என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
“நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத்திருக்கவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி விடும்” (திருக்குர்ஆன் 24:30).
தன் வாழ்நாளில் ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்றால், கண்களையும் மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கண்கள் காணும் காட்சிகள், மனதில் ஆசைகளாக மாறி அதனை அடைய முற்படும் போது தான் மனிதன் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்கிறான்.
கண்களில் படும் அனைத்தையும் அடைந்துவிட வேண்டும் என்ற சுயநலமும் பேராசையும் தான் மனிதனின் பாவத்திற்கு காரணமாகின்றது. அதனை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
‘மனிதர்களின் கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைத்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்’ (திருக்குர்ஆன் 40:19).
தவறான பார்வைகளை தவிர்த்தாலே மனங்களும் அதன் எண்ண ஓட்டங்களும் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதற்கான வழிமுறைகளையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் அழகாக குறிப்பிடுகின்றான்:
“நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத்திருக்கவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி விடும்” (திருக்குர்ஆன் 24:30).
அதேபோன்று பெண்களையும் இவ்வாறு எச்சரிக்கின்றது திருமறை:
“நபியே! நம்பிக்கை உள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ்நோக்கி வைத்துக் கொள்ளட்டும், தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்” (திருக்குர்ஆன் 24:31).
பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு மட்டும் விட்டுவிடவில்லை தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சேர்த்தே எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
ஒருவரது பார்வை தற்செயலாக ஒரு பெண்ணின் மேல் விழுந்து விட்டாலும், அது அவன் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தாத வகையில் அந்தப்பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பெண் கவனத்தில் கொள்ளும்போது அவளும் பாதுகாப்பு பெறுகிறாள், பாவத்தை தூண்டும் செயலிலிருந்து மற்றவர்களையும் தடுத்து விடுகின்றாள். இந்த அறிவுரைகளை பின்பற்றும் போது பாவங்கள் நிகழாதவண்ணம் பரிசுத்தமான நிலை அங்கே உருவாகிவிடும்.
இந்த கட்டளைகளை மீறும் மனித குலத்திற்கு பெரும் தண்டனை மறுமை நாளில் காத்திருக்கிறது என்றும் இறைவன் எச்சரிக்கின்றான். மறுமைநாளில் கேள்வி கணக்கு கேட்கப்படும் சமயத்தில் அவனிடமிருந்து பதிலை அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் வாய்களுக்கு முத்திரை வைக்கப்பட்டு விடும், அவர்களின் கண்களும் செவிகளும், தோல்களும் பேச ஆரம்பிக்கும். மனிதன் செய்த பாவங்களை அவனின் ஒவ்வொரு உறுப்பும் சாட்சியாக விவரிக்கும்போது மனிதனால் அதை மறுக்க முடியாது.
“அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்” என்று திருக்குர்ஆன் (41:19,20) எச்சரிக்கை செய்கின்றது.
இணைவைத்தலை தவிர அத்தனை பாவங்களையும் மன்னிக்கக் கூடிய இரக்கமுள்ள இரட்சகன் அல்லாஹ். அவனிடம் இரு கரம் ஏந்தி பாவமன்னிப்பு கேட்போம். நம் பார்வைகளை பாதுகாத்து பாவங்களை தவிர்த்து வாழ்வோம். இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
மு. முகமது யூசுப், உடன்குடி.

தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாள மொழியில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மணவாளக்குறிச்சி :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்தது. அத்துடன் கோவிலில் 2 நாட்கள் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் கோவிலை விரிவாக்கம் செய்வது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்று மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது.
அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12 மணிக்கு பரிகார நவக்கலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை போன்றவை நடந்தது.
இதில் ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாள மொழியில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையர் அலுவலகம் முடிவு செய்யும் என கோவில் நிர்வாக வட்டாரம் தெரிவித்துள்ளது.

நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.
தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில், மனித மனதில் உறுதி குறைவதேயாகும். அதனால்தான் தர்மம் குறைந்து, அதர்மம் பலம் அடைகிறது. எத்தகைய தவறை நாம் செய்திருந்தாலும், அத்தகைய தோஷங்களினால் நமக்குத் துன்பங்கள் ஏற்படாமலிருக்க எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களை, வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.
அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது, திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும், தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய் தீபம் ஏற்றி வருவதேயாகும். இதற்கும் வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.
கிழமை, தோஷ பரிகாரம்:
ஞாயிறு: இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள்.
திங்கள்: மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறை, வெள்ளைப்புள்ளிகள் போன்ற சருமநோய்கள்.
செவ்வாய்: பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், “ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்”, முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள்.
புதன்: படிப்பில் தடை, “ஞாபக மறதி”, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்குப் பிடிபடாத நோய்கள்.
வியாழன்: ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை), தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்சனை.
வெள்ளி: தாம்பத்திய சுகக் குறைவு, கணவர் மனைவி அன்னியோன்யம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச் சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், பண விரயம்.
சனி: ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்சனைகள், ராகுவினால் ஏற்படும் பில்லி - சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள்.
விசேஷ குறிப்பு
1. ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றுவது விசேஷ நன்மைகளைத் தரும்.
2. நெய் என்று சொல்லி, லாபம் சம்பாதிப்பதற்காக கொழுப்பு போன்றவற்றைக் கலப்படம் செய்து விற்பவர்கள், இப்பிறவியிலேயோ அல்லது மறுபிறவிகளிலோ நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கரமான சரும நோய்கள், குஷ்ட நோய்கள் ஆகியவற்றிற்கு ஆளாவார்கள்.
ஆதாரம்: தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் “சாதாரண பரிகாரமாக இருக்கிறதே!” என்று எண்ணிவிடாதீர்கள்! சர்வதோஷ பரிகாரமான இதன் சக்தி மகத்தானது!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக பங்குனி மாதம் அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.
வைகாசி அமாவாசைக்குப் பின்னர் திங்கட்கிழமையான 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி 2-ம் நாள் திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.
திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் செயல் அலுவலர் இளமதி தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.
அதன்படி வைகாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திருமண தடை, வேலை கிடைக்காமை போன்ற பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் படிப்படியாக அனைத்தும் நிறைவேறும்.
தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
தமிழாக்கம்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா
க்ரஹதோஷமின்றி கடாஷீத் தருள்வாய் !
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.
குரு காயத்ரி மந்திரம்

வருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்|
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த வசந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார்.
அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ஸ்ரீரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
* தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு.
* உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.
* ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
* உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
* உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.
* ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.
* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் சொர்க்கம் பெறுவார்கள்.
* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர்.
கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்தானதும், அதன்தொடர்ச்சியாக பல பெரிய கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோவிலின் உள்ளேயே மிக எளிமையாக நடத்தப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் 2-ம் நாளான நேற்று ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது.
கிராமங்களின் காவல் தெய்வமாக இருப்பவர், ‘அய்யனார்’. பல கிராமங்களில் உயரமான உருவத்துடன், கையில் வாள் ஏந்தியபடி, முறுக்கு மீசையுடன் இவர் காட்சியளிப்பார். அவருக்கு முன்பாக குதிரை அல்லது யானை வாகனம் அமைந்திருக்கும். பல இடங்களில் அய்யனார்தான், ‘சாஸ்தா’ என்ற பெயரில், பலரது குடும்பங்களுக்கும் குலதெய்வமாக இருக்கிறார். இவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும். பெரும்பாலும் சாஸ்தா அல்லது அய்யனார் கோவில்கள், மிகச் சிறிய அளவிலேயே இருக்கும்.
ஆனால் திருப்பட்டூர் திருத்தலத்தில் உள்ள அய்யனார்கோவில் மிகப்பெரிய பிரகாரங்களுடன் அமைந்த தலமாக திகழ்கிறது. இத்தல அய்யனார், ‘அரங்கேற்ற அய்யனார்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது கையில் ‘ஞான உலா’ என்னும் ஓலைச்சுவடி இருப்பது சிறப்புக்குரியது. திருக்கயிலாயத்துக்கு நிகரான தலமாக திருப்பட்டூர் திருத்தலம் போற்றப்படுகிறது. அதற்கு காரணம், இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில். இது பிரம்மதேவன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த தலம் ஆகும். அதே போல் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இங்கு காசி விஸ்வநாதர் கோவில், மாரியம்மன் கோவில் போன்ற சிறப்புமிக்க தலங்களும் இருக்கிறது.
அதோடு திருப்பட்டூருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்ததுதான் ‘அரங்கேற்ற அய்யனார்கோவில்’. திருப்பட்டூர் ஊருக்குள் நுழையும் போதே இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும். தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் பூரணை-புஷ்கலா தேவியருடன் அய்யனார் வீற்றிருக்கிறார். பூமியில் வாழும் மக்கள் அனைவரும் அறியாமை என்னும் இருள் நீங்கி, கல்வி ஞானம் அடையும் வகையில் சிவபெருமான் உத்தரவின்படி, சேரமான் பெருமான் நாயனார் அருளியதுதான் ‘திருக்கயிலாய ஞான உலா’ என்னும் நூல். இந்த அரிய பொக்கிஷமான நூலை, மாசாத்தனார் என்னும் திருப்பெயரைக் கொண்ட அய்யனார் அரங்கேற்றிய தலம் இதுவாகும். அதன் காரணமாகத்தான், அவரது திருக்கரத்தில் ஓலைச்சுவடியை தாங்கி இருக்கிறார்.
இத்தலம் வந்து இந்த அய்யனாரை வேண்டுபவர்களுக்கு, கல்வி ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்திற்கு வரும் ஒருவர், தன்னுடைய வேண்டுதலை வைத்த 90 நாட்களில் அது நிறைவேறும் அதிசயத்தைக் காணலாம். அப்படி நிறைவேறும் வேண்டுதல்களுக்குப் பின்னர், சம்பந்தப்பட்டவர்கள், இங்குள்ள அய்யனாரின் வாகனமான யானைக்கு சிதறு தேங்காய் உடைத்து, ஜன்னல் வழியாக அய்யனாரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அய்யனாரின் வாகனமான யானை சிலை, ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.
வேண்டுதலைப் பொறுத்து, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைக்கும் வழிபாட்டு முறை இங்கு இருக்கிறது. திருமணம் விரைந்து நடைபெற 11 தேங்காய்கள் உடைக்க வேண்டும். குழந்தை வரம் கிடைக்க 9 தேங்காய்களை சிதறடிக்க வேண்டும். கடன் பிரச்சினைக்கு 7 தேங்காய்கள், உயர் கல்வியில் சிறந்து விளங்க 5 தேங்காய்கள் என்ற எண்ணிக்கையில் தேங்காய்களை சிதறு காய் போட வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்து வேண்டுதல்களும் விரைவிலேயே அய்யனாரால் பூர்த்தி செய்து வைக்கப்படும்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.

ஆனி மாத சஷ்டியையொட்டி பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆனி மாத சஷ்டியையொட்டி நேற்று பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சஷ்டியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பல்வேறு திரவியங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், அருணகிரிமலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், வேலூர் சக்தி நகர் முருகன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது குறைந்து அளவு பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி விழா நடைபெற்றது.
குடியாத்தம் அருகே கஸ்பா கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா புகழ்பெற்றது. தற்போது கொரோனோ ஊரடங்கு அமலில் உள்ளதால் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோவில் வளாகத்தில் வைத்து திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. பின்னர் சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது குறைந்து அளவு பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி விழா நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த விழா முடிவு பெற்றது.
தாசில்தார் வத்சலா தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.