
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும், புஷ்ப ராகமும்
உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும், தனித்ததோர் புகழும்
நிலையாய்த் தந்திட நேரினில் வருக!
இந்த துதிப்பாடல் பாடித் தொழுதால் குருவருளால் குதூகலமான வாழ்வமையும்.