என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
    காளையார்கோவில் அருகே உள்ள அரியாகுறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அது போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர்கள் திருக்கொடியை ஏற்றி வைத்தனர். அதன்பிறகு கொடி மரத்துக்கு மகா தீபாராதனை காண்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.
    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது ஆழித்தேர். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.

    திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 220 டன். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.

    இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு, அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் தேரின் மொத்த எடை 350 டன்னாகும். தேரை இழுக்க 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 பொக்லின் எந்திரங்கள், 4 வீதிகளில் தேரை திருப்புவதற்கு முட்டுக்கட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.

    தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஐதீகம்.
    திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் கோவிலில் ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கொடியை ஏற்றி வைத்தனர்.

    பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று எந்த தெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * சித்திரை மாத பவுர்ணமி எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்த நாள். அது ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

    * வைகாசி மாத பவுர்ணமி முருகப்பெருமான், ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். இந்த நாளில்தான் ‘வைகாசி விசாகம்’ வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

    * ஆனி மாத பவுர்ணமியன்று, காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நடத்தப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

    * ஆடி மாத பவுர்ணமி என்பது கஜேந்திர மோட்சம் நடைபெற்ற நாள். அம்மனை வழிபட உகந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை தரும்.

    * ஆவணி மாத பவுர்ணமி அன்று விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

    * புரட்டாசி மாத பவுர்ணமியும் சிறப்புக்குரிய நாள்தான். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம்.

    * ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

    * கார்த்திகை மாத பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    * மார்கழி மாத பவுர்ணமியில் வருவது ஆருத்ரா தரிசனம். அன்றைய தினம் நடராஜனின் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

    * தை மாத பவுர்ணமியில் தைப்பூசத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

    * மாசி மாத பவுர்ணமியில்தான் மாசி மக திருநாள் வரும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் உலகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

    * பங்குனி மாத பவுர்ணமியில்தான், பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான், முருகன் - வள்ளி திருமணம், சிவ -பார்வதி திருமணம், சீதா- ராமர் திருமணம் என தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும். இந்த நாளில் குலதெய்வ வழிபாடும் சிறப்புக்குரியது. இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
    நந்தியம்பெருமான் பிறப்பு விழாவையொட்டி திருவையாறிலிருந்து திருமழப்பாடிக்கு நந்தியம்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா புரான காலத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தியபெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால் போன்ற திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இரவு அறம்வளர்த்தநாயகி ஐயாறப்பர் ஆலயத்தில் நந்தியம் பெருமானுக்கும் பட்டாபிஷேகத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    நேற்று காலை 6 மணியளவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரி முழங்க திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழப்பாடிக்கு சென்றார். அப்போது வழி நெடுகிழும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி வைத்தியநாதன் சுவாமி கோவிலில் இரவு நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் இதை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை தருமபுரஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுர ஆதீனம் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் கல்கருட சேவை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவள்ளி தாயார் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இ்ந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வரத்தொடங்கினர் உற்சவராகவும் மூலவராகவும் அருள்பாலிக்கும் கல் கருடன் ஆண்டிற்கு இருமுறை மார்கழி மற்றும் பங்குனி திருவிழாக்களில் மட்டும் வீதிஉலா செல்வது வழக்கம்.

    நேற்று மாலை 6 மணி அளவில் மூலவர் கல்கருடனை சிறப்பு அலங்காரத்தில் வாகன மண்டபம் எழுந்தருளினர். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கல்கருட பகவான் எழுந்தருளினார். திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமையான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள பல்வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தார். இவர், இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். அதுபோல், காரைக்காலில் தங்கி இறைப்பணியாற்றிவந்தபோது, தமது 120-வது வயதில் காரைக்காலில் இயற்கை எய்தினார்.

    அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்க்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு 198-வது கந்தூரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியானது, அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில், மாலை 3 மணிக்கு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணி அளவில் கொடிமரத்தை சென்றடைந்தது. தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதிவுலா வரும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படும் நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். ஏப்ரல் 4-ந் தேதி இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
    ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க முன்னால் செல்ல 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்து ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
    காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஓராண்டுக்கு பிறகு கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க முன்னால் செல்ல 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்து ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) காலை மரத்தேர் திருவிழாவும், 26-ந்தேதி இரவு வெள்ளி மாவடி சேவை, 27-ந் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், முன்னாள் கோவில் மேலாளர் சீனிவாசன், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
    திருமால் எடுத்த அவதாரங்களில் எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
    தியான ஸ்லோகம்

    ஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்
    ஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம் ஸ்பலராமம் ஸதா பஜேஹம்.

    மூலமந்திரம்

    ஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.
    ஒருவரின் குடும்பத்தில் ‘பித்ரு தோஷம்’ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
    ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில், மனக் கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகத்தால் அவதிப்படும். அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரை பாதிக்கும். இந்த பாதிப்பைத் தான் ‘பித்ரு தோஷம்’ என்கிறார்கள்.

    ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவராகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும், அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும். ஆனால் ஒருவர் பாவம் செய்தவராகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்துக்களை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற குற்றங்களால் பிறருக்கு தீங்கு செய்வராக இருந்தால், அவரது இறப்புக்குப் பின் கண்டிப்பாக பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவரின் ஆன்மாவுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், அது நரக வேதனையில், பசி, தாகத்தால் அவதிப்பட்டு அல்லல்படும். அந்த ஆன்மாவுடைய வேதனையின் தாக்கம், குடும்பத்தை மிகுந்த வீரியத்துடன் தாக்கும்.

    ஒருவரது வீட்டில் பித்ரு தோஷம் இருந்தால், அந்த வீட்டில் லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும். குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். தான் வளர்க்கும் பசுக்களுக்கு உணவளிக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேரிடும். கெட்ட நட்புகள்தான் அருகில் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முடியாமல், வாழ்நாள் வீணாகும். யாகம், ஹோமம் எதுவும் செய்ய முடியாமல் தடை உண்டாகும்.

    தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகள் உருவாவர். பெற்றோரை அவமதிக்கும் செயல்கள் அதிகரிக்கும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும். அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும் என்று கருண புராணம் சொல்கிறது.

    இதுபோன்ற பிரச்சினை தீர வேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்ய வேண்டும். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். அதிகாலை முதல் இரவு 7மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். இதன் மூலம் உங்களுகான பித்ரு தோஷம் நீங்குவதுடன், எந்த தோஷமும் அண்டாது.
    தஞ்சாவூர் கோலவல்லி ராமன் கோவிலில் உள்ள கருடாழ்வார், தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரங்களைத் தாங்கி நிற்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட கருடாழ்வார் என்பதால், மற்ற இருகரங்களும் பெருமாளை சேவித்தபடி உள்ளன.
    பெருமாள் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும், அவர் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரங்களைத் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். அவருக்கு நேர் எதிரில் கருடாழ்வார், தன்னுடைய இரு கரங்களையும் கூப்பி பெருமாளை வணங்கிய நிலையில் காணப்படுவார்.

    ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவல்லி ராமன் கோவிலில், சங்கு சக்கரம் இல்லாத பெருமாளாக காட்சியளிக்கிறார். இவர் தன்னுடைய சங்கு, சக்கரத்தை, சுக்ராச்சாரியாரின் வேண்டுகோளின்படி கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, இந்த நிலையில் இங்கு காட்சி தருகிறாராம்.

    எனவே இங்குள்ள கருடாழ்வார், தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரங்களைத் தாங்கி நிற்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட கருடாழ்வார் என்பதால், மற்ற இருகரங்களும் பெருமாளை சேவித்தபடி உள்ளன. இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

    சூரியன்

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    பாச ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

    சந்திரன்

    ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

    செவ்வாய்

    ஓம் வீர த்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம ப்ரயோதயாத்.

    புதன்

    ஓம் கஜ த்வஜாய வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத ப்ரயோதயாத்.

    குரு

    ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தன்னோ குரு ப்ரயோதயாத்.

    சுக்கிரன்

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    தநுர் ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

    சனி

    ஓம் காக த்வஜாய வித்மஹே
    கட்க ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரயோதயாத்.

    ராகு

    ஓம் நாக த்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு ப்ரயோதயாத்.

    கேது

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரயோதயாத்.
    ×