என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 1890-ம் ஆண்டு ஓலை கொட்டகையுடன் கோவில் நிர்மாணிக்கப்பட்டது. தொடர்ந்து 1920-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலுக்கு 1972-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டது. தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலய பிரதிஷ்டை கடந்த ஆண்டு மார்ச் 12-ந் தேதி நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவிலில் முழு வேலைப்பாடுகள் முடிந்து வருகிற ஜனவரி மாதம் 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்தார். அதன்படி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி யாகசாலை முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) ரேணுகா தேவி, தனபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.
    “என் தேவன் தம்முடைய ஐசுவரி யத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).

    ஆண்டவர் மகிமையில் ஐசுவரியமுள்ளவர். அவர் உங்களுடைய குறைகளை எல்லாம் மாற்றி, அவைகளை நிறைவாக்குவார். சிங்கக்குட்டிகள் ஒரு வேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கலாம். ஆனால் ஆண்டவரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.

    கானாவூர் திருமண வீட்டிலே திராட்சை ரசம் இல்லாத ஒரு குறைவு வந்தது. திராட்சை ரசம் இல்லை என்றால் அங்கே சந்தோஷமில்லை. அந்த திருமண வீட்டில் குழப்பங்களும், மனதுயரங்களும் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் ஆண்டவரிடம் வந்தபோது, அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி அந்த குறையை நிறைவாக்கினார்.

    தண்ணீர் அற்புதமான ருசியுள்ள திராட்சை ரசமாய் மாறியது. அந்த வீட்டு சொந்தக்காரர் ஏற்கனவே கொடுத்த திராட்சை ரசத்தைவிட, ஆண்டவர் கொடுத்த திராட்சை ரசமே மிக மேன் மையாக இருந்தது.

    உங்கள் வாழ்க்கையிலும் பல குறைவுகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்யும்போது நிச்சயமாகவே உங்கள் குறைவுகளை நிறைவாக்கி ஆசீர்வதிப்பார்.

    நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.

    “உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும்” (ஏசா. 60:20).

    வேதாகமத்திலே அன்னாள் என்ற ஒரு பெண்ணுக்கு பிள்ளையில்லாத ஒரு துக்கமிருந்தது. ஆனால் அவள் ஒரு நாள் ஆண்டவருடைய பாதத்திற்கு வந்தாள். அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே தன்னுடைய குறையை நிறைவாக்குவார், தன் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று விசுவாசித்தாள். அப்படியே ஆண்டவர் ஆசீர்வாதமான சாமுவேலையும், இன்னும் ஐந்து குழந்தைகளையும் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார்.

    இஸ்ரவேல் தேசத்திலுள்ள ஒரு சிறிய ஆயி பட்டணத்தை பிடிக்க முடியாமல் யோசுவாவும், வீரர்களும் தோல்வியடைந்தார்கள். அப்போது, யோசுவா தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு முகங்குப்புற விழுந்து கதறினார். ஆண்டவர் அந்த கண்ணீரைக் கண்டார். தோல்வியின் காரணம் ஒரு ஆகான் என்பதை வெளிப்படுத்தினார். அந்த ஆகானை இஸ்ரவேலர் பாளயத்திலிருந்து அப்புறப்படுத்தி சுட்டெரித்தபோது, ஆண்டவர் அந்த தோல்வியை ஜெயமாய் மாறப்பண்ணினார். அதன் பின்பு யோசுவா ஆயி பட்டணத் தை மட்டுமல்ல, முழு கானானையும் சுதந்தரித்துக் கொண்டார்.

    பிரியமானவர்களே, குறைவு நேரமானாலும் சரி, துக்கத்தின் நேரமானாலும் சரி, தோல்வியின் நேரமானாலும் சரி, உங்களை நீங்களே ஆராய்ந்துப் பார்த்து, தடைகளை அப்புறப்படுத்தி தேவனோடு ஒப்புரவாகி விடுங்கள். உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளும்போது, உங்களுடைய தோல்வி ஜெயமாய் மாறும். நீங்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடும்போது, உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும்போது, உங்கள் குறைவுகள் எல்லாம் நிறைவாக மாறும்.

    “உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
    பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுஆவுடையார் கோவில் உள்ளது. சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ மூர்த்தியே இங்கு பொது ஆவுடையாராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் (சோமவாரம்) சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தைப்பொங்கல் அன்று மட்டுமே பகலில் நடை திறக்கப்பட்டு இருக்கும். மற்ற நேரங்களில் வாரத்தில் திங்கட்கிழமை இரவு மட்டுமே இங்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது.

    நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும் பகல் நேரத்தில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான சோம வார விழா கடந்த மாதம் (நவம்பர்) 22-ந் தேதி முதல் தொடங்கியது. நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவார விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல், மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கட்டுமாவடி, முத்துப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தங்கம், வெள்ளி, நெல்மணிகள், துவரை, உளுந்து மற்றும் நவதானியங்கள், தேங்காய், ஆடு, கோழி என பல வகையான காணிக்கைகளை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கினர்.

    நேற்று பகலில் நடை சாத்தப்பட்டிருந்தும் பக்தர்கள் கதவு முன்பு பூ மாலைகளை அணிவித்து வழிபாடு செய்தனர். நேற்றுநள்ளிரவு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், கிராம மக்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    திருவானைக்காவல் கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை மாத 4-வது சோமவார விழாவையொட்டி ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.

    அதன் மையத்தில் தங்கபிடிப்போட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டு அனைத்து சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டது. பின்னர் அந்த சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் தங்கபிடிப்போட்ட சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு ஜம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.
    டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    14-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * வீரநல்லூர் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
    * சந்திராஷ்டமம் - உத்திரம்

    15-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம்
    * பெரிய நகசு
    * சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
     
    16-ம் தேதி வியாழக்கிழமை :

    * பிரதோஷம்
    * சகல கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்க விழா
    * சந்திராஷ்டமம்- சித்திரை

    17-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி
    * திருப்பெறுந்துறை ஸ்ரீமாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி
    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    18-ம் தேதி சனிக்கிழமை :

    * பௌர்ணமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்

    19-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * ஆருத்ரா அபிஷேகம்
    * சித்தயோகம்
    * சிதம்பரம் நடராஜமூர்த்தி சிவகாமி சுந்தரி ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்

    20-ம் தேதி திங்கள் கிழமை  :

    * ஆருத்ரா தரிசனம்
    * அமிர்தயோகம்
    * நடராஜர் அபிஷேகம்
    * திருநெல்வேலி நெல்லையப்பர் தாமிர சபா நடனம்
    * திருவாலங்காடு சிவபெருமான் ரத்னசபா நடனம்
    * சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
    கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கமாக மார்கழி மாதம்தான் நடத்தப்படும். 19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம்.

    இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக  சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். கோவிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு 2000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
    ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் (கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு) மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றி ணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம்.

    ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர்.

    பலர் ஏகாதசி விரதத்தால் நன்மை பெற்றுள்ளனர். எட்டு வயது முதல் தொடங்கி எண்பது வயது வரை ஏகாதசி விர தம் மேற்கொள்ளலாம். உடல் மட்டுமின்றி உள்ளமும் இதனால் நன்மை பெறுகிறது. செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கிடைப்பதால் வயிறு சுத்தமாகிறது என்ற உண்மையை உணர்ந்தே மக்கள் விரதம் இருக்கின்றனர்.

    தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குரு வாயூர் அப்பன், துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு குவியும் பக்தர்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது. ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை.

    ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்டஏகாதசியே மிக விசேஷம்.

    ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாத சியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். அதிலும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு.
    பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசு ரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.

    விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படும். ஸ்ரீரங்கத்தில் தினமும் காலை 9.15 மணி முதல் பகல் 1 மணி வரை பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர் சேவையுடன் நம்பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம். பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

    அடுத்தநாள் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். பரமபத வாசல் என்றும் பெயர் கொண்ட இதனைக் கடக்க அதிகாலை 3.45 மணிக்கு ரத்தின அங்கியுடன் பெருமாள் கருவறையில் இருந்து கோலாகலமாகப் புறப்படுவார்.

    நாழிகேட்டான் வாசல், கொடிமரம், ராஜமகேந்திரன் சுற்று வழியாக வந்து அதி காலை 5 மணிக்கு பரமபத வாசலைக் கடந்து அருள்பாலிப்பார்.
    இதை தரிசிக்க கோவில் வளாகத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரங்கா... ரங்கா... என திருநாமங்கள் முழங்கியபடி பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடப்பர். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

    இதற்கு எப்படி விரதமிருக்க வேண்டும் எனத் தெரியுமா?

    ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று பகல் ஒருவேளை உண்ண வேண்டும். ஏகாதசியன்று எதுவும் சாப்பிடக் கூடாது. மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்துக்குள் குளித்து, பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் குடித்து விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டபின் ஓய்வெடுக்க வேண்டும்.

    தசமி துவங்கி விரதம் முடியும் வரை ஸ்தோத்திரங்கள், சகஸ்ரநாமம், நாராயண ஜபம் செய்ய வேண்டும். கோவில்களில் செய்வது இன்னும் சிறப்பு.
    ஏகாதசியன்று தண்ணீர் குடிக்கலாம். துளசி இலை களை சாப்பிடலாம். முதியோர்கள், நோயாளிகள், பசி தாங்க இயலாதவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏகாதசியன்று சாப்பிட் டாலும், அதற்கு முன்னதாக பெருமாளை மனதார வழிபட்ட பின் சாப்பிடலாம் என்ற விதிவிலக்கும் உண்டு.

    விரதமிருக்க வாய்ப்பில்லா தவர்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்ட பழம், பால் சாப்பிடலாம். பகல் பொழுதில் கோவிலில் அல்லது வீட்டு பூஜையறையில் இருந்தபடி விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் பாடலாம். மற்றவர்கள் கோவிந்தா... நாராயணா... என்ற திருநாமங்களை மட்டுமே ஜபித்த நிலையில் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

    நாமும் வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு, பாவம் நீங்கி பலன் பெறுவோம்.
    திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும்.
    அரையர் என்பவர்கள் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப்பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.
    அரையர் என்பவர் கோவில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற் பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப் பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறை முன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

    திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களை பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது.

    வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோவில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்ச கச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும், இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர்.

    காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோவில்களில் மட்டுமே காணப்படும். உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப்பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக்கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட் டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவி அமையா மல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.

    அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அபிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.

    பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தளம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அரையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.

    ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க்கலையே அரையர் சேவையாகும்.
    இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மட்டுமே. ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு.
    இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மட்டுமே. இந்தப் பிரகாரங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

    ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு.

    உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை, ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.
    ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

    மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படும். சில வேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத் திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும்.

    தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.
    ஹரி ஓம் நமசிவய ஓம் நமசிவய சுவாஹா

    சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். பல வகையான ஜுரம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஜுரம் நீங்க இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ, அவ்வளவு எண்ணிக்கையில் உரு ஜெபித்து வந்தால் உங்கள் உடலை பற்றியிருக்கும் எப்படிப்பட்ட ஜுரங்களும் சிவனின் அருளால் நீங்கும். மேலும் உங்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஜாதக தோஷங்களையும் இந்த மந்திரத்தை துதிப்பதால் போக்க முடியும். இன்ன பிற நோய்கள் ஏற்படாதவாறு உடல்நலத்தை காக்கும்.

    தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். சித்தர்களால் நன்மையான அதிர்வுகள் மிக்க பல மந்திரங்கள் சிவபெருமானுக்காக உண்டாக்கப்பட்டது. அத்தகைய மந்திரங்களில் ஒன்று தான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.

    மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி வைபவம் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தை பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்ததால் எதைக் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தது.

    அச்சமயம் மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவர், வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் கேட்டு, அவர் நியமனத்தின்படி செயல்படுத்தினார்.

    19 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதைப் போல வரும் என அறிந்து, மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினார். அவ்வகையில் இந்த ஆண்டு தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைத்தேர் உற்சவம் நடைபெற்றது.

    எனவே, மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி வைபவம் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ×