என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவ விழா இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
    சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவ விழா இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக விழா நடத்தப்படுகிறது.

    தினமும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை கோவிலின் முன் மண்டபத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்கு ஸ்ரீவஸ்தவா தம்பதியினருடன் வசந்தோற்சவத்தில் பங்கேற்கிறார். கடைசி நாளில், ஸ்ரீதேவி, பூதேவி, ராமச்சந்திரமூர்த்தி ஆகியோருடன் கல்யாண வெங்கடேஸ்வர சாமி, சீதா, ராமர், லட்சுமணன், அஞ்சநேயர், கிருஷ்ணசாமி, ருக்மணி சத்தியபாமா உற்சவங்கள் நடைபெறும்.

    உற்சவமூர்த்திகளை முக மண்டபத்திற்கு கொண்டு வந்து திருமஞ்சன ஆஸ்தானம் நடைபெறும்.
    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது.
    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.

    இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார்.

    அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்கும். கடன் தொல்லை ஒழியும்.
    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
    கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாவை நடத்தலாம் என்று அரசு அறிவித்ததன் காரணமாக உள் பிராகரத்திலேயே நடைபெற்று வருகிறது.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது. தொடர்ந்து 10-வது நாள் திருவிழாவும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் அழகர்கோவில் கள்ளழகர்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

    மயிலாடுதுறை ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.
    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் அந்த பகுதியில் உள்ள திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.

    அந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருஞானசம்பந்தர்- தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதனையடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சாமி-அம்மன் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
    விநாயகர் பெருமான் தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
    விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

    வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப்பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப்பிடிக்க வேண்டும்.

    வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டிற்குரிய தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார்.

    விரதமுறை: பகலில் உணவை தவிர்த்து, இரவு நேரத்தில் பழம், இட்லி சாப்பிடலாம்.

    பலன்:- கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து 4 கால யாக பூஜை தொடங்கியது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.

    ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
    இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
    அரதைபெரும்பாழி கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன. இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும்.

    திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார். அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம். ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகள். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி.  வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும்.

    இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

    சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் “ஹரித்துவார்” தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது.

    கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம். அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது.
    திறந்த வெளியில் நிற்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரின் மரசிற்பங்கள் பழுதடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்காக பெரியதேர், சிறியதேர் என 2 தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேருக்கு சித்திரை மாதமும், சிறிய தேருக்கு தை மாதமும் தேரோட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று பெரிய தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையொட்டி கடந்த மார்ச் 29-ந்தேதி முதல் தேர் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பின்னர் தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் தேரோட்டம் நடக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மழை, வெயில், பனியால் நனையாமல் பாதுகாக்கும் வகையில் பல லட்ச ரூபாய் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டு பாரமரிக்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என்று இருந்த நிலையில் அதன் மேற்்கூரை பிரிக்கப்பட்டு தேர் கட்டுமான பணி நடைபெற்றது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இ்தையடுத்து சாரங்கபாணி கோவில் தேரோட்டம் ரத்தானது. இதனால் தேர் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் நடைபெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மாதங்களாக திறந்த வெளியில் கிடக்கிறது. இதனால் மழை மற்றும் வெயில் காரணமாக தேரின் மரசிற்பங்கள் பழுதடையும் அவலம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே முன்பு இருந்தது போல் மீண்டும் தேரின் மரசிற்பங்களுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார்.
    புனித யோசேப்பு (Saint Joseph), ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத்தந்தை ஆவார். தமிழ் மரபில், ‘சூசையப்பர்’, ‘வளனார்’ ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகனாகிய கடவுளையும் அவரது தாயான கன்னி மரியாவையும் இவ்வுலகில் பாதுகாத்தவர் என்பதால், இவர் ‘திருக்குடும்பத்தின் தலைவர்’ என்று அறியப்படுகிறார். விவிலியம் இவரை நேர்மையாளர் என்று புகழ்ந்துரைக்கிறது. கன்னி மரியாவுக்கு நிகராக கடவுளின் மீட்புத் திட்டத்தில் யோசேப்பு ஒத்துழைத்திருக்கிறார். இவர் பேசியதாக நற்செய்திகள் எதுவும் கூறாததால், ‘அமைதியான புனிதர்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

    மனுவுரு எடுத்த இறைமகனுக்கு இவ்வுலகில் முன்மாதிரியான தந்தையாக செயல்பட யோசேப்பை கடவுள் முன்நியமனம் செய்தார். கன்னி மரியாவைத் திருமணம் செய்ததன் வழியாக இயேசுவின் தந்தை என்ற உரிமை யோசேப்புக்கு கிடைத்தது. ஆகவேதான், மரியாவிடம் பிறந்த இறைமகன், “யோசேப்பின் மகனாகிய இயேசு” (யோவான் 6:42) என்று அழைக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு யோசேப்பிடம் இருந்தது.

    மரியா கன்னியாக இருந்தபோதே இறைமகனை கருத்தாங்கியதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க யோசேப்பு என்ற கணவர் தேவைப்பட்டார். இவ்வாறு, மரியாவின் வயிற்றில் இருந்த இறைமகன் இயேசு கருவிலேயே கொல்லப்படாமல் பாதுகாப்பு பெற்றார். குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடியபோது, அவருக்கு மீண்டும் பாதுகாப்பு தேவைப்பட்டது. இவ்வாறு, மீட்புத் திட்டம் நிறைவேறும் வரை இயேசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை தந்தையாம் கடவுள் யோசேப்புக்கு அளித்திருந்தார். விண்ணகத் தந்தையின் பதிலாளராக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்கு கற்பிக்கும் பணியை புனித யோசேப்பு நிறைவேற்றினார்.

    பெத்லகேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு – ராகேல் தம்பதியரின் மகனாக கி.மு. 40ல் யோசேப்பு பிறந்தார். சிறு வயது முதலே நீதியின் மீது நாட்டம் கொண்டவராக விளங்கிய இவரிடம், தனிமையில் செபிக்கும் பழக்கம் இருந்தது. சிறுவனாக இருந்தபோதே, தொழுகைக் கூடத்திற்கு சென்று மறைநூலை வாசிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தையிடம் இருந்து தச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். யோசேப்பு இளமையிலும் பாவத்தின் நிழல் அணுகாமல் புனிதமான வாழ்வு வாழ்ந்தார். பதினெட்டு வயதில் தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த இவர், நாசரேத்தில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

    முப்பது வயதானதும் திருமணம் முடிக்குமாறு உறவினர்கள் வற்புறுத்தி வந்ததால், துறவற வாழ்வை விரும்பி பாலை நிலத்துக்கு சென்றார். அங்கு ஒரு முதியவரை சந்தித்த இவர், பின்னர் எருசலேம் கோவிலுக்கு சென்றார். அப்போது குரு செக்கரியா நடத்திய சுயம்வரத்தில், யோசேப்பின் கோலில் லீலி மலர்கள் மலர்ந்ததால் மரியாவின் கணவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் மண ஒப்பந்தம் நிகழ்ந்த பிறகு, மரியா நாசரேத்தில் இருந்த தமது உறவினர் வீட்டில் தாய் அன்னாவுடன் தங்கியிருந்தார். அங்கிருந்த வேளையில்தான், மரியாவுக்கு வானதூதர் தோன்றி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார். இதையடுத்து, தூய ஆவி நிழலிட்டதால் கன்னி மரியா கருவுற்றார்.

    மரியா கருவுற்றதற்கு காரணம் அறியாத யோசேப்பு அவரை விலக்கி விட எண்ணினார். ஆனால், வானதூதரின் அறிவுரையை ஏற்று மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின்னர், பெத்லகேமில் இயேசு பிறந்தார். நாற்பதாம் நாளில், யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தனர். கிழக்கில் இருந்து வந்த ஞானிகளால், குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடிய ஏரோதிடம் இருந்து தப்பிக்க திருக்குடும்பம் எகிப்துக்கு சென்றது. ஏரோது காலமானதும் மரியாவையும் குழந்தை இயேசுவையும் எகிப்தில் இருந்து அழைத்துக் கொண்டு நாசரேத்தில் சென்று குடியேறினார் யோசேப்பு. அங்கு மரியாவுக்கு நல்ல துணைவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு திகழ்ந்தார்.

    இயேசு தொழுகைக் கூட்டத்தில் மறைநூலை வாசிக்கவும், தச்சுத் தொழிலைக் கற்கவும் யோசேப்பு துணை நின்றார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ உதவினார். பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் இயேசு தங்கிவிட்ட வேளையில், மரியாவுக்கு ஆறுதல் அளித்து அவரைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தார். யோசேப்பின் தச்சுத் தொழிலில் கிடைத்த வருவாயிலேயே மரியாவும் இயேசுவும் உணவும் உடையும் பெற்றனர். இயேசுவும் இவரது தச்சு வேலைகளில் உதவி செய்தார். தமது அறுபத்தோராம் வயதில் நோயுற்ற யோசேப்பு, இறையன்னை மரியா அருகிருக்க இயேசுவின் மார்பில் தலைசாய்த்து பேறுபெற்ற மரணம் அடைந்தார்.

    வரலாற்றில்

    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இறையன்னை மரியாவின் கன்னிமையைக் காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்பட்டார். 4ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எகிப்து நாட்டு கோப்திய கிறிஸ்தவர்கள், ‘தச்சரான புனித யோசேப்பு’ என்ற விழாவை ஜூலை 20ந்தேதி கொண்டாடியதாக அறிகிறோம். 440ஆம் ஆண்டளவில் தோன்றிய ‘தச்சரான யோசேப்பின் வரலாறு’ என்ற நூல், பல்வேறு புனைவுகளுடன் புனித யோசேப்பு குறித்த தகவல்களை வழங்குகிறது.

    கன்னி மரியாவுக்கு அடுத்து ஆண்டவரிடம் செல்வாக்கு பெற்ற புனிதராக யோசேப்பு இருக்கிறார் என்ற கருத்தியல் 13ஆம் நூற்றாண்டில் ஆழமாக வேரூன்றியதால், அவரது பக்தி மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1414ல் கூடிய கொன்ஸ்தான்ஸ் பொதுச்சங்கத்தில், புனித யோசேப்பு குறித்து இறையியலாளர் ஜெர்சோன் வழங்கிய இறையியல் பார்வை திருச்சபையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1480ல் திருத்தந்தை 4ம் சிக்ஸ்து, புனித யோசேப்பு விழாவை ரோமை திருவழிபாட்டு நாள்காட்டியில் சேர்த்தார். 1481 மார்ச் 19ந்தேதி முதல் ரோமையில் சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவை, 1570ல் திருத்தந்தை 5ம் பியு திருச்சபை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

    புனித யோசேப்பின் முதல் மன்றாட்டுமாலை 1597ல் ரோமையில் வெளியானது. 1621 மே 8ந்தேதி திருத்தந்தை 15ம் கிரகோரி, புனித யோசேப்பு விழாவை கடன் திருநாளாக மாற்றினார். 19ஆம் நூற்றாண்டில் மார்ச் மாதம் முழுவதும் புனித யோசேப்பை சிறப்பு வணக்கம் செலுத்துகின்ற வழக்கம் தோன்றியது. 1870 டிசம்பர் 8ந்தேதி திருத்தந்தை 9ம் பியு, ‘புனித யோசேப்பு உலகளாவிய திருச்சபையின் புரவலர்’ என அறிவித்தார். 1889ல் திருத்தந்தை 13ம் லெயோ, திருச்சபை முழுவதிலும் புனித யோசேப்பு வணக்க மாதத்திற்கு அங்கீகாரம் வழங்கினார். 1955ல் திருத்தந்தை 12ம் பியு, ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவை மே 1ந்தேதி சிறப்பிக்கும் விதத்தில் அறிமுகம் செய்தார்.

    1962ல் திருத்தந்தை 23ம் யோவான், திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்தார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல் சீரமைத்த நாள்காட்டியின்படி, ‘கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு’ திருநாள் மார்ச் 19ந்தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2013 மே 1ந்தேதி, திருப்பலியின் மற்ற நற்கருணை மன்றாட்டுகளிலும் புனித யோசேப்பின் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்தார். 2020 டிசம்பர் 8ந்தேதி ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்ட அவர், அன்று முதல் 2021 டிசம்பர் 8ந்தேதி வரை ‘புனித யோசேப்பு ஆண்டாக’ சிறப்பிக்க ஆணையிட்டார்.
    புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் 184-வது ஆண்டு குருபூஜை விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் 184-வது ஆண்டு குருபூஜை விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரம ஹோமம், 8.45 மணிக்கு மகா அபிஷேகம், 9.45 மணிக்கு கலச புறப்பாடு, 10 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குருபூஜை விழாவை www.gurusithanandaswamy. org என்ற இணையதளத்தில் பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    எப்போதெல்லாம் சனி கிரகத்தால் கஷ்டங்களும் நேருகிறதோ, அப்போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
    கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ
    ரெளத்ராம்தகோ யம;
    ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந;

    என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொள்ளலாம்.

    சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும். எள் தீபமேற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானை மனதில் நினைத்து, காகத்துக்கு சனிக்கிழமையில் உணவிட்டால், கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்வார் சனி பகவான்.

    முடிந்த போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சனீஸ்வர பகவானை வேண்டுங்கள். பாபங்களில் இருந்து விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
    முனிவர்களின் வேண்டுகோள்படியும், பிரகலாதனுக்காகவும், 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக, நரசிம்ம பெருமாள் காட்சியளித்த தலம் சிங்கிரிக்குடி.
    முனிவர்களின் வேண்டுகோள்படியும், பிரகலாதனுக்காகவும், 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக, நரசிம்ம பெருமாள் காட்சியளித்த தலம் சிங்கிரிக்குடி. இந்த ஆலயத்தின் திருப்பணிகளை, ராஜராஜ சோழனும், விஜயநகர மன்னர்களும் செய்திருக்கிறார்கள்.

    நரசிம்ம பெருமாள், இரண்யகசிபுவை தன் மடி மீது படுக்க வைத்து வதம் செய்தது மேற்கு திசை நோக்கி என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்யகசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் மற்றும் பெருமாளை தரிசிக்க விரும்பிய மூன்று அசுரர்கள் உள்ளனர்.

    கருவறையின் உள்ளே மூலவரோடு, வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் காட்சி தருகின்றனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது இங்குதான்.

    கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில், தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து அபிஷேகபாக்கம் செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.
    ×