என் மலர்
சினிமா செய்திகள்
- மஞ்சள் வீரன் படம் மூலம் டிடிஎப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தார்.
- மஞ்சள் வீரன் படத்தை செல் அம் இயக்குகிறார்.
பிரபல யூடியூபரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனமாக அறிமுகமாக இருந்த திரைப்படம் 'மஞ்சள் வீரன்.' செல் அம் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் துவங்கியதாக தெரிகிறது.
எனினும், பல்வேறு காரணங்களால் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டார். படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால் டிடிஎப் வாசன் நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது, இந்தப் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டதாகவும், இதில் கூல் சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
ஆனாலும், மஞ்சள் வீரன் படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொதுவாக ஆபாச வீடியோக்கள் வெளியாகும்போது அதில் இருப்பது நான் இல்லை என்று நடிகைகள் மறுப்பது வழக்கம்.
- ஆனால் ஓவியா வேறு விதமாக பதில் அளித்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.
தமிழில் களவாணி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. ஒரு ஆணுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
சில ரசிகர்கள் வலைத்தளத்தில் ஓவியாவை டேக் செய்து இந்த வீடியோ உண்மையானதுதானா? வீடியோவில் இருப்பது நீங்கள்தானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு ஓவியாவும் பதிலடி கொடுத்து வருகிறார். ஒரு ரசிகர், 'உங்களுடையை 17 வினாடி வீடியோ லீக் ஆகி உள்ளது மேடம்' என்று தெரிவிக்க அதற்கு ஓவியா, 'என்ஜாய்' என்று பதில் அளித்துள்ளார். இன்னொருவர், 'வீடியோவை இன்னும் நீளமாக எடுத்து இருக்கலாம்' என்று சொல்ல 'அடுத்தமுறை புரோ' என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் சிலர் லீக்கான ஓவியாவின் வீடியோவை தங்களுக்கு அனுப்புமாறு கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் 'எனக்கும் லிங்க் அனுப்புங்கள்' என்று ஓவியா பதில் அளித்துள்ளார்.
பொதுவாக ஆபாச வீடியோக்கள் வெளியாகும்போது அதில் இருப்பது நான் இல்லை என்று நடிகைகள் மறுப்பது வழக்கம். ஆனால் ஓவியா வேறு விதமாக பதில் அளித்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.

- லெவல் க்ராஸ் திரைப்படத்தில் ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் இணைந்து நடித்துள்ளனர்.
- ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு பிறகு அமலா பால் இப்படத்தில் நடித்துள்ளார்.
ஆசிஃப் அலி மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராவார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கிஷ்கிந்தா காண்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் உலகளவில் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் இணைந்து நடித்து கடந்த ஜூலை மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு பிறகு அமலா பால் இப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அறிமுக இயக்குனரான அர்ஃபாஸ் அயுப் இயக்கியுள்ளார். இப்படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜித்து ஜோசஃப் வழங்கியுள்ளார்.
லெவல் கிராஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, கன்னடம் மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
- இட்லி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50-ஆவது படமாக ராயன் அமைந்தது.
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
"இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் டீ கப் உடன் செல்பி எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் குபேரா.
- தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சில தகவல்களை கூறியுள்ளார் அதில் " படத்தின் அடுத்த அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும். சிறுத்தை சிவா சூர்யாவிற்கு பயங்கரமான டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளார். சூர்யாவின் 8 மொழிகளில் அவரே குரல் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் டப் செய்துள்ளோம். வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா.
- தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா.
மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படம் 510 கோடி ரூபாய் உலகம்முழுவது வசூலளித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குனரான லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
- படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் ஆண்டனி சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இவருடன் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனரான லியோ ஜான் பால் இதற்கு முன் பிரபல திரைப்படங்களான அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் போன்ற திரைப்படங்களுக்கு படதொகுப்பாளராக இருந்தவர் ஆவார்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனராக ராஜா பணியாற்றியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக்கின் மரணம் அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.
பாபா சித்திக் மரணத்தால் சல்மானின் குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாபா சித்திக் சல்மான் கானின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.
பாபா சித்திக்கின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்களை அவரது குடும்பத்தினரிடம் சல்மான் கான் கேட்டறிந்தார். சல்மான் கான் அடுத்த சில நாட்களுக்கு தனது தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
- திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையை டிராக்கை விரைவில் வெளியிடப்போவதாக அனிருத் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான இரண்டு பாடல்கள் அல்லாமல் " க்ளீன் ஷாட், பிக் பி தீம், உச்சத்தில, பேட்டரி தீம், ஹாண்ட்ச் அப், வாழ் வீசும் மற்றும் வேட்டையன் தீம்" என 7 பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைவதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திர ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த சினிமா உரையாடல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது " கூலி திரைப்படம் எல்.சி.யூ யூனிவர்சில் சேராது. நான் எந்த திரைப்படத்தையும் 6 மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு பணிகளை தொடர மாட்டேன். எல்.சி.யூ கான்செப்ட் உருவாகிவிட்டது அதற்கு ஏற்ற் தர்மத்தை கொடுத்து ப்ராப்பராக முடிக்க வேண்டும். இன்னும் 5 வருடங்களுக்கு வயலன்ஸ் திரைப்படத்தை மட்டும் தான் நான் எடுப்பேன். ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு என தனி திரைப்படம் வரும். கூலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு திரைப்படம் இயக்கவுள்ளேன் அதில் என் படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் இருப்பார்கள். நான் இதுவரை எடுக்க நினைத்த கதை இரும்பு கை மாயாவி அதை நான் இன்னும் எடுக்கவில்லை. அப்படத்தில் துப்பாக்கி மற்றும் வயலன்ஸ் இருக்காது" என பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்தார்.
- படத்தின் செகண்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்கியுள்ளார். இதற்கு முன் நிவின் பாலி நடித்த மைக்கேல் படத்தை இயக்கியவராவர்.
படத்தின் செகண்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது.
படத்தின் டீசர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் காட்சிகள் மிகவும் மிரட்டலாக அமைந்து இருக்கிறடு. படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொடுள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






