என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.




    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 




    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய், சுற்றுலா முடிந்த பிறகு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.




    இந்நிலையில் லவ் படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கோடையின் வாசலிலே என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  




    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 




    'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான ஹேஷ் டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 




    'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக படக்குழு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இதற்கான பதிவு இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. ஆனால், பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.




    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார்.
    • விஜய் அரசியலுக்கு வருவதற்கு 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர்.

    அந்த வரிசையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.


    இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் 72.50 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு ஊக்க தொகை, இலவச இரவுநேர பாடசாலை போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 




    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரன்டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாதி ஒரு மணி 19 நிமிடங்களும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யூ/எ சான்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ரசிகர்கள் அவர்களின் நற்பணி மன்றம் சார்பாக பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இரத்ததானம், அன்னதானம், மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்த நடிகர்களுக்கு போஸ்டர்களும், பேனர்களும் வைத்து கொண்டாடுகின்றனர்.


    நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரசிகர்கள் சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், இறந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சூர்யா ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'மரணத்தின் வியாபாரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.





    • நடிகை சமந்தா தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடித்த 'ஊ சொல்றியா' பாடல் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.


    நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்த 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையாங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர், வேலூர் பொற்கோவில், ஈஷா யோகா மையம், பண்ணாரி அம்மன் கோவில் என்று தமிழ்நாட்டில் சுற்றினார்.


    இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலிருந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஷாட் ஹேரில் நியூ லுக்கில் மாறியுள்ள சமந்தாவை பார்த்த ரசிகர்கள் அவர் அழகின் ஓவியமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.


    ×