என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.

    “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோவில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோ‌ஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.

    இக்கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக் கரசரும் திருஞான சம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாக ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.

    தேரோட்டத்தினை முன்னிட்டு கோவிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் கடந்த புறப்பட்டு அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறுகிறார். தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜ வீதிகளில் நடைபெறுகிறது.

    தேரோட்டம் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வருவார்கள் என்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவாரூர் தியாராஜர் தேரானது மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. இத்தேர் பீடம் உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மீது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகளால் 60 அடி உயரத்திற்கு கோபுரம் எழுப்பப்பட்டு 96 அடி உயர தேராக காட்சி அளிக்கும். தேர் கோபுரத்தினை சுற்றி சுமார் 5 டன் எடையுள்ள வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிக்கப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 450 டன் என கூறப்படுகிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியிருப்பதாவது:-

    ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதை யொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும்.

    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் முன் முகக்கவசம் அணிந்து வரவும்.

    வழிகாட்டு நெறிமுறைகள் அமுலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கந்தப் பிரதோஷம்:- சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் ‘கந்தப் பிரதோஷம்’. இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    சட்ஜ பிரபா பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    அஷ்டதிக் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது ‘நவக்கிரகப் பிர தோஷம்’. இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அரு ளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம்:- அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
    இறைவழிபாட்டில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்த இறைவனுக்கு எந்த மலரை சாற்றி வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும் என்று அறிந்து கொள்ளலாம்.
    தாமரை - சிவன்

    கொக்கிரகம் - திருமால்

    அலரி - பிரம்மன்

    வில்வம் - லட்சுமி

    நீலோத்பவம் - உமாதேவி

    கோங்கம் - சரஸ்வதி

    அருகம்மலர் - விநாயகர்

    செண்பகமலர் - சுப்பிரமணியர்

    நந்தியாவட்டை - நந்தி

    மதுமத்தை - குபேரன்

    எருக்கம் - சூரியன்

    குமுதம் - சந்திரன்

    வன்னி - அக்னி
    கும்பகோணம் - மாயவரம் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘ஆடுதுறை’ எனப்படும் ‘திருவாவடுதுறை’ திருத்தலம்.
    கும்பகோணம் - மாயவரம் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘ஆடுதுறை’ எனப்படும் ‘திருவாவடுதுறை’ திருத்தலம்.

    இங்கு மாசிலாமணிநாதர் கோவில் உள்ளது. இத்தல அம்பாளின் திருநாமம், ‘ஒப்பிலாமுலையம்மை’ என்பதாகும். இங்கு தன்னுடைய தந்தையின் வேள்விக்காக திருஞானசம்பந்தர், இறைவனை வேண்டி பதிகம் பாடி பொற்கிழி பெற்றார்.

    சம்பந்தரின் பாடலால் உருகிய ஈசன், 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.
    இறைமகனாகிய இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவற்றில் ‘அறுவடை நாள்’ எனும் உவமை முக்கியமானது. அதற்குமுன் அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.

    இயேசு கலிலேயா பகுதியில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். ‘கடவுளின் அரசாங்கம் குறித்துக் கூறுகிறீர்களே, அது எப்படிப்பட்டது’ என மக்கள் கூட்டத்திலிருந்து சிலர் கேட்டனர். அதற்கு இயேசு, “புதையலைத் தேடிக்கொண்டிருந்த ஒருவர், மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அது புதையல் என்று அவருக்கு உறுதியாய்த் தெரிந்தது. உடன் அதைப் பத்திரமாய் மூடிவைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய், தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.” என்றார். அடுத்து அவர், “வணிகர் ஒருவர் சிறந்த முத்துகளைத் தேடிச் செல்கிறார். அப்போது விலை உயர்ந்த முத்து ஒன்றைக் கண்டார். உடன் அவர் போய்த் தமக்குள்ள அனைத்தையும் விற்று, அதை வாங்கிக்கொண்டார். தந்தையின் அரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்” என்றார்.

    பின்னர் கடவுளை நல்ல விதைகளைப் பூமியில் விதைக்கும் விவசாயியாக உருவகப்படுத்தி, இயேசு வேறொரு உவமையை மக்களுக்குச் சொன்னார்: “வானுலக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒருவரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம். நல்ல விதைகள் தூவப்பட்ட வயலைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, பயிர்களைப்போல் தோற்றம் காட்டிய களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், அந்த மனிதருடைய ஊழியர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள். அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?” என்று கேட்டார்கள்.

    உடன் அவர் “இது எதிரியின் வேலை” என்றார். அதற்கு ஊழியர்கள், “நாங்கள் போய் களைகளைப் பிடுங்கி எறியட்டுமா?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கி விடுவீர்கள். அதனால் அறுவடைநாள் வரும்வரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும். அறுவடைநாள் அன்று, அறுவடை செய்கிறவர்களிடம், முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துவிடுவதற்காகக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேருங்கள் என்று சொல்வேன்” என்றார். இந்த உவமையைக் கேட்ட மக்கள் மனத்தெளிவு பெற்றவர்களாக முகம் மலர்ந்தனர். ஆனால் சீடர்களோ புரிந்தும் புரியாதவர்களைப்போல நின்றனர்.

    அதன்பின்பு இயேசு அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது சீடர்கள் அனைவரும் அவரருகே வந்து அமர்ந்து “ஆண்டவரே, கோதுமை வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு மேலும் விளக்கிக் கூறுங்கள்’’ என்று கேட்டனர். புன்முறுவலோடு அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.

    “இந்த உலகம்தான் வயல். நல்ல விதைகள், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள். மானிட மகன் நல்ல விதைகளை விதைக்கிறார். களைகளை விதைக்கும் பகைவன், தீயோனாகிய சாத்தான். அறுவடை, உலகின் முடிவு. அறுவடை செய்வோர் கடவுளின் ஊழியர்களாகிய வானதூதர்கள். எவ்வாறு களைகளைத் தனியே பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும், நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களை நெருப்புச் சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள். கேட்கச் செவியுள்ளோர் இதைக் கேட்கட்டும்” என்றார்.
    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பக்தர்கள், கரும்புத்தொட்டிலை வழிபட்டனர்.
    நிலக்கோட்டை இந்து உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள மண்டகபடியில் அமர்ந்து அருள்பாலித்தார். பின்னர் வாணவேடிக்கையுடன் மாரியம்மன் கோவிலில் இருந்து நகர்வலம் தொடங்கியது.

    நிலக்கோட்டை மெயின் பஜார், நால்ரோடு, நடராஜபுரம் தெரு, சவுராஷ்டிரா பள்ளி, பெரிய காளியம்மன் கோவில் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    இதனையடுத்து பத்ரகாளியம்மன் மன்றம் மண்டகப்படியில் அம்மன் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். அப்போது, தீச்சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதேபோல் பக்தர்கள், கரும்புத்தொட்டிலை வழிபட்டனர். இந்த விழாவில் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின் முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).
    உலகில் ஏற்பட்ட முதல் உறவு கணவன், மனைவி என்ற குடும்ப உறவுதான். இந்த உறவுக்கு இஸ்லாத்தில் மிக அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, உயரிய நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாம் ஓரு வாழ்க்கை நெறியாகும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவது போல் குடும்ப வாழ்க்கை மலரவும், அதன் மூலம் அமைதியான ஆக்கப்பூர்வமான வாழ்க்கை கட்டிடத்தைக் கட்டமைக்கவும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

    எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முதல் படி தனிமனித, குடும்ப சீர்திருத்தம் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனையாகும். இந்த முதல் படியைப் புறக்கணித்து உருவாகும் எந்த சீர்திருத்தமும் நிலையான சீர்திருத்தமாக அமையாது. திருக்குர்ஆன், வீட்டை அமைதி பெறும் இடமாக சித்திரிக்கிறது. எனவே வீட்டில் அமைதியில்லையேல் நாட்டில் ஏது அமைதி? குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவதும் இறைக்கட்டளை என்று இறைமறை போதிக்கிறது.

    ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 66:6)

    குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவது குடும்பத்தலைவனின் மிக முக்கியமான பொறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் எஜமானின் பொருளுக்குப் பொறுப்பாளனாவான். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

    இவ்வுலகில் சிறந்த ஒழுக்க முறையிலும், இறையச்சத்தின் அடிப்படையிலும் வாழும் மக்களை நாம் விட்டுச் செல்லவேண்டும். இவர்களின் மூலமாக வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவவேண்டும். மறுமையில் அமைதிப் பூங்காவாகிய சொர்க்க சோலையில் குடும்பத்துடன் வாழும் பேற்றைப் பெறவேண்டும்.

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மனிதன் இறந்துவிடும்போது அவனது செயல்களும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: மிஷ்காத்)

    அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: ‘மேலும் அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக் கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன’. (திருக்குர்ஆன் 30:21)

    மகிழ்ச்சியான குடும்பம் உருவாக முதலாவது அடிப்படை கணவன், மனைவி உறவுகளில் அன்பும், கருணையும், பாசமும் மலர வேண்டும். தம்பதிகளுக்கிடையே அமைதி நிலவ அவர்களுக்குள் அன்பையும், கருணையையும் அல்லாஹ் உருவாக்குகிறான் என்பதை மேற்குறிப்பிட்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது.

    இரண்டாவதாக: கணவன், மனைவி இருவரும் இஸ்லாம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற கடமைகளையும், உரிமைகளையும் உணர்ந்து பேணுபவர்களாக இருக்கவேண்டும்.

    கணவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. அவ்வாறே மனைவியும் கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. இந்த அடிப்படைக் கல்வியை இருவரும் கற்று, சரிவர உணர்ந்து செயல்படவேண்டும். இருவரில் யாராவது குறை செய்தாலும் குடும்பம் சீர்பெறாது.

    இதற்குக் குர்ஆன் கூறும் அழகான எடுத்துக்காட்டு ‘ஒருவர் மற்றவர்க்கு ஆடையாக அமைய வேண்டும்’ என்பதே. ஆக இருவரும் இந்த ஆடையை அணியவேண்டும். அக ஒழுக்கங்களாகிய மானம், மரியாதை பேணப்படவேண்டும். புற அபாயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும்.

    மூன்றாவதாக: குடும்ப சீர்திருத்தத்தின் தொடக்கம் கணவன், மனைவியிலிருந்து தொடங்கி பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், சமூகம் என்று பரவவேண்டும். தன்னை மறந்து பிறரின் சீர்திருத்தத்திற்காக உழைப்பது பெரும் மடத்தனமாகும். ஆக தொடக்கம் தன்னிடமிருந்துதான்.

    நமது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். தம்பதிகள் இருவரும் இஸ்லாமிய வாழ்க்கையின் வடிவங்களாய்த் திகழ வேண்டும். மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத கல்வி எந்தப் பயனும் அளிக்காது. ஒருவர் மிக அழகாகச் சொன்னார், ‘கல்வி - செயலின் வீட்டைத் தட்டும், பதில் வரவில்லையெனில் திரும்பி விடும்’.

    நமது செயல் சான்றுதான் வீட்டில் பிள்ளைகள் மத்தியில் சாதக அல்லது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    பெற்றோர்கள் என்ற வகையில் குடும்பத்தில் உலக செல்வச் செழிப்பை மட்டும் பார்க்காமல் அவர்களின் ஈருலக செழிப்பும் நமது இலக்காக இருக்கவேண்டும். இல்லையேல் மறுமையில் நமது பிள்ளைகள் நம்மைச் சபிப்பவர்களாக மாறிவிடக்கூடும்.

    இஸ்லாமியக் குடும்பத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பம். அன்பும், பாசமும், பரிவும் நிறைந்த முழுமையான குடும்பம் அது. பிள்ளைகளின் பயிற்சிக்கும், பேரப்பிள்ளைகளின் பயிற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
    மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
    மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

    அம்மாச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது திருக்கொடி கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்யாணசுந்தரம், மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கொரோனா பரவல் எதிரொலியாக குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்க கூடாது எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 490 கோவில்கள் உள்ளன. இதில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை குமாரகோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    இந்த கோவில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இதற்கிடையே நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறு. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட கோவில்களுக்கு, தமிழக அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதம், அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தவோ, தீர்த்தம் கொடுக்கவோ கூடாது. திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிர்பந்தம் உண்டு என்றால், மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தலாம் என கூறியுள்ளது.

    மேலும், கோவிலுக்கு வருகிற பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், கைகளை நன்றாக கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் கூடாமல் இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில்.
    பழங்கால சோழ வளநாட்டின் காவிரியின் தென்கரை தலங்களில் தலப் புராண வரலாறும், தேவார பாடல்களும் பெற்ற சிறப்பும் சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் உள்ள ஊர் தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள இறைவன் உமாமகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலப் பெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொண்டு திருமண கோலத்தில் விளங்குவதால் இவரை கல்யாண சுந்தரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து இறைவனை பூமிதேவி, பூஜித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும், கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

    இத்தலத்தில் பூமி தேவியால் ஏற்படுத்தி நீராடப்பெற்ற பூமி தீர்த்தமும், பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தமும், விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஞான கூபம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தத்தில் நீராடுவோர் குஷ்டநோயும், பிற பாவங்களும் நீங்கி நலம் பெறுவர் என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் அரச மரமாகும்.

    உமாமகேஸ்வர பெருமானை தேவர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமி தேவிக்கு அசுர பயம் போக்கி அருள் செய்ததும், சந்திரகுலமன்னன் புரூரவசுவின் குஷ்டநோய் போக்கி அருள் செய்ததும், கவுதம முனிவருக்கு ஆனந்த தாண்டவ காட்சி அளித்து அருளியதும் இத்தல பெருமானின் அற்புதங்களாகும்.சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிபட்டதால் கோனேரிராஜபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு.

    திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூஜித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் பூமிதேவி, துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால், வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார்.

    திருமாலை வணங்கிய பூமி தேவியை ஆசீர்வதித்து அவளது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ, காவிரியின் கரையில் உள்ள அரசு வனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அசுர பயம் நிரந்தரமாக நீங்க பெறுவாய் என ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே பூமிதேவி, காவிரிக்கரையில் உள்ள அரச வனத்தின் கண் அரச மரத்தின் கீழ் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவ்விடத்தில் கோவில் எடுப்பித்து சிவாகம முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள்.

    பூமி தேவியின் பூஜையை கண்டு உணர்ந்த பெருமான், அவருக்கு காட்சி தந்து அவரது அசுர பயத்தை போக்கி நிலைபெறும் பேரளித்தார். பூமிதேவி வழிபட்டதால் இத்தலம் பூமிசுரம் எனவும் பெயர் விளங்கியது. பூமி தேவியால் நிர்மாணிக்கப் பெற்ற தீர்த்தமே பூமி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தலப் பெருமானை வைகாசி மாதத்தில் பூமி தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வழிபட்டால் அசுர பயம் நீங்கும். பல நன்மைகளும் பெற்று இன்புறலாம் என தல புராணம் கூறுகிறது.

    கவுதம முனிவரும், மூவாயிர முனிவர்களும், சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு தரிசிக்க பேரார்வம் கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையில் உள்ள அரசவனத்தில் சிவபெருமானை நோக்கி பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் கடும் தவம் சித்தி பெற்றது. சிவபெருமான் அவர்களது தவத்திற்கு இரங்கி உமாதேவியுடன் தோன்றி காட்சி அளித்தார்.

    அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த கவுதமமுனிவர், சிவபெருமானை நோக்கி பெருமானே! நாங்கள், உமது ஆனந்த தாண்டவத்தை காணவே தவம் புரிந்தோம். எமக்கு அதனை காட்டியருளுக என வேண்டினார் அதற்கு சிவபெருமான், முனிவர்களே உங்கள் எண்ணம் ஈடேறும். கவலைப்படாதீர். யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்த தாண்டவ காட்சியை காட்டி அருளுவோம். அப்போது நீங்களும் கண்டு தரிசிக்கலாம் எனக்கூறி மறைந்தார்.

    அதன்படியே பூமி தேவிக்கு ஆனந்த தாண்டவ காட்சி அருளிய காலத்தில் கவுதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர் அத்தாண்டவ காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து மகிழ்ச்சியில் திளைக்க இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ மூர்த்தியாக(நடராச பெருமான்) எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கோவிலின் வெளி மண்டபம் நடராசர் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என ஐந்து தனித்தனி அமைப்புகளை கொண்டது. இத்திருக்கோவிலின் கர்ப்பகிரக விமானம், சோழர் கால சிற்பக்கலை பாணியை கொண்ட அமைப்பாகும். இக்கோவிலின் கர்ப்பகிரக ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பு, திருநாகேஸ்வரம் கோவிலில் ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பை ஒத்துள்ளது சிந்திக்கத்தக்கது.

    திருநாகேஸ்வரம் திருக்கோவிலை கற்றளியாக முதன் முதலில் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழன். கர்ப்பகிரக கோஷ்டங்களில் தெற்குப்பக்கம் தட்சிணாமூர்த்திக்கு அடுத்து கோவிலை கற்றளியாக திருப்பணி செய்த செம்பியன்மாதேவி கண்டராதித்த சோழன், சிவபெருமானை வழிபடுவது போன்ற படைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. அதன்கீழ் செம்பியன் மாதேவி தன் கணவன் கண்டராதித்தன் நினைவாக இக்கோவிலை எடுப்பித்த கல்வெட்டு செய்தியும் செதுக்கப்பட்டுள்ளது.

    மூலவர் உமாமகேஸ்வரர், மிக அழகிய லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொள்ளும் கல்யாண சுந்தரராக, அம்பிகை தேகசுந்தரி மணப்பெண் கோலத்தில் எதிர், எதிராக உள்ளனர் என்பதை விளக்குவது தான் இக்கோவில் அமைப்பு என கூறப்படுகிறது.

    சிவபெருமானும், உமாதேவியும் திருவேள்விகுடியில் திருமண வேள்வியும், திருமணஞ்சேரியில் மாலை மாற்றியும், திருநல்லத்தில் திருக்கல்யாணமும் செய்து காட்சி தந்தனர் என்ற செவிவழிச் செய்தியும் வழங்கி வருகிறது. இம்மூன்று தலத்தையும் வழிபடுவோரின் திருமணம் தடையின்றி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் பெருமையும், புனிதமும் காசியை போன்ற சிறப்புடையது ஆகும்.

    இக்கோவில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலின் இணை கோவிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

    நந்தி இல்லாத கோவில்

    பூமிதேவி வழிபட்ட பூமீஸ்வரம் என்னும் திரு நல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களாள் வழிபடப் பெற்ற தலங்கள் நாகம்பாடி, அன்னியூர், கருவேலி, வயலூர், சிவனாரகரம், அகலங்கண், புதூர், நல்லாவூர் ஆகிய ஊர்களில் உள்ளது. 8 தளங்களுடன் திருமாலால் வழிபடப்பெற்ற திருவீழிமிழலையும், பிரமனால் பூஜிக்கப் பெற்ற வைகல் தலமும் உள்ளன. திருநல்ல தல பெருமானை வழிபடும் முன் அஷ்டதிக்கு தலங்களை வழிபட்டு பின் திருநல்லமுடையாரை வழிபடுவது சிறப்புடையது, நற்பயன் அளிக்கும் என தல புராணம் கூறுகிறது.

    திருநல்லம் திருக்கோவிலை கருங்கல் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இத்திருக்கோவில் மேற்கு நோக்கிய அமைப்புடையது. காசி, ஸ்ரீசைலம் ஆகிய கோவில்களும் மேற்கு நோக்கிய அமைப்புடையவை. திருக்கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அதன் கீழ்க்கரையில் கோவிலின் முன்புறம் தலவிருட்சமான அரசமரம் உள்ளது. கோவிலின் முன் நுழைவு வாயில், கட்டை கோபுரமாக உள்ளது. அதன் வழியே சென்றால் வெளிப்பிரகார சுற்று அமைந்துள்ளது.

    அதன் இரு பக்கங்களிலும் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் வலப்புறமும், முருகன் கோவில் இடப்புறமும் அமைந்துள்ளன வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் கோவில் ஒரு திருச்சுற்றுடன் கிழக்கு நோக்கி தனி கோவிலாக அமைந்துள்ளது. அதனை அடுத்து புரூரவஸ் மன்னனால் பூஜிக்கப்பெற்ற வைத்தியநாதர் கோவில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோவிலின் முன்பு நந்தி இல்லை. நந்தி இல்லாத கோவிலில் உள்ள பெருமானை தியானித்து வழிபட்டால் ஒன்றுக்கு நூறு மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பது புராண கூற்றாகும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோவிலை சென்றடையலாம்.
    திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் ஆகிய திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.
    திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் ஆகிய திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர். நந்தியம்பெருமாளுக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காட்சி அளித்தார். மாலை ஐயாறப்பர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உத்தரவின்பேரில் தர்மபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாளன்று இரவு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி காவிரி ஆற்றின் வழியாக சென்று ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை நம்பெருமாளுக்கு ஆஸ்தான மண்டபத்தில் தயிர் சாதமும், மாவடுவும் படைத்தனர்.

    மேலும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து நம்பெருமாள் அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மதியம் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

    இந்த விழாவில் ஜீயபுரம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். பின்னர் மாலை நேரத்தில் பல்லக்கில் புறப்பாடான நம்பெருமாள் காவிரி ஆற்றின் வழியாக ெசன்று ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்தார்.
    ×