5 ஆண்டுகள் திருமண வாழ்க்கை.. கணவரை விவாகரத்து செய்யும் சுவாதி

தமிழில் பல படங்களில் நடித்தவர் சுவாதி.இவர் 2018-ல் திருமணம் செய்து கொண்டார்.
விகாஸ் - சுவாதி
விகாஸ் - சுவாதி
Published on

தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் வாழ்ந்து வந்தார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை சுவாதி தனது சமூக வலைதளத்தில் இருந்து கணவர் விகாஸுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சுவாதி கணவர் விகாஸுடன் இருந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com