என் மலர்

  ஆன்மிகம்

  கல்கருட சேவையில் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கல் கருட பகவான் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளிய காட்சி.
  X
  கல்கருட சேவையில் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கல் கருட பகவான் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளிய காட்சி.

  நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் கல்கருட சேவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் கல்கருட சேவை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவள்ளி தாயார் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இ்ந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வரத்தொடங்கினர் உற்சவராகவும் மூலவராகவும் அருள்பாலிக்கும் கல் கருடன் ஆண்டிற்கு இருமுறை மார்கழி மற்றும் பங்குனி திருவிழாக்களில் மட்டும் வீதிஉலா செல்வது வழக்கம்.

  நேற்று மாலை 6 மணி அளவில் மூலவர் கல்கருடனை சிறப்பு அலங்காரத்தில் வாகன மண்டபம் எழுந்தருளினர். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கல்கருட பகவான் எழுந்தருளினார். திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  Next Story
  ×