என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் வசூலை குவித்து வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகை ஸ்ருதிஹாசன் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது 'சலார்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது புகைப்படக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற புடவையில் அழகில் மிரட்டும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு 'அழகினால் எங்களை கொல்லாதீர்கள் ராணி' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் வெளியான ‘எல்.ஜி.எம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எல்.ஜி.எம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    திருவண்ணாமலையில் ஹரிஷ் கல்யாண்

    நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


    பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 'கார்த்திகேயா', 'கார்த்திகேயா 2' போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


    இதனை நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். சாய் பல்லவி இதற்கு முன்பு நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்திருக்கும் 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்.
    • திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் திரு.மாணிக்கம் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான் என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.

     

    தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரு. மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • அக்டோபர் 19-ம் தேதி 'லியோ’ திரைப்படம் வெளியாகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.


    லியோ போஸ்டர்

    இதையடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'லியோ' படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அனல் தெறிக்கும் பைக் பக்கத்தில் விஜய் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    • 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.907 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உற்சாகமான ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.


    • ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
    • ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.

    தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார்.


    இந்நிலையில், ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
    • இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருந்த அனிருத், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் ரூ.1000 கோடியே எட்டி விடும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் மத்தியில் உள்ளது.


    இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல் பில்போர்ட் தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது, உலகின் பிரபலமான பில்போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 'ஜவான்' படத்தில் இடம்பெற்றிருந்த 'சலேயே' (chaleya) பாடல் 97-வது இடத்தை பிடித்துள்ளது. இதனை அனிருத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’.
    • இந்த படத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் எம். ராஜேஷின் உதவி இயக்குனரான துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சீரன்'. ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் தயாரிப்பில்  சமூக அக்கறை கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'சீரன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகை இனியா பேசியதாவது, இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.


    நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குனர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார். அதே போல ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்று பேசினார்.

    • டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    யூ டியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும்  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை  ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.


    இந்நிலையில், 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×