என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சென்னை :
பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிடர் பி.வி.ரமணி அய்யர் அளித்துள்ள நேரம் வருமாறு:-
நாளை (14-ந் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்.
15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.
ஹரித்துவார மங்கலம் ஜோதிடம் ஆர்.ராஜாராம அய்யர் கணித்துள்ள விவரம் வருமாறு:-
நாளை (14-ந் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் கட்டி காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை நிவேதனம் செய்து போஜனம் செய்ய உகந்தமான நேரம் ஆகும்.
15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப்பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உத்தமமான நேரம் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கணித்துள்ளனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது. காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு இருக்கும். அதன்பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.






