ஒரே நாளில் வெளியாகும் இரண்டு 'ஜெயிலர்'.. குழப்பத்தில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஒரே நாளில் வெளியாகும் இரண்டு 'ஜெயிலர்'.. குழப்பத்தில் ரசிகர்கள்
Published on

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது. அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், இதுவரை தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com