என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அட்லீ தற்போது ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து 'ரெடியா' என அட்லீ தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி குறித்த அறிமுக போஸ்டராக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





    • இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'.
    • இப்படம் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 23-ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.


    ரெஜினா போஸ்டர்

    இந்நிலையில், 'ரெஜினா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.





    • நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.


    இந்நிலையில், இந்த வீடியோ வெளியான 24 மணிநேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    இந்நிலையில், நடிகை நயன்தாரா தங்கள் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு "என் உயிர்கள்... என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்" என மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
    • தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.




     


    இந்நிலையில் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை படக்குழு கவர்ந்து வருவதால் உற்சாகத்தில் உள்ளனர்.



    • டி.டி.எப்.வாசன் கதாநாயகனாக நடிக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தில் அனிருத் பாடல் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடிக்கிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு அனிவி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் 'மஞ்சள் வீரன்' படத்தின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. 

    • யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.



    பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.



    இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'வானவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.




    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் குறித்த அறிவிப்பை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விஎஃப்எக்ஸ் ஹாலிவுட் படமான ஐரிஸ்மேன் மற்றும் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.



    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண ரசிகர்களுக்கு படக்குழு வாய்ப்பளித்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவை காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குகிறது. மேலும் இதற்கான பதிவு நாளை 1 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட்சா 3.
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. தற்போது மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கியுள்ளார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'கங்குவா' படத்தில் பாலிவுட் நடிகர் பாபி டியோல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.




    இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23-ந்தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    ×