என் மலர்
தரவரிசை
இந்தியில் ஹாவா என்ற பெயரில் வெளியான படம், தற்போது தமிழில் ராஜலீலை என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனம்
ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொண்ட தபு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய 2 மகள்களையும், தம்பியையும் அழைத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தங்கி வருகிறார். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அமானுஷ்ய சக்தி வீட்டை சுற்றி வருவதாக உணர்கிறார் தபு.
இந்நிலையில், இந்த அமானுஷ்ய சக்தி தபுவை கற்பழித்து விடுகிறது. இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், வீட்டின் முன்னாள் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால், இந்த வீட்டை வேற யாருக்காவது விற்கும் வரை, அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
வீட்டில் இருக்க மறுக்கும் தபுவிடம் அந்த அமானுஷ்ய சக்தி தொந்தரவு கொடுக்கிறது. இந்த அமானுஷ்ய சக்தி, தபுவை தொந்தரவு செய்ய காரணம் என்ன? தபுவுக்கும் அந்த ஆவிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹாவா என்ற பெயரில் 2003ம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படம், தற்போது ‘ராஜலீலை’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அப்போது இருந்த தொழில் நுட்பத்திற்கு இப்படத்தை அன்று பார்க்கும் போது, பயந்திருக்கலாம். ஆனால், தற்போது இப்படத்தை பார்க்கும் போது, பெரியதாக பயம் ஏதும் ஏற்படவில்லை. சுவாரஸ்யம் இல்லை. பேயை பார்க்கும் போது, காமெடியாக இருக்கிறது.
படத்தின் முதன்மை கதாபாத்திரமாக இருக்கும் தபுவின் நடிப்பு அபாரம். இவரை சுற்றியே படம் நகர்கிறது. பேய் பயப்படும் காட்சியில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஹன்சிகா இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் ரசிக்கும் படியாக உள்ளது.
நாம் ஏற்கனவே பார்த்த பழைய கதைதான் என்றாலும், அன்றைய காலகட்டத்தில் இந்தியில் இப்படம் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ராஜலீலை’ பழைய லீலை.

துல்கர் சல்மான் நடிப்பில், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு அம்சங்களை மையமாக வைத்து 4 கதைகள் கொண்ட படமாக வெளிவந்திருக்கும் ‘சோலோ’ படத்தின் விமர்சனம்.
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சோலோ. 4 கதைகள் கொண்ட இப்படமானது நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு அம்சங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
நீர்...
முதல் கதையான இதில், கல்லூரி மாணவனான துல்கர் சல்மான், கண் தெரியாத பெண்ணான தன்ஷிகாவை காதலிக்கிறார். இரு வீட்டார் சம்மதம் தெரிவிக்க நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர், அதை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை கூறியுள்ளார்கள்.
காற்று...
இரண்டாவது கதையான இதில், கால்நடை மருத்துவராக இருக்கிறார் துல்கர் சல்மான். இவரின் மனைவி விபத்தினால் இறக்கிறார். இந்த இழப்பிற்கு காரணமானவர்களை தேடி பழிவாங்கும் பின்னணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

நெருப்பு...
மூன்றாவது கதையான இதில், காசுக்காக எவரையும் கொல்லுகிறார் துல்கர் சல்மான். அப்பா-அம்மா பிரச்சனைகளால் மகன்களின் நிலை என்ன ஆகின்றது என்பதை காட்டும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
நிலம்...
நான்காவது கதையான இதில், துல்கர் சல்மானும், நேகா ஷர்மாவும் காதலித்து வருகிறார்கள். இவர்களில் காதலில் ஒரு பிரிவு ஏற்படுகிறது. அந்த பிரிவு ஏன் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படி 4 கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் துல்கர் சல்மானுக்கு தோல்வியுடனே முடிகின்றது.

மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வெளியான முந்தைய படம் ரசிகர்கள் மிகவும் கவர்ந்தது. அதுபோல், இந்த படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்திலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
முதல் கதையில், கண் தெரியாமல் நடித்திருக்கும் தன்ஷிகா, நான்காவது கதையில் காதலியாக வரும் நேகா ஷர்மா ஆகியோர் மட்டும் சிறப்பாக நடித்து மனதில் பதிகிறார்கள். ஸ்ருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், தீப்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாசர், சுஹாசினி ஆகியோர் தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் பீஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மணிரத்னத்தின் உதவியாளர் என்பது படத்தை பார்க்கும் போது அதிகமாக மனதில் பதிகின்றது. பஞ்ச பூதங்களான, நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவை மூலமாக கதையை சொல்ல முயற்சித்துள்ளார், வானம் சார்ந்த கதையை மட்டும் எடுக்கவில்லை. முதல் கதையும், இரண்டாவது கதையும் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெருப்புக்கான கதை, சூடுப்பிடிக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 4 கதைகளையும் முடிச்சுப்போடாமல், கதை சொன்ன விதம் புதுமை.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சோலோ’ புதுமை.

பிருத்விராஜ், ஓவியா, கிரண், பாபுராஜா ஆகியோர் நடிப்பில், பாபுராஜா இயக்கத்தில் வெளியான மலையாளம், தற்போது ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனம்...
பாபுராஜாவும், கிரணும் கணவன் மனைவியாக கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சூழ்நிலையில், கிரண் ஒருவரை கொலை செய்துவிடுகிறார். தன் மனைவியின் கௌரவம் காக்க செய்யாத கொலையை தான் செய்ததாக கிரண் கணவர் பாபுராஜா காவல்துறையிடம் சரண் அடைகிறார்.
அவர் அக்கொலையை செய்ய வில்லை என்பதை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக இருக்கும் பிருத்திவிராஜ் கண்டுபிடிக்கிறார்.
தான் குற்றவாளி இல்லை என நிருபிக்கப்பட்டால் தனது மனைவி களங்கமானவள் என இந்த ஊர் சொல்லும் என்ற பயத்தில், தன்னை குற்றவாளி என அறிவிக்க மன்றாடுகிறார் பாபுராஜா.
இறுதியில், பாபுராஜா தன் மனைவி கிரணின் களங்கத்தை காப்பாற்றினாரா? புலனாய்வு அதிகாரி பிருத்திவிராஜ், பாபு ராஜா குற்றமற்றவர் என்று நிருபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் பிருத்திவிராஜ், போலீசுக்குண்டான தோற்றம் மிடுக்குடன் நடித்திருக்கிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. பொய்யான கொலைக் குற்றவாளியாக இப்படத்தின் இயக்குனர் பாபுராஜா நடித்து இருக்கிறார். தன் மனைவிக்காக கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்பவராக நடித்திருக்கிறார்.
பாபுராஜாவின் மனைவியாக நடித்திருக்கும் கிரண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ஓவியா.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு வெளியான ‘மனுஷிய மிருகம்’ என்ற படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தன் மனைவி மீது பாசம் வைத்துள்ள ஒருவன், பாசத்திற்காக, செய்யாத குற்றத்தை ஏற்று, ஜெயிலுக்கு செல்கிறான். தன் வேலையை மீது பாசம் வைத்துள்ள ஒருவன், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்று வரும் ஒருவரை விடுவிக்க துடிக்கும் போலீஸின் வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
அன்வர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சுரேஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ திறமை.

பகவதி பாலா இயக்கத்தில் மோகன் குமார் - ஷ்ரியா ஸ்ரீ நடிப்பில் வெளியாகி இருக்கும் `நெறி' படத்தின் விமர்சனம்.
ஆசிரியரான நாயகன் மோகன் குமார் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர். தனது ஆசிரியர் தொழிலின் மீது மிகுந்த பற்று உடையவராக தன்னிடம் பயிலும் மாணாக்கர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதில் தேர்ந்தவர். பெற்றோர், மனைவி, குழந்தைகள் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மோகன் குமார் தனத குடும்பத்துடன் காரில் வெளியே சென்றிருந்த போது நான்கு ரவுடிகள் சேர்ந்து ஒரு காதல் ஜோடியை கொலை செய்வதை பார்த்து விடுகிறார்.
அந்த கொலையை நேரில் பார்த்ததால் மோகன் குமாரின் மகள் பதற்றமடைய அங்கிருந்து சென்று விடுகின்றனர். அதேநேரத்தில் அந்த கொலையை மோகன் குமாரின் மகன் வீடியோ எடுத்துவிடுகிறான். இதனை பார்த்த அந்த ரவுடிகள் அவர்களை பின்தொடர்ந்து வந்து மோகன்குமார், அவரது பெற்றோர், மனைவியான நாயகி ஷ்ரியா ஸ்ரீ என அனைவரையும் கொலை செய்துவிடுகின்றனர். இதில்மோகன் குமார் மட்டும் உயிர்பிழைத்து விடுகிறார்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மோகன் குமார் மீது பற்று கொண்ட அவரது மாணவர்கள் இதற்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிக்கின்றனர். ஆனால் சட்டம் அதனை பார்த்துக் கொள்ளும் என்று மோகன் குமார் தனது மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். இந்நிலையில், அவரது குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அவரை திருமணம் செய்ய சொல்லி மற்றொரு நாயகியான சத்ய கலா கூற, மாணவியாக பார்த்த உன்னை மனைவியாக பார்க்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகள் 4 பேரும் வெளியே வந்து மற்றுமொரு பெண்ணை கொலை செய்கின்றனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு செல்லும் மோகன் குமார் அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். அப்போது தான் அவர்களுக்கு பின்னணியில் ஒருவர் அவர்களை ஆட்டி வைப்பது தெரிய வருகிறது.
கடைசியில் மோகன் குமார் தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்கினாரா? ரவுடிகளுக்கு பின்னணியில் இருக்கும் நபரை கண்டுபிடித்தாரா? அவர்களை பழிவாங்கினாரா? தனது மாணவியை மணந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன் குமார் ஒரு ஒழுக்கமான நபராக, பொறுப்பான ஆசிரியராக, மாணவர்களுக்கு முன்மாதிரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அவரது குழந்தைகளுக்கு ஒரு பாசமான தகப்பனாக வந்து செல்கிறார். அவரது மனைவியாக வரும் ஸ்ரேயா ஸ்ரீ ஒரு குடும்ப பெண்ணாக கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களான பரத், ஷிவாணியும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
பகவதி பாலா இயக்கம் மட்டுமின்றி ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து செல்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும். ஆசிரியரின் குணாதிசியம் என்ன, மாணவர்களை எப்படி நடத்த வேண்டும் என ஒரு பாடத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்.
கே.ராஜ் பாஸ்கரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பு தான்.
மொத்தத்தில் `நெறி' ஆசிரியரின் குறி.

ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கருப்பன்’ படத்தின் விமர்சனம்...
நாயகன் விஜய்சேதுபதி காளை அடக்குவதில் வல்லவர். ஆனால், எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றி வருகிறார். இந்நிலையில் காளை அடக்கும் போட்டி வருகிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.
இந்த காளையை அடக்கினால், பசுபதியின் தங்கையான நாயகி தான்யாவை விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து தரும்படி விஜய் சேதுபதியின் நண்பர்கள் கேட்கிறார்கள். இதற்கு பசுபதியும் சம்மதிக்கும் நிலையில், காளையை விஜய் சேதுபதி அடக்கி விடுகிறார்.
தான்யா மீது விருப்பம் இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதி, ஒரு மோதலில் சந்திக்கிறார். தான்யாவின் துணிச்சலை பார்த்து அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விஜய் சேதுபதி குடித்துவிட்டு ஊரை சுற்றி வருவதால், தான்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்கிறார் தான்யா. இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தான்யா அண்ணியின் தம்பியான பாபி சிம்ஹா அவரை ஒருதலையாக காதலித்து வந்ததால், விஜய்சேதுபதி மீது கோபமடைந்து, இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா? விஜய்சேதுபதி, தான்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில் மெருகேறிக் கொண்டே செல்கிறார். இவர் பேசும் வசனங்கள், உடல் மொழி, முக பாவனைகள், சண்டைக் காட்சிகள், காளை அடக்கும் காட்சிகள் என அனைத்திலும் பட்டைய கிளப்புகிறார். தான்யாவுடனான ரொமன்ஸ் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தான்யா, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முந்தைய படத்தை விட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தான்யா மீது ஆசைப்படுவது. அதற்காக பழிவாங்குவது, திட்டமிடுவது என தன்னுடைய அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு பசுபதியை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சிங்கம் புலியின் காமெடி சிறப்பு.
வழக்கமான கதையை, காளை, காதல், கிராமம் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியை திறமையாக உபயோப்படுத்தி இருக்கிறார். விஜய்சேதுபதி, சிங்கம்புலி சம்மந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் அதகளப்படுத்துகிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கருப்பன்’ சிறப்பானவன்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஹர ஹர மஹாதேவகி' படத்தின் விமர்சனம்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த மேக்கப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.
நாயகன் கவுதம் கார்த்திக், துக்க வீட்டில் நடக்கும் இறுதிசடங்குகளை முன்நின்று நடத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் அவரது காதலியான நிக்கி கல்ராணிக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
இதையடுத்து காதலித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்பப் பெறுவதாக முடிவு செய்கின்றனர். அந்த பொருட்களை தேர்தலின் போது வழங்கப்பட்ட பையில் போட்டு எடுத்துச் செல்கின்றனர். மறுபுறத்தில் கள்ள நோட்டுகளை அதே மாதிரியான வேறொரு பையில் எடுத்துச் செல்கிறார் பால சரவணன்.

இந்நிலையில், இந்த பைகள் அனைத்தும் ஹர ஹர மஹாதேவகி விடுதியில் வைத்து மாறிவிடுகிறது. கடைசியில் கவுதம் கார்த்திக் - நிக்கி கல்ராணியின் காதல் என்ன ஆனது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ரவி மரியா முதலமைச்சர் ஆனாரா? பால சரவணனின் பணம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், ரொமேன்ஸ், நட்பு என கவுதம் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. நிக்கி கல்ராணி இந்த கதாபாத்திரத்தை துணிச்சலாக எடுத்து நடித்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள். காதல், கிளாமர், இரட்டை அர்தத் வசனங்கள் என கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
கவுதம் கார்த்திக்கின் நண்பனாக வரும் சதீஷ் படம் முழுக்க நாயகனுடனேயே வருகிறார். ஒரு சில இடங்களில் இவரது காமெடியை ரசிக்க முடிகிறது. கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் காமெடி ரசிக்கும்பபடி இருக்கிறது. ஒரு அரசியல் வாதியாக ரவி மரியா அவரது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மனோ பாலா, நமோ நாராயணா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மயில் சாமி சிறப்பு தோற்றத்தில் கவரும்படியான தோற்றத்தில் வந்து கவர்கிறார்.

ஒரு பையால் ஏற்படும் குழப்பத்தை காதல், பிரிவு, நட்பு, காமெடி, கொஞ்சம் அரசியல், அங்கங்கு இரட்டை அர்த்த வசனங்கள் என இளைஞர்கள் விரும்பும் கதைக்களத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். கதைக்கு ஏற்ப திரைக்கதையில் கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். வசனங்கள் இயல்பானவையாக ரசிக்கும்படி இருக்கிறது.
பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஹர ஹர மஹாதேவகி' கரடியின் கலாட்டா.

அசோக், மேகாஸ்ரீ, கிரண், நாசர், பேபி யுவினா ஆகியோர் நடிப்பில் மேனன் இயக்கத்தில் ஹாரர், திகில் கலந்த படமாக வெளியாகி இருக்கும் ‘கா கா கா ஆபத்தின் அறிகுறி’ படத்தின் விமர்சனம்.
நாயகன் அசோக் மிகவும் வசதியானவர். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய அவர், அங்கு நாசரின் மகளான மேகாஸ்ரீயை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் கம்பெனியில் பிரச்சனைகள் ஏற்பட்டதால், அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தன் மனைவி மேகாஸ்ரீ மற்றும் நண்பர் கிரணுடன் வருகிறார்.
தமிழ்நாட்டில் தன்னுடைய சொந்த பங்களாவில் தங்குகிறார் அசோக். ஏற்கனவே இந்த பங்களாவில் வாட்ச்மேன் மற்றும் குழந்தை யுவினாவும் தங்கியிருக்கிறார்கள். பங்களாவுக்கு வந்த சில நாட்களில் அசோக்கையும், மேகாஸ்ரீயையும் ஒன்று சேரவிடாமல் ஒரு சக்தி தடுத்து வருகிறது. மேலும் மேகாஸ்ரீயை கொல்லவும் முயற்சி நடக்கிறது. இதிலிருந்து மேகாஸ்ரீ தப்பிக்கிறார்.
வேலைப்பளுவால் அசோக் கம்பெனியில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சமையல் காரராக யோகிபாபு வேலைக்கு வருகிறார். அப்போது குழந்தை யுவினாவிடம் விளையாடும் யோகிபாபு, யுவினாவிற்குள் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அறிகிறார். ஆனால், வெளியே சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில், மேகாஸ்ரீயை யாரோ கொல்ல முயற்சி செய்வதை நண்பர் கிரணிடம் சொல்கிறார். இதனால், அவருடையை அறையை சுற்றி கேமரா பொருத்துகிறார். அதில் குழந்தை யுவினா, மேகாஸ்ரீயை கொலை செய்ய முயற்சிப்பதை தெரிந்துக் கொள்கிறார்.
இறுதியில், குழந்தை யுவினா நாயகி மேகாஸ்ரீயை கொல்ல முயற்சி செய்வது ஏன்? குழந்தைக்குள் இருக்கும் அமானுஷய சக்தி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் மேகாஸ்ரீ பேய்க்கு பயப்படுவது, நாயகனுடன் டூயட் ஆடுவது என தன்னால் முடிந்த வரை நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நண்பராக வரும் கிரணுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். பொறுப்பை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தை யுவினாவின் நடிப்பு படத்திற்கு பலம். குறிப்பாக, அமானுஷ்ய சக்தி புகுந்தவுடன் இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. யோகி பாபுவின் காமெடியும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

பேய் மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் மேனன். வழக்கமாக பேய் படங்கள் என்றால் ஒரு பங்களாவை சுற்றிய கதை இருக்கும். அதுபோல் இப்படமும் ஒரு பங்களாவை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். சுவாரஸ்யமான காட்சிகள் இன்னும் தரமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
அம்ரித் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். சரவணன் நட்ராஜனின் ஒளிப்பதிவு பெரிதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘கா கா கா ஆபத்தின் அறிகுறி’ சஸ்பென்ஸ் குறைவு.

மேத்யூ வாகன் இயக்கத்தில் தரோன் ஈகர்தன், மார்க் ஸ்ட்ராங், ஜுலியானா மூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள் படத்தின் விமர்சனம்.
கிங்ஸ்மேன் இரகசிய அமைப்பு முதல் பாகத்தை தொடர்ந்து உருவாகியிருக்கும் இந்த பாகத்தில் டெய்லர் கடை ஒன்றின் உள்ளே கிங்ஸ்மேன் இரகசிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதில் ரகசிய ஏஜென்ட்டாக வரும் நாயகன் தரோன் ஈகர்தன், போதைப் பொருள் உட்கொண்ட ஒருவர் இறந்தது குறித்த ரகசிய விசாரணையை ஆரம்பிக்கிறார். அந்த விசாரணையின் தொடக்கத்தில் இறந்தவரது உடலில் தங்க நிறத்தில் வட்ட வடிவத்திலான அடையாளம் இருப்பதை பார்க்கிறார்.
இதையடுத்து இந்த விசாரணைக்கு தி கோல்டன் சர்க்கிள் என்று பெயர் வைத்து, இதுகுறித்த தீவிர விசாரிணையில் ஈடுபடுகிறார். இந்நிலையில், அவரது காதலியை பார்ப்பதற்காக ஈகர்தன் பிரிட்டன் செல்கிறார். அந்த சமயத்தில் அவரது ரகசிய அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. மேலும் கிங்ஸ்மேன் ரகசிய ஏஜென்ட்கள் அனைவரும் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில், கிங்ஸ்மேன் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்த விசாரணையில் ஈடுபடும் ஈகர்தன், கிங்ஸ்மேன் ரகசிய அமைப்பில் கணினி வேலைபாடுகளில் சிறந்தவரான மார்க் ஸ்ட்ராங் உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவருக்கும் கிங்ஸ்மேன் தாக்குதலுக்கும் சம்மந்தம் இருக்குமோ என்று ஆராயும் போது, கிங்ஸ்மேன் தாக்குதலுக்கு கோல்டன் சர்க்கிள் காரணம் என்பது தெரிய வருகிறது.
இதையடுத்து ஸ்டேட்ஸ்மேன் என்ற ரகசிய அமைப்பின் உதவியுடன் கோல்டன் சர்க்கிள் குறித்த விவரத்தை கண்டறியும் போது அதன் பின்னணியில் ஜுலியானா மூர் இருப்பது தெரிய வருகிறது. மேலும் கிங்ஸ்மேன் உருவாவதற்கு காரணமாக இருந்த காலின் பிர்த் முதல் பாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது போல் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் இந்த பாகத்தில் உயிருடன் திரும்ப வருகிறார்.
முதல் பாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட காலின் பிர்த் எப்படி உயிருடன் வந்தார்? அதில் இருக்கும் மர்மம் என்ன? கிங்ஸ்மேன் தாக்குதலுக்கு காரணம் யார்? கோல்டன் சர்க்கிளை நடத்தி வரும் ஜுலியானா மூர் பிடிபட்டாரா? அதன் பின்னணியில் நடந்து என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ரகசிய ஏஜென்ட்டாக தரோன் ஈகர்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது நடிப்பு மிரள வைக்கும்படி இருக்கிறது. காலின் பிர்த், மார்க் ஸ்ட்ராங், ஹலே பெர்ரி, எல்டான் ஜான், சானிங் டாடம், ஜெஃப் பிரிட்ஜஸ் என அனைவரது நடிப்புமே சிறப்பாக இருக்கிறது. வில்லியாக நடித்திருக்கும் ஜுலியானா மூர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார்.
குற்றச் செயல்களை கண்டுபிடிக்கும் ரகசிய அமைப்பை மையமாக வைத்து அதிரடி, த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறார் மேத்யூ வாகன். கதையின் போக்குக்கு ஏற்ப பல திருப்பங்கள் வந்தாலும், திரைக்கதை மெதுவாக இருப்பதால் படம் மீதான சுவாரஸ்யம் குறைகிறது.
ஹென்றி ஜேக்மேன், மேத்யூ மர்கீசனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் ரிச்மண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள்' அதிரடி சரவெடி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் விமர்சனம்...
மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.
ஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு.
இந்த முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கும் மகேஷ்பாபு, பரத்துக்கு பின் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் அறிகிறார்.

இறுதியில் இவர்களை மகேஷ் பாபு என்ன செய்தார்? எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
தெலுங்கில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் 'ஸ்பைடர்' மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்த மகேஷ்பாபு இந்த படத்தில் பொம்மை போன்று இருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த முகபாவனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங், ஒரு போன் கால் மூலம் மகேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பாடல் தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் அவரை பயன்படுத்தி உள்ளனர். கலர்புல்லாக வந்து சென்றிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு இடங்களில் கவுன்டர் வசனங்களால் கவர முயற்சித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இன்னும் இவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கலாம். படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா. மிரட்டலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக நடித்து தேர்ந்த நடிகனாக அடையாளம் காட்டி இருக்கிறார்.

துப்பறியும் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த போலீஸை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வில்லனைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழித்து வருகிறார்கள். அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. இது மாற வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது, லாஜிக் இல்லாத காட்சிகளை அதிகமாக திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஸ்பைடர்’ மந்தம்.

தேஜா இயக்கத்தில் ராணா டகுபதி - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நான் ஆணையிட்டால்' படத்தின் விமர்சனம்.
ஜெயிலில் இருக்கும் ராணா, தனது தான் ஜெயிலுக்கு சென்றது எப்படி? தனது வாழ்க்கையில் நடந்நது என்ன என்பதை கூறும்படியாக படம் ஆரம்பமாகிறது. அதன்படி வட்டித் தொழில் செய்து வரும் ராணாவும், காஜல் அகர்வாலும் கணவன், மனைவியாக தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி சில வருடங்கள் கழித்து கர்ப்பமாகும் காஜல் அகர்வால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோயில் ஒன்றில் பூஜைக்காக செல்கிறார்.
அப்போது அந்த கோயிலுக்கு வரும் அந்த பகுதி சேர்மேனின் மனைவி, தனக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி காஜல் அகர்வாலின் பூஜை பண்டங்களை தட்டிவிட்டு, காஜல் அகர்வாலையும் கீழே தள்ளி விடுகிறாள். இவ்வாறாக கீழே விழும் காஜலின் வயிற்றில் இருக்கும் கரு கலைந்து விடுகிறது.

கரு கலைந்ததை நினைத்து மிகவும் வருத்தப்படும் ராணா, சேர்மன் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். இந்நிலையில், தன்னை ஏமாற்றி சேர்மன் தேர்தலில் ராணா வெற்றி பெற்றதாக ராணாவை எதிர்த்து நின்ற சேர்மேன் எம்.எல்.ஏ ஒருவரிடம் புகார் கூறுகிறார். ராணா பதிவி விலகாவிட்டால் ராணாவின் மனைவி விதவையாகி விடுவாள் என்று முன்னாள் சேர்மேன் கூற, அவரை கொன்று விடுகிறார் ராணா.
இந்த கொலை வழக்கில் இருந்து ராணா விடுபட அந்த எம்.எல்.ஏ.வும் பணம் கேட்க, எம்.எல்.ஏ.-வையும் கொன்று விட்டு, ராணாவே எம்.எல்.ஏ. ஆகிறார். இந்நிலையில், சிபாரிசு கேட்டு வரும் ஒருவருக்கு ராணா சிபாரிசு கடிதம் கொடுக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ.வின் சிபாரிசை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற ராணா அமைச்சராக அவதாரம் எடுக்கிறார்.

இந்நிலையில் அடுத்த இலக்காக முதல்அமைச்சர் பதவியை குறிவைக்கும் ராணாவின் வளர்ச்சி பிடிக்காத எதிர்க்கட்சியினர் ராணாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
அந்த சதியில் ராணா சிக்கிக் கொண்டாரா? முதலமைச்சர் ஆனானரா? ஜெயிலுக்கு ஏன் சென்றார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
வாழ்க்கையை ரசித்து வாழும் ஒரு சாதாரண மனிதனாகவும், தனது நிலையை உயர்த்தி அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் ஒரு அரசியல்வாதியாகவும் ராணா சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவி மீது கொண்ட காதலால் தன்னை எதிர்த்து நிற்கும் அனைவரையும் துவம்சம் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

காஜல் அகர்வால் ஒரு மனைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கணவனுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ராணா - காஜல் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. கேத்தரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.
நவ்தீப், அஜய், அசுதோஷ் ராணா, தனிகெல்லா பரணி, ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஜோஷ் ரெட்டி, பூசானி கிருஷ்ண முரளி, பிரதீப் ரவாத், சத்ய பிரகாஷ், சஞ்சய் கபூர் என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு வழு சேர்த்திருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனின் கோபத்தை தூண்டி விட்டால் அவன் எந்த உச்சத்துக்கும் செல்வான் என்பதை உணர்த்தும்படியான படத்தை இயக்கியிருக்கிறார் தேஜா. ராணா, காஜல் இருவருக்கும் இடையேயான காதல், அன்பு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதை ஆங்காங்கு நிரூபிக்கும்படி சில காட்சிகளை வைத்திருக்கிறார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சலசலப்புக்கு ஏற்ப சில வசனங்கள் வந்து செல்கிறது.
அனூப் ரூபன்ஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கட் சி.திலீப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.
மொத்தத்தில் `நான் ஆணையிட்டால்' அது நடந்துவிட்டால்.

ஐயப்பன் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஸ்ரீபிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பிச்சுவா கத்தி' படத்தின் விமர்சனம்.
தஞ்சாவூரில் வசிக்கும் நாயகன் இனிகோ பிரபாகர், தன் நண்பர்களான ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோருடன் குடித்துக் கொண்டு ஜாலியாக ஊரைச்சுற்றி வருகிறார். இனிகோ பிரபாகரும், நாயகி ஸ்ரீபிரியங்காவும் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இனிகோ பிரபாகர் தன் நண்பர்களுடன் போதையில் வரும் போது, மேலும் குடிப்பதற்காக ஆட்டை திருடி விற்று மாட்டிக் கொள்கிறார்கள். இந்த குற்றத்திற்காக கும்பகோணத்தில் உள்ள போலீஸ் நிலைத்தில் 30 நாட்கள் கையெழுத்திடும்படி கோர்ட் உத்தரவிடுகிறது.
கும்பகோணம் போலீஸ் அதிகாரி, இவர்களிடம் தலா பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம் கேட்கிறார். பணம் இல்லாத இவர்கள் மற்றொரு நாயகியான அனிஷாவின் செயினை பறிக்கிறார்கள். ஆனால், அனிஷாவோ இவர்களை போலீசில் சிக்க வைத்து விடுகிறார். இதனால், அனிஷாவை தீர்த்துக்கட்ட இனிகோ பிரபாகர் நினைக்கிறார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் தாதாவாக இருப்பவர், இனிகோ பிரபாகரை பகடைக்காயாக வைத்து, அமைச்சராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் இருந்து விலையுயர்ந்த பொருளை திருட வைக்கிறார். இதை சரியாக செய்து முடித்ததால், இந்த முப்பது நாட்களும் போலீசின் உதவியோடு தாதாவுடன் இனிகோ பிரபாகர் மற்றும் நண்பர்கள் திருடுவது, கொலை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.
முப்பது நாட்கள் முடிந்த பின் தங்கள் ஊருக்கு செல்லும் நிலையில், போலீஸ் அதிகாரி நீங்கள் செல்லக்கூடாது தாதாவுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். மீறினால், அனிஷாவின் செயின் திருடின குற்றத்திற்காக உங்களை 7 வருடம் சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இறுதியில் போலீசின் மிரட்டலுக்கு அடிபணிந்து தாதாவுடன் இருந்தார்களா? இந்த நிலைமைக்கு காரணமான அனிஷாவை கொன்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் முந்தைய படங்களை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். வழக்கம்போல் எதார்த்தமாக நடித்தும், தாவணியில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் செங்குட்டுவன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனிஷா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான காளிவெங்கட், பால சரவணன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒரு ஆக்ஷன் கதையில் காதல், சென்டிமென்ட் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ரகுநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘பிச்சுவா கத்தி’ கூர்மை.

மதுசூதனன், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, மைம்கோபி, பிரத்திக், அக்ஷிதா நடிப்பில் உருவாகியிருக்கும் தெரு நாய்கள் படத்தின் விமர்சனம்.
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களை அக்கிரமிப்பு செய்து எரிவாயு குழாய்களை பதிந்து வருகிறார்.
இதே பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார் இமான் அண்ணாச்சி. இவர் கடையில் அப்புக்குட்டி உள்ளிட்ட நான்கு பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், இமான் அண்ணாச்சியின் இடத்தை மதுசூதனன் அடைய விரும்புகிறார். இதற்கு மறுக்கும் இமான் அண்ணாச்சியை மதுசூதனன் கொலை செய்து விடுகிறார்.

இதனால், ஆத்திரமடையும் அப்புக்குட்டி மற்றும் கடையில் வேலைப்பார்ப்பவர்கள், யாரும் நெருங்க முடியாத மதுசூதனனை கடத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து மதுசூதனன் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மதுசூதனன், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, மைம்கோபி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் படத்தில் நடித்துள்ளார்கள். இத்தனைப் பேர் நடித்தாலும் படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை. கதாபாத்திரங்களை கையாளத்தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. விளை நிலங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது, அதை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால், திரைக்கதை இயக்குனருக்கு கைகொடுக்கவில்லை.
படத்தின் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஹரிஷ் மற்றும் சதீஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.
மொத்தத்தில் ‘தெரு நாய்கள்’ உதார்.