
தைராய்டு பிரச்சினை உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது. அது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தைராய்டு சுரப்பியானது சாப்பிடும் உணவால் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு வழி செய்யும். ஹார்மோன்களின் உற்பத்திக்கும் உதவும். அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும்போது தைராய்டு பிரச்சினை உருவாகும். கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதுதான் தைராய்டு பிரச்சினைக்கான முக்கிய அறிகுறியாகும். வீக்கம் வலியை ஏற்படுத்தாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் சோர்வும், உடல் பலவீனமும் ஏற்படும். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு ரத்தம் பற்றாக்குறையாக இருப்பதும் காரணமாகும். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். பெரும்பாலும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். உடல் வீக்கமாக இருப்பதாக உணர்ந்தால் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலான பெண்கள் வாயு தொல்லை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாததே காரணமாகும். ஆரம்ப கட்ட அறிகுறியாக உடல் வெளிர் நிறத்திற்கு மாற தொடங்கும். வாயு பிரச்சினை தொடரும்போது வலி மற்றும் வீக்கம் உண்டாகும். வாயு பிரச்சினை இருந்தால் சரியான நேரத்திற்கு சாப்பிட பழக வேண்டும்.