மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த டோனி தயாரிப்பு நிறுவனம்.. ஏன் தெரியுமா?

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த டோனி தயாரிப்பு நிறுவனம்.. ஏன் தெரியுமா?
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படம் தெலுங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஜே.பி.ஆர் பிலிம்ஸ், திரிபுரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com