search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆழித்தேர்
    X
    ஆழித்தேர்

    ஆசியாவிலேயே மிகப்பெரிய 350 டன் எடை கொண்ட ஆழித்தேர்

    அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.
    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது ஆழித்தேர். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.

    திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 220 டன். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.

    இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு, அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் தேரின் மொத்த எடை 350 டன்னாகும். தேரை இழுக்க 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 பொக்லின் எந்திரங்கள், 4 வீதிகளில் தேரை திருப்புவதற்கு முட்டுக்கட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.

    தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஐதீகம்.
    Next Story
    ×