என் மலர்
ஆரோக்கியம்
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத சாதனமாக இருப்பதால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.
காதுகேளாமை, உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 5.3 சதவீதம் பேர் காது கேளாமை பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 6.3 சதவீதம் பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. 85 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தை தொடர்ந்து நீண்ட காலம் கேட்க நேரிடும்போது காதுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
* இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் அதிகம் பயன்படுத்துவது காதுகேளாமை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத சாதனமாக இருப்பதால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.
* ஸ்மார்ட்போனில் ஹெட்போன் உபயோகிக்கும்போது ஒலியின் அளவு 60 முதல் 80 டெசிபலுக்கு இடையே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 85 டெசிபல்லை தாண்டினால் காதுகேளாமை பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
* நிறைய பேர் பயணங்கள் மேற்கொள்ளும்போது இயர்போனை அதிகம் உபயோகிப்பார்கள். இரவில் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவார்கள். காதில் இருக்கும் இயர்போனை கழற்றாமல் அப்படியே தூங்குபவர்களும் இருக்கிறார்கள். அது தவறானது. தினமும் அதிகபட்சம் 4 மணி நேரம் வரை இயர்போன் உபயோகிக்கலாம். ஆனால் 80 டெசிபல்லுக்கும் கீழே தான் ஒலி அளவு இருக்க வேண்டும்.
* மென்மையான பட்ஸ் கொண்ட இயர்போனை உபயோகிப்பது நல்லது. அது காதுகளுக்கு இதமளிக்கும். காது சவ்வுகளில் கீறல்கள், வலிகள் ஏற்படாமல் தடுக்க உதவும். காதுகளில் தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
* காதுகளை சுத்தம் செய்வதற்கு தேவைப் பட்டால் மட்டும் இயர் பட்ஸ் பயன்படுத்துங் கள். வேறு எந்தவொரு பொருட்களையும் உபயோகிக்கக்கூடாது. அவை காதுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.
* கை, கால்களை சுத்தம் செய்வதுபோல காதுகளையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். தூசுகள், அழுக்குகள் காதில் தங்குவதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
* இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு இயர்போன் பயன்படுத்தும் பட்சத்தில் அதிக சத்தம் காதுகளை சென்றடையக்கூடாது. ஒருமுறை இயர்போன் பயன்படுத்தினால் மறுமுறை உபயோகிப்பதற்கு முன்பு 18 மணி நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
* இயர்போன் பயன்படுத்துபவர்கள், அதிக இரைச்சல் கொண்ட பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக இதை வாங்கி கொடுப்பார்கள்.
பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிடாலாவது குழந்தை சிவப்பாக பிறக்காதா என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் இது. ஆனால் உண்மையில் குழந்தையின் நிறத்திற்கும், குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித சம்பந்தமமே இல்லை என்பதே உண்மை. கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் பிறக்க உள்ள குழந்தையின் நிறத்தை தீர்மானிக்கும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் அறவே இல்லை.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வரும். எதை சாப்பிடாலும் உடனே வாந்தி வரும். முன்பு விரும்பி சாப்பிட்ட உணவுகள் எதுவும் தற்போது பிடிக்காது. இதனால் சத்துக்கள் நிறைந்த பாலை கண்டால் கூட சிலருக்கு அதன் பால் வாடை பிடிக்காது. மசக்கையாக உள்ள நேரத்தில் அது இன்னும் அதிகபடியாக வயிற்றைப் பிரட்டி எடுக்கும்.
பாலும் குடிக்க வேண்டும், ஆனால் வாந்தியும் வர கூடாது என்று நினைத்ததன் வெளிபாடு தான் குங்குமப்பூ. குங்குமபூவின் மணம் மற்றும் சுவையால் வெறும் பாலை குடிப்பதை விட குங்குமப்பூ கலந்த பாலை கரைத்துக் குடிக்கும் வழக்கம் வந்தது. ஆனால் அதையும் கூட குடிக்க மாட்டேன் என கூறும் பெண்களை எவ்வாறு குடிக்க வைப்பது. அதனால் தான் நம் முன்னோர்கள் தந்திரமாக யோசித்து கர்ப்பிணி பெண்களிடம், நீ குங்குமப்பூ சாபிட்டால் உன் குழந்தை சிவப்பாக பிறக்கும் என சொல்லி வைத்தார்கள். அதனால் தான் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தார்கள் நம் பெண்கள்.
குழந்தைக்கு நிறம் கிடைக்கும் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இன்றும் கூட கர்ப்பிணி பெண்கள் குங்கமப்பூ கலந்த பாலை குடித்து வருகிறார்கள். அப்படியாவது நம் குழந்தை சிவப்பாக பிறந்து விடாதா என்ற ஏக்கம் தான் அது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. குழந்தையின் நிறத்துக்கு முழு காரணம் பரம்பரை பரம்பரையாக வரும் மரபணுக்கள் மட்டுமே.
அலுவலக சூழலில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி? அத்தகைய தொல்லைகளிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
எல்லா அலுவலகங்களிலுமே வக்கிரமான சில ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நபர் உங்கள் அருகாலையில் வந்து நிற்கும் போது தனது பார்வையாலோ அல்லது மோசமான வார்த்தைகளாலோ உங்களை கூனிக் குறுக வைக்கலாம். அலுவலக சகா மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் தொடுக்க முடியாது என்பதால் மாத்தி யோசிங்க:
வக்கிர ஆசாமி பற்றி புகார் செய்தால், நீங்கள் கற்பனை செய்துகொள்வதாக கூறலாம். முதலில் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் நபரிடம் இருந்து விலகி இருங்கள். கடுமையான நடந்து கொள்ள வேண்டாம். நட்பாகவும் இருக்க வேண்டாம். நீங்கள் இன்ட்டரஸ்டுடன் இருப்பதாக தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அலுவல்ரீதியாக அணுக வேண்டிய காரியங்களைக்கூட இடைவெளியுடன் செய்யவும்.
பார்வையால் வெறிக்கும் பழக்கம் கொண்டவராக அவர் இருக்கலாம். இது உங்களை சங்கடத்தில் ஆழ்த்தினால் பொறுத்துக்கொள்ள வேண்டாம். அவர் அப்படி பார்த்து கொண்டிருக்கும் நேரத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். இதை மறுக்க முடியாத நிலை உண்டாகும். அப்படியும் நிறுத்திக்கொள்ளவிட்டால், நேரடியாக கூறிவிடலாம்: “சில நேரங்களில் நீங்கள் என்னையே உற்றுப்பார்ப்பதாக தோன்றுகிறது. இது சங்கடம் தருகிறது”. இதன் பிறகும் தொடர்ந்தால் இன்னும் உறுதியான நடவடிக்கை தேவை.
“அந்த ரோஸ் நிற டாப் உங்களுக்கு சூப்பர். என் மனசு எங்கிட்ட இல்ல” என்பது போல பேசினால், அது உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கினால் பாராட்டு அல்லது வெறும் ஜொள்ளு என விட்டுவிட முடியாது. இது தேவையில்லாத பேச்சு என தெளிவாக சொல்லி விடுங்கள். அப்படியும் தொடர்ந்தால் மனிதவளத் துறையிடம் புகார் செய்யவும்.
முட்டாள்களுக்குகூட உடல்ரீதியாக தொடுதலில் ஈடுபடக்கூடாது என தெரிந்திருக்கும். ஆனால் இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்களிடம் தெளிவாக உணர்த்துவது உங்கள் பொறுப்பு. உங்கள் உடல் அருகே கைகளை கொண்டு வந்தாலோ, உங்கள் மீது சாய முற்பட்டாலோ, மேலதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.
கோதுமை பிரெட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று சத்தான சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைத்த கோதுமை பிரெட் - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பவுலின் அரைத்த கோதுமை பிரெட், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், சுவையான கோதுமை பிரெட் ஊத்தாப்பம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது.
பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும்.
பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்துவிடுவார்கள். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.
ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.நீங்கள் எலுமிச்சை கழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.
பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.
உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பரிய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன. அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.
பரமபதம் : ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.
பல்லாங்குழி : 12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.
மியூசிக் சேர் : பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம். குண்டு குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு. கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.
கபடி அல்லது சடு குடு : 2 குழு இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும்.
பச்சக்குதிரை : ஒரு நபரை கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.
பாண்டி ஆட்டம் : செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.
கில்லியாட்டம் : ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.
கும்மி ஆட்டம் : முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது.
பம்பரம் : ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.
கோலிக்குண்டு : கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும்.
சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும்போது நாம் ஆன்டிபயாடிக் பற்றி அதிகம் பேசுவோம். சரி.. இந்த ஆன்டிபயாடிக் என்பது என்ன? இந்த மருந்துகள் உடலில் வேலை செய்யாததை எப்படி அறிந்துகொள்லாம் என்று பார்க்கலாம்.
சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும்போது நாம் ஆன்டிபயாடிக் பற்றி அதிகம் பேசுவோம். சரி.. இந்த ஆன்டிபயாடிக் என்பது என்ன? உயிரியல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, நோய்க்கிருமிகளான பாக்டீரியாவை அழிக்கும் திறன்கொண்டவை ஆன்டிபயாடிக் எனப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகும்போதுதான் நோய்கள் உருவாகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகள் நோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை கொன்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
நமது உச்சி முதல் பாதம் வரை ஏராளமான நோய்க்கிருமிகள் நோயை பரப்புவதற்காக உடலில் காத்திருக்கின்றன. எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை கிருமிகளின் செயல் எதுவும் எடுபடாது. எதிர்ப்பு சக்தி குறையும்போதும், அந்த கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும்போதும் நோய் நம்மை தாக்குகிறது.
நோய்த் தாக்கும்போது மருத்துவரிடம் செல்கிறோம். அவர் பரிசோதித்துவிட்டு மாத்திரைகளை எழுதிக்கொடுப்பார். எந்த கிருமி உடலைத் தாக்கியிருக்கிறது? அதை அழிக்க எந்த ஆன்டிபயாடிக் மருந்து- எந்த அளவுக்கு- எத்தனை நாட்களுக்கு தேவை என்பதை மருத்துவர் தீர்மானித்து பரிந்துரைப்பார்.
இதில் குறிப்பிடத்தக்க நெருக்கடி என்னவென்றால், சிலர் நோயின் அறிகுறி சற்று குறைந்துவிட்டாலே அந்த மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறார்கள். பாதியிலே மருந்தை நிறுத்தும்போது மருந்துகளுக்கு நோய் கட்டுப்படாது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மருந்தை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும். அதாவது அரைகுறையாக இருக்கும் கிருமிகள் மீண்டும் முழுபலம் பெற்றுவிடும். அது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவிடும்.
சிலர் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி, கடைகளில் போய் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறார்கள். தேவையற்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளும்போது நோய்க்கிருமிகள் அதிக சக்தியை பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்றுக்கு பதிலாக இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் நோயின் பாதிப்பு குறைவதில்லை.
சரி.. எந்தெந்த நோய்களுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது?
அம்மை நோய், அக்கி, மஞ்சள்காமாலை, சாதாரண காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை.
அதை மீறி ஆன்பயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் என்னவாகும்?
தேவையே இல்லாத நேரத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் அவை நோய்க் கிருமிகளை கொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். ஜீரணசக்திக்கும், உயிர்ச்சத்துக்களை தருவதற்கும் நமது உடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அவைகளையும் இவை கொன்றுவிடும். அதனால் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை உருவாகும். அதோடு நோய்க்கிருமிகள் மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாமல் பெருகவும் செய்யும். ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபது நிமிடங்களில் இரண்டு மடங்காக பெருகும்தன்மை கொண்டவை.
ஆன்டிபயாடிக் மருந்துகள் உடலில் வேலை செய்யாததை எப்படி அறிந்துகொள்வது?
ஏதாவது ஒரு நோய்க்கு நாம் மருந்து சாப்பிடுவதாக எடுத்துக்கொள்வோம். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அந்த நோய் கட்டுப்படாமல் இருந்தால், ஆன்டிபயாடிக் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம். தாங்க முடியாத வயிற்றுவலி, அவ்வப்போது வயிற்றுப்போக்கு, சருமத்தில் கட்டி- வீக்கம் போன்ற திடீர் மாற்றங்களும் உருவாகும். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
பிரசவ தேதியானது சரியாக அறிக்கைகளில் குறிப்பிட்ட அதே தேதியில் நடக்காது. பிரசவ தேதியானது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடக்கும். சரியாக அதே தேதியில் பிரசவமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நடக்கும்.
பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை பின் வருமாறு,
1. அடிவயிறு லேசாகும் :
குழந்தையானது அடிவயிற்றில் மிகவும் இறங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் குழந்தையானது பிறப்புறுப்பு பாதையில் பிரசவம் நடப்பதற்க்கு ஏதுவாக சரியாக பொருந்தியதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவம் நடப்பதற்க்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது சில மணி நேரத்திற்கு முன்போ நடக்கும்.
2. ரத்தக்கசிவு ஏற்படும் :
பிறப்புறுப்பு வழியே ரத்தகசிவு ஏற்படும், இந்த ரத்தமானது தெளிவான பிங்க் நிறத்தில் இருக்கும். கருப்பையின் வாயில் சேர்ந்திருந்த திரவகட்டியானது பிறப்புறுப்பின் வழியே வெளியே தள்ளுவதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவம் தொடங்க உள்ள சில மணி நேரம் முன்போ ஏற்படும்.
3. பிறப்புறுப்பு சவ்வு கீறப்படும் :
பிறப்புறுப்பிலிருந்து நீர் வெளியேறுதல். இந்த நீரானது குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடம் உடைவதால் வெளியாகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு பல மணி நேரங்கள் முன்பு தொடங்கி பிரசவத்தின் போதும் நிகழும்.
மளிகைப்பொருட்கள் முதல் ஃபர்னீச்சர்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்குவது எளிதாக இருக்கும் நிலையில், இணையம் மூலமான பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
“இணையத்தில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும்- கண்காணிக்கப்படுகிறது. ஒரு சில செயலிகள் மூலம் உங்கள் ஒளிப் படங்கள்கூட மற்றவர்கள் கைகளில் கிடைக்கலாம்”.
பிறந்த தேதியோ, திருமண நாளோ பாஸ் வேர்டுக்கு உகந்தவை அல்ல. குறியீடுகள், எண்கள், பெரிய, சிறிய எழுத்துக்களின் தொடர்பில்லாத கலவையாக பாஸ்வேர்டை தேர்வு செய்து அதை அடிக்கடி மாற்றவும். “நெட் பாங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது இரு வகை பாஸ்வேர்டு கேட்கப்படுகிறது. ஒன்று கணக்கில் நுழைவதற்கானது மற்றொன்று பரிவர்த்தனைக்கானது. எந்த இடத்திலும் பரிவர்த்தனை பாஸ்வேர்டை சேமிக்க வேண்டாம். மாறாக ஒன்&டைம் பாஸ் வேர்ட் பயன்படுத்தவும்”.
நிதி மேலாளருக்கு அனுப்பும் தனிப்பட்ட இமெயில்கள்கூட உலகம் முழுவதும் பல சர்வர்களில் நகலெடுக்கப்படுகின்றன. ஹேக்கர்களும் மெயில் ஐ.டி மற்றும் கணக்கு விவரங்களைக் கொண்டு பணத்தை திருடுகின்றனர். இத்தகைய மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு முன்பாகவும், குரல் மூலம் உங்கள் நிதி ஆலோசகர் உங்களை அடையாளம் கண்டு கொள்ளும்படி செய்யுங்கள்.
இமெயில்களை என்கிரிப்ட் செய்யும் பிரெட்டி குட் பிரைவசி (பிஜிபி) மென்பொருளை பயன்படுத்தவும். இதன் முலம், தொடர்பு கொள்ளும் இருவர் மட்டுமே மூல செய்தியை பார்க்க முடியும். மற்ற சர்வர்களில் நகலெடுக்கப்படுவது அர்த்தமில்லாத கிறுக்கல் போல இருக்கும். கிரெடிட் கார்டில் வரம்பு
வங்கி மேலாளர்கள் கடன் வரம்பை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு தேவையான என கேட்டிருக்கலாம். இதை நிதி ஆற்றலாக பலரும் நினைக்கலாம். ஆனால் இதைவிட, குறைந்த வரம்பு கொண்ட பல கார்டுகள் வைத்திருப்பது நல்லது. “நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு `2 லட்சம் பயன்பாடு வரம்பு கொண்டிருப்பது நல்லது”.
பெரும்பாலான வங்கிகள் இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த சிறிய அளவு தொகை கொண்ட ஒரு முறை பயன்பாடு கொண்ட வர்ச்சுவல் கார்டுகளை அளிக்கின்றன. இணைய பரிவர்த்தனைகளின் போது கிரெடிட் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.
இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப் ,
அஸ்வகந்த தூள் - 1 தேக்கரண்டி,
எலுமிச்சை பழம் - பாதி,
தேன் - சுவைக்கு ஏற்ப
செய்முறை:
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
அதில் அஸ்வகந்தா பொடியைச் சேர்க்கவும், அல்லது நீங்கள் இரண்டு அஸ்வகந்த வேர்களைப் பயன்படுத்தலாம்.
மூடியை மூடி 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இதனை ஒரு டம்ளரில் வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும்.
இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.
தேவையான பொருட்கள்:
வேப்ப எண்ணெய் - 1/2 தேக்கரண்டியளவு
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டியளவு
லாவெண்டர் எண்ணெய் - 10 சொட்டுகள்
முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலக்கி அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். பொடுகு மற்றும் நமைச்சல் கேண்டிடா இது பொடுகுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
பல பூஞ்சைகளுக்கு எதிராக போராட வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொடுகுத் தொல்லை ஏற்படும் போது அத்துடன் தலையில் சிவப்பு நிற காயங்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. வேப்ப எண்ணெயில் நிம்பிடின், பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் நமைச்சல்களை நீக்க சிறந்த தீர்வாக அமையும்.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிற்று உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டிய குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து ஒரு நல்ல சூடான மழை உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டிய குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
மசாஜ் செய்வது சற்று நிதானத்தை அளிக்கிறது மற்றும் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும் பல தொந்தரவுக்கு இது சிறந்தது.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. தொடர்புகள், கண்ணுக்குத் தொடர்பு, மசாஜ் செய்யும் போது முனுமுனுப்பது குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.
மசாஜ் செய்வது எப்படி?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.
மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.
படுக்கைக்கு நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு அல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும்.






