ஜிவி பிரகாஷ் மற்றும் மடோன் அஸ்வின் வெளியிட்ட யோகிபாபு பட டைட்டில்

யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் மற்றும் மடோன் அஸ்வின் வெளியிட்ட யோகிபாபு பட டைட்டில்
Published on

மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'வானவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com