என் மலர்
ஆன்மிகம்

முருகன்
பரமத்திவேலூர் பகுதியில் சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆனி மாத சஷ்டியையொட்டி பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆனி மாத சஷ்டியையொட்டி நேற்று பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சஷ்டியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பல்வேறு திரவியங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், அருணகிரிமலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், வேலூர் சக்தி நகர் முருகன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.

Next Story