என் மலர்
ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.
தேவையான பொருட்கள் :
கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
புளி - கோலிகுண்டு அளவு,
உளுந்து - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய் துண்டு - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி போட்டு சிவக்க வறுக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
சுவையான கடுகு துவையல் ரெடி.

இது சற்று துவர்ப்புடன் இருக்கும். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.
இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேசமயம், நேரம் தவறியும் சாப்பிடும் பழக்கத்தை பழகியிருக்கிறார்கள். காலை உணவை பகல் 11 மணிக்கும், மதிய உணவை 3.30 மணிக்கும், இரவு உணவை நடுராத்திரியிலும் சாப்பிடுகிறார்கள். இந்த முறையில்லாத உணவு பழக்கத்தினால், இளைஞர்கள் பல உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள். இத்தகைய இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை போக்கிவிடலாம். அது வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.
துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.
வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணைபுரியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும். பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.
காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.
சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பளிச்சிடவைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் துணை புரியும்.
பிறகு என்ன..? கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு வடிகட்டி பருகுங்கள். ஆரோக்கிய பலன்களை பெறுங்கள்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்று கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம். குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்று கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள் தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும்.
படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.
அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உரிய நேரத்தில் தூங்க செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்தி கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும். உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும்.
எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அதனை வெற்றியாளனாக உயர்த்தும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உடலின் அனைத்து உறுப்புகளையும் சிறிது சிறிதாக பாதிக்க தொடங்கி அதனை செயலிழக்க செய்யும் தன்மையுடையதாகும். இதற்கு வாய் மட்டும் விதிவிலக்கல்ல.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அவை உலர்ந்த வாய், வாய் துர்நாற்றம், வாய் புண், ஈறுநோய், ஈறுகளில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல், பழுப்பு கட்டிகள், புண்கள் ஆறுவதில் தாமதம், பூஞ்சைகளால் ஏற்படும் நோய், பற்களில் ஆட்டம் போன்றவை. இதனால் பற்களை சிறிய வயதிலேயே இழக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் போது அவை வெள்ளை அணுக்களை செயலிழக்க செய்கிறது. அவைதான் உடலின் மிக முக்கியமான தற்காப்பு செல்களாகும்.
மேலும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது பற்கள் ஆடிய நிலையில் இருந்தாலும் அவற்றை அகற்றுவதை தவிர்ப்பது நலம். காரணம் Osteomyelitis எனப்படும் எலும்பை தாக்கும் நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவை தாடை எலும்பை அரிக்கும் தன்மை கொண்டது.
ஆகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை மாதந்தோறும் பரிசோதித்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளுவது அவசியம். இருமுறை பற்களை துலக்குவதன் மூலமும் அதிக தண்ணீர் பருகுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். பற்களை எடுப்பதற்கு முன்னரும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரும் சர்க்கரை அளவை பரிசோதிப்பது முக்கியம். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். மூன்று மாதத்திற்கான அளவை காட்டும் (HBAIC) பரிசோதனை பயன்தரக்கூடியது.
இவ்வாறு அரோமா பல் மருத்துவமனை இயக்குனரும், தலைமை மருத்துவருமான பெயான்ஸோ சி.பி. டானியல் தெரிவித்தார்.

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட சற்று அதிகரித்துவிடும். மற்ற பருவ காலங்களை விட சர்க்கரை, நெய், வெண்ணெய் சேர்க்கப்பட்ட பல காரங்களை அதிகமாக சாப்பிட விரும்புவதும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு சோம்பேறித்தனம் கொள்வதும், அதிகமாக சாப்பிடுவதும், அதற்கு இணையாக இல்லாமல் குறைவான அளவில் கலோரிகள் எரிக்கப்படுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
குளிர்காலத்தில் உடல் குளிர்ச்சியடைவதால் உடலில் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நிறைய பேர் சூடாக சாப்பிட விரும்புவார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் இனிப்புதான் அதிகமாக சேர்ந்திருக்கும். இனிப்புகளில் அதிக கலோரிகள் நிரம்பியிருக்கும். அவை உடல் வெப்பத்தை அதிகப்படுத்த துணைபுரியும். ஆனால் அதற்கேற்ப உடலில் கலோரிகள் எரிக்கப்படாததால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும்.
குளிர்காலத்தில் விடிந்த பின்பும் போர்வைக்குள் முடங்கி கிடப்பதற்குத்தான் நிறைய பேர் விரும்புவார்கள். வழக்கத்தை விட சற்று கூடுதல் நேரம் தூங்கவும் விரும்புவார்கள். குளிர் காலத்தில் கரடிகளை போலவே மனிதர்களும் கலோரிகளை உடலில் சேர்த்துவைப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அதை உறுதிபடுத்தும் விதமாக பெரும்பாலானோர் வழக்கத்தை விட குளிர்காலத்தில் 200 கலோரிகள் அதிகமாக உட்கொள்ளவும் செய்கிறார்கள்.
அதிகாலைவேளையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள், ஜிம்முக்கு செல்பவர்கள் கூட குளிர்காலத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். தாமதமாக எழுவதும், உடல் இயக்க செயல்பாடு குறைந்து போவதும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடுகிறது.
குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் உடலின் மீது குறைவாகவே விழும். சூரிய ஒளி குறைந்துபோவதால் சில ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் காரணமாக எல்லா நேரத்திலும் தூக்க உணர்வு எட்டிப்பார்க்கும். மேலும் உடலில் மெலடோனின் ஹார்மோன் அளவு அதிகரிப்பது பசியை தூண்டி அதிகமாக சாப்பிட வைக்கும். அதுவும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.
குளிர்காலத்தில் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். உடலில் வெப்பநிலையை அதிகப்படுத்தும்விதமாக அதன் செயல்பாடு அமைந்திருக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதற்கு அதிக உணவு தேவை. அதனால் குளிர்காலத்தில் கலோரி குறைவான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடமாடி உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.
காலை நேரம் மட்டுமின்றி ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
பரபரப்பான வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் பெண்களுக்கு பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். உடல் வீக்கம், உடல் அழற்சி போன்றவை அதற்கான ஆரம்பக் கட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இதனை தவிர்க்க சிறுவயதிலேயே உடல் நலன் மீது போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும். உடல் வீக்கம், உடல் அழற்சி ஏற்படுவதற்கு தைராய்டு, ரத்த சோகை, இரைப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.
தைராய்டு பிரச்சினை உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது. அது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தைராய்டு சுரப்பியானது சாப்பிடும் உணவால் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு வழி செய்யும். ஹார்மோன்களின் உற்பத்திக்கும் உதவும். அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும்போது தைராய்டு பிரச்சினை உருவாகும். கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதுதான் தைராய்டு பிரச்சினைக்கான முக்கிய அறிகுறியாகும். வீக்கம் வலியை ஏற்படுத்தாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் சோர்வும், உடல் பலவீனமும் ஏற்படும். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு ரத்தம் பற்றாக்குறையாக இருப்பதும் காரணமாகும். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். பெரும்பாலும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலான பெண்கள் வாயு தொல்லை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாததே காரணமாகும். ஆரம்ப கட்ட அறிகுறியாக உடல் வெளிர் நிறத்திற்கு மாற தொடங்கும். வாயு பிரச்சினை தொடரும்போது வலி மற்றும் வீக்கம் உண்டாகும். வாயு பிரச்சினை இருந்தால் சரியான நேரத்திற்கு சாப்பிட பழக வேண்டும்.

பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.
பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். மற்றவர்களுக்கு அழகாக இருப்பதும், கடைகளில் பார்க்கும்போது உங்கள் கண்களை பறிப்பதுமாக இருந்தால் மட்டும் போதாது. அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.
நீண்ட கழுத்தினை கொண்டவர்களுக்கு சோக்கர் மற்றும் கழுத்தோடு இறுக்கமாக இருக்கும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை அழகுதரும்.
மெல்லிய இடையை கொண்ட இளம்பெண்கள் புடவை உடுத்தும்போது இடுப்பில் வெயிஸ்ட் செயின் அணிந்துகொள்ளலாம். அவை முத்து அல்லது செயற்கை கற்கள் பதிக்கப்பட்டதாக இருந்தால் அதிக அழகுதரும். அடுக்குகளை கொண்ட சிறிய சங்கிலிகளை அவர்கள் அணிந்து அழகுபெறலாம். இரண்டு அல்லது மூன்று சோக்கர்களை ஒன்றாக அணிவது நீளமான கழுத்தினை கொண்டவர்களுக்கு அழகுதரும்.
ஜீன்ஸ், ட்ரவுசர் போன்ற மேற்கத்திய உடைகளை பெண்கள் அணியும்போது அதிக கனம்கொண்ட தங்க ஆபரணம், வளையல், கொலுசு போன்றவைகளை அணியக் கூடாது.
சிறிய தங்க சங்கிலிகள், வெள்ளி ஆபரணம், ஒயிட் கோல்டு, பிளாட்டினம் போன்றவைகளில் உருவான சங்கிலிகள் எல்லாவிதமான உடைகளுக்கும் அழகுதரும்.
குண்டான உடல் அமைப்பைகொண்டவர்கள் கழுத்தோடு இறுக்கிப் பிடிக்கக்கூடிய சோக்கர் வகை ஆபரணங்களை அணிவதை தவிர்க்கவேண்டும்.

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 6 பல்
லவங்க பட்டை - 2
தனியா தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
பீட்ரூட், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, பூண்டு, இஞ்சி, லவங்க பட்டை, தனியா தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு கலந்து பீட்ரூட்டை வேகவைத்துக்கொள்ளவும்.
நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலா கலவையை கொட்டி, மசாலா வாசம் நீங்கி கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான பீட்ரூட் மிளகு சாப்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக யுனிசெப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக அளவில் குழந்தைகளின் நிலை’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 2018-ம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்திருப்பதாகவும், இந்தியாதான் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பேரில் 37 பேர் இறப்பது தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், ரத்தசோகை உள்பட பிற சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வைட்டமின்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவதும், பசியால் வாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நகர்பகுதியில் 8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.

நகர் பகுதி அல்லது புற நகரில் அமைந்துள்ள இடத்தில் வாங்கப்படும் வீடு அல்லது மனை ஆகியவற்றின் அடிப்படை ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நகர் பகுதி அல்லது புற நகரில் அமைந்துள்ள இடத்தில் வாங்கப்படும் வீடு அல்லது மனை ஆகியவற்றின் அடிப்படை ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றை கவனத்தில் கொள்வதுடன், பரிசோதித்து அறிவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அத்தகைய தகவல்களை இங்கே காணலாம்.
* இடம் அல்லது வீட்டு மனைக்கு ஆதாரமாக 3 அடிப்படை ஆவணங்கள் உள்ளன. அதாவது, நிலத்தின் தாய் பத்திரம், பிளாட் புரமோட்டரிடம் உள்ள ஆவணம் மற்றும் கட்டுமான நிறுவனத்துக்கும், வீட்டு மனையின் உரிமையாளருக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்த பத்திரம்.
* மனை உரிமையாளருக்கு அதன் மீதுள்ள உரிமையை குறிக்கும் சட்ட ரீதியான பதிவேடு பட்டா ஆகும். பல நிலைகளில் அவசியம் கொண்ட பட்டாவை முதலில் கவனிக்கவேண்டும்.
* நிலத்தின் அசல் பத்திரத்தில் ஏதேனும் உயில் சம்பந்தம் இருப்பின் அது குறித்த நகல்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், மற்றொருவருக்கு மனையின் முந்தைய உரிமையாளரால் பாத்தியதை ஏதும் தரப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.
* மனையின் உரிமை உயிலின் மூலம் பெறப்பட்டதாக இருப்பின், அதன் முந்தைய நிலை மற்றும் எவ்வகையில் அது உரிமையாளரின் உயிலாக மாறியது என்பதற்கான முறையான சான்று அவசியம்.
* மனையின் மொத்த நிலப்பகுதி வேறொரு உரிமையாளரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் அதற்கான பிரிவு ஒப்பந்தத்தின் நிலை, நில உரிமையாளரால் வேறு யாருக்காவது அந்த உரிமை தரப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்.
* மனையை வேறொருவரிடம் இருந்து புரமோட்டர் வாங்கியிருக்கும் நிலையில் அதற்கான ஒப்பந்தம் மற்றும் நகல் சோதனை ஆகியவற்றோடு, தாய் பத்திரத்தின் ஒரிஜினல் உள்ளிட்ட பிற சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சரிபார்ப்பது அவசியம்.
* வீடு அல்லது மனையின்மீது 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் சொத்து வாங்கும் நாள் வரை பெறப்படுவதோடு, மனைக்கான பட்டா விற்பவரிடமிருந்து மனையை வாங்குபவர் பெயருக்கு மாற்றல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* மனை நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டுள்ளதா அல்லது தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக அரசு அனுமதி பெற்ற பகுதியா என்பது போன்ற தகவல்களை தக்க அரசு அலுவலகம் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
* குடியிருப்புகள் அமைப்பதற்கு ஏற்ப சி.எம்.டி.ஏ அப்ரூவல் சர்வே எண் மற்றும் ஏற்கனவே மனை நிலத்தில் ஒருவர் குடியிருந்தால் அவருக்கும் நில உரிமையாளருக்கும் உள்ள ஒப்பந்த நிலை ஆகியவற்றை கவனிக்கவேண்டும்.
* மனைப்பகுதியில் அரசின் கையகப்படுத்தும் திட்டம் ஏதேனும் செயல்படுத்தப்பட உள்ளதா மற்றும் கட்டுமானத் திட்டம் மற்றும் கட்டுமான ‘பெர்மிட்’ ஆகியவை பெறப்பட்டுள்ளதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மூலம் பெறப்பட்ட கட்டுமான பணி நிறைவு சான்றிதழ், சென்னை மாநகராட்சி சான்றிதழ் மற்றும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அளித்துள்ள அனைத்து ரசீதுகளையும் பெற்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

விக்கல், தும்மல், கொட்டாவி... போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா...? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள். எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?

கொட்டாவி
மிகவும் சலிப்பு தட்டிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும்.
விக்கல்
நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. அதேபோல அளவிற்கு அதிகமாக சாப்பிடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற காரணங்களாலும், விக்கல் ஏற்படும்.
திடீர் விழிப்பு
நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். இப்படி உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்கிறது, ஆராய்ச்சி முடிவுகள். நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.
விரல்களில் தோல் சுருக்கம்!
தண்ணீரில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கையை நனைத்து வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். ‘கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது.
சோம்பல் முறித்தல்!
இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்த தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.
உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது!
தும்மல்
பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.

தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
தாம்பத்தியம் என்பது ஆண் பெண் இருவரும் மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு திருவிழா. தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
கணவன்- மனைவி இருவரும் எப்போதுமே அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தல் வேண்டும் அப்போது தான் அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை என்றுமே அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தாம்பத்திதியத்தை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
அத்தகைய தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் தான். . உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால் தான் நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.
‘அது தான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன்படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும்.
மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.
ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.
பெரும்பாலான தம்பதிகள் ஆரம்பிக்கும் போது முத்தத்தோடு தான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய் தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் உறவு இடையில் தடைபடலாம். இரவில் ஒரு முறை பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்திதியத்தை மிகவும் இனிமையாக்கி விடும்.