என் மலர்
தரவரிசை
எஸ்.பரீத் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் - ஷைனி நடிப்பில் வெளியாகி இருக்கும் `வீரையன்' படத்தின் விமர்சனம்.
தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை நிறைவேற்ற போராடி வருகிறார் ஆடுகளம் நரேன். மற்றொரு பக்கத்தில் கவுன்சிலராக வருகிறார் வேல ராமமூர்த்தி. பள்ளிக்கு செல்லும் அவரது மகளும், வேல ராமமூர்தியின் டிரைவரும் காதலித்து வருகின்றனர்.
அதே ஊரில் வீடு வாசல் இல்லாமல், வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார் இனிகோ பிரபாகர். அவருடன் அவரது நண்பர் மற்றும் திருநங்கை ஒருவரும் வேலையின்றி ஊர்சுற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், வேல ராமமூர்த்தியின் மகளும், டிரைவரும் ஊரை விட்டு ஓட முயற்சிக்கும் போது, இனிகோ பிரபாகர் அந்த டிரைவருடன் சண்டையிட்டு அவரை அடிக்கிறார். இந்நிலையில், அங்கு வரும் நரேனின் மகன் அந்த சண்டையை தடுத்து நிறுத்துகிறான். இந்த விஷயம் குறித்து வேல ராமமூர்த்திக்கு தகவல் போக, நரேனின் மகன் தனது மகளை காதலிப்பாதாக எண்ணி அவனை பள்ளியில் இருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார்.

உன்னால் தான் தனது பள்ளி படிப்பு தடைபட்டதாக இனிகோ பிரபாகரை நரேனின் மகன் திட்ட, அவனை படிக்க வைப்பதாக இனிகோ வாக்கு கொடுக்கிறார். இதையடுத்து தனது தந்தைக்கு தெரியாமல் டுட்டோரியல் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்.
கடைசியில் நரேனின் மகனை இனிகோ படிக்க வைத்தாரா? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? நரேனுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்ததா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேட்டை செய்யும் இளைஞனாக இனிகோ பிரபாகர் நடித்திருக்கிறார். நண்பனாகவும், ஒரு அண்ணனாகவும், காதலனாகவும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். திருநங்கை கதாபாத்திரமும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கியிருக்கிறார். ஒருவனை உதவாக்கரையாக நினைத்து பாவித்து வரும் ஒருவரால் அவரது வாழ்க்கையில் செய்யப்படும் முக்கியமான உதவியால் அவர் மனம் மாறி அவரையே குலதெய்வமாக நினைக்கும் நிலைக்கு வருகிறார் என்பதை படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். படத்தில் அடுத்தடுத்த காட்சிகளின் நீனம் அதிகமாக இருப்பது படத்திற்கு மைனசாக அமைகிறது.
எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. பி.வி.முருகேசின் ஒளிப்பதிவில் காட்சிகளும் 90-களில் உள்ளது போல சிறப்பாகவே வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வீரையன்' குலசாமி.

நந்தகுமார், லீமா, சரவண சக்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூறகாத்து படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் இருக்கும் பொதுமக்கள் பேய்கள், ஆவிகள் உண்மையாகவே ஊருக்குள் இருப்பதாக நம்பி வருகிறார்கள். இறந்து போன பெண் ஒன்று பேயாக ஊரை சுற்றி ஊர் மக்கள் பயமுறுத்தி வருகிறது. ஆனால் நாயகன் நந்தகுமார், பேய் என்பதே இல்லை இருக்கிறார். இதை மக்களுக்கும் புரிய வைத்து வருகிறார்.
நாயகன் நந்தகுமாரும், நாயகி லீமாவும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இதே ஊரில் இருக்கும் சரவண சக்தி, பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என்று இருக்கிறார். இந்நிலையில், மர்மமான முறையில் நாயகன் நந்தகுமார் கொலை செய்யப்படுகிறார்.
இறந்த நந்தகுமார் பேயாக மாறி அதே ஊரை சுற்றி வருகிறார். இவர் எப்படி இறந்தார்? நாயகி லீமாவை எப்படி பாதுகாத்தார்? ஊர் மக்களுக்கு பேய் இல்லை என்று புரியவைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் நந்தகுமாருக்கு இதுதான் முதல் படம். விறுவிறுப்பான நடிப்பாலும், பேயாக வந்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார். நாயகி லீமா அழகாக வலம் வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சரவண சக்தி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மனதில் பதியவில்லை.
பரிமளவாசன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாகவும், கேட்கும் படியாகவும் இருக்கிறது. பாடல் வரிகளும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பேய் பாடும் பாடல் சிறப்பு. கேசவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
பேய், ஆவிகள் பற்றி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதையாக இருந்தாலும், அதில் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் ‘சூறகாத்து’ சுமாரான காத்து.

கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விமர்சனம்
போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம், பல கேசுகள் வருகிறது. இவரும் பல ரவுடிகளை பிடிக்கிறார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீடுகளில் புகுந்து, கொலை மற்றும் கொள்ளை அடித்து ஒரு கும்பல் செல்கிறது. இதை கார்த்தி விசாரிக்க தொடங்குகிறார்.

இந்த விசாரணையில், மர்ம கும்பல் இது போல் தமிழ்நாடு மட்டுமில்லாமல், பிற மாநிலங்களிலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுவதையும், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கார்த்தி அறிகிறார். இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் கார்த்தி கூற, அவர்கள் மெத்தன தனமாக விட்டுவிடுகிறார்கள்.
இந்த சமயத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் கும்பல் புகுந்து கொள்ளையடித்து, அவர்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு செல்கிறார்கள். இவர்களை பிடிக்க கார்த்திக்கு உத்தரவு வருகிறது. அப்போது, இந்த கும்பல் கார்த்தியுடன் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கிறது. இதில் போஸ் வெங்கட் மனைவி இறக்க, குழந்தை ரகுல் வீட்டிற்கு சென்று விடுகிறது. இதனால், ரகுலையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றுவிடுகிறார்கள்.
இந்த தாக்குதலில் ரகுல் கோமா நிலைக்கு செல்கிறார். அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கார்த்திக்கு பல இன்னல்கள் வருகிறது. இறுதியில் அந்த கும்பலை கார்த்தி பிடித்தாரா? கோமா நிலையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உயிர் பிழைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் கார்த்தி. ‘சிறுத்தை’ படத்தை விட 10 மடங்கு கம்பீரத்துடன் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது, படம் பார்க்கும்போது தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இப்படம் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. கார்த்தியுடனான ரொமன்ஸ் காட்சிகளில் அப்லாஸ் பெற்றிருக்கிறார். நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் இயக்கியுள்ளார் வினோத். இந்த உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக உருவாக்கி இருக்கிறார். இதற்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

போலீஸ் அதிகாரிகளின் உழைப்பு, பணிநேரம், சந்திக்கும் தடைகள், பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். கார்த்தியிடம் சிறப்பான நடிப்பை வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இடையேயான ரொமன்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்குப் பலம் சேர்க்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது.
மொத்தத்தில், தீரன் அதிகாரம் ஒன்றுக்கு ‘ஸல்யூட்’.

கே.பி.ஜெயகந்நாத் இயக்கத்தில் தமிழ் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் `என் ஆளோட செருப்ப காணோம்' படத்தின் விமர்சனம்.
கல்லூரியில் படித்து வரும் ஆனந்தியை யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறி வரும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் செல்கிறார். யோகி பாபுவுடன் செல்லும் தமிழ், ஆனந்தியை பார்த்த உடன் காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் ஆனந்திக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்ந்து ஆனந்தியை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், ஒருநாள் பேருந்தில் ஏறும் போது ஆனந்தியின் செருப்பு ஒன்று கீழே விழுந்துவிட பேருந்து கிளம்பிவிடுகிறது. பேருந்தை நிறுத்த முடியாததால் ஆனந்தி தனது மற்றொரு செருப்பையும் அந்த பேருந்திலேயே விட்டுச் செல்கிறார். இது அந்த பேருந்தில் இருக்கும் தமிழுக்கு தெரிகிறது.

இப்படி இருக்கையில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களது தேவைகளை நிறைவேற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்தியும், அவளது அம்மா ரேகாவும் குறி சொல்லும் பெண்ணான நாயகன் தமிழின் அம்மாவிடம் குறி கேட்க வருகிறார்கள்.
குறிபார்க்கும் தமிழின் அம்மா, நாயகியிடம் அவளது அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை பற்றிக் கேட்க தனது செருப்பை தான் அன்று இழந்ததாக ஆனந்தி கூற, அந்த செருப்பை மறுபடியும் எப்போது பார்க்கிறாரோ அப்போது தான் அவளது அப்பா திரும்பி வருவார் என்று குறி சொல்கிறார். இதனை தமிழ் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடைசியில் நாயகி அந்த செருப்பை தேடிச் செல்கிறார். மறுபுறம் அந்த செருப்பை தேடிக் கண்டுபிடித்த பின்னர் தனது காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் தமிழும் அந்த செருப்பை தேடுகிறார்.
கடைசியில் காணாமல் போன அந்த செருப்பு யாருக்கு கிடைத்தது? தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா? ஜெயப்பிரகாஷ் திரும்ப வந்தாரா? யோகி பாபு என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
பக்கோடா பாண்டி என்ற பெயரில் சிறுவனாக நடித்தவர் இந்த படத்தின் மூலம் தனது பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவருக்கு இன்னம் கொஞ்சம் பயிற்சி வேண்டும் என்பது படத்தை பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. மற்றபடி அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. அதுவும் யோகி பாபுவுடன் வரும், இவரது காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோவாக ஏற்றுக் கொள்ளும்படியே இவரது நடிப்பு இருக்கிறது.

கயல் ஆனந்தி மாடர்ன் உடையில் வந்து கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுடன், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்தி இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
படத்தில் யார் நாயகன் என்று குழம்ப வைக்கும் அளவுக்கு யோகி பாபுவின் கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. அவரது வசனங்களும், அதை வெளிப்படுத்துவதும் சிறப்பாக வந்திருப்பதால் அவரது காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனக்குரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் தான் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, தேவிப்பிரியா என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

செருப்பை வைத்தே படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை காதல், ரொமேன்ஸ், காமெடி என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.பி.ஜெகந்நாத். படத்தை எடுத்த விதம் சிறப்பாக இருந்தாலும், படத்தின் நோக்கத்தை சரியாக முழுமைப்படுத்தவில்லையோ என்று உணர்வு படத்தை பார்த்து முடித்த பிறகு ஏற்படுகிறது. படம் பார்த்த பிறகும் ஒரு சில காமெடி காட்சிகள் மனதில் நிற்கும்படியாக இருப்பது சிறப்பு.
சுகா செல்வனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. இஷான் தேவின் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் சூப்பர்.
மொத்தத்தில் `என் ஆளோட செருப்ப காணோம்' ரசிக்கலாம்.

பாபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ருக்கு’ படத்தின் விமர்சனம்.
நாயகி ருக்கு கிராமத்தில் ஜோசியம் பார்த்து வருகிறார். இவரை அடைய பலரும் திட்டம் போட்டு வருகிறார்கள். நாயகன் பாபு ராதாகிருஷ்ணன் மட்டும், ருக்குவை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ருக்குவோ ஆண்களை வெறுத்து வருகிறார்.
நாயகன் பாபு ராதாகிருஷ்ணன், தன்னுடைய காதலை ருக்குவிடம் கூறுகிறார். ஆனால், ருக்கு பாபு ராதா கிருஷ்ணனும் தன்னை அடைய நினைப்பதாக நினைத்து அவரையும் வெறுக்கிறார்.
ஆண்களை ருக்கு வெறுக்க காரணம் என்ன? நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா? உண்மையிலேயே ருக்கு யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபு ராதாகிருஷ்ணன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ருக்கு மீது காதல் வயப்படுவது, அவருக்காக ஏங்குவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட பெண், சமூகத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார். இதில் காதல், சண்டை, காமெடி என கமர்ஷியல் படத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுத்திருக்கிறது. காட்சிக்கும், அவர்கள் பேசுவதற்கு ஒத்துப் போகவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் ருக்குவை சுற்றியே படம் நகர்கிறது. துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். ஆண்களை கண்டால் வெறுப்பது, தன்னை அடைய நினைப்பவர்களிடம் இருந்து சாமார்த்தியமாக தப்பிப்பது, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என திறமையை நிருபித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், மனதில் அதிகமாக பதியவில்லை.
பி.எம்.கபூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மணி பிரசாந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ருக்கு’ சுவாரஸ்யம் குறைவு.

வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் அருண் - ஜோசிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தரிசு நிலம்' படத்தின் விமர்சனம்.
வெளியூரில் படிப்பை முடித்துவிட்டு நாயகன் தனது சொந்த கிராமத்திற்க வருகிறார்கள் நாயகன் அருணும், ஜோசிகாவும் அவர்களது சொந்த கிராமத்திற்கு வருகின்றனர். அந்த ஊருக்கு தலைவராக நாயகனின் அப்பா வருகிறார். ஊர்த் தலைவராக இருந்து கொண்டு அந்த ஊரின் கீழ்சாதி மக்களை வதைத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக அவர் ஜாதி வெறி முற்றி கிணற்றில் விழுந்த நாயகனின் அம்மாவை கீழ் சாதியை சேர்ந்த ஒருவர் காப்பாற்றுகிறார்.
ஆனால் அதனை பொருட்படுத்தாத நாயகனின் அப்பா, தனது மனைவியை கீழ் ஜாதியை சேர்ந்த ஒருவன் தொட்டு விட்டதாகக் கூறி அவரை கொன்றுவிடுகிறார். அதேபோல் கோயில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் செல்வதற்கும் வரைமுறை வைத்துள்ளார். அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி வருகிறார்.
அதேநேரத்தில் ஊரில் நடக்கும் இந்த அக்கறமங்களை நாயகி ஜோசிகா போலீசில் மறைமுகமாக தெரிவித்து வருகிறாள். இப்படி இருக்கும் போது ஜோஷிகாவை கோயிலில் பார்க்கும் அருணுக்கு அவள் மீது காதல் வருகிறது. பின்னர் ஒரு மோதலின் மூலம் இருவரும் காதலிக்க ஆரம்பக்கின்றனர். அதேநேரத்தில் நாயகனின் தந்தையால் நாயகியின் அக்கா மீரா கொல்லபடுகிறாள். இந்த தகவல் தெரியாத தனது மகளை வீட்டிலேயே இருக்கும் படி அவரது தந்தை கூறுகிறார்.

கடைசியில் அருண் - ஜோசிகா காதல் வெற்றி பெற்றதா? அவர்களது திருமணத்திற்கு அருணின் அப்பா சம்மதித்தாரா? தனது தந்தையின் அடக்குமுறையை அருண் மாற்றினாரா? மீரா எப்படி உயிரிழந்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
அருண், ஜோசிகா, மீரா, தியாகு என முன்னணி கதாபாத்திரங்கள் அனைவரது நடிப்பும் பார்க்கும்படியாகவே இருக்கிறது. அதேபோல் கோவை செந்தில், விஜய் கணேஷ், சங்கர் கணேஷ் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.
வேதாஜி பாண்டியனின் இயக்கத்தில் காட்சிகள் பார்க்கும்படியாக வந்திருந்தாலும் ரசிக்கும்படியாக இல்லை. சாதியை வெறிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற ஒரு கருத்தை காதல் கலந்து கொடுத்திருக்கிறார். யாரும் தீண்டத் தகதாதவர் அல்ல. இது போன்று மக்களை துன்புறுத்தக் கூடாது என்பது உள்ளிடவற்றை சொல்லி வந்திருப்பது போல தோன்றுகிறது.
ரவீந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமாராக வந்திருக்கின்றன. ஜான், எம்.வி.ரகு, சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.
மொத்தத்தில் `தரிசு நிலம்' சிலசமயம் உதவும்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `அறம்' படத்தின் விமர்சனம்.
ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக பூமியில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
அந்த மாவட்டத்திற்கு ஆட்சியராக வருகிறார் நயன்தாரா. மிகவும் நேர்மையான, நல்ல உள்ளம் படைத்த நயன்தாரா மற்றவர்களின் வலி, வேதனையை தனக்கு வந்ததாக நினைத்து அதற்கான தீர்வை கொடுக்கக்கூடியவர். இந்நிலையில், அந்த கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் அந்த குழந்தை உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

அந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியரான நயன்தாரா என்ன செய்தார்? அந்த குழந்தையை காப்பாற்ற என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொண்டார்? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் கமர்ஷியல், காதல், திகில், சண்டை என பலதரப்பட்ட படங்கள் வந்தாலும், ரசிகர்களை ஈர்க்கும்படியாக அதிகளவில் படங்கள் வருவதில்லை. அவ்வாறாக வரும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை கண்டிப்பாக ஈர்த்து மனிதில் இடம்பிடித்து வெற்றி பெறும். அந்த வரிசையில் அறம் படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

சில முக்கிய சம்பவங்கள் செய்தி வழியாக நம்மை தாண்டி சென்றிருக்கும். அவற்றில் சில மட்டுமே நமது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபத்தில் செய்தி வாயிலாக நாம் பார்த்த, படித்த, கேட்ட ஒரு முக்கிய சமூக பிரச்சனையை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு செய்தியாக கேட்கும் போது நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாத அந்த செய்தி, இந்த படத்தை பார்க்கும் போது நம்மை சுற்றி நடப்பது போன்ற வலி, வேதனையை உண்டாக்கி சம்பவ இடத்திற்கே நம்மை கூட்டிச் செல்வதுடன் தாக்கதையும் ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
கதை தெரியாமல் திரையில் சென்று பார்க்கும் போது தான் இந்த படம் ஏற்படுத்தும் முழுமையான தாக்கத்தை உணர முடியும். மேலும் படத்தின் மூலம் மக்கள் மற்றும் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்திற்கு அவசியமான கருத்தை கூறியிருக்கும் இயக்குநர் கோபி நயினாருக்கு பாராட்டுக்கள்.

மாவட்ட ஆட்சியராக வரும் நயன்தாரா எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது பேச்சு மற்றும் தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார். இதுதவிர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோராக வரும் கதாபாத்திரங்கள், குழந்தைக்காக வாழக்கூடியவர்களாக குழந்தையின் அவஸ்தையை கண்டு துடிக்கும் காட்சிகள், அவர்களது தவிப்பு என சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது.
காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்கள் இருவருமே கதைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றனர். குறிப்பாக ரமேஷின் நடிப்பு சிறப்பாக உள்ளது. பெயர் சொல்ல முடியாத கதாபாத்திரங்கள் இருந்தாலும், இந்த படத்தின் மூலம் அவர்கள் பிரபலமாவார்கள் என்று கூறலாம்.

ஓம் பிரகாஷின் ஔிப்பதிவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சிறப்பாக காட்சி படுத்தியிருப்பது சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `அறம்' சமூத்திற்கு பாடம்.

ரிஷி இயக்கத்தில் ரிஷி - ப்ரியங்கா ஷர்மா, நக்ஷத்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `143' படத்தின் விமர்சனம்.
விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும் தனது நண்பனின் காஃபி ஷாப்பில் ரிஷியை வேலைக்கு சேர சொல்லி வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரிஷி, தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அந்த காஃபி ஷாப்பிற்கு வேலைக்கு செல்கிறார்.
அங்கு செல்லும் போது நாயகி ப்ரியங்கா ஷர்மாவை சந்திக்கிறார். பின்னர் நாயகியுடன் காதல் வலையிலும் விழுகிறார். ரிஷியை பார்க்கும் போதெல்லாம் கோபப்படும் ப்ரியங்கா அவரை வெறுக்கிறார். இந்நிலையில், ஒருநாள் பள்ளி சீருடையில் செல்லும் ப்ரியங்காவை பார்த்த ரிஷி அதிர்ச்சி அடைந்து அவளிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார்.

பள்ளி செல்வதை ப்ரியங்கா முன்னதாகவே சொல்லியிருக்கலாம் என்று ரிஷி சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் அங்கு வந்த ஒருவர் ரிஷியை குத்திவிடுகிறார். குத்து பட்ட நிலையில், உயிருக்கு போராடும் ரிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறாக ரிஷியின் வாழ்க்கையில் தடங்கல் வருகிறது.
ஊருக்கு புதியவரான ரிஷியை கத்தியால் குத்தியவர் யார்? ரிஷிக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு? கடைசியில் ப்ரியங்காவுக்கு ரிஷியிடம் காதல் வந்ததா? அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர், இயக்குநர் என இரு பணிகளில் கவனம் செலுத்தி இருக்கும் ரிஷி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தாலும், இயக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதே போல் படத்தின் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். அதேபோல் ஒரு இயக்குநராக கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

ப்ரியங்கா ஷர்மா ஒரு மாணவியாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். ரிஷி - ப்ரியங்காவுக்கு இடையேயான காதல், கிளாமர் காட்சிகள் ரசிகும்படி இருக்கிறது. விஜயகுமார், கே.ஆர்.விஜயா முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நக்ஷத்ரா, ராஜ சிம்மன், பிதாமகன் மகாராஜன் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
ஜே.கே.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. கிராண்டாலா விஜய பாஸ்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.
மொத்தத்தில் `143' காதல் போராட்டம்.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி ஆகியோர் நடிப்பில் இமான் இசையில் வெளியாகி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் விமர்சனம்
நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்.

இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா? எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

சுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.
இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறை.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி, ஆகியோர் நடிப்பில் கௌரவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் விமர்சனம்...
திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மஞ்சிமா மோகனின் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், மஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார். இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது விடுகிறார்கள்.
இதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து, டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்தாரா? மஞ்சிமா மோகனுடன் இணைந்தாரா? டேனியல் பாலாஜியை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி வழக்கமான அவரது ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடி ஓடி நடித்திருகிறார். முதல்பாதி மஞ்சிமா மோகனுடன், இரண்டாம் பாதியில், சூரியுடனும் பயணித்து நடித்திருக்கிறார். மஞ்சிமாவுடன் ரொமன்ஸிலும், சூரியுடன் காமெடியிலும் கலக்கி இருக்கிறார் உதயநிதி.
மஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கு பயப்படுவது, துணிச்சலாக திருமணம் செய்து கொள்ள தயாராகுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
சூரியின் காமெடி இப்படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது. உதயநிதியுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்திருக்கிறது. உதயநிதிக்கு அம்மாவாகவும் பஸ் டிரைவராக நடித்திருக்கிறார் ராதிகா. பஸ் ஓட்டும் முதல் பெண்ணாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அதுபோல் தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியும் சிறப்பாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். இயக்குனர் கவுரவ் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருக்கிறார்.

தூங்கா நகரம், சிகரம் தொடு, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த, கவுரவ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக திரைக்கதை சூடுபிடிக்கிறது. உதயநிதி, சூரி, டேனியல் பாலாஜி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இப்படை வெல்லும்’ நிச்சயம் வெல்லும்.

ஜாக்கிசான், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி ஃபாரீனர் தமிழில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனம்...
முன்னாள் போர் வீரரான ஜாக்கி சான் லண்டனில் உணவகம் நடத்தி வருகிறார். அப்போது, தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை ஜாக்கி சான் இழக்கிறார். வருத்தத்தில் இருக்கும் ஜாக்கி சான், தன் உணவகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிடம் உணவகத்தை ஒப்படைத்து விடுகிறார்.
இந்த குண்டு வெடிப்பு வழக்கை பியர்ஸ் பிராஸ்னன் விசாரிக்கிறார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தானே களமிறங்குகிறார் ஜாக்கிசான். இந்த சம்பவத்தை விசாரிக்கும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு கொலையாளிகள் யார் என்று தெரியும் என யூகிக்கிறார் ஜாக்கிசான்.
இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்கு மத்தியில் அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை ஜாக்கிசான் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

ஸ்டீபன் லெதர் எழுதிய 'தி சைனாமேன்' என்கிற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் கேம்ப்பெல். பியர்ஸ் பிராஸ்னனை வைத்து கோல்டன் ஐ; டேனியல் கிரெய்கை வைத்து கேசினோ ராயல் என இரு ஜேம்ஸ்பாண்ட் படங்களை இயக்கிய மார்ட்டினின் படத்தில் அதிரடி இருக்குமென பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அறுபது வயதைக் கடந்தாலும், இன்னும் ஜாக்கி சானிடம் ரசிகர்கள் காமெடி சண்டைக் காட்சிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ, சண்டைக் காட்சிகளில் இன்னும் அதிரடியில் மிரட்டுகிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி, அபார்ட்மென்ட்டில் நடக்கும் இறுதி சண்டை, என ஜாக்கி சான் மாஸ் காண்பித்திருக்கிறார்.

பியர்ஸ் பிராஸ்னனை நல்லவராகவும் அதே சமயம் வில்லனாகவும் காண்பித்திருக்கிறார்கள். பிராஸ்னனின் மனைவி, ஜாக்கி, அயர்லாந்து போலீஸ், பிராஸ்னனின் உயர் அதிகாரி என அனைவருக்கும் ஏகத்துக்கு பிராஸ்னனை மிரட்டுவது மட்டும் ஒரே வேலை.
மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லாஜிக் களேபரங்களைக் குறைத்து, சுவாரஸ்யங்களைச் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘தி ஃபாரீனர்’ சிறப்பு.

ஆனந்த் பாபு, விஜய் கைலாஷ், சன்விகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அழகின் பொம்மி’ படத்தின் விமர்சனம்.
படம் ஆரம்பத்தில் நாயகன் ஆனந்த் பாபு, மனநிலை பாதிக்கப்பட்டு சிறுவயது குழந்தை போல் இருந்து வருகிறார். இவரது நண்பரான விஜய் கைலாஷ், அவரை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் பாபு ஏன் இப்படி ஆனார் என்பதை பற்றி பிளாஸ்பேக் நகர்கிறது.
மலை சூழ்ந்து இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆனந்த் பாபு, அம்மாவுடன் இருந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விஜய் கைலாஷும், ஆனந்த் பாபுவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். சிறுவயதில் தன்னுடன் விளையாடிய நாயகி சன்விகாவை பார்த்ததும் ஆனந்த் பாவுக்கு பிடித்து விடுகிறது.
மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு, நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆனால், சன்விகாவின் பெற்றோர்கள், சன்விகாவை முறைமாமனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். சன்விகாவின் முறைமாமன், ஒரு குடிகாரன் என்பதாலும், ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்பதாலும், அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆனந்த் பாபு மனநிலை பாதிக்கப்பட்டவராக எப்படி மாறினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் பாபு சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், சிறந்த நண்பனாகவும், காதலனாகவும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சன்விகா, நண்பராக வரும் விஜய் கைலாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சன்விகாவின் அப்பாவாக வரும் திருநிறைச்செல்வம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
வழக்கமான காதல் கதையை வித்தியாசமாக காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.விஜய் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் நிறைய இடம்பெற்றிருக்கிறது. இதனால்தான் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வேண்டும் என்றே இரட்டை அர்த்த வசனங்களை திணித்திருக்கிறார்கள்.
பவதாரணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அசோக்கின் ஒளிப்பதிவு மலைப் பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அழகின் பொம்மி’ அழகு குறைவு.