என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கதவுகள் பூட்டப்பட்டதோடு, கோவிலுக்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்றபடி விருத்தாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா விருத்தாம்பிகை அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளான விருத்தாம்பிகை அம்மன், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்கள் ஓத கோவில் உட் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. வழக்கமாக தேரோட்டம் கோவில் முன்பு தொடங்கி நான்கு வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை வந்தடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக. இந்தாண்டு கோவில் திரு விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கோவில் கதவுகள் பூட்டப்பட்டதோடு, கோவிலுக்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்றபடி விருத்தாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூர திருவிழாவுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகோவில் மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூர விழாவையொட்டி வழக்கமான சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆனால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதைப்போல குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் இன்று ஆடிப்பூர திருவிழாவுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும்.

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமைப்பட்டுப்போன முழு மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார்.

    தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம்.

    தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும்படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.

    நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:7,8)என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது.

    பழைய ஏற்பாட்டுக் காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ, இரக்கத்தையோ காண்பிக்கவில்லை.

    பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் பாராட்டாமல் கடுமையான தண்டனையும், தேவ கோபாக்கினையும் மட்டுமே அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.

    ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார்.

    கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும், தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையா என ஏங்கித் தவித்த முழு மனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

    முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பைப் பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

    இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்(1 யோ:3:16) என்று வேதம் கூறுகிறது.

    பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

    அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்தக் கிருபையைப்பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.

    போதகர். அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, மண்ணரை,திருப்பூர்.
    ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவமும் ஒன்று. இந்த ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்தநிலையில் ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நேற்று மற்றும் இன்று (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். மேலும் தீமிதி விழாவுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. பராசக்தி அம்மன் பிரகாரத்தில் உலா வந்து குளத்தில் காட்சி அளித்தார். இதையடுத்து மாலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

    இந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
    மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.
    தட்சிணாய காலத்தின் முதல் மாதமான ஆடிமாதம் இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புஹார், வேதாரண்யம், கொடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள்.

    மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்கிறார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற இடம்தான்.
    ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.
    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன. அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடித்திருவிழாவின் 10-வது நாள் மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவதீர்த்தத்தில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.

    திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து நடைபெறுகின்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) இரவு 7 முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. வழக்கமாக ஆடி திருக்கல்யாண திருவிழாவின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள தபசு மண்டபத்தில் வைத்துதான் சாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தபசு மண்டகபடியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக கோவிலுக்குள்ளேயே இன்று நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.அதுபோல் இன்று நடைபெறும் மாலை மாற்றுதல் மற்றும் நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.
    யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்று, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சிற்பக் கலைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

    இரண்டாம் ராஜராஜனால், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது.

    இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.

    தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம் மற்றும் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும், ‘அழியாத சோழர் பெருங்கோவில்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.

    மூலவரின் கருவறை விமானம், ஐந்துநிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

    இங்குள்ள யானை- காளை சிற்பம் பிரசித்திப்பெற்றது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில், இரண்டு விலங்குகளுக்கும் ஒரே தலையை வடித்திருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இங்குள்ள தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறிதளவு கூட இடைவெளி இன்றி சிற்பங்களால் நிறைந்துள்ளன. நர்த்தனம் புரியும் கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம், வாத்தியக் காரர்களும், நாட்டியத்தின் முத்திரை காட்டும் பெண்களின் சிற்பங்களும் சில சென்டிமீட்டர் உயரமே கொண்டவை.

    இறைவனின் கருவறைக்கு முன்பாக ராஜகம்பீரன் திருமண மண்டபம் என்னும் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேர் சக்கரங்களோடு, ஒரு பக்கம் யானைகளாலும், மறு பக்கம் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் சிவாலயங்களில் மூலவரின் அருகிலேயே அம்மனுக்கு சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு அம்பாள் தெய்வநாயகியின் சன்னிதி, ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு வெளியே வலது புறம் அமைந்திருக்கிறது.

    ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியின் முன்பாக பலிபீடம் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த பலிபீடம் இது. இந்த படிகள், தட்டினால் ஒலி எழுப்பும் ‘இசைப்படிகள்’ ஆகும்.

    சாபங்கள், பாவங்கள் போக்கும் தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.
    தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு நேற்று ஆடிப்பூரம் காலை 11.24 மணிக்கு தொடங்கியதால், பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு, பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    அதனை தொடர்ந்து, கோவில் நுழைவுவாயிலில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், முருகன், வராகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, கோவிலில் இன்று (புதன்கிழமை) பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் விமரிசையாக நடத்தப்படும். சிகர நிகழ்ச்சியாக பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தன. கடந்த 7-ந் தேதி கருடசேவையும் 9-ந்தேதி சயன சேவையும் நடைபெற்றது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆடிப்பூர தேரோட்டமும் பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.

    மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு பட்டு வஸ்திரங்கள் சுவாமி-அம்பாளுக்கு அணி விக்கப்பட்டது.

    பின்னர் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் சிறிய அளவிலான தங்கத் தேரில் எழுந்தருளினார். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வடம் பிடித்து இழுக்க, கோவிலுக்கு உள்ளேயே தேரோட்டம் மிக எளிமையாக நடந்து முடிந்தது.

    ஆடிப்பூரத்தையொட்டி விமரிசையாக நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டும் எளிமையாக நடந்ததால் களை இழந்து காணப்பட்டது.
    ஆடிப்பூர நாளான இன்று கோவில்கள் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது. இருப்பினும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வந்தனர்.
    மதுரை :

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூர விழா, ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இந்த 2 விழாக்களும் உள் திருவிழாவாக நடைபெற்றது.

    இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்தப்பட்டது.

    இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடிப்பூர நாளான இன்று கோவில்கள் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது. இருப்பினும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாமல் பூட்டப்பட்டிருந்த வாசல் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.

    இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஆடிப்பூர நாளில் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவில் நடை மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு அவர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.

    பாபநாசம் கோவிலில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்யவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் விழாவுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இப்பகுதி சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பாபநாசம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் வரை தடை விதித்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று பாபநாசம் கோவிலில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்யவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் விழாவுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நாளை (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள்.
    அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளின் மனஸ்தாபங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நோன்யம் பெருகும். தங்களின் பிள்ளைகள் சார்பாக அவர்களின் பெற்றோர்களும் ஆண்டாளை வணங்கி இம்மந்திரத்தை துதிக்கலாம்.

    அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
    அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
    தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
    தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

    பொருள் : ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம் என்பதே இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
    ×