என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • எமிஜாக்சன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்துள்ளார்.


    பிரிட்டீஸை சேர்ந்த எமிஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமிஜாக்சன் தற்போது நடிகர் எட்வெஸ்ட் விக்கை காதலித்து வருகிறார். இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றி திரியும் படங்களை அவ்வப்போது எமிஜாக்சன் வெளியிட்டு வந்தார்.

    இந்த நிலையில் ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு காதலருடன் சென்ற எமிஜாக்சன் அங்கு ஓட்டலில் தங்கி ஹாயாக காதலருடன் இருப்பதையும், மசாஜ் மற்றும் ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'நீண்ட சோம்பலான மழைக்கால காலை' என்று குறிப்பிட்டுள்ளார்.


    எமிஜாக்சன்- எட்வெஸ்ட் விக்

    இதுகுறித்து எமிஜாக்சன் கூறுகையில், "எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைந்தவர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். நான் நடித்துள்ள தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என் மகன் உலகை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்கு அழைத்து சென்றேன்" என்று கூறினார்.


    • சினிமா பாடல்கள் அங்கீகரிக்காமல் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பதிப்புரிமை சங்கம் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது.
    • அருள் ஜார்ஜ் தனது அறிக்கையில் திருமண விழாக்களில் பாடல்கள் காப்புரிமை மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    திருமண விழா உள்ளிட்ட கொண்டாட்டங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் சினிமா பட பாடல்கள் இசைக்கப்படுவதும், பாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

    சினிமா பாடல்கள் அங்கீகரிக்காமல் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பதிப்புரிமை சங்கம் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. அது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த அருள் ஜார்ஜை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் தனது அறிக்கையில் திருமண விழாக்களில் பாடல்கள் காப்புரிமை மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் திருமண விழா கொண்டாட்டங்களில் திரைப்பட பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் சட்ட தடை இல்லை என்று மத்திய வர்த்தக துறை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பதிப்புரிமை பெற்ற பாடல்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் இந்திய பதிப்புரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சட்டத்தில் உள்ள 52(1)-இசட் ஏ பிரிவின் கீழ் மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்வுகளுககு முன் அனுமதி மற்றும் ராயல்டி தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளில் திரைப்படபாடல்கள் பாடுவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் தடை இல்லை என்பது மட்டுமின்றி, யாரும் ராயல்டி கோரமுடியாது என்பதை மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கி இருக்கிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்- 2’.
    • இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் முதன் முதலில் ஓடிடி-க்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்திய திரைப்படம் 'இந்தியன் 2' என்ற பெருமையை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினி நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    ஜெயிலர் பதிவு

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 'காவாலா' பாடலை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் இன்று நடைபெறவிருந்த 'காவாலி' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்தவர்.
    • இவர் சமூக பிரச்சினைகளுக்காக தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


    கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அகில இந்திய வானொலியில் இந்தி ஆதிக்கம் செலுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அகில இந்திய வானொலியின்

    தமிழ் நிலையங்கள்

    பல கலைஞர்கள்

    தமிழ் விளைத்த கழனிகளாகும்;

    கலைக்கும் அறிவுக்குமான

    ஒலி நூலகங்களாகும்

    அங்கே தமிழ் மொழி

    நிகழ்ச்சிகள் குறைந்து

    இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது

    மீன்கள் துள்ளிய குளத்தில்

    பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்

    கண்டிக்கிறோம்

    இந்தி அகலாவிடில்

    அல்லது குறையாவிடில்

    தமிழ் உணர்வாளர்கள்

    வானொலி வாசலில்

    களமிறங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    • இந்த பாடல் தற்போது யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
    • இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகில் 80,90 களின் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது படங்களில் நடிப்பதை குறைத்திருந்தாலும் இன்று வரை இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவர் கடைசியாக "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.



    இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கவுள்ள முழுநீள நகைச்சுவை படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.




    இப்படம் குறித்து பேசிய இயக்குனர் சாய் ராஜகோபால், சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் என்றார்.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படத்தில் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி "ஜுஜுபி" என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவித்து, மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன்.
    • இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சந்தித்துள்ளனர்.

    90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.




    இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல. இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, நாம் சந்தித்தது சிரித்தது எல்லாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.



    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காவாலா பாடலின் இந்தி வெர்ஷன் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பாடலை ஜூலை 27ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிவிஆர் ஐகானில் நடிகை தமன்னா வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. காவாலா பாடல் இந்தியில் "தூ ஆ தில்பரா" என்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×