என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார்.
அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். தாயாரை கடவில் மகாலட்சுமி என்றழைக்கின்றனர்.
கேரளாவில் மகாலட்சுமிக்கென்று அமைந்திருக்கும் தனி கோவில் இது தான். லட்சுமி தாயார் இங்கு கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு நின்றிருக்கிறாள். கோவில் சுற்று பிரகாரங்களில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்திறங்கியதாக கருதப்படும் பகுதியில் இருக்கும் நீரை அருந்தி விட்டு, முகம், கை கால்களை கழுவிக்கொண்டு மகாலட்சுமியை நாராயணனுடன் தரிசித்தால் நீண்ட நாட்களாக திருமண தடை, தாமதங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.
கோவில் முகவரி
அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில்
பள்ளிபுரம்
ஆலப்புழை மாவட்டம்
கேரளா – 688541

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்வசம் தொடங்கி நடந்து வருகிறது.
திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வருகிற 25-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்கிறார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளலும், பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடும் நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதேபோல் 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. கார்த்திகை மாதத்தில் (நவம்பர் - டிசம்பர்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கார்த்திகை 6 (22.11.2021) திங்கள் திரிதியை திருவாதிரை அமிர்த காலை 10.05-10.30
கார்த்திகை 9 (25.11.2021) வியாழன் சஷ்டி பூசம் அமிர்த காலை 10.30-11.30
கார்த்திகை 13 (29.11.2021) திங்கள் தசமி உத்திரம் சித்த காலை 10-10.30
கார்த்திகை 15 (1.12.2021) புதன் துவாதசி சித்திரை சித்த காலை 9-10.30
கார்த்திகை 16 (2.12.2021) வியாழன் திரயோதசி சுவாதி அமிர்த காலை 10.30-11.30
கார்த்திகை 20 (6.12.2021) திங்கள் துவிதியை மூலம் சித்த காலை 6-7.30
கார்த்திகை 24 (10.12.2021) வெள்ளி சப்தமி சதயம் சித்த காலை 6-7.30
கார்த்திகை 27 (13.12.2021) திங்கள் தசமி ரேவதி சித்த காலை 6.30-7.30

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து நடந்து வந்த காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நேற்று நிறைவடைந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை யாகம், மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், மாலை கலச ஸ்தாபனம், பூஜை, ஜபம், ஹோமம், நைவேத்தியம், ஆரத்தி ஆகியவை நடந்தது.
அதில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஹோம மகோற்சவத்தின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்), சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.
விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.
விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக்கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.
மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத சங்காபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை 9 மணியில் இருந்து சங்கல்பம், யாக பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, மாலை 5 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு சந்தன அலங்காரம் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, இரவு 8 மணியளவில் உற்சவர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளேயே வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குருப்பெயர்ச்சி விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நேற்று நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் இருந்து கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் 14-ம் தேதி தொடங்கிது. இந்த திருவிழா 23-ந் தேதி வரை நடக்கிறது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.

காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலாக இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. ராமானுஜரின் சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோவிலில் ஸ்ரீவசநவபூஷணம் முதலிய பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
தல புராணங்களின் படி முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதிக்கருகே வசித்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்பட்டனர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம், அதே நேரத்தில் அந்த யானைகளை கொல்வதோ மிகவும் பாவமான செயல். இப்படி இரண்டு விடயங்களையும் சிந்தித்து குழம்பிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியில் இந்த நரசிம்மர் கோவில் அமைத்தனர். அதன் பிறகு இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது.
கோவில் சிறப்புக்கள்
பொதுவாக கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும் பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். விஜயதசமி தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். பிறகு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.
இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோவிலுக்கு அனுப்பப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
காலை 6.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில்
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி – 620006

தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில் நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நேற்று ராஜ அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பிரகார உலா வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 19-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
வழக்கமாக மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள்.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.
அப்போது அருணாசலேஸ்வரருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா நாட்களில் சாமி உலா செல்லும் நிகழ்ச்சி வாகனத்தில் நடைபெற்றது.
நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று சாமி தூக்கும் பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர்.
தொடர்ந்து நேற்று இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.