வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இணைந்த மஞ்சுவாரியர்.. எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இணைந்த மஞ்சுவாரியர்.. எந்த படத்தில் தெரியுமா?
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com