என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
- திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வெற்றியை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது.
இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
- படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
The long awaited first single #Dheema is finally coming out !!
— Seven Screen Studio (@7screenstudio) October 15, 2024
An @anirudhofficial musical ♥️
@VigneshShivN Lyrical ??#LoveInsuranceKompany #LIK
@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav… pic.twitter.com/33lY5rzIGN
இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தீமா' பாடல் நாளை (அக்டோபர் 16) காலை 10.06 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி திரையுலகில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் அதுல் பர்சுரே.
- சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்தி திரையுலகில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் அதுல் பர்சுரே. இவர் தி கபில் ஷர்மா ஷோ மூலம் மக்கள் மனதை வென்றார். அந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தோற்றத்தில் வந்து பல கதாப்பாத்திரங்களைப் போல் நடித்து மக்களை மகிழ்வித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. சில வருடங்களாகவே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார் ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி நடிகர் அதுல் பர்சுரே காலமானார். இவருக்கு 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுல் பர்சுரே பல இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். இவரது மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன்.
- டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார் பார்த்திபன்
தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நபர் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார்.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அப்படி ஒரு பதிவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
- இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.
இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அம்ரித் ராம்நாத் சில மாதங்களுக்கு முன் வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இப்படத்தில் இடம்பெற்ற நியாபகம் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
சித்தார்த் 40 திரைப்படத்தின் மூலம் அம்ரித் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன் அம்ரித் ராம்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.
- இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
பாடல் தற்பொழுது யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார்.
நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால். திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய மற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டிநிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டிநிருந்தார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் தற்பொழுது கெடப்பை மாற்றியுள்ளார்.
அவரது புது தோற்ற புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து பாலா தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
- பாலாவின் மனைவி அம்ருதா பிரபல மலையாள பாடகி.
வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து பாலா தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் ஏராளமான தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஜெயக்குமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவரது சகோதரர் சிவா பிரபல திரைப்பட இயக்குனர் ஆவார்.
பாலாவின் மனைவி அம்ருதா பிரபல மலையாள பாடகி. இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தனது மகளையும் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து அவமதித்ததாக பாலா மீது எர்ணாகுளம் கடவந்திரா போலீஸ் நிலையத்தில் அம்ருதா புகார் செய்தார்.
அதன்பேரில் நடிகர் பாலா மீது வலைதளங்கள் மூலம் அவதூறு செய்தல், பெண்ணை அவமதித்தல், குழந்தைகளை கொடுமைப் படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கின் கீழ் நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர்.
அப்போது நடிகர் பாலாவுடன் இருந்த அவரது மேலாளர் ராஜேசும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
- திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வி.ஜே ரக்ஷன் இப்படத்தில் ரஜினிகாந்தின் குடும்பத்தில் ஒருவனாக நடித்து இருந்தார். ஒரு டெக் , சோஷியல் மீடியா எக்ஸ்பர்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரக்ஷன் அவரது இன்ஸ்டா வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஃபேன் பாயாக இருந்தவன் இப்பொழுது ஃபேமிலி பாய். நீங்கள் காட்டும் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என படத்தில் நடித்த காட்சிகளில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
வி.ஜே ரக்ஷன் தற்பொழுது குக் வித் கோமாளி தொகுப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பது மட்டுமல்லாமல் ரேசிங்கிலும் அதிகம் ஆர்வம் காட்டும் நபராவார். சமீபத்தில் விலைஉயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் இரண்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் குமார் கார் வாங்கும் முன் அதில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து ஆக்சிலேடர் அலுத்தி ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக கார் உருமும் சத்தம் கேட்கும் பொழுது அஜித்தின் சிரிப்பு ஒரு குழந்தையைப் போல இருப்பது மிகவும் க்யூட்டாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
- படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 215 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.