என் மலர்
சினிமா செய்திகள்

`இன்னும் இரண்டு நாட்களில் கங்குவா திரைப்பட அப்டேட் வரும்' - ஞானவேல்ராஜா
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சில தகவல்களை கூறியுள்ளார் அதில் " படத்தின் அடுத்த அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும். சிறுத்தை சிவா சூர்யாவிற்கு பயங்கரமான டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளார். சூர்யாவின் 8 மொழிகளில் அவரே குரல் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் டப் செய்துள்ளோம். வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






