என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
    வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும், புஷ்ப ராகமும்

    உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும், தனித்ததோர் புகழும்

    நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

    இந்த துதிப்பாடல் பாடித் தொழுதால் குருவருளால் குதூகலமான வாழ்வமையும்.
    கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
    புதன் மந்திரம்

    ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்

    புதன் காயத்ரி

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத: பிரசோதயாத்

    இந்த பாடலை பாடி புதன் அருளை பெறலாம். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புத பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம்.

    பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.
    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.
    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.

    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இன்னல்கள் காணாமல்போகும்.
    மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
    மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வழங்குங்கள். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும்.
    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

    ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். குரு யோகமும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
    வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
    வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள். எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

    'ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்'

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
    விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்ஜென்ம பாவங்கள் தீரும்.
    நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
    நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
    ஊருளான் எனதுரை தனதுரையாக
    ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
    பாருளார் பாடலோ டாடல் அறாத
    பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
    ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
    செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
    செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
    செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே
    ராகவேந்திரருக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிறவிப்பயனை அடையலாம். தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
    நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
    நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
    பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
    பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
    கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
    காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
    வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
    மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
    கன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.
    கன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.

    ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
    வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
    தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
    மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
    நெடியானே ! வேங்கடவா ! நின்கோவி லின்வாசல்
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
    சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், தீராத சிக்கல்களையும் தீர்த்துவைப்பார் . நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடித்துக் காத்தருள்வார்.
    சாஸ்தா பகவானின் காயத்ரியை பாராயணம் சொல்லி வழிபட்டு வந்தால், எதிரிகள் வீழ்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் தர்மசாஸ்தா என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலத்தைக் கொடுக்கும். நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஓம் பூத நாதாய வித்மஹே
    பவ நந்தனாய தீமஹி
    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
    ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை அகலும். துன்பங்கள் பறந்தோடும்.
    விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
    உறைவார் முடிவே உணரா முதலோன்
    கரைவார் நிறைவே கருதாதவன் போல்
    உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

    கண்டேன் ஒரு சீதையையே
    கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
    வென்றேன் எனவே விழைந்தானையே நான்
    கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

    சரமே தொளையா சகமே மறவா
    சரீரா அனுமா ஜமதக் கினிநீ
    உரமே உறவே உறவோய் பெரியோய்
    உயர்வே அருள்வாய் திருமாருதியே !
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
    அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
    அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
    தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
    துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
    மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
    ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
    வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
    பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !
    ×