search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி?
    X
    ஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி?

    ஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி?

    காதலிக்கும் போது சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அவர்களுடன் இணக்கமான முறையில் காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.
    என்னதான் நன்கு அறிந்து, புரிந்து காதலித்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்லதான் அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டக் கூடும். அப்படி சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அப்படி உங்களுக்கும் இந்த அனுபவம் எனில் அவர்களுடன் இணக்கமான முறையில்  காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.

    உங்களுக்கு அவர்கள் மீது சில பிடிக்காத விஷயங்கள் இருக்கிறதெனில் இதற்கு நீ தான் காரணம் என மொத்த பழிகளையும் அவர்கள் மேல் திணித்து குற்ற உணச்சிக்கு உள்ளாக்காதீர்கள். நீங்களும் அந்த உறவில் சில தவறுகளை செய்திருக்கலாம். எனவே அவர்கள் மேல் குறைகளை அடுக்காமல் மன்னிப்பு கேட்டு நட்புடன் விலகுவதே நல்லது.

    இதுவரை பார்த்து, சுற்றித்திரிந்த, பேசத் துடித்த நபரை காதல் வேண்டாம் என்று நினைக்கும்போது அந்த துணையிடம் பிரேக்அப் என ஃபோன் கால், மெசேஜ் அல்லது நண்பர்கள் மூலம் சொல்வது என தவறான விஷயங்களை செய்யாதீர்கள். நேரில் சந்தித்து அமைதியான சூழலில் பக்குவமாக பேசி விலகுவதே நல்ல செயல்.

    நீங்கள் கூறும் காரணம் அவருக்கும் ஏற்புடையதாக இருக்கனும். அதேபோல் உங்கள் காரணம் உறுதியானதாக இருக்க வேண்டும். அதேபோல் ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசிவிட்டு விலகுங்கள். அப்போதுதான் உங்கள் துணைக்கும் அதை புரிந்துகொள்ள முடியும். ஒருவேளை அவருக்கும் அது சரியான முடிவு எனத் தோன்றினால் நல்ல விஷயம்தானே..!

    அவர் என்ன பேசினாலும் அதை பொறுமையாக கேளுங்கள். அவர் சொல்ல வரும் விஷயத்தை புரிந்துகொள்ள முயலுங்கள். கோபப்படாமல் உரையாடலின் பாதியிலேயே எழுந்து செல்வதை தவிருங்கள். ஏனெனில் அவர் பக்கம் இருக்கும் நியாயம், கருத்துக்களை கேட்பதும் அவசியம்.

    பிரேக் அப் என்பது யார் முடிவு செய்தாலும் அது இருவருக்குமே கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். மீள முடியாத துயரம்தான். எனினும் அதுதான் சரி என நினைத்துவிட்டால் மனதை மாற்றுவதும் கடினம்தான். எனவே பிரிவை வலி நிறைந்ததாக அல்லாமல் நட்புடன் பிரிந்து செல்வதே சிறந்த செயல்.
    Next Story
    ×