என் மலர்
ஸ்லோகங்கள்
மிதுன ராசிக்காரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பெருமாள் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள முருகன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப்
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா ! வருகவே !
மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். இன்று செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் சொல்லி வழிபாடு செய்யலாம்.
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
உலகமனைத்தையும் தனது பிரபஞ்ச திருநடனத்தால் இயக்குகின்ற சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது சிறந்தது.
இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே
ந்ருத்யத ஸதஞ்சித முதஞ்சிதம்
கிமபி குஞ்சிதம் சஞ்சலம் விசிந்த்ய
சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம்
ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ
உலகமனைத்தையும் தனது பிரபஞ்ச திருநடனத்தால் இயக்குகின்ற சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது சிறந்தது. இந்த ஸ்லோகத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு மார்கழி மாதத்தில் சிதம்பர நடராஜரின் வழிபாட்டிற்குரிய திருவாதிரை நட்சத்திர தினத்தில் காலை மற்றும் மாலை 27 முறை துதிப்பதால் உங்களின் அனைத்து குறைகள் மற்றும் கஷ்டங்கள் நீங்கி, உங்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும் சிவனின் அருளால் நிச்சயம் பெறுவீர்கள்.
சிவத்தலங்களில் ஆகாயத் தன்மை கொண்ட கோயிலாக இருப்பது சிதம்பர நடராஜர் கோயிலாகும். இங்கு தனது குஞ்சிதபாதத்தை தூக்கியவாறு சிவன் ஆடும் நடனம் அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் ஆனந்த நடனம் புரிகிறார் சிவன். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகிறது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.
'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்களை பார்க்கலாம்.
'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.
3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
4. சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.
இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்கள் என்பது நம்பிக்கை.
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி
பொதுப்பொருள்:
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.
பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன்,அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும்,திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.
ஓம் நாராயணாயநம,
ஓம் மாதவாயநம,
ஓம் கோவிந்தாயநம,
ஓம் விஷ்ணுவேநம,
ஓம் மதுசூதனாயநம,
ஓம் த்ரிவிக்ரமாயநம,
ஓம் வாமனாயநம,
ஓம் புருஷோத்தமாயநம,
ஓம் ஸ்ரீதாராய நம,
ஓம் அதோஷஜாயநம,
ஓம் ஹ்ருஷீகோசய நம,
ஓம் நரசிம்ஹாயநம,
ஓம் பத்மனாபாயநம,
ஓம் அச்யுதாயநம,
ஓம் தாமோதராயநம,
ஓம் ஜனார்த்தனாயநம,
ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,
ஓம் உபேந்த்ராயநம,
ஓம் வாஸூதேவாயநம,
ஓம் ஹரயேநம,
ஓம் ப்ரதுய்ம்னாயநம,
ஓம் க்ருஷ்ணாயநம
நாக தோஷம் உள்ளவர்கள், இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால், தோஷத்திலிருந்து நிவர்த்திப் பெறலாம்.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி நிழலே கதி என்று இருப்பவர் கருடாழ்வார். இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.
வைகுந்தத்தில் பெருமாளை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் கருடன். இவரிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள், இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால், தோஷத்திலிருந்து நிவர்த்திப் பெறலாம்.
குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம
சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாமல் எங்கும் மக்களின் விருப்பத்தை தீர்க்கும் “சண்முக கடவுள்” 108 போற்றி துதி இதோ.
இன்று பலரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக சொந்த வீட்டை கட்ட முடியாமலும், தங்களுக்கென்று சொந்தமாக சிறிது நிலம் கூட இல்லாமல் இருக்கின்றனர். இப்படி சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாமல் எங்கும் மக்களின் விருப்பத்தை தீர்க்கும் “சண்முக கடவுள்” 108 போற்றி துதி இதோ.
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மருதமலை இறைவா போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பன் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி
இந்த துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.
செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில்... இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வளம் சேர்க்கும்.
வீட்டில் ராகுகால வேளையில் விளக்கேற்றுங்கள்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.
துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்காதேவியை சரணடைவோம்.
எவ்வளவு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து கொண்டே வரும்.
ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. என்ன செய்வது? அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன், அஞ்சா நெஞ்சம் படைத்த ஆஞ்சநேயர், எவருக்கும் எதற்கும் அஞ்சாதவர் ஆயிற்றே!
ஆஞ்சநேயர் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கர்ம வினைகளும், துன்பங்களும் நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். உங்களுக்கான ஹனுமனின் மூல மந்திரம் இதோ!
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா
ஹனுமந்த முபாஸ் மஹே!
நான்கு வரி மந்திரம்தான். தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் எண்ணிக்கை என்பது உங்களுடைய இஷ்டம் தான்.
இந்த மந்திரத்தை உச்சரித்து அனுமனை தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களை எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது. எவ்வளவு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து கொண்டே வரும்.






