என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய வர்த்தக அமைச்சகம்"

    • சினிமா பாடல்கள் அங்கீகரிக்காமல் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பதிப்புரிமை சங்கம் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது.
    • அருள் ஜார்ஜ் தனது அறிக்கையில் திருமண விழாக்களில் பாடல்கள் காப்புரிமை மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    திருமண விழா உள்ளிட்ட கொண்டாட்டங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் சினிமா பட பாடல்கள் இசைக்கப்படுவதும், பாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

    சினிமா பாடல்கள் அங்கீகரிக்காமல் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பதிப்புரிமை சங்கம் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. அது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த அருள் ஜார்ஜை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் தனது அறிக்கையில் திருமண விழாக்களில் பாடல்கள் காப்புரிமை மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் திருமண விழா கொண்டாட்டங்களில் திரைப்பட பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் சட்ட தடை இல்லை என்று மத்திய வர்த்தக துறை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பதிப்புரிமை பெற்ற பாடல்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் இந்திய பதிப்புரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சட்டத்தில் உள்ள 52(1)-இசட் ஏ பிரிவின் கீழ் மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்வுகளுககு முன் அனுமதி மற்றும் ராயல்டி தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளில் திரைப்படபாடல்கள் பாடுவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் தடை இல்லை என்பது மட்டுமின்றி, யாரும் ராயல்டி கோரமுடியாது என்பதை மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கி இருக்கிறது.

    டெல்லியில் அமைக்கப்பட உள்ள மத்திய அரசின் வர்த்தக அமைச்சக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். #VanijyaBhawan #PMModi
    புதுடெல்லி:

    டெல்லி அக்பர் சாலையில் அமைக்கப்பட உள்ள வர்த்தக அமைச்சக கட்டிடமான வன்ஜியா பவன் அடிக்கல் நாட்டுதல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி,

    இந்தியா தாமதமாக வேலை செய்யும் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளது. தொழில்துறையில் ஜி.எஸ்.டி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தொழில்முறைகளை எளிதாக்கி உள்ளன. இது ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.


    உலக அளவில் இந்தியாவின் வர்த்தகத்தை 3.4 சதவீதம் உயர்த்த வேண்டும். அதற்காக எண்ணெய் போன்ற துறைகளில் பொருட்களை இறக்குமதி செய்வதை காட்டிலும், நம் நாட்டிலேயே உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜி.டி.பி. 7.7 சதவீதமாக இருந்தது. அதனை அதிகரிக்க வேண்டும்.

    வன்ஜியா பவனின் கட்டிடப்பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே முடிவடைந்து விடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #VanijyaBhawan  #PMModi

    ×