கக்கன் திரைப்பட டிரைலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கக்கன்’.இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கக்கன் திரைப்பட டிரைலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சுதந்திர போராட்ட வீரர் கக்கன், முதல் பிரதமர் நேரு ஆட்சி காலமான 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். இதையடுத்து இவரின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கும் இப்படத்தில் என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன் ஆகிய படங்களை தயாரித்த ஜோசப் பேபி கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். தேவா இசையமைக்கும் 'கக்கன்' திரைப்படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில், 'கக்கன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், கக்கனின் மகள் கஸ்தூரி, இசையமைப்பாளர் தேவா, அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com