம். எங்களை நம்புங்கள், உங்கள் கணவன் அதை மிகவும் காதல் கொண்டவனாகக் காண்பான், நீங்கள் இருவருக்கும் ஒரு சிறந்த நேரம் கிடைக்கும்.

    உங்கள் கணவனின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பாராட்டுவது அவரைப் பற்றிக் கொள்ள ஒரு வழியாகும். ஆண்களும் பாராட்டுக்களைப் பெற விரும்புகிறார்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முன்னால் நீங்கள் அவரைப் புகழ்ந்து பேசலாம். இந்த வழியில் அவர் நிச்சயமாக அவரை ஆடம்பரமாக உணர வைப்பார்.

    அவர் எப்போதுமே ஏதாவது வைத்திருக்க விரும்பினார், ஆனால் சில காரணங்களால் அதை வாங்க முடியவில்லை என்றால், அவருக்காக அந்த விஷயத்தை வாங்குவதன் மூலம் நீங்கள் அவரை ஆச்சரியப்படுத்தலாம். உதாரணமாக, அவர் எப்போதும் ஒரு சட்டை வாங்க விரும்பினால், ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லாததால் அதை நீங்கள் வாங்கி கொடுக்கலாம். தலையணை அல்லது அவர் வாங்கத் திட்டமிட்ட மொபைல் கேஸையும் வாங்கலாம்.

    உங்கள் கூட்டாளரை ஒரு நல்ல விடுமுறையில் அழைத்துச் செல்வது உங்கள் உறவில் அதிசயங்களைச் செய்யும். பயணத்தைத் திட்டமிடுவதற்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் நீங்கள் பொறுப்பேற்கலாம். இது ஒருவருக்கொருவர் இருப்பதற்கும், உங்கள் அன்பை அவர்மீது பொழிவதற்கும் போதுமான நேரத்தை வழங்கும். நீங்கள் அவருக்கு ஒரு ரகசியமாக இலக்கை வைத்திருக்க முடியும்.

    மேலே குறிப்பிட்டுள்ள எல்லா வழிகளையும் தவிர, உங்கள் நேரத்தை அவருடன் செலவிடுவதன் மூலம் உங்கள் கணவனை திருப்திபடுத்த செய்யலாம்.
    எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் அன்பை வெளிப்படுத்த சிறந்த வழி ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது மற்றும் சில தரமான நேரத்தை செலவிடுவது.
    சிலருக்கும் இளம் வயதிலேயே வழுக்கை வர ஆரம்பிக்கும். அவர்கள் தினமும் சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் பூசி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
    சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாக பயன்படுத்துவது. இந்த சின்ன வெங்காய தை உரிக்கும் போதே கண்களில் அருவி போல் நீர் வெளிவரும், இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் தான். இந்த சல்பர் தான் முடி வளரவும் காரணமாக உள்ளது.    

    சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.

    உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன் படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு பயன்படுத்தவும்.

    தினமும் கண்டிப்பாக எண்ணெய் தடவ வேண்டும். தலை முடியில் தடவுவதை விட வேர்க் கால்களில் தடவ வேண்டும். புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உறுதிபடுத்துவது எப்படி? இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்து விடும். எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும். இரும்புச்சத்தை அதிகரிக்கும் தேன், பேரீச்சை, கறிவேப்பிலை, முருங்கையை அதிகமாக உடலுக்கு சேர்த்திடுங்கள். 
    காலையில் இந்த சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியும் இருக்கலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆலிவ் - 1/2 கப்
    சிவப்பு குடைமிளகாய் - 1
    பச்சை குடைமிளகாய் - 2
    வெள்ளரிக்காய் - 1
    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு - 10 பல்
    உப்பு - சுவைக்க
    ஆலிவ் ஆயில் - சிறிதளவு
    மிளகு - சுவைக்க

    ஆலிவ் குடைமிளகாய் சாலட்

    செய்முறை :

    வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.

    அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.

    அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும்.

    அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×