என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். மாட்டுப்பொங்கல் உருவான கதையை அறிந்து கொள்ளலாம்.
    கைலாயத்தில் ஒருநாள்..! சிவபெருமான் நந்தீசுவரரை அழைத்து அவரிடம் ஒரு கட்டளை பிறப்பித்தார்.

    ‘‘பூலோகம் சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் மாதம் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து, ஒரு நாள் மட்டும் உணவு சாப்பிடச் சொல்லுங்கள்’’ என்று கட்டளையிட்டார்.

    நந்தீசுவரரும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு பூலோகம் சென்றார். வரும் வழியிலேயே சிவபெருமானின் கட்டளையில் ஒரு பாதி நந்தீசுவரருக்கு மறந்து விடுகிறது. அவர் மக்களிடம் சென்று, ‘‘மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள், மாதம் முழுவதும் உணவு உண்ணுங்கள். இது சிவபெருமானின் கட்டளை’’ என்று மாற்றிக் கூறிவிட்டார். இதனால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பசியால் வாடுவதற்கு நந்தீசுவரர்தான் காரணம் என்று சிவபெருமான் சினங்கொண்டார். உடனே ‘‘நீ காளையாக மாறி பூலோகத்துக்கு செல்வாயாக, மக்களுக்காக நீ கடுமையாக உழைப்பாயாக...’’ என்று நந்தீசுவரருக்கு சாபம் கொடுத்தார்.

    ‘‘நான் செய்த தவறுக்காக இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். மக்களுக்காக உழைத்து ஓடாய் தேய்வேன். ஆனால் எனது உழைப்பை மக்கள் எண்ணிப்பார்த்து ஒரு நாள் விழாவாக கொண்டாட வேண்டும். அதற்கு அருள் புரியுங்கள்’’ என்று சிவபெருமானிடம், நந்தீசுவரர் வேண்டினார்.

    அதற்கு சிவபெருமான், ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் மக்கள் ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாடி உனது உழைப்பை போற்றுவார்கள் என்று கூறினார். பின்னர் நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நந்திக்காக கொண்டாடுவதே, மாட்டுப் பொங்கலாகும்!
    மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னிப்பொங்கல் எனப்படுகிறது.
    பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனைக் குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களை எரிப்பதோடு, வேண்டாத கொள்கைகளையும் தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கருதப்பட்டது.

    இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தைப்பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்றி ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள் எனப்பாகுபாடின்றி வீட்டு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு அதனைச் சுற்றி மஞ்சளையும், கரும்பையும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் ‘பொங்கலோ, பொங்கல்’ என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி, மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.

    மூன்றாம் நாள் விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளுக்கு சுதந்திரமளிக்கும் பொருட்டு ஆறு, ஏரி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ணப் பொட்டுகள் இட்டும், கழுத்திலே மஞ்சள்கொத்து, ஜரிகைத்துணி, வேட்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல்நாள் போன்றே பானையில் பொங்கலிட்டு மாடுகளின் முன்பு படையல் வைக்கப்படும்.

    அதன்பின்பு கிராமப்புறங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்துச் சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழற்றி விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள். இந்த மாட்டுப்பொங்கல்தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகளாகவும் நடத்தப்படுகிறது.

    நான்காம் நாள் காணும் பொங்கல். மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னிப்பொங்கல் எனப்படுகிறது. உற்றார், உறவினர் மட்டுமின்றி ஜாதி, மத, இன பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவரை, ஒருவர் கண்டு களிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமூகத்தினர் ஒன்றுபடும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருகிறது.
    இன்று (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.
    மாட்டுப்பொங்கல் அன்று காலை சிவாலயங்களுக்குச்சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அன்று எல்லாவிதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பணமாலை, பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை, பழமாலை போன்றவை அணிவித்து) நந்தியை அலங்கரித்து வைத்திருப்பர். அவரை தரிசிப்பது மிகவும் நல்லது. நந்தி பதிகம் பாடினால் நலம் கிடைக்கும், வளம் சேரும்.

    வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் வைத்து, கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது.

    நைவேத்தியத்தில் கொஞ்சத்தை நம் குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.

    மாடுகளை வீதியில் அழைத்துச் செல்லும்பொழுது மங்கல ஓசை முழங்கவேண்டும். அல்லது சங்கு ஊதி தீப ஆராதனை காட்டவேண்டும். நிறைவாக சூரைத்தேங்காய் உடைத்து திருஷ்டி கழிக்கவேண்டும்.
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    சபரிமலை :

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. பின்னர் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுக்கு பிறகு, கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டது.

    கொரோனா பரவல் காரணமாக மண்டல பூஜை காலங்களில் குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டல பூஜை நிறைவு நாளில் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டு, தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. நேற்று மாலை பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை காண பக்தர்கள் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை நடைபெறும். 19-ந் தேதி மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருசி சிறப்பு பூஜை சன்னிதானத்தில் நடைபெற உள்ளது.

    20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 6.30 மணிக்கு அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அத்துடன் 2020-2021-ம் ஆண்டு்க்கான மண்டல, மகர விளக்கு பூஜை திருவிழா நிறைவு பெறும்.
    திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘ஆதி அண்ணாமலையார்’ கோவில்.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோவிலாக இருந்த ஆலயம், திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அடி அண்ணாமலை என்ற ஊரில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘ஆதி அண்ணாமலையார்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘உண்ணாமுலையாள்’. பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர், இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது.

    அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவே. அதாவது ஆதி திருத்தலம். அதனால், ‘ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்’ என போற்றப்படுகிறது. ‘அணி அண்ணாமலை’ என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.

    தலவரலாறு

    ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். தங்கள் தொழிலையும் மறந்து தர்க்கத்தைத் தொடர்ந்தனர். இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான், அவர்கள் முன்பாகத் தோன்றினார். “என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை, யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர்” என்று கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் தாங்கி, பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மதேவன், ஈசனின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது, சிவபெருமானின் சிரசில் இருந்து விழுந்த தாழம்பூ, கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. தாழம்பூவைக் கண்ட பிரம்மன், அதனிடம் தான் ஈசனின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் பெருமாள் திரும்பி வந்து, தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மனோ, தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் உரைத்தார். அவருக்கு தாழம்பூ சாட்சி கூறியது.

    அனைத்தும் அறிந்த சிவபெருமான், செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கினார். பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனக் கூறினார். பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கினார்.

    பிரம்ம தேவருக்கும், பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில், மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். ‘அடி முடி காணா அண்ணாமலையார்’ என போற்றப்படுகிறார். சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

    அடி அண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

    அண்ணாமலையார் கோவிலின் ஆட்சிக்குட்பட்ட 3 கோவில்களில் ஒன்றாக விளங்கும் அடி அண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கும் முந்தியதும் என்றும், ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது. திருவண்ணாமலை நகரின் வடமேற்கு திசையில் உள்ள இந்த திவ்விய தலம், முன்னொரு காலத்து பிரம்ம தேவர் தம்மாற் படைக்கப்பட்ட திலோத்தமை மீது கொண்ட அதிமோகத்தினால் எங்கும் ஓடி திரிந்து தன்னிடத்திலே வந்து அங்கு எழுந்தருளும் சிவபெருமானை தரிசிக்கப் பெற்று அவர் அருளால் தங்கிச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டு மகிமை வாய்ந்தது. கிழக்கே திருமாலால் வழிபடப்பெற்ற மூர்த்தி அண்ணாமலை நாதர் எனவும் மேற்கே அவரால் வழிபடப் பெற்ற மூர்த்தி அடி அண்ணாமலை நாதன் எனவும் வழங்கப்படுவதாக புராணம் கூறுகிறது.

    கிரிவலத்தின் 9 கி.மீட்டர் தொலைவில் மலையின் மேற்கு பகுதியில் உள்ள இச்சிற்றூரில் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும், மாரியம்மன் கோவில் ஒன்றும், இரு குளங்களும் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.

    இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக சொல்வார்கள்.
    பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். 

    உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

    பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. 

    போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

    போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

    கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

    அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

    பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

    இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது. இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். 

    பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. 

    போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

    தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.

    பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். 

    புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். 

    சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

    மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

    மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

    புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார். 

    ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

    உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

    இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

    உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

    காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

    இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
    திருப்பதியில் வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் இந்த சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

    வருகிற புதன்கிழமை மார்கழி மாதம் நிறைவு பெற்றாலும், வியாழக்கிழமை உதயத்துக்கு 2 மணி நேரத்துக்கு பின்னரே சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
     
    எனவே பஞ்சாங்கப்படி அன்று காலை 9 மணிக்கு மேல் தை மாத கடிகை தொடங்க உள்ளது. சூரிய உதயத்துக்கு பின் தொடங்கும் திதி மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால் வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும்.

    அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை 15-ந்தேதி அதிகாலையில் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் கோசாலைகளில் கோ பூஜைகள் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    தேவஸ்தான தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. அதே நாளில் குண்டூரில் நரசராவ்பேட்டை பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் காமதேனு பூஜை நடக்கிறது.

    திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதியில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையில் இருந்து பெறப்படும் பஞ்ச கவ்யத்தின் மூலம் பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். தற்போது பஞ்சகவ்யத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    குஜராத்தில் பஞ்சகவ்யத்தில் இருந்து சாம்பிராணி வத்திகள், ஊதுவத்திகள், குளியல் சோப்புகள், சுத்திகரிக்கும் பொருள்கள், உரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.

    அங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடைமுறைகள், திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் கோசாலைகளிலும் பின்பற்றி தேவஸ்தான கோசாலைகளிலும் இப்பொருள்களை தயாரிக்க பஞ்சகவ்யத்தை கொண்டு மேலும் புதிய பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி கண்டறிய வேண்டும் என்றார்.
    பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது.
    ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நாம் கதிரவனுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். முன்பெல்லாம் மக்கள் மண்பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல்நலம் சீராக இருப்பதற்கு மண்பானை சமையல் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற இயற்கையைக் கொண்டாடி வழிபட்டால் இனிய வாழ்வு அமையும் என்பதே இதன் தத்துவம்.

    பொங்கல் வைக்கும் புதுப்பானையில் 2 நாட்கள் அரிசி களைந்த நீரை ஊற்றி வைத்து பொங்கல் அன்று சுத்தம் செய்து விட்டு பொங்கல் வைத்தால் மண் வாசனை இருக்காது. பானையிலும் விரிசல் விழாது.

    வெல்லப் பொங்கல், கல்கண்டு பொங்கல் செய்வதாக இருந்தால் அரிசியை வெறும் வாணலிலில் வறுத்து பிறகு செய்யவும். சர்க்கரை பொங்கல் செய்யும் போது வெல்லத்தை பாகாக காய்ச்சி பொங்கலில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    கல்கண்டு பொங்கல் செய்யும் போது கல்கண்டை நசுக்கி கம்பி பதத்தில் காய்ச்சி வெந்த சாதத்தில் சேர்த்து செய்தால் பொங்கல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

    கரும்பு சாறை கொதிக்கவிட்டு வடிகட்டி அதை பொங்கலில் சேர்த்தால் கரும்பு சாறு பொங்கல் தயாராகிவிடும். வெல்லம் சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு பால் சேர்க்க வேண்டும்.
    ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த நவ சிவ விரதங்களை பார்க்கலாம்.
    வடமொழியில் ‘நவம்’ என்பதற்கு தமிழில் ‘ஒன்பது’ என்று பொருள். ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதை பலரும் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த வகையில் ஒன்பதாக அமைந்த, சிறப்புபெற்ற சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    * சோமவார விரதம்

    * திருவாதிரை விரதம்

    * உமாகேஸ்வர விரதம்

    * சிவராத்திரி விரதம்

    * பிரதோஷ விரதம்

    * கேதார விரதம்

    * ரிஷப விரதம்

    * கல்யாணசுந்தர விரதம்

    * சூல விரதம்

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அருளாசி இன்றும் பொங்கல் பண்டிகைக்கு பக்தர்கள் கடைபிடிக்கும் ஒரு மிகப்பெரிய வழிபாடாக மாறி உள்ளது.
    காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போகி பண்டிகையன்று காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் வழங்கிய அருளாசி இன்றும் பொங்கல் பண்டிகைக்கு பக்தர்கள் கடைபிடிக்கும் ஒரு மிகப்பெரிய வழிபாடாக மாறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காமாட்சியம்மன் கோவி லுக்கு வந்த மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்க ளிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.

    “இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி, அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.

    பெரியவர் அவரிடம், “அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,” என்று சொல்லி விட்டார்.

    அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

    பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். அம்பிகையை யும் சாகம்பரியாக தரிசித்த பெரியவர் பக்தர்களிடம், “ பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம் பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன் பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று சொல்லி ஆசியளித்தார்.

    நடமாடும் தெய்வமான பெரியவர் சொன்ன வழியில் அம்பாளை சாகம்பரியாக தியானித்து வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

    நிம்மதி சந்தோ‌ஷம் நம் அனைவரின் வீட்டில்!

    பொங்கலோ பொங்கல்!
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நாளை மறுநாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று அதிகாலை நடை திறப்பு, அய்யாவுக்கு பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பால.பிரஜாபதி அடிகளார் திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்குதல், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் நடக்கிறது. விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவில் 16-ந்தேதி இரவு அய்யா வைகுண்ட சாமி பரங்கி நாற்காலியில் வலம் வரும் நிகழ்ச்சி,

    17-ந்தேதி அய்யா வெள்ளை சாத்தி அன்ன வாகன பவனி, 18-ந்தேதி பூஞ்சப்பரம் வாகன பவனி, 19-ந்தேதி பச்சை சாத்தி சப்பர வாகன பவனி, 20-ந்தேதி கற்பக வாகன பவனி, 21-ந்தேதி சிவப்பு சாத்தி கருட வாகன பவனி ஆகியவை நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 22-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி, 25-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
    மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
    ஜனவரி மாதத்தில் உள்ள மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு அளவேனும் திருப்பிக் கொடுங்கள். இந்த மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

    2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மூன்று மைத்ர முகூர்த்த நாட்கள் வருகின்றன. வருகிற 20ம் தேதி மதியம் 2 மணி முதல் 2.55 வரை மைத்ர முகூர்த்தம். 21ம் தேதி மதியம் 1.10 முதல் 3.10 மணி வரை மைத்ர முகூர்த்தம்.

    மைத்ர முகூர்த்த நாளில், கடன் வாங்கியவரை சந்தித்து அந்தத் தொகையைக் கொடுக்க இயலாத நிலை இருந்தால், நாம் கொடுக்க திட்டமிட்டிருந்த தொகையை சுவாமிப் படத்துக்கு முன்னே வைத்துவிடுங்கள். மைத்ர முகூர்த்த நேரத்தில் சுவாமி படத்துக்கு முன்னே வைத்துவிட்டு, அன்றைய நாளிலோ அதையடுத்த நாளிலோ வழங்குங்கள். சீக்கிரமே கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ்வீர்கள்!
    ×