என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத்.
    • இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவியது.



    மேலும் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் ஹிருத்திக் ரோஷனுடன் டேட்டிங் செல்வதாக கங்கனா தெரிவித்தார். ஆனால் இதனை ஹிருத்திக் மறுத்தார். இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயங்கள் குறித்து கங்கனாவிடம் இது உண்மையா? என நிறைய ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது சமூக வலைதளத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாசை நான் தாக்கினேனா? இது எப்போது நடந்தது? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


    இது இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கங்கனா பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர்கபூர்- ஆலியாபட்டை பற்றியும் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரன்பீர்- ஆலியா ஜோடி பிரமாண்டமாக ஊரை கூட்டி திருமணம் செய்தாலும் வீட்டில் வேறு வேறு மாடியில் தான் வசிக்கிறார்கள். ஆனால் வெளியுலகிற்கு சேர்ந்து வாழ்வது போல் காட்டிக்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சமீபத்தில் லண்டன் சென்ற ரன்பீர் மனைவி ஆலியா, மகளை தனியாக விட்டு விட்டு சென்றுள்ளார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படிதான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் முதல் பாடலான "நா ரெடி" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'லியோ' படத்தின் "நா ரெடி" பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூபில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
    • இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


    இந்நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படம் தெலுங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஜே.பி.ஆர் பிலிம்ஸ், திரிபுரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.




    • இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கக்கன்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    சுதந்திர போராட்ட வீரர் கக்கன், முதல் பிரதமர் நேரு ஆட்சி காலமான 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். இதையடுத்து இவரின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.


    இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கும் இப்படத்தில் என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன் ஆகிய படங்களை தயாரித்த ஜோசப் பேபி கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். தேவா இசையமைக்கும் 'கக்கன்' திரைப்படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


    இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில், 'கக்கன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், கக்கனின் மகள் கஸ்தூரி, இசையமைப்பாளர் தேவா, அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.




    • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “அநீதி”.
    • இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கி திரைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் "அநீதி". இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.


    அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான "அநீதி" திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், "அநீதி" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மாவீரன் போஸ்டர்

    இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




    • நடிகர் சுதீப் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    இதையடுத்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஹெப்பிலி' என்ற திரைப்படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடித்திருப்பார். இது தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பலர் இது போன்ற ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.

    மாணவர்களின் இந்த ஹேர்ஸ்டைலினால் ஆத்திரமடைந்த கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், சிவாஜி நாயக் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், சலூன் கடைக்காரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை போன்று தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள்.


    நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் முறையான ஹேர்ஸ்டைலில் வரும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஆனாலும், சிலர் அப்படிதான் வருகிறார்கள். மாணவர்கள் சினிமாவினால் மிகவும் எளிமையாக ஈர்க்கபட்டு விடுகிறார்கள். இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

    • இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஓப்பன்ஹெய்மர்'.
    • இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    'அணுகுண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்தியாவில் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


    'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் 'உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்' என்ற பகவத் கீதை வரிகள் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் இந்தியாவிற்கு ஏற்றபடி சென்சார் செய்யப்பட்ட நிலையில் இப்படியான காட்சிகளை ஏன் நீக்கவில்லை என்று தணிக்கைக் குழுவிற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க தணிக்கை குழுவிற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும்,  இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ்.
    • இவர் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு மோகனவேல் என்பவருக்கு தனது நிலத்திற்கான பொது அதிகாரம் வழங்கியுள்ளார்.

    மைனா திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    மைனா, சாட்டை போன்ற பல படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ். இவர் மோகனவேல் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு வேப்பம்பட்டில் உள்ள தனது நிலத்திற்கு பொது அதிகாரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை ஜான் மேக்ஸ் வாங்கியுள்ளார்.பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் பொது அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பொது அதிகாரத்தை ரத்து செய்தது தெரிந்து மோகனவேல், ஜான்மேக்ஸிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஜான் மேக்ஸ் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதையடுத்து மோகனவேல் ஆவடி காவல் ஆணையகரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார்.புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் விருகம்பாக்கத்தில் உள்ள ஜான் மேக்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது. அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், இதுவரை தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
    • இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்த நாளன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.


    இந்நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன்-2'. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




    இந்நிலையில் 'இந்தியன்-2' படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 'இந்தியன்-2' படப்பிடிப்பு காட்சிகளை இயக்குனர் ஷங்கர் பார்த்திருக்கிறார். இதில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 'இந்தியன்-3' படத்தை உருவாக்கி விடும் யோசனையில் ஷங்கர் இருப்பதாக கூறப்படுகிறது.

    ×