என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
    ஒரு விவாகரத்தில், மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான், ஏனெனில் ஒரு தவறும் செய்யாமலே, இரண்டு பெற்றோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாவது அவர்கள்தான். ஒன்று அல்லது இரண்டு பெற்றோரிடம் இருந்தும் உணர்வு ரீதியாக விலகி இருப்பதால், அவர்கள் ஏராளமான, ஆழமான சோகத்திற்கு ஆளாகின்றனர். 

    குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை முறையாக நீங்கள் ஒதுக்க வேண்டும், அவர்களுடைய தினசரி வழக்கங்கள் செயல்பாடுகளில் நீங்கள் அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்த வேண்டும். அவர்களுடன் விளையாட நேரம் ஒதுக்குங்கள், தாய்-குழந்தைக்குமான பிரத்யேக உறவை உருவாக்க போதுமான விசேஷ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான சிறு குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்கள் ஏன் பிரிந்து போகின்றனர் என்று புரிவதில்லை, வளர்ந்த குழந்தைகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். நேரம் எடுத்து, பொறுமையாக அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

    உங்கள் குழந்தைகள் உங்களை நம்புவதற்கு அடிப்படையாக இருப்பது, இரண்டு பெற்றோரும் ஒன்றாக இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதே. உங்களுக்கு இடையே எந்த வேறுபாடுகள் பிரச்சனைகள் இருந்தாலும், புதிய கண்ணோட்டத்துடன் இருந்திடுங்கள். உங்கள் குழந்தையின் மேல் அக்கறை காட்டுவதே உங்களுக்கான புதிய இலக்காக இருக்க வேண்டும்.அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள், வேடிக்கை காட்டுங்கள். உங்கள் முன்னாள் கணவருடன் இணக்கமான உறவு இருந்தால், சில வாரங்களுக்கு ஒருமுறை இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிடுங்கள். வெளியே செல்லும்போது, குழந்தையின் மனதில் பெற்றோர் நம்மை கஷ்டப்படுத்திவிட்டனர் என்று நினைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய நபர்கள் அறிமுகமாகும்போது, அதாவது உங்களுக்கோ, உங்கள் துணைவருக்கோ புதிய வாழ்க்கைத் துணை வரும்போது, அவர்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பாகவும் அரவணைப்பாகவும் உணர்த்திடுங்கள்.
    கொசுக்கள் கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும்போதே அதனுடைய உமிழ்நீர் வழியாக சில நோய் அணுக்களை அந்த மனிதரின் ரத்தத்தில் கலந்து விடுகிறது
    உலகம் முழுக்க நோய்களை உருவாக்கி மக்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் இரவு நேரத்தில் பெரும்பாலானவர்களை தூங்கவிடாமல் இம்சை செய்தும் வருகிறது. உலகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருந்தாலும், மூன்று நான்கு வகை கொசுக்கள்தான் மனிதர்களை கடித்து நோய்களை உருவாக்குகின்றன.

    கொசுறு போன்ற உயிரினம்தான் கொசு என்றாலும், மனிதர்களின் கைகளுக்குள் சிக்காமல் கண்ணில்பட்ட வேகத்திலே மறைந்து கடுப்பை ஏற்றுவதில் கொசுவுக்கு நிகர் கொசுதான். கடிக்கும் ஒரு கொசுவை ஆவேசத்துடன் தாக்கி அடித்து கொல்வதற்குள் பலர் மூச்சுவாங்கிவிடுவார்கள். மனிதர்களுக்கு தொல்லைகொடுத்து கடித்து நோயை உருவாக்குபவை பெண் கொசுக்கள்தான். அவைகளுக்கு மட்டும்தான் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது.

    தனக்கு இரையாகும் மனிதர்களின் சருமத்தில் அமர்ந்ததும் இது இரண்டு வகையான குழாய்களை உடலுக்குள் செலுத்தும். ஒன்று, ரத்தம் கெட்டியாகாமல் இருப்பதற்குரிய என்சைமை உள்ளே செலுத்தும். இரண்டாவது குழாய் வழியாக தேவையான ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும். இந்த செயல் நடக்கும்போதே கொசுவின் உமிழ்நீர் அந்த மனிதரின் உடலுக்குள் புகுந்துவிடும். கொசு தனது பசியை தீர்க்கும் இரைக்காக மட்டும் மனிதர்களை கடிப்பதில்லை. தனது முட்டைகளுக்கு தேவையான புரோட்டினுக்காகவும் மனித ரத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறது.

    கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும்போதே அதனுடைய உமிழ்நீர் வழியாக சில நோய் அணுக்களை அந்த மனிதரின் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. கொசுக்களிடம் இருக்கும் அந்த நோய் அணுக்கள் கொசுக்களுக்கு எந்த நோயையும் உருவாக்காத நிலையில் அது எப்படி மனிதர்களுக்கு மட்டும் நோயை உருவாக்குகிறது என்பது இன்னும் ஆராய்ச்சிகளுக்கு பிடிபடாத விஷயமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

    கொசுக்களை அழித்தால் மட்டுமே அவைகளால் உருவாகும் நோய்களை தடுக்கமுடியும். அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு தண்ணீர் தேவை. டெங்குவை உருவாக்கும் ஈடிஸ் ஈஜிப்தி பெண் கொசுக்கள் சுத்தமான நீர் நிறைந்திருக்கும் பகுதிகளில் தான் முட்டையிடும். சில வகை கொசுக்கள் தேங்கிக்கிடக்கும் அசுத்த நீரில்தான் முட்டையிடும். அதனால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டைச்சுற்றிலும் சுத்தம்செய்து, கொசு முட்டையிடுவதற்குரிய வாய்ப்பு உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    கொசு, குறிப்பிட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து விரட்டி விரட்டி கடிக்கும் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். ஒவ்வொரு தனிமனிதரின் உடலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. கூடுதல் கார்பன்டை ஆக்சைடு இருக்கும் உடலை கொசுக்கள் தேடிவருவதாக, ஆய்வுத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது. அதிக சுறுசுறுப்பு கொண்டவர்களையும், குண்டான உடல்வாகு கொண்டவர்களையும் கொசுக்கள் விரும்புவதாக இன்னொரு ஆய்வு சொல்கிறது. அதிக அளவில் வியர்க்கும் தன்மை கொண்டவர்களையும் கொசுக்கள் தேடிவருகிறதாம். மனித சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்களும் கொசு வந்து கடிக்க காரணமாக இருக்கின்றன என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    மாலை மயங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் கொசுக்கள் இரை தேட கிளம்புகின்றன. அந்த நேரத்தில் சுகாதாரமற்ற வெளி இடங் களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். கை, கால்களை முழுமையாக மூடும் விதத்திலான உடைகளை அணிவதும், தொளதொளப்பான உடைகளை அணிவதும் கொசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மனிதர்கள் மீது வீசும் வாடையை வைத்தும், குறிப்பிட்ட சலனங்களை வைத்தும் கொசுக்கள் மனிதர்களை அடையாளங்கண்டு கடிக்கின்றன. அதே நேரத்தில் இரவில் மனிதர்களின் சலனங்களை அறிவது அதற்கு சிரமமாகிவிடுவதால், வெளிச்சம் இருக்கும் பகுதியில் உள்ள மனிதர்களை தேடிவந்து கடிக்கும். அதனால் இரவில் லைட் போடுவதற்கு முன்னால் வீட்டு கதவு, ஜன்னல் போன்றவைகளை மூடிவிடுங்கள். அவ்வாறு செய்தால் வெளியே இருந்து கொசுக்கள் வீட்டின் உள்ளே வருவதை தடுத்துவிடலாம்.

    கை கால்களை அடிக்கடி ஆன்டிபாக்டீரியல் சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். இதன் மூலம் சரும வாடையை வைத்து கடிக்கவரும் கொசுக்களை தடுத்துவிடலாம். சில வகை கொசுக்கள் அதன் இருப்பிடத்தில் இருந்து 300 முதல் 500 அடி உயரமே பறக்கும். அதனால் உங்கள் வீட்டின் அருகில் கொசுவின் இருப்பிடம் இல்லாமல் இருந்தால், நீங்கள் கொசுக்கடியில் இருந்து தப்பலாம். 
    புது வருடம் பிறக்கிறது. கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம் . நேர்மறையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்திப்போம்.
    புது வருடம் பிறக்கிறது. கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம் . நேர்மறையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்திப்போம்.

    நம்மில் எல்லோருக்குமே சில வேண்டாத குணங்களும் பல நல்ல குணங்களும் இருக்கும். நாம் தீய குணங்களில் கவனத்தை செலுத்தி அதை மாற்ற முயற்சிப்பதை விட நம்மிடம் உள்ள நல்ல குணங்களில் கவனத்தை செலுத்தலாம். இயல்பாய் நம்மிடம் உள்ள குணங்களை வளர்த்துக்கொள்வது எப்போதுமே சுலபம் தான். உதாரணத்திற்கு நம்மிடம் சோம்பல் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். 

    அதே நேரம் நம்மிடம் மற்றவர்களுக்கு உதவும் குணம் இயல்பாய் உள்ளது என்றும் வைத்துக்கொள்வோம். முடிந்த போதெல்லாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முயலும்போது சோம்பல் நாளாவட்டத்தில் தானாகவே மறைந்து விடும். இதே போல் குழந்தைகளிடம் கூட அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை குறை சொல்லிக்கொண்டெ இருப்பதை விட அவர்களுக்கு என்னென்ன நேர்மறையான நல்ல குணங்கள் பழக்கங்கள் இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். 

    அந்த குணங்களை பற்றி அவர்களிடமும் மற்றவர்களிடமும் புகழ்ந்து கூற வேண்டும். குழந்தைகளிடம் இயல்பாய் உள்ள நல்ல குணங்களை அவர்கள் அதிகளவில் வளர்த்துக்கொள்ளும் போதும்அதற்காக நாமும் அவர்களை பாராட்டும் போதும் குழந்தைகள் நாம் சுட்டிக்காட்டும் அக்கார்களின் தவறுகளை திருத்திக்கொள்வார்கள். எனவே நம்மிடம் உள்ள கெட்ட குணங்களில் கவனம் செலுத்தாமல் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வோம். நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்தும் பொது எதிர்மறை எண்ணங்களும் தானாகவே மறைந்து விடுவதையும் நாம் உணர முடியும்.
    குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் – 2
    இஞ்சி – ஒரு சிறிய துண்டு
    பச்சை மிளகாய் – ஒன்று
    தயிர் – ஒரு கப்
    உப்பு – தேவையான அளவு
    வெங்காயம் – 1

    தாளிக்க :

    கடுகு – அரை தேக்கரண்டி
    எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

    செய்முறை :

    பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் உப்புச் சேர்த்து வதக்கி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

    ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

    சத்தான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.
    குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
    குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உடலில் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் வகை உணவுகள், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காளான்கள், தக்காளி, பச்சை இலை காய்கறிகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், பால், நட்ஸ் வகைகள், பழச்சாறுகள், வெண்ணெய், முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். பிராக்கோலி, காலிபிளவர், துரித உணவுகள் மற்றும் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து உடல்நலத்திற்கு பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும்.

    குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. குளிர்த்தன்மை காரணமாக மார்பக காம்பில் வலி, உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். அதிக குளிர்ச்சியால் பால் சுரக்கும் நுண்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். அதனால் மார்பகங்களில் மசாஜ் செய்து வருவது நல்லது. அதன் மூலம் வலியில் இருந்தும் விடுபடலாம். குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்பதால் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வாமை, நோய்த்தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.
    பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இப்படி கருப்பாக இருப்பதால், ஃபேஷனான பல உடைகளை உடுத்த முடியாமல் பல பெண்கள் வருத்தப்படுவார்கள். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.

    * 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.

    * மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.

    * 1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

    * தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

    * தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

    * எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நீங்கா கருமையை அகற்றும். 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்த்து பின் நீரில் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும்.

    * வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மாயமாகும்.

    * கடுகு எண்ணெய் ஒரு ஆன்டி-செப்டிக் பொருள். இதை முழங்கையில் தினமும் தடவி வந்தால், முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
    தேநீர் அருந்துவதால் புறஊதா கதிர்களில் இருந்து சருமம் பாதுகாக்கப்பட்டு சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
    நாம் விரும்பி அருந்தும் தேநீரில் நம் உடலுக்கு வைட்டமின் கே, போலிக் அமிலம், பொட்டாசியம், ப்ளுரின், மேங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் உள்ளன. தேநீரில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ஸ் உள்ளது. இது உடலில் செல்சிதைவை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது. 

    கணையம், வயிற்றுப்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கிரீன் டீ உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட புற்றுநோயை தடுக்க உதவும். ஊலாங் டீ மற்றும் கிரீன் டீ அருந்துவதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகிறது. ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கி பக்கவாத நோய் ஏற்படுவதை தடுக்கும்.

    தேநீரில் இருந்து பற்கள் உறுதியாக இருக்க தேவையான புளூரைடு ஒரு கோப்பைக்கு 1 மில்லி கிராம் வீதம் கிடைக்கிறது.

    தேநீர் அருந்துவதால் புறஊதா கதிர்களில் இருந்து சருமம் பாதுகாக்கப்பட்டு சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் பயன்படுத்தும் பல அழகு சாதன பொருட்களில் தேயிலை ஓர் முக்கிய மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது. சாயம் கலந்த தேநீர் அருந்துவதை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம்.

    குளிர்ந்த நீரில் தேயிலைத்தூளை சேர்க்கும் போது, உடனடியாக சாயம் இறங்கினால் அந்த தேயிலைத்தூளில் சாயம் கலந்து இருக்கும். அவ்வாறு கலப்படம் செய்த தேயிலைத்தூளை தவிர்ப்போம். 
    எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். இதை சாப்பிடுவதால் எத்தனை வகையான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
    எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே, இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிச்சயமான உணவுகளாக இருந்தது. இதை சாப்பிட்டதால், வகை வகையான நோய்களில் இருந்து தப்பித்தோம்.

    முக்கியமாக, எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

    எந்த ஒரு பலகாரத்திலும் கொஞ்சம் எள்ளை சேர்த்து சமைக்கும் பழக்கத்தை, கொண்டிருந்தனர், நம் முன்னோர். உதாரணத்துக்கு, முறுக்கு, சீடை, ஓட்டை வடை, எள்ளு உருண்டை என, இப்படி விதவிதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம், அன்று முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.

    எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.

    தாய்லாந்தில் உள்ள, சியாங் மாய் யூனிவர்சிட்டி, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில், பல தகவல்களை வெளியிட்டது. அதில், 'கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும்' என குறிப்பிட்டுள்ளது.

    புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை, ஆண்கள் - பெண்கள் என, இருவிதமாக அதன் பயனை பிரித்து தருகிறது.

    பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். அத்துடன், ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பாதுகாப்பதாக, தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    மார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.

    வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும்.

    இதை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக, அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால், முழு பலன் கிடைக்கும்.

    உடலில் ஏதேனும் நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. அதேபோல், நல்லெண்ணையில், 'சீசேமோலின்' எனும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது. எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும்போது, இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

    நல்லெண்ணையில், துத்தநாகம் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது; இது, எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க, கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணையையும் சாப்பிடுவது நல்லது. அதிலும், நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.

    நல்லெண்ணையில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது. அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணை சாப்பிடுவது, நல்ல பலனை தரும்.

    தினமும் காலையில், நல்லெண்ணையால் வாயை கொப்பளித்தால், சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
    உடலுக்கு தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, இங்கு பார்ப்போம்.
    எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல, உடலும்தான்.

    உடலுக்கு தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, இங்கு பார்ப்போம். நமது உடல் 70 சதவீதம் நீராலானது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகி அறுவைசிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படி என்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். 

    இது உடல்நலனை பாதிக்கும். கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும். மனித மூளையில் தாகம் குறித்த உணர்வை தூண்டும் மையம் உள்ளது. 

    இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது. அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தமும் குறையும்.
    இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததுதான் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம்.
    நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததுதான் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம். இன்சுலின் சுரப்பை தடுப்பதற்கென பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன.

    பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதை தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

    நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என கற்றுத் தருகின்றன.

    உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்பதனை இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்த செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ளும்.

    புத்தகங்களை அச்சிடும்போது சில பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடம் இருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்த பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்களுக்கு நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

    சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன். இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவுகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்ப கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.

    உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.
    பெண்கள் புரியாத புதிர்கள் என்று சொல்லப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களிடம் இருக்கும் சிறப்பு குணங்கள் என்னென்ன தெரியுமா?
    பெண்கள் புரியாத புதிர்கள் என்று சொல்லப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அடிப்படை குணாதிசயங்களை ஆராய்ந்தால் ஆண்களைவிட பெண்கள் புதிரானவர்கள் இல்லை. ஆண்கள் கடுமையாக உழைக்க பிறந்தவர்கள். ஆதிகாலத்தில் விலங்குகளை வேட்டையாடி வீரத்தை காட்டினார்கள். 

    பின்பு போர் புரிந்தார்கள். அடுத்து குடும்பத்தைக் காக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்கள். ஆண்களின் அடிப்படைக் குணம் வேகமானதாக இருக்கும். அதே நேரத்தில் பெண்கள் குடும்பத்தை பேணுதல், அன்புகாட்டுதல், அரவணைத்தல் போன்ற குணாதிசயங்களை தங்கள் மரபணுக்களிலே கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் பெண்கள் தங்கள் மென்மையான உணர்வுகள் மூலமும், இதமான அணுகுமுறைகள் மூலமும் முரட்டுத்தனமான ஆண்களையும் இயல்பான வாழ்க்கைக்கு தகுந்தவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

    பெண்களிடம் இருக்கும் சிறப்பு குணங்கள் என்னென்ன தெரியுமா?

    குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். அதுபோல் தன்னிடமும் எல்லோரும் அன்பு காட்டவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். அதே நேரத்தில் திறன்வாய்ந்த, வெற்றிகரமான ஆணையே அனேகமாக எல்லா பெண்களும் விரும்புகிறார்கள்.

    பெண்கள், தான் எப்போதும் மற்றவர்களால் நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன்னை நேசிக்கும் ஆணுக்காக, தன்னை அலங்காரம் செய்து கொண்டு அழகாக தோன்றுகிறார்கள்.

    மனைவியான பெண்ணின் மனது தாம்பத்ய தொடர்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையிலும் ‘வேண்டாம்’ எனக் கூறுவதற்கு அவள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். கணவர் ரொம்ப விரும்பினாலே அனுமதிக்கிறாள். இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க குணாதிசயங்கள் சிலவற்றால், பெண்கள் சமூகத்தால் புரியாத புதிராக கணிக்கப்படுகிறார்கள்.

    பெண்கள் எப்போதுமே தாங்கள் நேசிக்கும் ஆண்களால் ஏமாற்றமடையும்போது உணர்ச்சிவசப்பட்டு குழம்பி எளிதாக மனம் சோர்ந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் மிக எளிதாக எந்த ஆணையும் அவசரப்பட்டு நம்பி தன்னை ஒப்படைத்துவிடுவதுமில்லை.

    ஆண்களைவிட பெண்கள் மனதளவில் பலமானவர்கள். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் குழப்பங்கள், கவலைகளில் இருந்து விலகி தன்னம்பிக்கை பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் எழுச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பது பெண்களின் இயல்பாக இருக்கிறது.

    உலக நடைமுறைகளை எளிதாக உள்வாங்கி காலமாற்றத்திற்குதக்கபடி தன்னையும் மாற்றிக்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே பெண்களிடம் உள்ளது. ஆணைக்காட்டிலும் ஆரோக்கியமாக, நீண்டகாலம் வாழக்கூடிய சக்தியையும் பெண் பெற்றிருக்கிறாள்.

    பொதுவாக பெண், அதிக வெளியுலகத் தொடர்பு இல்லாமல், குடும்பத்தில் தனது உறவுகளைச் சுற்றி பின்னப்பட்டவளாக, தன்னை சார்ந்தோரைப் பராமரிப்பவளாக, வீட்டையும், அதில் உள்ளவர்களின் உடல் நலனையும் பேணிக் காப்பவளாக இருக்கிறாள். இந்தத் தாய்மையுணர்வுதான் அவளுக்குள் ஊறி பாரம்பரிய பண்பாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

    தனக்கு பிடித்தவர்கள் வாழ்வதற்கும்-வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக்கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்துகொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும் பயன்படுத்திக்கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம். அதனால் பெண்கள் புதிரானவர்கள் அல்ல, புனிதமானவர்கள் என்பதே உண்மை. 
    கடுகு எண்ணெயை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.
    கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

    முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

    கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    முகத்தின் அழகை கெடுக்கும் பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

    மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

    ×