என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. '
ஜெயிலர்' படத்தின் மூன்றாவது பாடலான "ஜுஜுபி" பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி "ஜுஜுபி" பாடல் அறிவித்தபடி வெளியானது. தீ, அனிருத், அனந்த கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டீசர் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கோபத்துடன் கத்துவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

'ஜெயிலர்' படத்தின் மூன்றாவது பாடலான "ஜுஜுபி" பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் "ஜுஜுபி" பாடல் அறிவித்தபடி வெளியாகியுள்ளது. தீ, அனிருத், அனந்த கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை சிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
- தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் .
தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியதாவது, 'ப்ரோ' நிகழ்ச்சிக்கு வந்த எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தக் கதையைக் கேட்டதும் சமுத்திரக்கனியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். ஏனென்றால் தெலுங்கு மொழியின் மீது நமக்கு பிடிப்பு மிகக் குறைவு. ஆங்கிலம் கலந்து பேசுவோம்.
எனக்கு தெலுங்கில் பத்து வாக்கியம் கூட பேச வராது. இடையில் நான்கு ஆங்கில வாக்கியங்கள் பேசுவேன். அதை சரி செய்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் நமது மொழியும் கூட இல்லை, முதல் நாளே ஸ்கிரிப்ட் ரீடிங்கிற்கு போனார். தெலுங்கை கற்று கொண்டார். நீங்கள் தெலுங்கு கற்று இவ்வளவு செய்ததால். நான் தமிழ் கற்று ஒரு நாள் தமிழில் உரை நிகழ்த்துவேன். தமிழ் கற்று திருக்குறள் சொல்ல விரும்புகிறேன். தெலுங்கு மொழியைக் கற்று எங்கள் கண்களைத் திறந்தவர் நீங்கள். நீங்கள் தெலுங்கை நன்றாகக் கற்றுக்கொண்டீர்கள். நம் தாய்மொழியில் இலக்கியம் மிகவும் வளமானது. அது தெரிந்தால். பல சிறந்த படங்களை எடுக்கலாம். மேலும் நம் மொழியில் தேர்ச்சி பெற்று இப்படி ஒரு படத்தை எடுத்த சமுத்திரக்கனிக்கு நன்றி. தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம்.
எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது தான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். 'ப்ரோ' படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் பேசினார்.
தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட் கலர் டீ-சர்ட்டில் அஜித் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- தமிழில் பல படங்களில் நடித்தவர் சுவாதி.
- இவர் 2018-ல் திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் வாழ்ந்து வந்தார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை சுவாதி தனது சமூக வலைதளத்தில் இருந்து கணவர் விகாஸுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சுவாதி கணவர் விகாஸுடன் இருந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்- 2’.
- இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இந்தியன் மற்றும் தசாவதாரம் படத்தில் இருவரும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
- 'லெட்ஸ் கெட் மேரிட்' திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
- இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லெட்ஸ் கெட் மேரிட்' (Lets Get Married-LGM). தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து 'லெட்ஸ் கெட் மேரிட்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டோனியின் மனைவி சாக்ஷி, "கதை நன்றாக அமைந்தால் டோனி ஹீரோவாக நடிப்பார். அவர் கேமராவைப் பார்த்து வெட்கப்படுபவர் இல்லை. 2007-ல் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், எப்படி நடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அப்படி அவர் நடித்தால் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்வேன்" என்று கூறியுள்ளார்.
- நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "லவ்" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கோடையின் வாசலிலே என்று தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
- இயக்குனர் செல்வராகவன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின் பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவிரம் காட்டி வருவதாகவும் இதிலும் நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி-2' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லெட்ஸ் கெட் மேரிட்' (Lets Get Married-LGM). தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து 'லெட்ஸ் கெட் மேரிட்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சாக்ஷி சிங் டோனி பேசியதாவது, எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லை. டோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபூர்வமானது. இப்படத்தின் கதையை இயக்குனர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் இதை திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்து உருவானது.

மேலும் மாமியார் - மருமகள் பிரச்சினை என்பது உலக அளவிலானது. இந்த படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசியிருக்கிறோம். உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். இந்தத் திரைப்படம் பொழுதுப்போக்குடன் தயாராகி இருக்கிறது. எங்களுடைய இந்த திரையுலக பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.






